search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97927"

    • தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
    • கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து, கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலை எதிரே, பாஜக மகளிரணி சார்பில், கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி விமலா தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட தலைவி மஞ்சுளா, ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர்கள் சிவபிரகாசம், நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில மகளிரணி தலைவர் உமாரதிராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். கள்ளச்சாராய காய்ச்சி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூழக்கங்கள் எழுப்பினர்.

    இதில், மாவட்ட துணை பொது செயலாளர்கள் மீசைஅர்ஜூனன், கோவிந்தராஜ், கவியரசு, மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மகளிரணி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜனதா மகளிரணி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கள்ளச் சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் பலியானார் கள். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதேபோல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாவட்ட மகளிரணி தலைவர் லட்சுமிதேவி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் தரணி ஆர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பார்வை யாளர் முரளிதரன் அனை வரையும் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    பா.ஜனதா நிர்வாகிகள் சண்முகராஜா,பவர் நாகேந்திரன்,கலாராணி, கவுன்சிலர்கள் குமார், முருகன், மண்டல தலை வர்கள் வீரபாகு, ஜோதிமுரு கன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ஜ.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் தி.மு.க. அரசு கள்ளச்சாராயத்தை தடுக்க தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே தென்காசி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச்செய லாளர் வளர்மதி முன்னிலை வகித்தார். பொருளாளர் மரகதம், தென்காசி நகர தலைவர் மந்திர மூர்த்தி வரவேற்புரை யாற்றினார். ஆர்ப்பாட்ட த்திற்கு சிறப்பு அழைப்பா ளர்களாக தென்காசி மாவட்ட பார்வையாளர் மகாராஜன், பொதுச் செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமரா ஜா, மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.

    • திருச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    திருச்சி,

    பாரதிய ஜனதா மகளிர் அணியினர் சார்பாக கள்ளச்சாராய விற்பனையை கண்டித்தும், அதனை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மகளிர் அணி மாவட்ட தலைவர் ரேகா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிர் அணி மாநில துணை தலைவர் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன், புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாநில வர்த்தக அணி செயலாளர் எம்.பி.முரளிதரன், புறநகர் மாவட்ட பார்வையாளர் மணக்கால் லோகிதாசன்,பெரம்பலூர் மாவட்ட பார்வையாளர் இல.கண்ணன், திருச்சி மாநகர் மாவட்ட பொதுசெயலாளர்கள் காளீஸ்வரன், பொன். தண்டபாணி, ஒண்டி முத்து, மாநில இளைஞர் அணி பொதுசெயலாளர் கௌதம், மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார்,மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் மரியா வின்சென்ட்,மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, சர்வேஸ்வரன். நாகேந்திரன்,மணிமொழி, ஜெயந்தி, சங்கீதா, மணிமேகலை, வேளாங்கண்ணி, அணி நிர்வாகிகள் அழகேசன், யசோதன், புருஷோத்தமன் மற்றும் திருச்சி மாநகர்,புறநகர் மகளிர் அணி நிர்வாகிகள், கட்சியின் மண்டல் தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு ஆளும் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

    • பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயீஸ் பெடரேஷன் பல்லடம் கிளை சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தின் முன்பு தமிழக மின்வாரியத்தில் 1.12.2019 முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும், மின்சார வாரியத்தில் 58000 காலிபணியி டங்களை நிரப்பிட வேண்டும்.அரசாணை எண் 100/19.10.2010 இன் படி முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தவேண்டும்,வாரிய ஆணை எண் 02 ஐ/12.04.2022/முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும், கேங்மேன் பணியாளர்களுக்கு பதவி உயர்வு,விடுப்பு உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பா ட்டத்திற்கு எம்பிளாயீஸ் பெடரேஷன் சங்க செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் நிர்வாகிகள் அங்குராஜ், வடுகநாத சாமி, சிஐடியு., தொழிற்சங்க நிர்வாகிகள் ராமலிங்கம், ஜெயராஜ், சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஓ.பி.சி.பிரிவு மாநில செயலாளர் செல்வநாயகம், சிறுபான்மை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார், மாவட்டச் செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் வரவேற்றார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரேகா, மாவட்ட தலைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டு தமிழகத்தில் தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடையும், ஊர்கள் தோறும் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறி கண்டன உரை நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சர்தார் சிங், மாவட்ட செயலாளர் மில் ஹரி, நிர்வாகிகள் பாக்கியராஜ், சக்திவேல், சேகர், ரகுநாத பாண்டியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் பா.ஜ.க. மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
    • தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

    அரியலூர்,

    தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து, அரியலூர் அண்ணாசிலை அருகே பாஜக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மகளிரணித் தலைவி அனிதா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் அய்யப்பன், மாவட்ட துணைத் தலைவர் கோகுல்பாபு, மாவட்ட பொதுச் செயலர் அருண்பிரசாத், மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், மாநில மகளிரணி பொதுச் செயலர் கவிதா, நகரத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை.
    • நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், 39வது அமைப்பு தின கொடியேற்றம் மற்றும் காலைச் சிற்றுண்டியை அமைப்பாளர்களே வழங்கக்கோரி தமிழக முதல்- அமைச்சரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு ஒன்றியத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் மஞ்சுளா, கொடி ஏற்றி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய பொருளாளர் நீலா நன்றி கூறினார்.பெருந்திரள் முறையீட்டில், காலைச் சிற்றுண்டி தொடர்பாக உணவுப் பொருட்களின் இருப்பு அறை சாவியை மற்றவர்களிடம் கொடுக்கச் சொல்வதால், உணவுப் பொருட்களின் இருப்பிற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. இதனால் காலை சிற்றுண்டி வழங்கும் நபரிடம் நமது மையத்தின் சாவியை ஒப்படைப்பதில்லை என்பதை தமிழக முதல் அமைச்சருக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பெருந்திரள் முறையீடு நடந்தது வருகிறது. எனவே காலைச் சிற்றுண்டியை தயார் செய்யும் பணியையும் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    • கடலூரில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராய மரணங்களை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள்.

    கடலூர்:

    கடலூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கள்ளசாராயம் குடித்து மரணங்கள் நடைபெறுவதை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் ஜெயா, மாலா ஆகியோர் தலைமை வகித்தனர். மாநகர தலைவர் சாமந்தி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் சுபஸ்ரீ, மாவட்ட தலைவர் மருதை, மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினார்கள். முடிவில் பொதுச் செயலாளர் சுதா நன்றி கூறினார்.

    • மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது

    திருச்சி,

    மின்துறை தொடர்ந்து பொதுத்துறையாக நீடிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி பெருநகர வட்ட கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்சி தென்னூர் மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலதுணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமை தாங்கினார். எம்ப்ளாயீஸ் பெடரேஷன் செயலாளர் சிவ செல்வன், தலைவர் சத்யநாராயணன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு தலைவர் நடராஜன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் பழனியாண்டி, டி.என்.பி.இ.ஓ. மாநில துணை செயலாளர் இருதயராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட செயலாளர்கள், கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கேங்மேன் பணியாளர்களை கள உதவியாளர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும். 1.12.2019 முதல் 16.5.2023 வரையிலான காலத்தில் பணியில் சேர்ந்த பணியாளர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37 வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா தொழிற்சங்க செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மேலும் கலையரசன், முருகன், முருகன், மாது, மாதேஷ், சக்திவேல், முருகன், நாகராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோ கம் செய்யப்படவில்லை.

    போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி மூலம் வழங்கப்பட்டு வந்த நேரம் மோட்டார் பழுதானதால் தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அந்தப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்கும், பிற தேவை களுக்கும் தண்ணீரின்றி சிரமப்பட்டு வந்தனர்.

    இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அச்சம்தவிழ்த்தான் அக்ரஹாரம் தெரு மக்களுக்கு குடிநீர் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார்.

    இதில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டியன் ஆகியோர் பேசினர். போராட்டம் முடிந்த பின் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

    ×