என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தடை"
- பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
- தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும்
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் வெளியான தீர்ப்பில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ள உணவுப்பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அரசாணை நிலை எண் 84-ன்படி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, 2018-ல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் பிளாஸ்டிக் ஒழிப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்திற்குள் நுழையும் அனைத்து அரசு மற்றும் தனியார் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாததை உறுதி செய்யும் பொருட்டு அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் நீலகிரி மாவட்டத்திற்குள் பயன்படுத்துவதையும், விற்பனை செய்வதையும், கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தும், பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டும் வருகிறது.
எனவே, அரசு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் அறிவுரைகளை முறையாக செயல்படுத்தும் பொருட்டு, நீலகிரி மாவட்டத்திற்குள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் கொண்டு வர வேண்டாம் எனவும், நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களையும், மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் நிறுத்தி பரிசோதனைக்கு உட்படுத்தி வரும்படி தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தடையை மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது அதிகபட்ச அபராத தொகை விதிக்கப்படும் எனவும், தடையையும் மீறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூடி முத்திரையிடப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
மேற்கண்ட மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரைகளை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் முழுவதுமாக பின்பற்றி நீலகிரி மாவட்டத்தினை தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இல்லா மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அருணா கூறியுள்ளார்.
- பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்சப்.இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ப னை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 57) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் நல்ல நேரம் லாட்டரி சீட்டு, தங்கம் லாட்டரி சீட்டு ஆகிய வைகளை விற்பனைக் காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிட மிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்யப்பட்டது. பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
தமிழகத்தில் சமீபகால மாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள்மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசுவிற்பனை மற்றும் வெடி பொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை ப்படுத்தி உயிர் சேதம்மற்றும் பொருட்சே தம் ஆகியவற்றை தவிர்த்திடும் பொருட்டும், வெடிபொருள் தயாரிக்கு ம்போதுபின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும், வெடிபொருள் தயாரிக்கும் உரிமத்தலங்களை தணிக்கை செய்திட செல்லும் அரசுஅலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட அளவிலான தீ மற்றும்பாதுகாப்பு தொழிலக குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது. கிப்ட் பெட்டியில் தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப்வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் கூடாது மற்றும் பட்டாசு வெடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பதாகைகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அறிவியல் முறையில்கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களு க்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் .தடை செய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிக ளை பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்சரவ ணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர் (வெடிபொருள்) தானுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பருவதம், வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
- ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
புதுச்சேரி:
காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.
- காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
- கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
கோவை,
கோவை குற்றாலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவி யில் நீர்வ ரத்து அதிகரித்தது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 1-ந் தேதி முதல் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர்.
இதனால் கடந்த 4 நாட்களாக கோவை குற்றாலத்துக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர். தற்போது அருவியில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீண்டும் சுற்றுலாபயணிகள் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை முதலே கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினர்.
அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். தடை நீக்கப்பட்டு குளியலுக்கு அனுமதிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்த னர்.
- பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
- கோவில் பஸ் அல்லது படிக்கட்டை பயன்படுத்த வேண்டுகோள்
வடவள்ளி,
கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஏழாம்படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதனால் தினந்தோறும் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.
தற்போது மருதமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச்சீட்டு வழங்குமிடம் அகியவற்றுடன் கூடிய மின் தூக்கி (லிப்ட்) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச்சாலையில் உள்ள தார்சாலைகள் சீரமைத்தல் பணி, புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதிதாக ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் கோவில் தங்க ரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகின்றன.
இந்த பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் நாளை (5-ந் தேதி) முதல் ஒரு மாதம் மருதமலை கோவிலுக்கு இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் பஸ்சையும், படி வழியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
- திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
- ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது
மண்ணச்சநல்லூர்,
தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்ப டங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோயில் இணை ஆணையர் கல்யாணி கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை என ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.
பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு விரைவில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் கேமிரா உள்ளிட்ட, மின் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
- திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பாளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளையம் செல்லலாம்.
மதுரை
மதுரை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப் பதாவது:-
மதுரை செல்லூர் தத்தனேரி ெரயில்வே மேம்பாலத்தில் ஆரப்பாளை யம் செல்ல கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தை இணைக்கும் பணிகள் நடை பெறுவதால் செல்லூர் மேம்பாலத்தில் நாளை 1-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
எனவே திண்டுக்கல் சாலை வழியாக ஆரப்பா ளையம் வரும் பஸ்கள், பாத்திமா கல்லூரி சந்திப்பில் திரும்பாமல் வலதுபுறம் சென்று குரு தியேட்டர் சந்திப்பில் இடது புறம் திரும்பி ஆரப்பாளை யம் செல்லலாம்.
கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் ஏ.வி. பாலம், யானைக்கல் சந்திப்பு சிம்மக்கல் ரவுண்டாணா தமிழ்சங்கம் ரோடு வழியாக ஆரப்பாளையம் - செல்ல லாம்.
மறுமார்க்கமாக தமிழ்சங்கம் ரோடு - சிம்மக்கல் ரவுண்டாணா யானைக்கல் சந்திப்பு புதுப்பாலம் சந்திப்பு வலது புறம் திரும்பி -கோரிப்பா ளையம் சந்திப்பை அடைய லாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் அத்தியாவசிய கனரக வாகனங்கள் (பால் வண்டி, ரேசன் பொருட்கள், பெட் ரோல் லாரிகள்) மட்டும் பாத்திமா கல்லூரி சந்திப்பு வலது - குரு தியேட்டர் சந்திப்பு காளவாசல் சந்திப்பு இடது, அரசரடி சந்திப்பை அடைந்து தமிழ் சங்கம் ரோடு வழியாகவும் அல்லது பாத்திமா கல்லூரி சந்திப்பு இடது கூடல்நகர் ெரயில்வே மேம்பாலம்- புதுநத்தம் சாலை ஆனையூர் அய்யர் பங்களா சந்திப்பு வழியாக வும் மற்றும் மூன்றுமாவடி சந்திப்பு அழகர்கோவில் சாலை வழியாகவும் கோரிப்பாளையம் செல்ல லாம்.
திண்டுக்கல் சாலை வழியாக நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள், இலகுரக நான்கு சக்கர வாகனங்கள் செல்லூர் பாலம் வரும் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் தத்தனேரி வழியாக பாலம் ஸ்டேசன் ரோட்டை அடைந்து கோரிப்பாளையம் பகுதிக்கு செல்லலாம்.
மறுமார்க்கமாக கோரிப்பாளையம் சந்திப்பி லிருந்து செல்பவர்கள் செல்லூர் பாலம் வரை மாற்றம் ஏதும் இல்லை. செல்லூர் பாலத்தின் இடதுபுறம் அடியில் சர்வீஸ் சாலையில் சென்று - சப்வே வழியாக தத்தனேரி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலையை அடைந்து அம்மா பாலம் சந்திப்பு வழியாக செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
- மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
பொன்னேரி:
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதி விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கையாக தச்சூரிலிருந்து பொன்னேரி சாலைக்கும் மீஞ்சூர் அத்திப்பட்டு, எண்ணூர் துறைமுகத்தின் சாலையில் இருந்து தச்சூர் கூட்டு சாலைக்கு காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்று சப்-கலெக்டர் ஐஸ்வர்யா உத்தரவிட்டார்.
அதனை மீறி செல்லும் வாகனங்கள் மீது காவல்துறை வருவாய்த் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார். இதில் பொன்னேரி ஆய்வாளர் சின்னத்துரை மீஞ்சூர் டிராபிக் உதவி ஆய்வாளர் நாராயணசாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
- அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.
ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கோவை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
- திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வலியுறுத்தல்
கோவை,
கோவை சிவானந்தா காலனியை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஜாஸ்மின் மதியழகன் என்பவர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்து உள்ள புகார் மனுவில், நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து, ஆதிக்ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் திருநங்கைகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன. இது அவர்களை கேளிக்கை பொருளாகவும், நகைச்சுவைக்காக அவமானப்படுத்துவதாகவும் உள்ளது.
எனவே இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும். இல்லையெனில் திருநங்கைகளை அவமானப்படுத்தும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியாகி உள்ளார்.
- உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் பரமத்தி சாலையில் ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த ஓட்டலில் உணவு சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை பலியாகி உள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் உணவகத்தில் சாப்பிட்ட கர்ப்பிணி, குழந்தைகள் உட்பட 44 பேருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது.
இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிக்க கலெக்டர் உமா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை ஆட்சியர் உமா, மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் அருண் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்