search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கணவன் மனைவி"

    • புரிதல் இருந்தால் தான் உறவு நீண்ட காலம் நீடிக்கும்.
    • புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும்.

    கணவன் மனைவி உறவில் புரிதல் இருந்தால் தான் அந்த உறவு நீண்ட காலம் அவர்களை ஒன்றிணைத்து வைத்திருக்கும். புரிதல் இல்லாத உறவுகள் விரைவில் மனக்கசப்புகளால் அறுபடும். அந்த உறவில் இடைவெளி உண்டாகும். தம்பதிகளுக்குள் புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல் போனாலும், சிறு சிறு விட்டுக்கொடுத்தல்கள் தவிர்க்கப்படும் போதும் தான் இடைவெளி உண்டாகிறது. இதனை விளக்கும் ஒரு அருமையான கதை உங்களுக்காக...

    மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த ஒரு தம்பதியரில் மனைவிக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு நாள் இந்த மனுஷனோடு சேர்ந்து வாழ்ந்திருக்கிறோம். தன்னுடைய கணவனுக்கு தன்னுடனான வாழ்க்கை அலுப்பு தட்டி இருக்குமோ என்று ஒரு யோசனை. அதனை சோதிக்க நினைத்தாள் மனைவி. ஒருவேளை தான் விலகிப்போய்விட்டால் கணவன் எப்படி நடந்துகொள்வான் என்பதை பார்க்க ஆர்வம் கொண்டாள்.

    எனவே அன்று தன் கணவன் வீடு திரும்பும் முன்னர், ஒரு சின்ன காகிதத்தில் ஒரு குறிப்பை எழுதி அவன் பார்வையில் படும் இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்துகொண்டாள்.

    கணவன் வழக்கம் போல வீடு திரும்பினான். மேஜையின் மீது இருந்த குறிப்பில் உன்னுடனான வாழ்க்கை சலித்துவிட்டது. நான் உன்னை விட்டு விலகி செல்கிறேன். என்னை தேட வேண்டாம் என்று எழுதி இருந்தது. கணவன் குறிப்பை படித்துவிட்டு குறிப்பின் பின்புறத்தில் ஏதோ கிறுக்கிவிட்டு தன் செல்போனை எடுத்து பேசினான்.

    அதில் பேசும்போது, கடைசியாக அவள் போய்விட்டாள். நமக்கு இருந்த ஒரு தடையும் நீங்கிவிட்டது. நான் உன்னை சந்திக்க வருகிறேன். தயாராக இரு என்று சொல்லிக்கொண்டே கதவை பூட்டிவிட்டு வெளியேறினான்.

    உடனே அவனது மனைவி அழுதுகொண்டே கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்தவள், அவர் நம்மை தேடவில்லை, கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை என்று எண்ணிக்கொண்டு கோபத்துடன் குறிப்பின் பின்னால் அவன் என்ன எழுதினான் என்று பார்க்க அந்த குறிப்பை எடுத்து பார்த்தால்.

    அதில், ஏ! பைத்தியம் நீ கட்டிலுக்கு அடியில் ஒளிந்து இருக்கிறதை நான் பார்த்துவிட்டேன். எனக்கு பசிக்குது, கடைக்கு போய் பிரட் வாங்கி வருகிறேன். நீ எனக்கு பிரட் ஆம்லெட் போட்டு கொடு சாப்பிடுறேன். உனக்கு ஏதாவது வேண்டும்னா, எனக்கு போன் பண்ணு. இந்த உலகத்தில் மற்றவர்களை விட நான் உன்னை தான் அதிகமாக நேசிக்கிறேன். என் அன்பு முத்தங்கள்! என்று எழுதி இருந்தான். இதைக்கண்டதும் மனைவிக்கும் ஒரே ஆனந்தம்.

    கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவை இருவருமே பராமரித்தால் மட்டுமே அது உயிர்ப்போடு நீடிக்கும். தொடர்ச்சியாக ஒருவரை ஒருவர் ஈர்க்க உழைப்பும், அக்கறையும் தேவைப்படுகிறது. அந்த பராமரிப்பு பற்றி கணவனும் மனைவியும் யோசிக்க ஆரம்பித்தாலே நல்ல நண்பர்களாக, ஒருவருக்கொருவர் சுவாரசியமிக்க துணையாக இருக்கலாம்.

    • பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
    • குலசேகரம் அருகே இன்று காலை விபத்து

    திருவட்டார் :

    குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு கல் ஜல்லி ஏற்றிக் கொண்டு கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்கிறது. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன.

    இன்று காலையில் பள்ளி, கல்லூரி வாக னங்கள் செல்லும் போது, தேவிகோடு பகுதியை சேர்ந்த விஜு (வயது 40) தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தார். திருவரம்பு ரோட்டில் நாகக்கோடு பகுதியில் அவர்கள் வந்த போது எதிரே வந்த டாரஸ் லாரி மோதியது.

    இதில் இரு சக்கர வாகனம், லாரியின் முன் பக்கத்தில் சிக்கி கொண்டது. விஜூவும் அவரது மனைவியும் பலத்த காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை அந்தப் பகுதியில் நின்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் டாரஸ் லாரியை மடக்கி பொதுமக்கள் சிறைபிடித்தார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசா ரணை நடத்தினர்.

    விபத்து தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறுகையில், தினமும் காலை, மாலை பள்ளி- கல்லூரி வாகணங்கள் செல்லும் நேரங்களில், கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் கனிம வளங்கள் ஏற்றி வரும் வாகனங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்துவோம் என்றனர். விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
    • பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை, சன்னதி ரஸ்தா பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72).

    இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.

    இவரது மனைவி தமிழரசி (58).

    இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    கணவன், மனைவி இருவரும் திருப்பாலத்துறை மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், தனபால் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் தனபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தமிழரசியை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பாபநாசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கைலாசகுமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த கைலாசகுமார் வேம்புலதாவை சரமாரியாக வெட்டினார்.

    நெல்லை:

    அம்பை அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர் கைலாசகுமார் (வயது 37). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்த பகவதி என்பவரது மகள் வேம்புலதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

    சமீபகாலமாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த வேம்புலதா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரை குடும்பம் நடத்த வருமாறு கைலாசகுமார் அழைக்க சென்றுள்ளார்.அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கைலாசகுமார், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வேம்புலதாவை முதுகு, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். அதனை தடுக்க வந்த அவரது தாயார் பகவதிக்கும் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆலங்குளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர்கள் 2 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவி-மாமியாரை அரிவாளால் வெட்டிய கைலாசகுமாரை கைது செய்தனர்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • ஹசீனா பேகத்துடன் தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார்.
    • பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் கான் (வயது 32). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் டவுன் முகம்மது அலி தெருவை சேர்ந்த மகபூப்ஜான் என்பவரது மகள் ஹசீனா பேகம் (28) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இளம்பெண் கொலை

    இந்நிலையில் நேற்று மனைவியுடன் பேட்டை தர்காவுக்கு சென்ற இம்ரான்கான் அவரை சரமாரியாக குத்திக் கொன்றார். தொடர்ந்து இம்ரான்கான் டவுன் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

    பின்னர் அவர் பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அவரை கைது செய்த பேட்டை போலீசார் இம்ரான் கானிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-

    குடும்பம் நடத்த வர மறுப்பு

    எங்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். எனக்கும், எனது மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் என்னிடம் கோபித்து கொண்டு டவுனில் உள்ள தாய் வீட்டிற்கு ஹசீனா பேகம் சென்று விட்டார். அவரை என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்த வருமாறு அழைக்க நேற்று அவரது வீட்டிற்கு சென்றேன்.

    அப்போதும் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஹசீனா பேகத்தை தர்காவுக்கு வருமாறு அழைத்து சென்றேன். அப்போது என்னுடன் குடும்பம் நடத்த என்னுடன் வருமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்ததுடன் என்னுடன் வாக்குவாதம் செய்தார்.

    இதில் ஆத்திரடைந்த நான் எனது மனைவியை கத்தியால் சரமாரியாக குத்தினேன். இதில் பலத்த காயம் அடைந்து அங்கேயே உயிரிழந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    • நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது.
    • லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    களக்காடு:

    நெல்லை அருகே உள்ள பாளையங்கோட்டை, திருமலை தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது48).

    இவர் தனது மனைவி மலையரசியுடன் (42) மோட்டார் சைக்கிளில் ஏர்வாடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதே போல் நாங்குநேரியில் இருந்து ஏர்வாடிக்கு லோடு ஆட்டோ வந்து கொண்டிருந்தது. லோடு ஆட்டோவை கருங்குளத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் (24) ஓட்டி வந்தார். ஏர்வாடி அருகே ஆலங்குளம் ரோட்டில் வந்த போது, லோடு ஆட்டோ திடீர் என மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் இசக்கிமுத்தும், அவரது மனைவி மலையரசியும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு, ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து இருவரும் மேல் சிகிச்சை க்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இதுதொடர்பாக விபத்தை ஏற்படுத்திய லோடு ஆட்டோவை ஓட்டி வந்த ரஞ்சித்குமார் மீது வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர்.
    • முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை பஸ் நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக வயதான தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் குறித்து பொதுமக்கள் சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்திரவின் பேரில் போலீசார் அந்த தம்பதியினரை மீட்டு விசாரித்தனர். இதில் அவர்கள் முருகேஷ் (80), அவரது மனைவி கண்ணம்மாள் (70).

    இருவரும் கணவன், மனைனவி என்பதும், தங்க ளுக்கு யாரும் ஆதரவு இல்லை என்ற நிலையில் 2 பேரும் இப்படி ஊர், ஊராக சென்று தங்குவதும் போலீ சார் விசாரணையில் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து கணவன், மனைவி இருவரை யும், சமூக சேவகர் சொக்கலிங்கம் மூலம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பொன்நகர் பகுதியில் செயல்படும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

    • 24 வது அன்பியத்தை சேர்ந்த பிரின்ஸ் (35), பிரவீன் (33)ஆகியோர் மது போதையில் தகராறு
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ள வாணியக்குடி வியாகப்பர் சந்திப்பை சேர்ந்தவர் ததேயூஸ் (வயது 48). இவரது மனைவி பெட்ராஸ் மேரி (44).

    சம்பவத்தன்று அந்த பகுதியில் 24 வது அன்பியத்தை சேர்ந்த பிரின்ஸ் (35), பிரவீன் (33)ஆகியோர் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனை ததேயூஸ், பெட்ராஸ் மேரி ஆகியோர் வேடிக்கை பார்த்தார்களாம்.

    இதனால் இவர்கள் மீது பிரின்ஸ், பிரவீனுக்கு முன்விரோதம் ஏற்பட்டது. சம்பவத்தன்று 2 பேரும், ததேயூஸ் வீட்டிற்ள் புகுந்து ததேயூஸ், அவரது மனைவி பெட்ராஸ் மேரி ஆகியோரை தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த பெட்ராஸ் மேரி குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து பெட்ராஸ் மேரி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரின்ஸ், பிரவீன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வி தனது அம்மாவுடன் ஏழாயிரம்பண்ணையில் வசித்து வந்துள்ளார்.
    • காயம் அடைந்த செல்வி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி செல்வி( வயது 24). இவர் தனது மனைவியிடம் அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி செல்வி தனது அம்மாவுடன் ஏழாயிரம்பண்ணையில் 4 மாதமாக வசித்து வந்துள்ளார். அங்கு சென்ற வீரபாண்டி அவரை சமாதானப்படுத்தி ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். உடனே செல்வி தனது அம்மாவுடன் ஓடைக்கரைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு செல்வி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீரபாண்டி அவரை கன்னத்தில் அடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் அவருடைய காது, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளார். இதில் காயம் அடைந்த செல்வி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யாபுரம் போலீசார் தப்பி ஓடிய வீரபாண்டியை தேடி வருகின்றனர்.

    • தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கேட்ட கணவன்-மனைவி சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர்.
    • ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவுக்கிணங்க முதுகுளத்தூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவர் சார்பு நீதிபதி டி.ராஜகுமார் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் குணசேகர பாண்டியன் அமர்வு வழக்கறிஞராக பணியாற்றினார். மேலும் இந்த மக்கள் நீதிமன்றத்தில் வங்கியில் வாரா கடனாக நிலுவையில் இருந்த 4 வழக்குகளில் சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 252 வழங்க உத்தரவிடப்பட்டது. வாகன் விபத்து இழப்பீட்டு வழக்கில் 9 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு இழப்பீட்டுத்தொகையாக ரூ. 38 லட்சத்து 55 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. சிவில் வழக்குகளில் 9 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு தீர்வு தொகையாக ரூ. 13 லட்சத்து 53 ஆயிரத்து 546 என அறிவிக்கப்பட்டது.

    ஒரு விவகாரத்து வழக்கு விசாரணை முடிவில் கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இதனால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. சிறு குற்ற வழக்குகளில் 21 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 800 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

    • திருப்பத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்தில் கணவன்-மனைவி உயிர் தப்பினர்.
    • விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் உதயஅரசன். இவர் தனது மனைவி மேனஸ்கா, 2 வயது மகன் ஆகியோருடன் காரில் மதுரைக்கு புறப்பட்டார். திருப்பத்தூர் அருகே உள்ள சுண்ணாயிருப்பு பகுதி அருகே வரும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த அவரது மேனஸ்கா, அவரது இரண்டு வயது மகன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு முதல் உதவி சிகிச்சைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்

    ×