கிரிக்கெட் (Cricket)

அரை சதமடித்த கெய்க்வாட்

கெய்க்வாட், இஷான் கிஷன் அதிரடி - தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2022-06-14 15:10 GMT   |   Update On 2022-06-14 15:10 GMT
  • இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் கெய்க்வாட், இஷான் கிஷன் அரை சதமடித்தனர்.
  • இந்தியா பவர் பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் எடுத்தது.

விசாகப்பட்டினம்:

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்தியா அதிரடியில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் இருவரும் அதிரடியாக ஆடினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது.

கெய்க்வாட் 30 பந்தில் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 57 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 14 ரன்னில் அவுட்டானார்.

கெய்க்வாடை தொடர்ந்து இஷான் கிஷன் அரை சதமடித்தார். அவர் 35 பந்தில் 2 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 54 ரன்னில் அவுட்டானார்.

ரிஷப் பண்ட்6 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 6 ரன்னிலும் வெளியேறினர்.

இறுதியில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 31 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

இதையடுத்து, 180 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்குகிறது.

Tags:    

Similar News