உள்ளூர் செய்திகள் (District)

கால்நடை சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கால்நடை சிகிச்சை, விழிப்புணர்வு முகாம்

Published On 2022-12-16 07:09 GMT   |   Update On 2022-12-16 07:09 GMT
  • மந்திபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவி இயக்குனர் டாக்டர் அருண்பாலாஜி அறிவுரையின்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
  • இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு வந்து பயன் பெற்றனர்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் மணியனூர் ஊராட்சி மந்திபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவி இயக்குனர் டாக்டர் அருண்பாலாஜி அறிவுரையின்படி சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், செயற்கை முறையில் கருவூட்டல், தாதுஉப்பு கலவை வழங்குதல், மலடு நீக்க சிகிச்சை செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு ஏற்படும் முக்கிய நோய்கள் பற்றிய சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது. கால்நடை உதவி மருத்து வர் டாக்டர் அனிதா, கால்நடை ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர், பன்னீர் செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டனர்.

பி.ஜி.பி வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கால்நடை முகாமில் கலந்து கொண்டு பல்வேறு உதவிகளை செய்தனர். இதில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கொண்டு வந்து பயன் பெற்றனர்.

Tags:    

Similar News