இந்தியா

முதல் மந்திரி நிதிஷ்குமார்

கார் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி - நிதிஷ்குமார் அறிவிப்பு

Published On 2022-06-11 09:55 GMT   |   Update On 2022-06-11 09:55 GMT
  • கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
  • சடலங்களை அடையாளம் கண்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் தெரிவித்தது.

பாட்னா:

பீகாரின் பூர்னியா மாவட்டம் தாராபாடி பகுதியில் திருமண விழாவில் கலந்துகொண்டு கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள நானியா கிராமத்திற்கு 10 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை 3 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் பூர்னியா- கிஷன்கஞ்ச் மாநில நெடுஞ்சாலை அருகில் உள்ள தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 8 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் அதிகாரிகள் விரைந்தனர். மேலும், உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். காயமடைந்த 2 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பீகாரில் கார் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார். அத்துடன், ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News