கிரிக்கெட் (Cricket)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி தொடங்குகிறது.
- காயத்தால் மயங்க் யாதவ், ஷிவம் துபே, ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.
புதுடெல்லி:
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நவம்பர் 8-ம் தேதி டர்பனில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக மயங்க் யாதவ், ஷிவம் துபே மற்றும் ரியான் பராக் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை.
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியின் விபரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், ரமன் தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் தயாள்.