search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகிறது.
    • டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வாய்ப்பை பெற்றுள்ளது.

    புதுடெல்லி:

    அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ம் ஆண்டில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. இதிலும் 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    இதில் விளையாடும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்படும். ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். சூப்பர் 8 சுற்றில் அணிகள் இரு குரூப்பாக பிரிக்கப்படும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இரு அரையிறுதி போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

    டி20 உலகக் கோப்பையில் விளையாட 12 அணிகள் தற்போது வரை வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையை மையமாக வைத்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான தோதா கணேஷ் என்பவரை கென்ய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தோதா கணேஷ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
    • இதில் ரோகித் சர்மா சுப்மன் கில்லை தாண்டி 2-வது இடம் பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒருநாள் போட்டி வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

    அதில் ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா 2-வது இடத்திலும் உள்ளனர். சுப்மன் கில் 3வது இடத்திலும், விராட் கோலி 4வது இடத்திலும் உள்ளனர்.

    ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதல் இடத்தில் உள்ளார்.

    இந்திய வீரர் குல்தீப் யாதவ் 4-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 8வது இடத்தில் உள்ளார்.

    ஒருநாள் ஆல் ரவுண்டர் தரவரிசையில் வங்கதேசத்தின் முகமது நபி முதல் இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இந்திய வீரர் ஒருவர் கூட இடம்பெறவில்லை. ஜடேஜா 16வது இடத்தில் உள்ளார்.

    • உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களின் அட்டவணையை பிசிசிஐ மாற்றியது.
    • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளன.

    இந்திய அணியின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை பிசிசிஐ மாற்றியமைத்துள்ளது. மாற்றப்பட்ட அட்டவணைப்படி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதி குவாலியரில் நடைபெற இருக்கிறது.

    முன்னதாக இந்த போட்டி தரம்சாலாவில் நடைபெற இருந்தது. இதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அட்டவணையை மாற்றியமைத்துள்ளது.

    மாற்றப்பட்ட அட்டவணை:

    அடுத்த மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இதில் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்க இருந்த முதலாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 23 ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

    இதேபோன்று முதலாவது டி20 போட்டி அக்டோபர் 6 ஆம் தேதியும், மற்ற இரண்டு டி20 போட்டிகள் முறையே அக்டோபர் 9 மற்றும் அக்டோபர் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.

    வங்காளதேசத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடர் நடைபெற இருக்கிறது.

    இதில் டி20 தொடர் ஜனவரி 22, ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் போட்டியும், பிப்ரவரி 9 மற்றும் பிப்ரவரி 12 ஆகிய தேதிகளில் மற்ற இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. 

    • இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் நடந்தது.
    • இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    மும்பை:

    இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் தொடர் சமீபத்தில் நடந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    இந்நிலையில், ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் புதிய ஐ.பி.எல். போன்ற தொடரை உருவாக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறிப்பாக, ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாடுவதற்கு பதிலாக இந்தியாவிலேயே விளையாட விரும்புகின்றனர். அதை பி.சி.சி.ஐ.யிடம் முன்னாள் வீரர்கள் சேர்ந்து கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.

    இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள பி.சி.சி.ஐ. வருங்காலத்தில் முன்னாள் வீரர்களுக்கென ஐ.பி.எல். தொடரை நடத்த பரிசீலிக்க உள்ளது.

    இதுகுறித்து பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறுகையில், முன்னாள் வீரர்கள் வைத்துள்ள கோரிக்கை தற்போது முன்மொழிவு கட்டத்தில் உள்ளது. இந்த வருடம் அதை நடத்த வாய்ப்பில்லை. அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்ற மற்றும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காத வீரர்கள் அந்த லீக்கில் இடம்பெறுவார்கள் என தெரிவித்தார்.

    • ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதத்தில் பாகிஸ்தானில் நடக்கிறது.
    • பாகிஸ்தானில் நடக்கும் இத்தொடரில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    லாகூர்:

    ஐ.சி.சி. நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த ஆண்டு பிப்ரவரி–மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் நடக்கும் இந்தத் தொடரில் பங்கேற்க மாட்டோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

    எல்லைப் பிரச்சனையால் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் விளையாடுவதை இந்தியா நிறுத்திவிட்டது. மேலும், ஐ.சி.சி. மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தானுடன் பொது இடத்தில் இந்தியா விளையாடி வருகிறது.

    இதற்கிடையே, சாம்பியன்ஸ் டிராபிக்கான தங்களது போட்டிகளை இலங்கை அல்லது துபாயில் நடத்தும்படி ஐ.சி.சி.யிடம் பி.சி.சி.ஐ. கேட்டுக் கொண்டதாக தெரிகிறது.

    சமீபத்தில் பெஷாவரில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சம்பவங்கள் நடந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார். எனவே இந்தியா சொல்வது போல் பாதுகாப்பு பிரச்சனைகளை பாகிஸ்தான் சரிசெய்யவில்லை என கவலை தெரிவித்துள்ளார். வங்காளதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களின் போது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகள் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடப்பது சந்தேகம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, பசித் அலி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு:

    வங்காளதேச தொடருக்குப்பின் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நம் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றன. எனவே நாம் பாதுகாப்புக்கு கவனம் கொடுக்க வேண்டும்.

    இந்த சுற்றுப்பயணங்களில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி கண்டிப்பாக இங்கு நடக்காது. ஆனால் பலுசிஸ்தானிலும் பெஷாவரிலும் நமது ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்து வருகின்றனர்.

    அது ஏன் நடக்கிறது என்பதற்கு அரசாங்கம் மட்டுமே பதிலளிக்க முடியும். அது மிகவும் தவறு. இந்த நேரத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சிறு விஷயங்கள் நடந்தாலும் சாம்பியன்ஸ் டிராபி நடக்காது.

    நமது ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை வெளிநாட்டு அணிகளுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    • பார்டர் கவாஸ்கர் டிராபி இந்த ஆண்டின் இறுதியில் தொடங்குகிறது.
    • இதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஐ.சி.சி. நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இதற்கிடையே, இந்த ஆண்டின் கடைசியில் தொடங்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், பார்டர் கவாஸ்கர் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறுகையில், இது 5 போட்டிகள் கொண்ட தொடராக உள்ளது. கடந்த இரண்டு முறை 4 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. 5 டெஸ்ட் போட்டிகள் என்பதால் எல்லோரும் மிகவும் உற்சாகமாக இருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான் ஒருபோதும் முனையப் போவதில்லை. எங்காவது டிரா இருக்கும். மோசமான வானிலை இருக்கும். எனவே, இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வெல்லும் என தெரிவித்தார்.

    • லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட், ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
    • லாஸ் ஏஞ்சல்சில் 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இதில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதல் இடம்

    பிடித்து அசத்தியது. இந்தியா ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.

    இதையடுத்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெற உள்ளது. 34-வது ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா ஜூலை 14-ம் தேதியும், நிறைவு விழா ஜூலை 30-ம் தேதியும் நடைபெற உள்ளது.

    இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் டி20 கிரிக்கெட் மற்றும் ஸ்குவாஷ் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் ஸ்காட்லாந்து கிரிக்கெட் ஆகியவை இணைந்து கிரேட் பிரிட்டனாக விளையாட ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன.

    2026 மற்றும் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பைகள், விளையாட்டை வளர்ப்பதற்கும் மற்றும் கிரிக்கெட் மீதான அன்பை வளர்த்துக் கொள்ள அதிகமான மக்களை ஊக்குவிக்கவும் இது மற்றொரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

    லாஸ் ஏஞ்சல்சில் ஏற்கனவே 1932 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்துள்ளன. தற்போது அங்கு 3-வது முறையாக ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மல்யுத்த இறுதிப் போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
    • வினேஷ் போகத்திற்கு சச்சின், கங்குலி, உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.

    இதைத் தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

    சச்சின், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார்.

    • முகமது நபிக்கு எதிராக பேசும் நசியா கான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்ஸ்டாவில் பதிவிட்ட சிவம் துபே மனைவி.
    • பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என பாஜக தலைவர் கோரிக்கை

    இந்திய அணியின் ஆல் ரவுண்டரான சிவம் துபே 2021 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் அஞ்சும் கான் இஸ்லாம் மதத்தையே பின்பற்றி வருகிறார்.

    இந்நிலையில், அஞ்சும் கான் பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கானை விமர்சித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    அந்த பதவியில், முகமது நபிக்கு எதிராக தொடர்ச்சியாக நசியா கான் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று #arrestnaziaelahikhan என்ற ஹேஸ்டேக் உடன் அவர் பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானதை தொடர்ந்து அவர் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

    தற்போது அந்த பதிவிற்கு பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் நசியா கான் பதில் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், நீங்கள் ஒரு இந்துவை திருமணம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்போது இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. எனக்கு எதிரான வன்முறையை தூண்டும் பொய்யான தகவலை நீங்கள் வெளியிட்டுள்ளீர்கள். பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, துபேவை கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

    அவர் தனது பதிவில் பிசிசிஐ, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் டெல்லி காவல்துறையை டேக் செய்துள்ளார்.

    • பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார்.
    • திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது. இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.

    தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண ராகுல் டிராவிட் சென்றார். பின்னர் தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு ராகுல் டிராவிட் கோப்பையை வழங்கினார்

    இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதான ஊழியர்களுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • கான்வே காயத்தில் இருந்து மீண்டு அணியில் இணைந்துள்ளார்.
    • மைக்கேல் பிரேஸ்வெலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.

    நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கெதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி இந்தியாவில் நடைபெறும். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நியூசிலாந்து அணியில் அஜாஸ் பட்டேல் இடம பிடித்துள்ளார்.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்காட் குகெலினுக்கு பதிலாக அஜாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் சுமார் ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆல்ரவுண்டர் மிக்கேல் பிரேஸ்வெல், டேவன் கான்வே ஆகியோர் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    டிம் சவுதி அணியின் கேப்டனாக தொடர்கிறார். டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன் இடம பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி செப்டம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நொய்டாவில் நடக்கிறது.

    இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 18-ந்தேதியும், 2-வது டெஸ்ட் செப்டம்பர் 26-ந்தேதியும் நடக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் நியூசிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

    • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
    • ஆசிய கோப்பை தொடரில் சமாரி அட்டப்பட்டு 304 ரன்கள் குவித்தார்.

    கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதந்தோறும் ஐசிசி தேர்வு செய்து அவர்களை அந்தந்த மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையாக அறிவிக்கும்.

    அதன்படி ஜூலை மாதத்தின் சிறந்த வீரராக இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி, இங்கிலாந்து தொடரை கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

    இலங்கையில் நடைபெற்ற பெண்களுக்கு ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சமாரி அட்டப்பட்டு சிறப்பாக விளையாடி இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இதனால் சமாரி அட்டப்பட்டு ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்தத் தொடரில் அட்கின்சன் 22 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    சமாரி அட்டப்பட்டு பெண்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் 304 ரன்கள் குவித்தார். சராசரி 101.33 ஆகும். மலேசியாவுக்கு எதிராக 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முக்கியமான போட்டிகளில் இரண்டு அரைசதங்கள் விளாசினார்.

    ×