என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "girl missing"
- பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
- தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. மரம் வெட்டும் தொழிலாளி.
இவருடைய மனைவி சின்னபாப்பா. தம்பதிக்கு 5 மகன், 5 மகள் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடைக்குட்டி மகள் பிரியா.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருடன் வெளியே சென்றபோது பிரியா திடீரென காணாமல் போனார். மகளை பல்வேறு இடங்களில் அவரது பெற்றோர் தேடினர். அவர்களிடம் பிரியாவின் போட்டோ எதுவும் இல்லை. மேலும் போலீசிடம் புகார் கொடுக்கக்கூடிய விவரமும் தெரியவில்லை. அதனால் உள்ளுக்குள் அழுது துடித்தனர்.
தினந்தோறும் மகளை எண்ணி அவர்கள் தவித்தனர்.
இதற்கிடையே 6 வயது சிறுமியாக இருந்த பிரியாவை மீட்ட பெண் ஒருவர் ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்தார்.
அந்த காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது உரிமம் இன்றி இயங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து குழந்தைகள் நலகுழுவினர் பிரியாவை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். அங்கு வளர்ந்த அவர் 10-ம் வகுப்பு வரை படித்தார்.
பெற்றோரை விட்டு பிரிந்த பிரியாவுக்கு அவரது பெற்றோரின் பெயர் நன்றாக தெரிந்தது. இதனால் தனக்கு பெற்றோர் இருப்பதாக அடிக்கடி காப்பகத்தில் உள்ள அதிகாரியிடம் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொந்த ஊரும் அவருக்கு நினைவுக்கு வந்தது. இது குறித்து காப்பக மேலாளரிடம் கூறினார்.
இதையடுத்து அதிகாரிகள் பிரியாவின் சொந்த ஊருக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து தகவல் தெரிவித்தனர். அதனை கேட்டு அவர்கள் ஆனந்த கண்ணீர் விட்டனர். மகளை உடனடியாக பார்க்க வேண்டும் என ஓடோடி வந்தனர்.
பிரியா உண்மையிலேயே அவர்களது மகள் தான் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே அவரிடம் ஒப்படைக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.
இதனைத் தொடர்ந்து பிரியாவின் பெற்றோர்களான ஏழுமலை, சின்னபாப்பா மற்றும் பிரியாவிற்கு கடந்த 2021-ம் ஆண்டு டி.என்.ஏ. சோதனை நடத்தப்பட்டது.
அதன்முடிவில் பிரியாவின் தந்தை ஏழுமலை என்று தெரிய வந்தது.
இது குறித்து முறையாக வேலூர் கோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோர்ட்டு உத்தரவின் பேரில் பிரியாவை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்தனர்.
நேற்று வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் முன்னிலையில் பிரியா பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அப்போது பெற்றோர் பிரியாவை கட்டி அணைத்து அழைத்துச் சென்றனர். அவர்கள் அனைவரது முகத்திலும் ஆனந்த கண்ணீருடன் மகிழ்ச்சியை காண முடிந்தது.
தன்னை பெற்றோருடன் சேர்த்த அதிகாரிகள் அனைவருக்கும் கை கூப்பி நன்றி தெரிவித்தபடி பிரியா பெற்றோருடன் சொந்த ஊருக்கு சென்றார்.
வீட்டுக்கு சென்றதும் பிரியாவை அவரது உறவினர்கள் திரண்டு வரவேற்று அழைத்து சென்றனர். இது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்தது.
9 ஆண்டுகளுக்கு பிறகு பெற்றோருடன் சேர்ந்த பிரியா கூறியதாவது :-
6 வயதில் நான் எப்படி மாயமானேன் என்பது எனக்கு நினைவு இல்லை.
அப்போது எனது பெற்றோர், ஊர் விவரங்களை சொல்லவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் வளர்ந்தேன். அங்கிருந்தவர்கள் என்னை படிக்க வைத்தனர்.
பின்னர் அங்கிருந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு வேலூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டேன். அப்போது எனக்கு ஓரளவு விவரம் தெரியவந்தது.
அங்கிருந்த அதிகாரிகளிடம் எனக்கும் குடும்பம் இருக்கிறது. எனது பெற்றோர் பெயர் தெரியும் ஊர் தெரியும் என கூறினேன்.
அவர்கள் அது பற்றி விவரங்களை கேட்டனர். நானும் கூறினேன்.
இதை தொடர்ந்து எனது பெற்றோர் குறித்த விவரங்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர்களை தேட ஆரம்பித்தனர்.
காப்பகத்தில் மற்ற குழந்தைகளை பார்க்க அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் வருவார்கள்.
அதனை பார்க்கும்போது நமக்கும் குடும்பம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே கடவுளே என்னை எப்படியாவது என் பெற்றோரிடம் சேர்த்துவிடு என அழுது புலம்புவேன்.
அவர்கள் நினைவில் வாடினேன். நான் தினந்தோறும் வேண்டாத தெய்வம் இல்லை.
என்னை எப்படியாவது என்னை பெற்றோருடன் சேர்த்து விடுங்கள் என தினந்தோறும் அதிகாரிகளும் கூறிக்கொண்டே இருப்பேன்.
அதிகாரிகளும் தீவிரமாக தேட தொடங்கினர். ஒரு வழியாக எனது பெற்றோரை கண்டு பிடித்தனர்.
டி.என்.ஏ. பரிசோதனைக்கு பிறகு நான் பெற்றோருடன் சேர்ந்துள்ளேன். நான் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறேன்.
என்னுடன் பிறந்தவர்களில் 7 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. இன்னும் 2 அண்ணன்கள் மட்டுமே திருமணமாகாமல் உள்ளனர். வீட்டில் உள்ள நல்ல காரியங்களில் கூட பங்கேற்க முடியாமல் போய்விட்டது.
எனது பெற்றோரும் என்னை பல ஆண்டுகள் தேடியுள்ளனர். கடவுள் அனுக்கிரகத்தால் மீண்டும் சேர்ந்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- நேற்று வீட்டில் இருந்த பானுப்பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகள் பானுப்பிரியா (வயது 23). இவரது கணவர் தர்மராஜா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலை யில் பானுப்பிரியாவிற்கும், அவரது கணவர் தர்மராஜா விற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து பானுப்பிரியா கணவரை விட்டு பிரிந்து சுப்பிரமணி யபுரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகளுடன் கடந்த 8 மாதமாக வசித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த பானுப் பிரியா மகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங் களில் தேடியும் பானுப்பிரியா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி பானுப்பிரியாவின் தாயார் சமுத்திரக்கனி (46) களக்காடு போலீசில் புகார் செய்தார். நாங்குநேரி டி.எஸ்.பி. ராஜு, களக்காடு இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி மாயமான பானுப் பிரியா மற்றும் அவரது மகளை தேடி வருகின்றனர்.
- கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
- அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ். இவரது மனைவி மேகலா (27) கூலி தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கோகிலாவின் தோழியின் கணவர் பாண்டியன் என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால் கோகிலாவின் 10 வயது சிறுமியை கடைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமி மாயமாகியுள்ளார். அரக்கோணம் ரெயில்வே போலீசார் திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலரிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர் அந்த சிறுமியை வேலூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் வேலூர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்று அங்கு இருந்த சிறுமியை மீட்டு பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
- சந்தியா பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
- இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம்கி ராமத்தை சேர்ந்தவர்ஏழுமலை. இவரது மகள் சந்தியா (17). இவர் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்தவரை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டை போலீஸ் அவரது தாய் சரிதா புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.இன்ஸ்பெக்டர்நந்தகுமார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணைதேடி வருகிறார்.
- மணியரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
- புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அருகே தட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு. இவரது மகள் புவனேஸ்வரி (வயது 29)திருமணம் ஆகாதவர். மணி யரசு மனநலம் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மனவேதனையில் இருந்த புவனேஸ்வரி கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. இதைக் கண்டு அதிர்ந்து போன குடும்பத்தினர் அக்கம்பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக அவரது சித்தப்பா பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்.இன்ஸ்பெக்டர் தங்க வேல்ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன இளம் பெண்ணை தீவிர மாக தேடி வருகின்றனர்.
- விருதுநகர் அருகே பெண் உள்பட 2 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பரங்கிரிநாதபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (26). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அருகில் உள்ள மாரிமுத்து என்ற வாலிபருடன் பூங்கொடி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை மணிகண்டன் பலமுறை கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மணிகண்டன் இரவு பார்த்தபோது, மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸ் நிலையத்தில் மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார்.
விருதுநகர் டவுன் ஜே.சி.பி. காம்பவுண்டை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (45). இவரது மகன் மாரிமுத்து (28). வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மகனை கண்டுபிடித்து தருமாறு சுப்புலட்சுமி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விருதுநகர் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன இருவரையும் தேடி வருகின்றனர்.
- உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
- சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இவரது உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்த சிறுமி எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் நான் படித்து முடித்த பின்னர் பார்க்கலாம் என்று மறுத்துவிட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இதைக் கேட்காமல் மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத சிறுமி நேற்று இரவு 11 மணி அளவில் நான் எங்கேயாவது ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தவுடன் சிறுமி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து வீட்டை விட்டு சென்ற சிறுமி எங்கு சென்றார் என்பது குறித்து கடிதம் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்.
- காணாமல் போனவரை போலீசார் மீட்டனர்.
- போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த மார்ச் மாதம் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்றார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர் ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி கண்டு பிடித்தனர்.
பின்னர் போலீசார் அந்த சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் அந்த சிறுமி சம்பவத்தன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்று வீடு திரும்பினார்.
நேற்று வீட்டில் இருந்த சிறுமி யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து மீண்டும் வீட்டை விட்டு மாயமானார். சிறிது நேரம் கழித்து வீட்டில் நகை மற்றும் சிறுமி மாயமாகி இருந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து கிடைக்காததால் மீண்டும் சிறுமியின் தாயார் மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்த நகைகளுடன் மாயமான 10-ம் வகுப்பு மாணவியை தேடி வருகின்றனர்.
- திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி திவ்யா தேவி (வயது 28)
- வீட்டிலிருந்து தனது 3 வயது குழந்தை தர்ஷனாவுடன் வெளியே சென்ற திவ்யா தேவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
திருச்சி
திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகரை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி திவ்யா தேவி (வயது 28) இவர்களுக்கு தர்ஷனா (வயது 3) என்ற மகள் உள்ளார். நாராயணன் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் அடிக்கடி நாராயணன் குடித்துவிட்டு வருவது வழக்கம். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் வீட்டிலிருந்து தனது 3 வயது குழந்தை தர்ஷனாவுடன் வெளியே சென்ற திவ்யா தேவி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.
நாராயணன் பல இடங்களில் தேடிப்பார்த்தும் திவ்யா தேவியை காணவில்லை. இது குறித்து நாராயணன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகார் பேரில் போலீஸ் சார் வழக்கு பதிவு செய்து திவ்யா தேவியை தேடி வருகின்றனர்.
இதே போன்று திருச்சி உறையூர் வேர்ஹவுஸ் காலனி சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் தாரணி (வயது 20) இவர் சாலை ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.சம்பவத்தன்று வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை,
இது தொடர்பாக அவரது தந்தை பாலசுப்பிரமணியம் உறையூர் போலீஸ் புகார் கொடுத்துள்ளார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான தாரணியை தேடி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பிரசாத கடை நடத்தி வந்தவர் சுனிதா (வயது32). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து சுனிதா கணவரின் சகோதரியுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார்.
கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுனிதா திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மாமல்லபுரம் அடுத்த எச்சூர்காட்டு பகுதியில் அழுகிய நிலையில் சுனிதா பிணமாக கிடந்தாள்.
மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு சுனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி புதிய காலனியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் பிரமிலா (வயது17). சென்னை தியாகராயா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 17-ந்தேதி கல்லூரிக்கு சென்ற பிரமிலா வீடு திரும்பாததால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் மாயமான பிரமிலாவை போலீசார் தேடிவருகின்றனர்.
இதேபோல், ஊத்துக்கோட்டையை அடுத்த கொய்யாதோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபி. சலவை தொழிலாளி. இவரது மனைவி கீர்த்திகா (28).
கடந்த 20-ந்தேதி கீர்த்திகா மளிகை பொருட்கள் வாங்குவதற்காக ஊத்துக்கோட்டை வந்தார். பின்னர் அவர் திருப்பவில்லை. இதுகுறித்து கோபி ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் வழக்குப்பதிவு செய்து கீர்த்திகாவை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்