என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
காங்கயம்- கோவை ரோடு பொங்கலூர் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனி (வயது 46). மாடு வியாபாரி. நேற்று அதிகாலை எழுந்த பழனி டீ குடிக்க பேக்கரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.
நாச்சிபாளையம் பிரிவு சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரின் மூத்த நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தவர் லோகநாதன். இவரது இரு மகன்களான நிர்மல் குமார், சிவராமன் ஆகியோருடன் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் கள்ளகுறிச்சி அருகே உள்ள வேப்பூர் பகுதியை நெருங்கி போது எதிரே வந்த பஸ் கார் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மரணமடைந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #Minister #Jayakumar #EdappadiPalanisamy
பேரையூர்:
உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி பாண்டியம்மாள் (வயது 54).
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து திருமங்கலம் போலீஸ் நிலைய காவலில் அடைக்கப்பட்டு இருந்த பாண்டியம்மாளை நேற்று போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.
இதனையடுத்து பாண்டியம்மாள் வீட்டுக்கு செல்வதற்காக திருமங்கலம்- கப்பலூர் இடையே உள்ள 4 வழிச்சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அவர் ரோட்டை கடக்க முயன்ற போது விருதுநகரில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட பாண்டியம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சேலம் மாவட்டம், ஆத்தூர், அரியமுத்து பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம், தாகூர் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர், அண்ணன் மகளான 2-ம் வகுப்பு படிக்கும் சுசியுடன் (8) ஐ.சி.எப். சிக்னல் அருகே சாலையில் நடந்து வந்தார்.
அப்போது அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார் திடீரென விஜயலட்சுமி, சுசி மீது பயங்கரமாக மோதியது. பின்னர் தறிகெட்டு ஓடி சாலையோர நடைபாதையில் மோதி நின்றது.
இதில் விஜயலட்சுமிக்கும், சுசிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமி, சுசிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அயனாவரத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகனான கல்லூரி மாணவர் சரணை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் காரை அதிவேகமாக ஓட்ட ரூ.2 லட்சம் வரை செலவு செய்து காரை மாற்றி வைத்து இருந்தார்.
புளியங்குடி நீர்பாய்ச்சிமாறன் தேருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 27). விவசாயி. இவர் தனது வயல் நடுவை வேலைக்கு ஆட்கள் அழைத்துவர நேற்று இரவு சிவகிரி அருகே உள்ள ஆத்துவழி பகுதிக்கு சென்றார்.
பின்னர் ஊர் திரும்புவதற்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மதுரையில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாசுதேவநல்லூர் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், பலியான கிருஷ்ணன் உடலை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஹரீஷ் (54) என்பவரை கைது செய்தனர்.
நடுவை வேலைக்கு ஆட்கள் தேடி சென்ற விவசாயி கார் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
வேதாரண்யத்தை அடுத்த மருதூரை சேர்ந்தவர் ராகவன். கார் டிரைவர். இவர் நேற்று தனது காரில் செட்டிபுலத்தை சேர்ந்த செந்தில்குமார் மனைவி எழிலரசி, அவரது மகள் வர்சினி, உறவினர் ராஜேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு திருச்சி விமான நிலையம் சென்றார். அவர்கள் கரியாப்பட்டினம் பகுதியில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோர மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து காரின் மீது விழுந்தது. இதில் ராகவன் உள்பட 4 பேரும் காயமடைந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கரியாப் பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கரியாபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்(வயது 18). திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவர் தெற்குகாடு செட்டிபுலத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஆவார். இவர் வேதாரண்யம் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார் என்பது விசாரணையில் தெரிவந்துள்ளது.
திருச்செந்தூர்:
பாளை அன்புநகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது46). இவர் தனியார் டி.டி.எச்-ல் மண்டல மேலாளராக பணியாற்றி வருகிறார். இன்று காலை இவர் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வதற்காக தனது காரில் புறப்பட்டு சென்றார். காரை பாளை சமாதானபுரம் அம்பேத்கார் நகரை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.
கார் திருச்செந்தூர் அருகே உள்ள நட்டங்குளம் பகுதியில் சென்ற போது எதிர்பாராத விதமாக கார் சாலையோரம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கண்ணன் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி கிருஷ்ணன் (வயது34). வெள்ளி பொருட்களை பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்து வந்தார். மதுரையிலும் பொருட்களை கொடுத்து விட்டு வசூல் செய்வது வழக்கம்.
அதன்படி மதுரைக்கு சென்று பணம் வசூலித்த முரளிகிருஷ்ணன் காரில் சேலம் நோக்கி 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் அருகே வேடசந்தூர் விருதலைப்பட்டி பிரிவு தனியார் மில் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
சாலையோரத்தில் இருந்த எல்லை கல்லில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த முரளிகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த கூம்பூர் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மாமல்லபுரம்:
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ், சாப்ட்வேர் என்ஜினீயர். நேற்று மதியம் காரில் நண்பர் பிரவீனுடன் பாண்டிச்சேரி சென்றார். கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது.
இதில் காரை ஓட்டிச் சென்ற ஹரீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். பிரவீன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்