என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
ராஜபாளையம்:
சிவகாசி முனீசுவரன் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 29). ஆப்செட் பிரிண்டிங் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அதே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் செல்வம் (26), சாரதா நகர் காளிமுத்து (30), என்.ஜி.ஓ. காலனி விக்னேஷ் (25). இவர்கள் 4 பேரும் குற்றாலம் செல்ல திட்டமிட்டனர்.
நேற்று முன்தினம் அவர்கள் காரில் குற்றாலம் புறப்பட்டனர். விக்னேஷ் காரை ஓட்டினார்.
குற்றாலத்தில் ஆனந்தமாக குளித்த அவர்கள் நேற்று அதிகாலை அங்கிருந்து புறப்பட்டனர். தளவாய்புரம் விலக்கு அருகே கார் வந்தபோது, திடீரென தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரமேஷ் உள்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ரமேசின் நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் நிர்மல் (வயது 30). இவர் அங்கு ஷூமார்ட் வைத்துள்ளார். இந்தநிலையில் திருச்சியில் வசித்து வரும் அவரது மாமனாரை பார்ப்பதற்காக நேற்றிரவு காரில் கோவில்பட்டியில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காரை நிர்மலே ஓட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை திருச்சி-மதுரை நான்கு வழிச்சாலையில் செல்லும் போது சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த நிர்மல் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே லாரி டிரைவர், லாரியை எடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான நிர்மலுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
திருச்சி -மதுரை நான்கு வழிச்சாலையில் டிரைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக டோல் கேட்டுகளில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் டிரைவர்கள் சிலர் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி ஓய்வு எடுத்து வருகின்றனர்.
இரவு நேரங்களில் சாலையோரம் லாரிகளை நிறுத்தியிருப்பது தெரியாததால், அந்த வழியாக வரும் வாகனங்கள் லாரிகள் மீது மோதி, அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #tamilnews
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 22). இவரும், ஏர்வாடி நாடார் குடியிருப்பை சேர்ந்த அர்ஜூன் (20) என்பவரும் ஒரு பைக்கில் நேற்று மாலை களக்காட்டில் இருந்து ஏர்வாடிக்கு சென்று கொண்டிருந்தனர். எஸ்.என்.பள்ளிவாசல் அருகே சென்ற போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கல்லிடைகுறிச்சி நோக்கி சென்ற காரும், பைக்கும் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பைக்கில் சென்ற அஜித்குமார், அர்ஜூன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் அஜித்குமார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், அர்ஜூன் வள்ளியூர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி களக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த சின்னமருது மகள் அங்கையர்கரசி (வயது 24). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவருடன், ஈரோடு கலெக்டர் அலுவலகம் பகுதியை சேர்ந்த ராமு மகள் ஷாலினி (24), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ராம்குமார் (25), சதீஷ், கோகுல் ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அனைவரும் நண்பர்கள். இதில் அங்கையர்கரசி விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவரை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து ஒரு காரில் ஷாலினி உள்பட 4 பேரும் வந்தனர்.
அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. காரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர டிரைவர் முயன்றும் அது முடியவில்லை. அதற்குள் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அப்பளம் போல கார் நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி ஷாலினி உள்பட 5 பேரும் படுகாயம் அடைந்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்களை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாலினி பரிதாபமாக இறந்தார்.
சதீஷ், கோகுல், ராம்குமார், பிரபுராஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நைனாப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் தமிழ்செல்வன் (வயது 28).
நாமக்கல்லில் பாணி பூரி கடை நடத்தி வந்த இவர் நேற்று தனது உறவினர்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 8 பேருடன் நாமக்கல்லுக்கு ஒரு காரில் புறப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் கார் வந்த போது சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி நொறுங்கியதால் இடிபாடுகளுக்குள் சிக்கி காருக்குள் இருந்தவர்கள் அலறினர்.
தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் தமிழ்செல்வன் வரும் வழியிலேயே இறந்து விட்டார். அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
படுகாயம் அடைந்த தமிழ்செல்வனின் உறவினரான சோமு (22), தேவி , சுகன்யா ஆகியோர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காரில் இருந்த 5 குழந்தைகள் லேசான காயத்துடன் தப்பினர்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து அவர்களது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. #tamilnews
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஓனாசிறுவயலை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 35). இவரும் அதே பகுதியை சேர்ந்த சிதம்பரம்(50), நாகராஜன்பிரபு(28) ஆகியோர் நேற்று மாலை ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.
காரை பழனிவேல் ஓட்டிசென்றார். நள்ளிரவு 1 மணியளவில் அந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது முன்னால் துணிப்பைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திடீரென்று 4 வழிச்சாலையில் திரும்பியபோது பின்னால் வந்த கார் திடீரென்று லாரி மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பழனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிதம்பரம், நாகராஜன்பிரபு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், சரஸ்வதி ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வந்துள்ளனர். கோவிலில் வழிபாடு முடிந்து, காரில் ஊருக்கு புறப்பட்டனர். இன்று அதிகாலை 4 மணியளவில் லக்னோ-ஆக்ரா நெடுஞ்சாலையில் திர்வா அருகே சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் முற்றிலும் சிதைந்துபோனது. காருக்குள் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்துள்ளார். #UPAccident
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனநாயுடு தெருவை சேர்ந்தவர் காசிம். இவரது மகன் முபாரக்(வயது 24). இவரது நண்பர் சிவக்குமார்(22).
முபாரக், சிவக்குமார் ஆகியோர் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
இன்று காலை 7 மணியளவில் அந்த கார் திண்டிவனம் அடுத்த பாதிரி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் அந்த கார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டையை தாண்டி எதிர்திசையை நோக்கி சென்றது. அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வந்தது. அந்த லாரி இந்த கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. விபத்தில் காரில் இருந்த முபாரக், சிவக்குமார் ஆகியோர் அதே இடத்தில் உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒலக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விஜயபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் அரவிந்த் (வயது25). இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து காரைக்காலில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலுக்கு காரில் வந்து கொண்டிருந்தனர். காரை அரவிந்த் ஓட்டி வந்துள்ளார். அப்போது நாகூர் அருகே பூதங்குடி என்ற இடத்தில் சென்றபோது திடீரென காரின் பின்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் தாறுமாறாக ஓடிய கார், சாலையின் ஓரத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் வந்த 7 பேர் காயம் அடைந்தனர். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். மேலும், தகவல் அறிந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). தொழிலாளி. இவரது மகன் தேவநாதன்(35). இவர்கள் 2 பேரும் இன்று காலை மடப்பட்டில் இருந்து பேரங்கியூருக்கு மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.
அரசூர் பாரதிநகர் அருகே திருச்சி-சென்னை சாலையில் சென்றபோது பின்னால் கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி கார் வந்தது. அந்த கார் திடீரென மாட்டுவண்டி மீது மோதியது. இதில் கார் நிலைதடுமாறி நடுரோட்டில் கவிழ்ந்தது. கார் மற்றும் மாட்டுவண்டி பலத்த சேதமடைந்தன.
மாட்டு வண்டியில் இருந்த ஆறுமுகம் மற்றும் அவரது மகன் தேவநாதன் ஆகிய 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் தேவநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். காரில் இருந்த கன்னியாகுமரியை சேர்ந்த சிவராமன் உள்பட 2 பேரும் காயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டன.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த ஆறுமுகம், சிவராமன் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோபி:
கோபி அருகே உள்ள அக்கரை கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 50). விவசாயி. இவர் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டார். காரை பாலசுப்பிரமணியத்தின் மாமனார் நல்லசாமி ஓட்டினார்.
காரின் பின்பகுதியில் பாலசுப்பிரமணியத்துடன் அவரது மனைவி தெய்வ மணி (45) இருந்தார். முன் சீட்டில் பாலசுப்பிரமணியத்தின் மகன் அஸ்வின் பாரதி (19) இருந்தார்.
இவர்கள் சென்ற கார் இன்று காலை கோபி-குன்னத்தூர் ரோட்டில் அருகே உள்ள கெட்டிச்செவியூர் அருகே சென்று கொண்டிருந்தது.
திடீரென கார் ரோட்டின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் காரில் இருந்த பாலசுப்பிரமணியன், தெய்வமணி, நல்லசாமி, அஸ்வின் பாரதி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.
பால சுப்பிரமணியன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரும், மற்றவர்களும் சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்