என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Darshan"
- 4-ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.
- மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் அருகே வடரெங்கம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்த மான அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளது.
மிகவும் பழமையான இந்த கோயில் 15 வருடங்களுக்குப் பிறகு திருப்பணி முடிவுற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு 8-ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, தன பூஜை,கணபதி ஹோமம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை பிரவேசம் தொடங்கி முதல் காலயாக பூஜை நடைபெற்றது.
நேற்று 4வது கால யாக பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதி, மகாதீபாராதனை நடந்தது.
தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள,தாளங்கள் முழங்கிட கோயிலை வலம் வந்து மூலவர் விமான கலசம், அகிலா ண்டேஸ்வரி,விநாயகர், முருகன், கஜலட்சுமி, பைரவர் ஆகிய பரிவார மூர்த்திகள் சந்நிதி கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அன்பரசன், ஆய்வாளர் வீரவேல்பிரனேஷ், தக்கார் முருகன், கணக்காளர் ராஜி, ஊராட்சி மன்ற தலைவர் சுமத்ரா சின்னதுரை, தி.மு.க. செயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் சின்னதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் செந்தாம ரைகண்ணன் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
- 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் (மேற்கு பார்த்த சிவன்) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.
தொடர்ந்து, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரி யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெ ற்றது.
நிகழ்ச்சியில் திருப்பணி குழு தலைவர் ராஜேந்திரன், அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், தொழி லதிபர் பிரபு, கோவில் நிர்வாகி விஜயராகவன், கடின ல்வயல் பங்குதந்தை நித்திய சகாயராஜ், தோப்புதுறை ஜமாத் மன்ற தலைவர் ஷாபி, முன்னாள் ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் மற்றும் ஜமாத் மன்ற நிர்வாகிகள், கருப்ப ம்புலம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வல்லத்தில் பிரசித்தி பெற்ற யோக நரசிங்கப் பெருமாள் கோவில் உள்ளது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லத்தில் யோக நரசிங்கப் பெருமாள் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரம் அன்று பக்தர்கள் நெய்தீபமேற்றி வழிபடுவதை வழக்கமாக கொண்டு ள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத தேவராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெய் தீபமேற்றி அர்ச்சனை செய்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
- தஞ்சை பெரிய கோவிலில் மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
- மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்து.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள பெரிய கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேப்போல் பிள்ளையார்பட்டியில் உள்ள ஹரித்ரா விநாயகர் கோவிலில் விநாயகருக்கு நந்தி வாகனம் உள்ளது.
இக்கோவில் அர்த்த மண்டபத்தில் ஆவுடையார் இல்லாமல் லிங்கம் உள்ளது.
கோவில் பிரகாரத்தில் கட்டப்பட்டுள்ள வைத்தியநாத சுவாமி, தையல் நாயகி அம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் நந்திக்கு நேற்று ஆவணி சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
கருவறையின் முன்னதாக உள்ள அர்த்த மண்டபத்தில் உள்ள லிங்கத்திற்கும் விநாயகர் வாகனமாக உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தார்கள்.
- கடந்த 23-ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை விழா தொடங்கியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி மேலகொத்தமங்கலம் கிராமத்தில் காலபைரவர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை,மகா சங்கல்பம், கணபதி, நவகிரக, லட்சுமி ஹோமத்துடன் தொடங்கியது.
கடந்த 24-ம் தேதி வாஸ்து சாந்தி, பிரவேச பலி,அஷ்டபைரவ ஹோமம், அருட்பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
25-ம் தேதி அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம்,மண்டப பூஜை,காலபைரவர் மூல மந்திர ஹோமம், முதற்கால பூர்ணஹீதி, தீபாரதனை நடைபெற்றது.
தொடர்ந்து 26-ம் தேதி 2-ம் கால யாகசாலை பூஜை,மண்டப பூஜை,கால பைரவர் மகா மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், சோம பூஜை, அஷ்ட பைரவர் சாந்தி ஹோமம், கன்யா பூஜை, வடுகபூஜை, சுமங்கலி பூஜை,லட்சுமி பூஜை,தனபூஜை காலபைரவர் மூலசக்தி ஹோமம் நடைபெற்றது.
கோ பூஜை,பிம்பசுத்தி,ருத்ர ஹோமத்தை தொடர்ந்து காலை 9 மணியளவில் கடங்கள் புறப்பாடு நடை பெற்று காலை 9.30 மணிக்கு விமானங்கள் மற்றும் கோபுரங்கள் கும்பாபிஷே கமும், தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடை பெற்றது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சிறப்பு மண்டலாபிஷேக பூர்த்தி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் ஶ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலை மாமன்னன் ராஜராஜன் சோழன் கட்டியனார்.
இங்கு பிரதி சங்கடஹர சதுர்த்தி தோறும் ஹரித்ரா விநாயகருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேக அபிஷேகம் நடைப்பெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு காலையில் சிறப்பு ஹோமமும் அதனைத் தொடர்ந்து கடம் புறப்பாடும் நடந்தன.
பின்னர் கலச அபிஷேகம் ,சிறப்பு மண்டலாபிஷேக பூர்த்தி அபிஷேகம் ஆராதனைகள், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவில் பக்தி பாடல்கள் இசைக் கச்சேரி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஹரித்திரா விநாயகருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- ஆவணி மூலத்திருவிழாவில் இன்று சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடந்தது.
- வளையல் விற்ற லீலையை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக் கொட்டு விழா, ஆவணி மூல திருவிழா, ஐப்பசி நவ–ராத்திரி விழா ஆகியவை பிரசித்தி பெற்றவை.
இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி வரை 19 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழா–வையொட்டி தினமும் காலை, மாலை 2 வேளைக–ளிலும் 4 ஆவணி மூல வீதி–களிலும் சுவாமியும், அம்ம–னும் பஞ்ச மூர்த்திகளுடன் உலா வந்து மண்டகப்படிக–ளில் எழுந்தருளி பக்தர்க–ளுக்கு அருள்பாலிப்பார்கள்.
விழாவின் முக்கிய அம் சங்களாக திருவிளையா–டல் புராண தொடர்பான உற்ச–வங்கள் நடைபெறும். அதன் படி கடந்த 19-ந்தேதி கருங் குருவிக்கு உபதேசம் செய் தல், 20-ந்தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந்தேதி தருமிக்கு பொற் கிழி அருளல், 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளல், 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டி லீலைகள் நடந்தன.
நேற்று இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தல வரலாறு திருவிளையாடல் நடந்தது. இன்று (25-ந்தேதி, வெள்ளிக்கிழமை) வளை–யல் விற்ற திருவிளை–யாடல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மீனாட்சி அம்மன், சுந்தரேசு–வரரை தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ் வாக இன்று இரவு 7.35 மணிக்கு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் நடைபெறு–கிறது. சித்திரை மாதம் முதல் ஆடி மாதம் வரை நான்கு மாதங்களுக்கு மதுரை மகாராணியாக மீனாட்சி அம்மன் ஆட்சி செய்வார். ஆவணி மூலத் திருநாளின் 7-ம் நாள் முதல் பங்குனி வரையான எட்டு மாதங்களுக்கு மதுரை மன்னராக சுந்தரேசப் பெரு–மான் ஆட்சிபுரிவார். இத–னைக் குறிக்கும் வகையி–லேயே சுந்தரேசப் பெருமா–னுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
நாளை (26-ந்தேதி) நரியை பரியாக்கியது, குதி–ரைக்கு கயிறு மாறியது, 27-ந்தேதி பிட்டுக்கு மண் சுமந் தது நடைபெறும். அன்று அதிகாலையில் சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திக–ளுடன் பிட்டு தோப்புக்கு செல்வர். அங்கு பிட்டு திருவிழா நடை பெறும். இந்த திருவிழாவில் திருவா–தவூர் மாணிக்கவாசகரும், திருப்பரங்குன்றம் சுப்பிர–மணியசுவாமியும் மதுரைக்கு எழுந்தருளு–வார்கள்.
அன்று இரவு 9.30 மணிக்கு பிறகு மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்தற்கு அனுமதிக் கப்படுவர். அன்றைய தினம் இரவு வடக்கு கோபு–ரம் வழியாக ஆயிரம்கால் மண்ட பத்தை பார்வையிடு–வதற்கும் அனுமதி அளிக்கப் படும். 28-ந்தேதி விறகு விற்றல் லீலை நடைபெறும்.
- ஆவணி மாத சித்திரை நட்சத்திரத்தை யொட்டி சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
- இந்த தரிசனத்தை ஒவ்வொரு சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே காணலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் இன்று ஆவணி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பாலாபிஷேகம் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த தரிசனம் ஒவ்வொரு சித்திரை நட்சத்திரம் அன்று மட்டுமே காணலாம்.
இந்த காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- விநாயகர்- அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் நாடு கக்காட்டிருப்பு கலங்காத கண்ட விநாயகர், நயினப்ப விநாயகர், கலை உடைய அய்யனார் கோவில்கள் அஷ்டபந்தன மகா கும்பாபி ஷேக திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
கடந்த 18-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை கணபதி ஹோமம் நவகிரக ஹோமம் வாஸ்து சாந்தி யுடன் தொடங்கி 3 நாட்கள் யாகம் நடந்தது. நேற்று காலை 6:30 மணியளவில் 4-ம் கால யாக பூஜை, கோ பூஜை, லட்சுமி பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்று காலை 9.30 மணி அளவில் யாகசாலை பூர்ணகுதி நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கலங்காத கண்ட விநாயகர் கோவில் திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் நயினப்ப விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து 11 மணியளவில் கலை உடைய அய்யனார் ேகாவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக முதல் நாள் யாக பூஜையில் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார் பங்கேற்றார், கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
பசும்பொன் தேவர் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். விழாவில் பட்ட மங்கலம், பண்ணைதிருத்தி, திருக்கோஷ்டியூர் வைரவன்பட்டி, புதூர், வடமாவளி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழா விற்கான ஏற்பாடுகளை கலங்காத கண்ட விநாயகர் நயினப்ப விநாயகர் கலை உடைய அய்யனார் கோவில் நிர்வாகிகள் கக்காட்டிருப்பு ஊரார்கள் இளைஞர்கள் மற்றும் தரியம்பட்டி கிராமத்தார்கள் செய்திருந்தனர். விழாவில் கக்காட்டிருப்பு, திருக்கோஷ்டியூர், எம்.புதூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- தசரத சக்கரவர்த்தி வழிபட்டு பெயர் பெற்ற தலம்.
- சனி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த திருநறையூரில் பர்வதவர்த்தினி சமேத ராமநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் ஜேஸ்டா தேவி, மந்தாதேவி ஆகிய இரு தேவியர்களுடன் மாந்தி குளிகன் ஆகிய குழந்தைகளுடன் குடும்ப சமேதராக காட்சியளிக்கிறார். தசரத சக்கரவர்த்தி வழிபட்டு பெயர் பெற்ற தலம்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் நடந்த குளிகை கால சிறப்பு வழிபாட்டில் கோவில் அர்ச்சகர் ஞானசேகர சிவாச்சாரியார் சனி பகவானுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்தார். பின், மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பிரபாகரன், ஆய்வாளர் சத்யா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம்:
ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையான இன்று சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தங்க கவசம்
சேலம் கோட்டை மாரி யம்மன் கோவிலில் அம்ம னுக்கு தங்க கவச அலங்கா ரம் செய்யப்பட்டது. பக்தர் கள் நீண்ட வரிசையில் காத்து நின்று அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திர வியங்களால் சிறப்பு அபி ஷேகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து அம்ம னுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அம்மனை காண அப்பகுதி யில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
தாலி கயிறு
இதேபோல எல்லை பிடாரி அம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தாலி கயிறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மந்திரங்கள் ஓத அர்ச்ச னைகள் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ரத்தின அங்கி
நெத்திமேடு தண்ணீர் பந்தல் மகா காளியம்மன் கோவிலில் ரத்தின அங்கி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.
இதே போல சேலம் மாநகரில் அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி, கிச்சிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் மாங்கல்யம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆடிமாத கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது .
- தண்டாயுதபாணி சுவாமி சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தஞ்சாவூர்
திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி (முருகன்) திருக்கோயிலில் ஆடிமாத கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது .
கோவிலின் முன் மண்டபத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமியின் உற்சவமூர்த்தி எழுந்தருளப்பட்டு அதற்கு பால், தயிர், பன்னீர் விபூதி ,உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, அபிஷேகத்திற்கு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மாலை தண்டாயுதபாணி சுவாமி சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்