search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry Driver"

    • இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் .
    • இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர்.

    வட மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் ரவானி. 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாரி டிரைவராக உள்ளார். வடமாநில பகுதிகளுக்கு இவர் சரக்குகளை லாரியில் ஏற்றி நீண்ட நாள் பயணம் செய்வார்.

    அப்போது உணவுக்காக லாரியின் முன்பகுதி கேபினில் கியாஸ் அடுப்பை வைத்து சமையல் செய்தார்.அதில் பெரும்பாலும் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.




    தான் தயாரித்த ருசியான உணவுகளை அவ்வப்போது வீடியோக்கள் எடுத்து யூடியூப் தளத்தில் பதிவிட்டு உள்ளார். இவரது சமையல் வீடியோக்களை பார்த்து இவரை சமூக வலைதளத்தில் ஏராளமானோர் பின்தொடர் தொடங்கினர். இதன் மூலம் அவர் பிரபல சமையல் கலைஞராகவே மாறினார்.

    இதைத் தொடர்ந்து தினமும் ஆர்வத்துடன் பல வீடியோக்கள் பதிவிட்டார்.இதுவரை 675 வீடியோக்கள் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் தற்போது இவருக்கு 1.5 மில்லியன் பாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். இவரது உணவு தயாரிப்பு முறையை தினமும் வாசகர்கள் 'பாலோ' செய்து வருகின்றனர்.




    ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம், மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வீடியோக்களைப் பகிர்ந்து தனது சமையல் பாணி, உணவு தயாரிப்பு செயல்முறைகள் பற்றி பார்வையாளர்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்.

    இதில் ஆட்டிறைச்சி, மீன் குழம்பு, சிக்கன் குழம்பு பன்னீர் மசாலா, பிரைடு ரைஸ், போன்றவை சிறப்பு வாய்ந்தது ஆகும் . அவர் உணவு தயாரிக்கும் போது கூறும் அறிவுரைகள், பேசும் விதம் பார்வையாளர்களை வெகுவாக கவந்து வருகிறது.

    இதன் மூலம் இணைய தளத்தில் தினமும் வாசகர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அவருக்கு வருமானமும் பெருகியது. இந்த வருமானம் மூலமாக தற்போது ஒரு புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார்.



    லாரி டிரைவராக இருந்தாலும் தனது திறமை மூலம் ஓய்வு நேரத்தை பயன் உள்ளதாக மாற்றி பெயர் புகழ், வருமானம் பெற்ற ராஜேஷ் ரவானி உண்மையில் பாராட்டுக்குரியவர்.

    இந்நிலையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இதனை பார்த்து வியந்து பாராட்டி உள்ளார். இணைய தளத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.

    • மதுபோதையில் ஓட்டிவந்த டிரைவர் திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்தினார்.
    • மக்கள் கொடுத்த சிக்னலால் ரெயில் டிரைவர் சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார்.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா நகரில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் ஒருவர், திடீரென லாரியை ரெயில் தண்டவாளத்தில் நிறுத்திவிட்டுச் சென்றார். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே அந்த வழியாக வந்த ரெயிலுக்கு சிக்னல் கொடுத்தனர்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலின் வேகத்தைக் குறைத்து சாமர்த்தியமாக விபத்தை தவிர்த்தார். தொடர்ந்து, தண்டவாளத்தில் இருந்து லாரி அப்புறப்படுத்தப்பட்ட பின் ரெயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. அதன்பின் டிரைவரை கைதுசெய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுபோதையில் தண்டவாளத்தில் லாரியை நிறுத்திய டிரைவரால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
    • பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாம்ராஜ் மகன் சங்கர் (வயது 41). லாரி டிரைவர் ஆவார்.

    இவர் நேற்று லாரியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு பவானி அருகே ஜீவா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் சிமெண்ட் ஏஜென்சியில் லோடு இறக்க வந்துள்ளார்.

    இந்நிலையில் டிரைவர் சங்கர் ஓய்வு அறையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்தபோது சங்கருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் சங்கர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இச்சம்பவம் தொடர்பாக பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.
    • சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தி யமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த வர் அன்சர் (வயது 31). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராசிதா (30). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறு காரணமாக கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    மேலும் அன்சருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகி ச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அன்சாருக்கு வலிப்பு நோய் அதிகமாக இருந்தது.

    இதையடுத்து அவரது நண்பர்கள் அன்சரை சத்தியமங்கலம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மீண்டும் சத்திய மங்கலம் அரசு மருத்துவம னைக்கு அன்சரே சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அன்சர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இது குறித்து மனைவி ராசிதா சத்திய மங்கலம் காவல் நிலை யத்தில் புகார் அளி த்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது.
    • லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது.

    கடலூர்:

    கடலூர் கம்மியம் பேட்டை, செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அடையாளம் தெரி யாத மர்ம நபர்கள் அடிக்கடி அவ்வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வழிமறித்து டிரைவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். மேலும் கடலூர் குண்டு சால சாலையில் பாழடைந்து உள்ள வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி கட்டிடத்தில் தினந்தோறும் கஞ்சா மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடு பட்டு வருவதால் அவ்வழி யாக செல்லும் பெண்களி டம் தவறாக நடப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் கார ணமாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது. அப்போது 2 நபர்கள் குடிபோதையில் லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறிக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த 2 நபர்கள் லாரி கண்ணாடியை தாக்கினார்கள். இதில் லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சிடைந்து 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் கடலூர் எஸ்.என்.சாவடி யை சேர்ந்த விக்கி (வயது 24), கடலூர் குப்பன்குளம் ராமகிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர். மேலும் குண்டு சாலை வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி போலீசார் சோதனை செய்து சட்ட விரோத செயலை தடுத்து நிறுத்தி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
    • கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    ஒட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). லாரி டிரைவர். இவரது மனைவி மாரியம்மாள் (45).

    இவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம். மாரியப்பனுக்கு மதுக்குடிக்கும் பழக்கம் உண்டு என கூறப்படுகிறது. மேலும் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த அவர், அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று வழக்கம் போல மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

    மாலையில் ஊருக்கு வெளிப்புறம் உள்ள காட்டுப்பகுதியில் மாரியம்மாள் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அங்கு சென்ற மாரியப்பன், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், அருகில் கிடந்த கம்பால் சரமாரியாக மாரியம்மாளை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    அவ்வழியாக சென்றவர்கள், படுகாயமடைந்து மயங்கி கிடந்த மாரியம்மாளை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாரியம்மாளை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மாரியப்பன் இன்று காலை தூத்துக்குடி சிப்காட் போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் ஒட்டப்பிடாரம் போலீசாரிடம் ஒப்படைந்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆணைமுத்து நேற்று இரவு நெல்லையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்தாா்.
    • பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சாலையை கடந்துள்ளாா்.

    தென்காசி:

    சங்கரன்கோவில் அருகே உள்ள அழகுநாச்சியாா்புரம் அவனிகோந்தல் பகுதியை சோ்ந்த சுப்பையா மகன் ஆணைமுத்து (வயது57). சமையல் எரிவாயு லாரி டிரைவர். இவா் நேற்று இரவு நெல்லையில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு தென்காசி நோக்கி வந்தாா்.

    பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் விலக்கு பகுதியில் லாரியை நிறுத்திவிட்டு, அங்குள்ள உணவகத்துக்கு சாப்பிட சாலையை கடந்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக நெல்லையில் இருந்து தென்காசிக்கு சென்ற அரசு பஸ் அவா் மீது மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே ஆணைமுத்து உயிரிழந்தாா்.

    இது குறித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, அரசு பஸ் டிரை வரான சிங்கிலிப்பட்டியை சோ்ந்த செந்தில்குமாா் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    • லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.
    • மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    சூலூர்:

    விழுப்புரத்தை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது41). லாரி டிரைவர். இவருக்கு திருமணமாகி 15 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் அவரது முதல் மனைவி இறந்து விடவே ராஜீவ்காந்தி 2-வதாக திருமணம்செய்து கொண்டார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு 2-வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி இரும்பு பொருட்களை ஏற்றுவதற்காக மும்பைக்கு சென்றார். பின்னர் அங்கு பொருட்களை ஏற்றி கொண்டு சேலத்திற்கு வந்தார்.

    அப்போது கோவை சூலூர் அருகே அருகே அவர் வந்த போது லாரியை திடீரென நிறுத்தி விட்டு மது அருந்தினார். பின்னர் லாரியை இயக்கி கொண்டு சென்ற அவரால் மேற்கொண்டு இயக்க முடியவில்லை என தெரிகிறது. இதனால் லாரியை சூலூர் போலீஸ் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தி விட்டு, லாரியிலேயே படுத்து தூங்கி விட்டார்.

    நீண்ட நேரமாக லாரி அங்கேயே நின்றதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லாரி அருகே சென்று பார்த்தனர். அப்போது டிரைவர் தூங்கி கொண்டிருந்தார். அருகே மதுபாட்டிலும் இருந்தது. அவரை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.

    இதையடுத்து போலீசார் லாரியை போலீஸ் நிலையம் எடுத்து சென்றனர். பின்னர் தண்ணீரை ஊற்றி டிரைவரை எழுப்பினர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் தனக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது 2-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. நான் செய்யும் டிரைவர் தொழிலில் 2 பெண் குழந்தைகளை வைத்து வளர்ப்பது மிகவும் கஷ்டம் எனவும் அந்த மன வருத்தத்திலேயே மது அருந்தியதாகவும், பிறந்த குழந்தையை கூட இன்னும் பார்க்கவில்லை. அதனை பார்க்கவும் எனக்கு பிடிக்க வில்லை. அதனால் நான் ஊருக்கு செல்லவில்லை எனக் கூறி புலம்பினார்.

    இதையடுத்து ராஜீவ்காந்திக்கு பெண் பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியே உருவாகும். பெண்களுக்கு அரசின் பல நலதிட்டங்கள் நடைமுறையில் உள்ளது என அறிவுரை கூறினர்.

    தொடர்ந்து மது போதையில் லாரியை இயக்கியதற்காக அவருக்கு சூலூர் போலீசார் அபராதம் விதித்தனர்.

    • மேலூர் அருகே மாயமான லாரி டிரைவர் சாலையோரத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜன் (வயது45). லாரி டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மாயமாகி விட்டார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

    ஆனால் அவர் எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் மேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மேலூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் நாவினிப்பட்டி அருகே உள்ள சின்ன ஆலங்குடி கோவில் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் இறந்து கிடந்தார். அவர் சாலையோரம் பிணமாக கிடப்பதை இன்று அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தனர்.

    அவர்கள் அதுபற்றி மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மேலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாயமாகி தேடப்பட்டு வந்த நிலையில் நாகராஜன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தான் தெரியவரும் என்பதால், அதற்காக போலீசார் காத்திருக்கின்றனர்.

    • மேலூர் அருகே லாரி டிரைவர் உள்பட 2 பேரிடம் கத்தியை காட்டி மர்மநபர்கள் வழிப்பறி செய்தனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் விஜயன் (வயது37). மினி லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று திருச்சியிலிருந்து மதுரைக்கு லாரியில் வந்து கொண்டிருந்தார். மேலூர் அருகே உள்ள தெற்குபட்டி நான்கு வழிச்சாலையில் விஜயன் லாரியை நிறுத்தி கீழே இறங்கினார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென விஜயனை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி ரூ.1,840 மற்றும் வெள்ளி நகையையும் பறித்து கொண்டு தப்பினர். இதே போல் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூரை சேர்ந்தவர் முருக பெருமாள். இவர் மோட்டார் சைக்கிளில் மேலூர் நான்கு வழிச்சாலையில் வந்த போது மர்ம நபர்கள் மறித்து கத்தியை காட்டி மிரட்டி மோட்டார் சைக்கிளை மறித்தனர். 2 சம்பவங்கள் தொடர்பாக மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது.
    • மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் செந்தில். இவர் அழகர் கோவில் அருகே உள்ள கிடாரிபட்டிக்கு சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ வழிபாடு நடத்த சென்றார். பின்னர் மீண்டும் நத்தம் வழியே பழனிக்கு திரும்பி கொண்டிருந்தார். பள்ளபட்டி பாலம் அருகே காரின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த சூட்கேஸ் தவறி ரோட்டில் விழுந்தது. அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி லாரி ஓட்டி வந்த அலங்காநல்லூர் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் நடுரோட்டில் சூட்கேஸ் கிடப்பதை கண்டு அதை எடுத்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார்.

    அந்த சூட்கேசில் ரூ.25 ஆயிரம் பணமும், 3 பவுன் தங்கநகை மற்றும் செல்போன் ஆகியவை இருந்தது. இதையடுத்து நத்தம் போலீசார் உரியவர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தார். பின்னர் ரமேஷ் கையாலேயே அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அவற்றை பெற்றுக்கொண்ட செந்தில் குடும்பத்தினர் ரமேசுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டனர். லாரி டிரைவர் ரமேசின் நேர்மையை பாராட்டி நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி சன்மானம் வழங்கி பாராட்டினார்.

    ×