search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 106258"

    தனக்கு விருப்பமான பாடத்தை படிக்க எதிர்ப்பு தெரிவித்த தந்தை மீது மகள் போலீசில் புகார் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் துணை மேலாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு தனுஸ்ரீ, யாமினிஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

    தனுஸ்ரீ திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வுஎழுதி தேர்ச்சி பெற்று இருந்தார். விஜய பாஸ்கர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் தனியாக வசித்து வருவதாக தெரிகிறது.

    இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற தனுஸ்ரீ இதழியல் அல்லது பி.ஏ. (டிபன்ஸ்) படிக்க முடிவு செய்தார். ஆனால் இதற்கு அவரது தந்தை விஜயபாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து தனக்கு விருப்பமான மேல்படிப்பை படிக்குமாறு கூறி வந்தார்.

    இதனால் தந்தை-மகள் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சான்றிதழ் வாங்க சரஸ்வதி சென்றபோது ஏற்கனவே அவரது சான்றிதழ்களை தந்தை விஜயபாஸ்கர் வாங்கி சென்றிருப்பது தெரிந்தது.

    மேலும் வீட்டில் இருந்த 10-ம் வகுப்பு சான்றிதழும் மாயமாகி இருந்தன. இதுபற்றி தனுஸ்ரீ தனது தந்தையிடம் கேட்டார். அப்போது விஜய பாஸ்கர் தனக்கு விருப்பமான பி.எஸ்.சி. இயற்பியல் அல்லது வேதியியல் படிக்குமாறு அறிவுறுத்தினார். இல்லையேல் மேல் படிப்பு படிக்க வேண்டாம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த தனுஸ்ரீ இதுபற்றி வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் செய்தார். அதில் மேல்படிப்பு படிக்க தனது பள்ளி சான்றிதழை தந்தை தர மறுப்பதாக புகார் தெரிவித்து இருந்தார். இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க செவ்வாப்பேட்டை போலீசுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

    போலீசார் விஜயபாஸ் கரையும் மாணவி தனுஸ்ரீயையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவியின் விருப்பத்துக்கு ஏற்ப படிக்க வைக்குமாறு விஜய பாஸ்கரிடம் அறிவுரை கூறினர்.
    பிறந்தநாளுக்கு தந்தை பரிசு தரவில்லை என்பதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை சாமநத்தம் கிழக்கு தெருவைச் சேர்ந்த மகாராஜன் மகள் அழகுசந்தியா (வயது 14) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அழகுசந்தியா கடந்த மாதம் பிறந்தநாள் கொண்டாடினார். அன்றைய தினம் மகாராஜன் திருப்பதிக்கு சென்று விட்டார்.

    இதனால் மனவேதனை அடைந்த அழகுசந்தியா, ‘என் பிறந்தநாளுக்கு அப்பா பரிசு தராமல் திருப்பதிக்கு சென்று விட்டாரே’ என மனவேதனை அடைந்தார். தனது உள்ளக்குமுறலை குடும்பத்தினரிடம் கூறி புலம்பினார்.

    இந்த நிலையல் அவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார். உறவினர்கள் அவரை காப்பாற்றி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அழகுசந்தியா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தண்டராம்பட்டு அருகே குழந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டு:

    குழந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இரவு வீட்டில் கார்த்திகேயன் அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அரிவாள் வெட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு ராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது கார்த்திகேயன் அரிவாளால் தனது குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிகொண்டிருந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். குழுந்தை இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.

    இது குறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 1-ந் தேதி ஜாமீனில் வந்தார். அவரிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பேசவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தான் ஜெயிலுக்கு போனதற்கு தந்தை தனபால் தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    நேற்று இரவு தனபால் வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் கோடாரியால் தனது தந்தை தனபாலின் தலையை துண்டாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ஹேமசித்ரா தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்தியேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற குழந்தை மற்றும் தனது தந்தையை அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
    ஆந்திர பாராளுமன்ற தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி சார்பாக அரக்கு தொகுதியில் போட்டியிடும் கிஷோர் சந்திரதேவை எதிர்த்து அவரது மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. #LSPolls
    விசாகப்பட்டினம்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நடக்கிற தேர்தலில், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அரக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது.

    இங்கு மத்திய மந்திரியாக இருந்த தந்தையை எதிர்த்து மகளே களத்தில் நிற்கிறார்.

    மத்தியில் முந்தைய மன்மோகன் சிங் அரசில் மலைவாழ் பழங்குடியினர் விவகாரம், பஞ்சாயத்து ராஜ் துறைகளின் கேபினட் மந்திரியாக இருந்தவர் கிஷோர் சந்திரதேவ் (வயது 72).

    சென்னை கிறித்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவர், காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 6 முறை எம்.பி. பதவி வகித்த இவர் கடந்த மாதம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் ஐக்கியமானார்.

    அவருக்கு அரக்கு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தெலுங்குதேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வழங்கி உள்ளார்.



    அவரை எதிர்த்து யாரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கட்சி யோசித்தது. அதே கிஷோர் சந்திரதேவின் மகளும், சமூக சேவகியுமான சுருதிதேவியை வேட்பாளர் ஆக்கிவிட்டது.

    ஆக தந்தை கிஷோர் சந்திரதேவை எதிர்த்து மகள் சுருதிதேவி போட்டியிட தேர்தல் களம் பரபரப்பாகி இருக்கிறது. இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வியை எழுப்ப ஒரு வழி இல்லை.

    ஏனென்றால் அங்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, கோடட்டி மாதவியை நிறுத்தி இருக்கிறது. எனவே மும்முனைப்போட்டி நிலவுகிறது.

    இதேபோன்று விஜயநகரம் பாராளுமன்ற தொகுதியில் தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அசோக் கஜபதி ராஜூ போட்டியிடுகிறார். விஜயநகரம் சட்டசபை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக அவரது மகள் ஆதித்தி களத்தில் குதித்திருக்கிறார். இதுவும் மக்களால் பரபரப்பாக பேசப்படுகிறது. #LSPolls

    களக்காடு அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நடுவூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புஷ்பம் (வயது 70). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புண்ணிய மார்த்தாண்டம் (60). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

    இவர்கள் 2 பேருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை புண்ணிய மார்த்தாண்டம் வீட்டு கழிவுநீர், புஷ்பம் வீட்டு முன்பு சென்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பம் இதுகுறித்து புண்ணிய மார்த்தாண்டத்திடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதில் ஆத்திரமடைந்த புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன் (40), ரமேஷ் ஆகியோர் புஷ்பத்தை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் புஷ்பம் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை 2 பேரும் சேர்ந்து காலால் மிதித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேவி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், புஷ்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ‘‘கழிவுநீர் பிரச்சனையில் தொடர்ந்து எங்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசியதால் கொன்றோம்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

    பின்பு கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புண்ணியமார்த்தாண்டம் மனைவி ரத்னபாய் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    உயிருக்கு போராடும் தந்தையிடம் ஆசி பெறுவதற்காக மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. #Stanleyhospital #Marriage
    பிராட்வே:

    சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் சுதேஷ் (வயது 60). வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், பிரகாஷ், சரவணன், சதீஷ்(28) ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

    சதீசுக்கும், திருவொற்றியூர் சன்னதி தெருவைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டு, அடுத்த மாதம் (பிப்ரவரி) 15-ந்தேதி திருமணம் நடைபெற இருந்தது.

    இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி திருவொற்றியூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற சுதேஷ் மீது அந்த வழியாக சென்ற மின்சார ரெயில் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுதேஷ், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரது இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் அகற்றப்பட்ட நிலையில் அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை அவருக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். அறுவை சிகிச்சையில் ஏதும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் தனது தந்தை கண் முன்னே தனது திருமணம் நடக்காதே?, அவரிடம் ஆசீர்வாதம் பெற முடியாதே? என சதீஷ் மனம் குமுறினார்.

    தனது தந்தை இருக்கும்போதே அவரது கண் எதிரேயே தனது திருமணத்தை நடத்த வேண்டும் என தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். தந்தை மீதான அவரது பாசத்தை பார்த்து நெகிழ்ந்த இருவீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்தனர்.



    இதையடுத்து சதீஷ் நேற்று இரவு ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருவீட்டார் ஒத்துழைப்புடன் உறவினர்கள் முன்னிலையில் சித்ராவின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

    தந்தை பாசத்தில் மகன் செய்த இந்த திருமண நிகழ்வு மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய செய்தது. #Stanleyhospital #Marriage
    முத்துப்பேட்டையில் திருமணம் செய்து வைக்காததால் முதியவரை கோடரியால் வெட்டிக்கொன்ற அவரது மகனை போலீசார் கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள அம்மலூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 65). விவசாயி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி(60). இவர்களுக்கு ராணி(40), விஜயா(35) ஆகிய மகள்களும், முருகப்பன்(34) என்ற மகனும் உள்ளனர். இதில் ராணி, விஜயா ஆகியோருக்கு திருமணமாகி விட்டது.

    முருகப்பன், மலேசியாவில் 5 ஆண்டுகளாக வேலை பார்த்து விட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பினார். முருகப்பன் சற்று உடல் நலக்குறைவால் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் வற்புறுத்தி வந்தார்.

    நேற்று காலை வீட்டில் இருந்த தனது தந்தை கணேசனிடம், தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டு முருகப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கணேசன், முருகப்பனிடம் உன் அவசரத்துக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகப்பன் வீட்டில் இருந்த கோடரியால் தனது தந்தை கணேசனின் பின்பக்க கழுத்தில் வெட்டினார். இதில் கழுத்து துண்டாகி சம்பவ இடத்திலேயே கணேசன் துடி, துடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிக்கோ திவ்யன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், சிவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து எடையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமணம் செய்து வைக்காததால் தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    மத்திய பிரதேச மாநிலத்தில் வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த நபருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #DoubleDeathPenalty
    ரட்லாம்:

    மத்திய பிரதேச மாநிலம் ரட்லாம் மாவட்டம் ஜவோரா நகரைச் சேர்ந்த 42 வயது நபர் ஒருவர், 5 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை (மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த குழந்தை) கடந்த ஏப்ரல் மாதம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை சரமாரியாக அடித்துள்ளார். இதில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

    இதுதொடர்பாக குழந்தையின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்தனர். அவர் மீது ஜவோரா நகரில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குழந்தையின் தாய் அளித்த வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையின் முடிவில், குற்றவாளி மீதான குற்றம் நிரூபணமானது.

    இதையடுத்து குற்றவாளிக்கு இரட்டை மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதுதவிர 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

    12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் வகையில் மத்திய பிரதேச சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #DoubleDeathPenalty
    கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற குழந்தைகளை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கோவை:

    கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோடு, நீலிகோணார் வீதியை சேர்ந்தவர் பத்மநாபன்(வயது 45).

    இவர் சவுரிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவு மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வராணி(37)

    இவர்களுக்கு ஹேமாவர்சினி (15), ஸ்ரீஜா(8) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஹேமா வர்சினி 10-ம் வகுப்பும், ஸ்ரீஜா 3-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    பத்மநாபனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    வழக்கம் போல நேற்று இரவும் பத்மநாபன் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். எனவே செல்வராணி அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த பத்மநாபன் மனைவியை அடித்து உதைத்து தாக்கினார். இதனால் மனமுடைந்த செல்வராணி வெள்ளலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இன்று காலை 8.30 மணி அளவில் செல்வராணி தனது வீட்டுக்கு சென்றார். வீட்டுக்குள் குழந்தைகள் இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த பத்மநாபனை காணவில்லை.



    குழந்தைகள் உடலை பார்த்து செல்வராணி கதறி அழுதார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவஇடத்துக்கு உதவி கமி‌ஷனர் சுரேஷ், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    குழந்தைகள் சடலமாக கிடந்த இடத்தில் ரத்தக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் குழந்தைகள் இருவரது கழுத்தும் நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதற்காக தடயங்கள் தெரிந்தது. இதனால் பத்மநாபன் தனது குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலைசெய்து விட்டு தப்பி ஓடியதை போலீசார் உறுதி செய்தனர்.

    சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடிய பத்மநாபனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பத்மநாபனின் செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவான பத்மநாபனை தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
    தூத்துக்குடியில் தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள ஆரோக்கியபுரம் பாலதண்டாயுதபுரத்தை சேர்ந்தவர் முகமது பரூக் (வயது 51). தொழிலதிபரான இவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். தூத்துக்குடி சிவந்தான்குளத்தை சேர்ந்தவர் செல்வமதன் (51). இவரும் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 5.10.17-ல் முகமது பரூக்கிடம் கடனாக ரூ. 45 லட்சம் வாங்கியுள்ளார். பின்னர் பணத்தை திருப்பி கொடுத்ததில் இதில் ரூ. 5 லட்சம் பாக்கி இருந்துள்ளது. இதனை முகமது பரூக் திருப்பி கேட்டுள்ளார். ஆனால் செல்வமதன் மறுத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் ப    ணத்தை கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த செல்வமதன், அவரது மகன்கள் பொன் விக்னேஷ், பொன் சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து முகமது பரூக்கை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அவர் மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி ஜெ.எம் 2-வது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்திரவிட்டார். இதன்பேரில் போலீசார் செல்வமதன் மற்றும் அவரது மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தண்டனைபெற்ற 3 பேரை விடுதலை செய்தது வருத்தமளிக்கிறது என்று பலியான மாணவி காயத்ரியின் தந்தை வெங்கடேசன் கூறினார். #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    விருத்தாசலம்:

    பஸ் எரிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்த 3 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பலியான கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூவனூரை சேர்ந்த மாணவி காயத்ரியின் தந்தையும், முன்னாள் அரசு கல்லூரி முதல்வருமான வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை விடுதலை செய்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. அந்த 3 பேருக்கும் மரண தண்டனை என்று அறிவித்து, அதன்பிறகு அதனை ஆயுள் தண்டனை என மாற்றினார்கள். இதற்காக என்ன முயற்சி செய்தார் களோ? தெரியவில்லை.

    அன்றே நீதி தேவதை கண்ணீர் வடிக்க தொடங்கிவிட்டாள். என் மகளை பறிகொடுத்து 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த சம்பவத்தில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை. பல இன்னல்களை, பல சோதனைகளை, பல வேதனைகளை அனுபவித்து வருகிறோம்.

    எங்கள் வீட்டு தெய்வமாக காயத்ரி இருக்கிறாள். இதற்கு மேல் என்னால் எதுவும் கூற முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    “கடந்த 2000-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி 3 மாணவிகளையும் தீ வைத்து கொளுத்திய நபர்களுக்கு ஒரு நீதிபதி தூக்கு தண்டனை விதிக்கிறார். மற்றொரு நீதிபதி ஆயுள் தண்டனை என்கிறார். அப்படி என்றால் முதல் நீதிபதி அளித்த தீர்ப்பு தவறா?. ஒரு கோர்ட்டு சொன்ன தீர்ப்புக்கு, மற்றொரு கோர்ட்டில் சீராய்வு மனு என்று ஒன்றை வைத்து உள்ளனர்.

    கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றாத அரசு எதற்கு?. இது ஜனநாயகமா?, சர்வாதிகாரமா?. நீதி, நேர்மை கெட்டு போய்விட்டது. கோகிலவாணி இறந்த பிறகு படுத்த படுக்கையான அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்தே போய்விட்டார்.



    இங்கு ஜனநாயகம் இல்லை. சர்வாதிகாரமாக இருக்கிறது. எதை எடுத்தாலும் லஞ்சம், லாவண்யம். நீதி எங்கு இருக்கிறது? ஏன் இந்த பித்தலாட்டம். முதல்-அமைச்சர் ‘உணர்ச்சி வசப்பட்டு விட்டார்கள்’ என கூறுகிறார். அதை எல்லாம் ஏற்க முடியாது. கவர்னர் முதலில் விடுவிக்க முடியாது என்று அறிவிக்கிறார்.

    தற்போது கவர்னர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இடையில் என்ன நடந்தது?. 3 மாணவிகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. கோர்ட்டு தீர்ப்பை கொடுத்து நிறைவேற்றாத அரசு ஒன்று இங்கு இருக்கிறது. எதற்கு சட்டம், ஒழுங்கு, நியாயம், தீர்ப்பு என்று வைத்து இருக்கிறார்கள். இதெல்லாம் பச்சை துரோகம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #DharmapuriBusBurning #TNGovernor #BanwarilalPurohit
    வங்கி கணக்கில் ரூ. 10 ஆயிரம் பணம் குறைந்ததால் தந்தைக்கு பயந்து மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் மகன் மணிகண்டன் (வயது 20). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் வல்லத்தில் தனி அறை எடுத்து நண்பர்களோடு தங்கி இருந்தார்.

    கனகராஜ் தனது மகன் வங்கி கணக்கில் தான் பணம்போட்டு எடுத்து வந்தார். மணிகண்டன் தான் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து கொடுப்பாராம்.

    இந்நிலையில் நேற்று அவரது வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் குறைந்துள்ளது. இதுபற்றி தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் மணிகண்டன் அவரது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதுபற்றி அவரது நண்பர்கள் வல்லம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×