என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 108818"
- கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்திதிறனை அதிகரிக்க வேண்டும்என்று மகேந்திரன் எம்.எல்.ஏ. கலெக்டரிடம் மனு அளித்தார். மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரன் தனது கட்சியினருடன் கலெக்டர் வினீத்தை சந்தித்து கொடுத்த ஒரு மனுவில் கூறியிருப்பதாவது:-
உடுமலை கிருஷ்ணாபுரத்தில் இயங்கி வரும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை ரூ.40 கோடி மதிப்பில் நவீன முறையில் மேம்படுத்தி, கரும்பு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உற்பத்தி திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொமரலிங்கம்-ருத்ராபாளையம் இடையே ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் அமராவதி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும். தளிஞ்சி மலைவாழ் மக்களின் வசதிக்காக கூட்டாற்றின் குறுக்கே ரூ.1 கோடி மதிப்பில் புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும்.
மடத்துக்குளத்தில் தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் நீதிமன்றத்திற்கு இடம் தேர்வு செய்து புதிதாக நீதிமன்ற கட்டிடம் அமைக்க வேண்டும். திருமூர்த்தி அணையில் பொழுதுபோக்குடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும். அமராவதி அணைப்பூங்காவை மறுசீரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மடத்துக்குளத்தில் தக்காளி கூழ் தயாரிக்கும் ஆலையை அமைத்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். ஜல்லிப்பட்டி அரசு மருத்துவமனையை 24 மணி நேரம் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- ராமநாதபுரத்தில் நடந்த குறை தீர்க்கும் முகாமில் 296 பேர் மனு வழங்கினர்.
- சுடுகாடு சாலையும் குண்டும் குழியுமாக புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், காமாட்சி கணேசன் முன்னிலை வகித்தார்.
பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த 296 மனுக்கள் பெறப்பட்டு மனுதாரர்கள் முன்னிலையில் கலெக்டர் விசாரணை செய்தார். இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப் பெற்றன. கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு வாரமும் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களுக்கு நடவடிக்கை எடுத்து 1 மாத காலத்திற்குள் தீர்வு வழங்க வேண்டும். தீர்வு வழங்க முடியாத மனுக்கள் குறித்து மனுதாரர்களிடம் அதற்கான காரணம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
அப்பொழுது தான் அதுபோன்ற மனுக்கள் திரும்பத்திரும்ப வராது. பொதுமக்கள் வழங்கும் மனுக்களுக்கு துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் எடுத்து செயல்பட வேண்டும் என்றார்.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியான அண்ணா சிலை அருகில் ஜெகன் தியேட்டர் வளைவில் தொடர்ந்து சாலை விபத்து நடப்பதால் விபத்தை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று த.மு.மு.க. தலைவர் முஹம்மது அமீன் தலைமையில், நகர் செயலாளர் முகம்மது தமீம், ம.ம.க.நகர் செயலாளர் முகம்மது தாஜுதீன், துணைச் செயலாளர் முகம்மது அப்பாஸ் ஆகியோர் மனு அளித்தனர்.
ராமநாதபுரம் காரேந்தல் கிராம தலைவர் காளீஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில், தொருவளூருக்கு செல்லும் ரோடு சேதமடைந்துள்ளது. கண்மாய் வடிகால் வாய்க்கால் சேதத்தால் தண்ணீர் வீணாகி வயலுக்குள் வருகிறது. சுடுகாடு சாலையும் குண்டும் குழியுமாக புதர்மண்டி கிடக்கிறது. இவற்றை சரிசெய்ய கோரி மனு கொடுத்தனர்.
- சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்
- குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை ஆகிய கடலோர கிராமங்களை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் கோடிமுனை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய்வசந்த் எம்.பி.யை சந்தித்து மனு அளித்தனர்.
அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த சங்கு குளிக்கும் மீனவர்கள் பாரம்பரியமாக தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் கடல் பகுதியில் சங்கு குளிக்கும் தொழில் செய்து வருகின்றனர்.சங்கு குளிக்கும் தொழிலாளர்கள் இந்த தொழிலையே நம்பி உள்ளனர்.இதனால் குமரி மீனவர்கள் சங்கு குளிக்கும் சீசனில் தூத்துக்குடி சென்று தொழில் செய்கின்றனர். தொழில் ரீதியாக குமரி மீனவர்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் மீனவர்களுடன் நல்ல நட்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி இரவு கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை மீனவர்கள் தொழிலுக்கு செல்லும்போது ஒரு சில மீனவர்கள் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி இங்கு நீங்கள் தொழில் செய்யக்கூடாது என விரட்டி உள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.காலங்காலமாக செய்து வரும் எங்கள் தொழில் கேள்வி குறியாகி உள்ளது. எனவே குமரி மீனவர்கள் தொடர்ந்து திரேஸ்புரத்தில் சங்கு குளிக்கும் தொழில் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்.தலைவர் ஸ்டார்வின், துணைத்தலைவர் லாலின் மற்றும் ஊராட்சி காங்.நிர்வாகிகள் ஆகியோர் மனு கொடுக்கும் போது உடனிருந்தனர்.
- கூட்டத்திற்கு கிராமமக்கள், விவசாயிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் சமூக நல திட்ட தாசில்தார் ரமேஷ், மீன் துறை ஆய்வாளர் நடேசராஜா, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி ஆனந்தராஜ், தோட்ட கலை துறை உதவி அலுவலர் கார்த்திக், கூட்டுறவுத்துறை சார்பாதிவாளர் முத்துராஜா, வறுமை கோட்டு திட்ட அலுவலர் சியாமளா, மகளிர் சுய உதவி குழுவினர், கிராம மக்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் 6 மனுக்கள் மட்டுமே அளித்தனர். அதற்கு தீர்வுகாண உடனடியாக சம்பந்தபட்ட துறைக்கு அனுப்பி வைக்கபட்டது. கூட்டத்தில் மாற்று திறனாளிக்கு சான்றிதழை ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் வழங்கினார். முடிவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன் நன்றி கூறினார்.
- சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் சிவ பக்தர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.
- பின்பு அவர்கள் சுகவனேஸ்வரர் சன்னதியில் கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தனர்.
சேலம்:
சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிவ பக்தர்கள் திடீரென முரசு கொட்டியும் ,சங்கு ஊதியம் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில் அதிகாரிகளிடமும் மனு கொடுத்தனர் .
அப்போது அவர்கள் கூறியதாவது- சேலம் மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலுக்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். ஆனால் இங்கு போதுமான கழிவறை இல்லை, குடிநீர் வசதி இல்லை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஊழியர்கள் இடையூறு செய்கிறார்கள். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் எந்த பணிகளும் முறையாக நடைபெறவில்லை .
கோவில் சொத்துக்கள் பராமரிக்கப்படாமல் ஆக்கிரமிப்புகளில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து வழக்கு தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.கோவிலில் சிவ வாத்தியம் வாசிக்க ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் . இதனால் பக்தர்கள் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் செய்யப்பட்டுள்ள செலவிடத்துக்குரிய ரசீது உட்பட அனைத்து ஆவண நகல்களையும் கோவில் இணையதளத்தில் வெளியிட வேண்டும். கோவிலில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதோடு கூடுதல் பணியிடங்களும் உருவாக்க வேண்டும் .பெரும்பாலான சாமி சிலைகள் சாமி பீடத்தோடு அகற்றப்பட்டுள்ளது. இது முறையானது அல்ல
இந்த கோரிக்கைகள் குறித்து தற்போது மனு கொடுத்த நிலையில் கோரிக்கைகளுக்கு தீர்வு காணாவிட்டால் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
- மக்களுக்கு தனித்தனியாக பட்டா வழங்க வேண்டும்.
அன்னூர்,
அன்னூர் ஒன்றியம் நாராயணபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தனித்தனியாக பட்டா இல்லாத காரணத்தினால் ஒரு வீட்டில் மூன்று முதல் நான்கு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதனால் கடந்த மாதம் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி குடியிருப்பு அருகே மோதியதில் ஒருவர் பலியாகினார். இந்த விபத்துக்களை தவிர்க்க தனித்தனியாக பட்டா வழங்கக்கோரி ஏற்கனவே கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர். அவர்களின் பரிந்துரையின் படி நேற்று அன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.
- தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகள் உள்ளது.
- மாவட்டங்களில் காடா நெசவு செய்யப்படுகிறது.
மங்கலம் :
திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கத்தலைவர் ஆர்.வேலுச்சாமி, சங்க செயலாளர் அப்புக்குட்டி என்கிற எம்.பாலசுப்ரமணியம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச்செயலாளர் பாலாஜி, மங்கலம் பகுதி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை கோபால், கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் மின்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள 6 லட்சம் விசைத்தறிகள் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையாக உள்ளது. இந்த மாவட்டங்களில் காடா நெசவு செய்யப்படுகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு 6ஆயிரம் யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கறோம். தொழில் மந்தநிலை, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு, கொரோனா தொற்று என பல காரணங்களால் உயர்த்தப்பட்ட கூலி கிடைக்கவில்லை. தற்போது அபரிமிதமான பஞ்சு நூல் விலை உயர்வு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விசைத்தறிகள் சரிவர இயங்காமல் உள்ளது. ஆகவே விசைத்தறிக்கு உயர்த்திய மின் கட்டணத்தை ரத்து செய்தும் ஆண்டுக்கு 6சதவீத உயர்வையும் ரத்து செய்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
- காந்தி மார்க்கெட் சாலையை சீரமைக்க கோரி மனு அளித்தனர்.
- மேயர் அன்பழகனிடம் அளித்தனர்
திருச்சி :
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் மிக முக்கியமான சாலைகளான கீழபுலிவார் ரோடு, தர்பார் மேடு (தஞ்சாவூர் ரோடு இணைப்பு சாலை) ஆகிய சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகளை வரக்கூடிய பண்டிகை காலங்களுக்குள் துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கும்படி எஸ்.டி.பி.ஐ. கட்சி வர்த்தகர் அணி மாவட்டத் தலைவர் அ.அப்துல் மாலிக் தலைமையில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி ஆணையர்வைத்திநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்ஆகியோருக்கு மனு அளிக்கப்பட்டது
நிகழ்வில் திருச்சி வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர்கள் ஷேக் அப்துல்லா, முகமது பிலால், மாவட்ட பொருளாளர் முகமது இப்ராஹிம் மற்றும் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் கைருதீன் பாய், 1-8வது வார்டு ஒருங்கிணைப்பாளர் சபியுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
- தனக்கு சொந்தமான நிலங்களை கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டார்.
- தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கி கொண்டு பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 86). இவரது மனைவி சாரதாம்பாள் (76).
இந்த தம்பதிக்கு 4 மகன்கள் உள்ளனர்.
இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலங்களை கடந்த 2009-ம் ஆண்டு தனது மகன்களுக்கு பிரித்து கொடுத்து விட்டார்.
தனக்கென சிறிது நிலத்தையும், ஒரு குடிசை வீட்டையும் வைத்துக்கொண்ட தங்கசாமி, அந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்.
இந்தநிலையில் தங்கசாமியின் மகன்களில் ஒருவர் தந்தையை ஏமாற்றி அவரது பாகத்தையும் தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கிக் கொண்டு பெற்றோரை வீட்டில் இருந்து விரட்டியுள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பூர் போலீஸ் நிலையம் மற்றும் அதிகாரிகளிடம் தங்கசாமி புகார் அளித்தார்.
4 மகன்கள் இருந்தும் யாரும் அவர்களை பராமரிக்க முன்வராத நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர்கள் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க கோரி கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானம் செய்து மனு கொடுக்க கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
அப்போது அந்த வயதான தம்பதியினர், தங்களது வாழ்வாதாரத்திற்காக மகனிடம் இருந்து தனது நிலத்தை மீட்டு தர வேண்டும்.
இல்லாவிட்டால் தங்களை கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதையடுத்து, அந்த மனுவை உதவி கலெக்டருக்கு பரிந்துரைத்த கலெக்டர் லலிதா, அந்த மனுவின் மீது துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விலையில்லா தையல் எந்திரம் வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
- குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
அரியலூர்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டன. இதில் அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் தாங்கள் 3 ஆண்டுகளுக்கு முன்பு என்.ஜி.ஓ. மூலம் தையல் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்று உள்ளோம். எங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா தையல் எந்திரம் வழங்கப்படவில்லை. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுபோல் பலர் மனு அளித்தனர்."
- 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
- வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மை சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
அவிநாசி சேவூர் அருகே 1996 ம் ஆண்டு ஆதிதிராவிட நலத்துறை சார்பில் தேவேந்திரர்நகர் மக்கள் 200க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 25 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு வீடு கட்ட கடன் வாங்க சென்றபோது சார்பதிவாளர் அலுவலகத்தில், வீட்டுமனைகள் வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் வக்புவாரிய அலுவலகத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வரக் கோரி பதிவுத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தேவேந்திர நகர் பகுதி மக்கள் இன்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.
- இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.
நாமக்கல்:
இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசிய, தி.மு.க.வைச் சோ்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது நட வடிக்கை எடுக்கக் கோரி, நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பா.ஜ.க .மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி மனு அளித்தாா். பின்னர் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை, பெரியாா் திடலில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்மாதிரியுமான ஆ.ராசா, இந்துக்களை தீண்டத்தகாதவா்கள் என்பதுபோல் மனம் புண்படும் வகையில் தேவையற்ற வாா்த்தைகளை உபயோகித்து பேசினாா். சில மாதங்களுக்கு முன் நாமக்கல்லில் நடைபெற்ற மாநாட்டில் தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து குழப்பம் விளைவித்தாா்.
ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்துக்களின் மனதைப் புண்படுத்திய ஆ.ராசா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறை தலைவா் அலுவலகத்தில் பா.ஜ.க நிா்வாகிகள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆ.ராசாவின் மக்களவை உறுப்பினா் பதவியை பறிக்கும் வகை யிலான நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் மனு அளிப்பதற்கான பணிகளை பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை செய்து வருகிறாா்.
தமிழகம் முழுவதும் உள்ள பா.ஜ.க. நிா்வாகிகள், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவல கத்தில் ஆ, ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மனுக்களை அளித்து வருகின்றனா். இது தொடா்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அவா் மீது நடவடிக்கை எடுப்பதற்கு போராடுவோம்*.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, பாஜக மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, மாவட்ட பொதுச் செயலாளா் வடிவேல், கல்வியாளா் ஆா். பிரணவ்குமாா் மற்றும் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்