என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 152641"
- பாபநாசம் நகரத்திற்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும்.
- பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாபநாசம்:
பாபநாசம் நகரத்திற்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் ஒன்றியக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்ட த்திற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார்.
விவசாய தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், நகர செயலாளர் சங்கர், மாதர் சங்க செயலாளர் கஸ்தூரிபாய், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில குழு உறுப்பினர் டெல்லி பாபு, மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
- தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார்
கன்னியாகுமரி :
மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி வில்லு மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 58). இவர் ஞாறான்விளையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது அண்ணன் பால்ராஜ்.இவருக்கு திருமணமாகி 18 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் அவர் தம்பி விஜயகுமாரின் மகளை 18 ஆண்டுகளுக்கு முன்பு தத்தெடுத்து வளர்த்தார். இந்நிலையில் பால்ராஜ் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவன் இறந்த பின்பு அவரது மனைவி வசுமதி, வளர்ப்பு மகள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 4-ம் தேதி வசுமதியும் இறந்து விட்டார். இதனால் அவர்கள் தத்தெடுத்த மகள் தனியாக வசிக்கும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அண்ணன் பால்ராஜ் வீட்டில் தனியாக வசித்து வரும் மகளை அழைத்து செல்ல அவரது பெற்ற தந்தை விஜயகுமார் நேற்று இரவு 10 மணிக்கு, சென்றார். அங்கு இருந்த மகளை தன்னோடு அழைத்த போது அவரை அங்கிருந்த உறவினர்கள் அனுப்ப மறுத்தனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு மூண்டது. இதில் விஜயகுமார் தாக்கப் பட்டார். இதுகுறித்து அவர் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை அழைக்க சென்ற போது, கல்லு பாலத்தை சேர்ந்த பத்ரோஸ் ( 52 ), பயணம் பிரவீன்(22), சிதறால் ஜூலியட் (50), பயணம் விஜயகுமார்(52), நாகர்கோவில் ஐடா(42),கலா (43) உள்பட 10 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ஸ்கூட்டியை பறித்து கொண்டதாகவும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே விஜய குமார் மீது அவரது மகளும் தனியாக ஒரு புகார் கொடுத்தார். அதில் தான்,தனது வளர்ப்பு தாயார் வசுமதி வீட்டில் வசித்து வருவதாகவும், தற்போது பிளஸ் 2- முடித்து மேற்படிப்பு படிக்க இருப்பதாகவும், இந்த நேரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து கதவை உடைக்க முயற்சித்ததோடு, தனது உறவினர் சுரேஷ் என்ப வரை கம்பியால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாகவும், புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் பெண்ணின் பெற்ற தந்தை விஜயகுமார், அபிஷேக் ,சசிகுமார், அனுஜ் உள்பட 10 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இருதரப்பையும் சேர்ந்த 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.வளர்ப்பு தந்தையின் உறவினர்களுக்கு ஆதரவாக பெற்ற தந்தை மீது பெண் புகார் கொடுத்திருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் .
- வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார்.
திருப்பூர் :
தாராபுரம் வேங்கிபாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மல்லிகா (வயது 42) என்பவர் திருப்பூர் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது அண்ணன் முருகேசன் பெருந்தொழுவில் வசித்து வருகிறார். அவரது மனைவி தங்கமணி.
இவர்களுக்கு குழந்தையில்லை. இந்நிலையில் தங்கமணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. அதற்கான மருத்துவ செலவுக்காக என்னிடம் அண்ணன் முருகேசன் பணம் கேட்டார் . நானும் கொடுத்தேன். இந்தநிலையில் நான் கொடுத்த பணம் போதவில்லை. அதனால் பெருந்தொழுவில் உள்ள வீட்டை முருகேசன் விற்க முடிவெடுத்தார். அது குறித்து நான் கேட்டபோது வீட்டை நீ வேண்டுமானால் வாங்கி கொள் என்று சொன்னார். அதன்படி அந்த வீட்டுக்கு ரூ. 14 லட்சத்தை கிரயத்தொகையாக வங்கியில் செலுத்தியுள்ளேன். அந்த வீட்டை எனது பெயரில் அண்ணன் முருகேசன் கிரயம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டை தங்கமணி அபகரிக்க முயல்கிறார். எனவே உரிய நடவடிக்கை எடுத்து எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- அறந்தாங்கியில் அரசு சார்பில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க கூடுதலாக பணம் கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது
- பயனாளிகள் கண்ணீர் மல்க குற்றசாட்டி வருகின்றனர்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குரும்பக்காடு பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. 120 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடங்கள் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வருகிறது. இதில் கஜாபுயலால் பாதிப்படைந்தவர்கள் மற்றும் நகர்புறத்தில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அதற்கான ஆவணங்களை வருவாய்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சரிபார்க்கப்பட்டு உரியவர்களுக்கு வீடுகள் வழங்க பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு 9-வது மாதம் 120 பயனாளிகளிடமிருந்து தலா ரூ.1 லட்சம் காசோலையாக நிர்வாகம் சார்பில் பெறப்பட்டது. இந்நிலையில் வீடுகள் பூர்த்தியாகி பயனாளிகளிடம் ஒப்படைக்கும் தருவாயில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட வேண்டும் என நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த பயனாளிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பயனாளிகள் கூறுகையில், ஏழை எளிய மக்களாகிய நாங்கள் வசிக்க வீடு இன்றி அன்றாடம் காய்சியாக வாழ்ந்து வருகிறோம். எதோ அரசின் சார்பில் இலவச வீடு என்றார்கள், அதனை நம்பி வந்தோம். ஆனால் ஒரு லட்சம் பயனாளிகள் கட்ட வேண்டும், மீதி பங்கை அரசு கட்டும் என்று கூறினார்கள், வேறு வழியின்றி இருப்பதை விற்று ரூ.1 லட்சம் பணத்தை கட்டினோம். ஆனால் தற்போது மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கட்ட சொல்கிறார்கள்.
இருக்க வீடு இன்றி வாழும் எங்களால் இவ்வளவு தொகையினை எப்படி கட்ட முடியும். ஏற்கனவே கட்டிய பணத்திற்கு 8 மாதத்திற்கும் மேலாக வட்டி கட்டிக் கொண்டு வருகிறோம். இந்த நிலையில் இப்படி ஒரு தகவல் பேரிடியாக உள்ளது. எனவே அரசு கவனத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர். இதற்கிடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பரம ஏழைகளுக்கு கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெறுவதற்கு ஏற்கனவே ரூ.1 லட்சம் வாங்கப்பட்ட நிலையில் மீண்டும் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கேட்பது எந்த வகையில் நியாயம், எனவே ஒன்றிய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு உதவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
- இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை கடையில் வேலை செய்த பிரபீர் ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் ஆகிய இருவர் திருடியதாக கொடுத்த புகாரில் அப்போதே பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் தவறாக புகார் அளித்துவிட்டதாகவும் ஆனால் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அப்பகுதியிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இரவு தனது வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அசோக் என்பவர் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், கிருஷ்ணகிரி அடுத்த மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அசோக் என்பவர், ஏற்கனவே தங்கள் மகளை கடத்தி சென்றார்.
அவரிடமிருந்து சிறுமியை மீட்டு வந்தோம். இந்த நிலையில் மீண்டும் சில நாட்களிலேயே கடைக்கு சென்ற தங்கள் மகளை அசோக் என்பவர் கடத்தி சென்றுள்ளார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, நான்காம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளான். அசோக், மாதிநாயனப்பள்ளியை சேர்ந்த அழகேசன், முத்து, ராஜேஷ், சின்னதிம்மன் ஆகியோர் உதவியுடன் தங்கள் மகளை கடத்தியுள்ளார்.
தங்கள் மகள் உயிருடன் உள்ளாரா என்று பயமாக உள்ளது. இது குறித்த விவரங்களுடன், மகளை கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூரிடம் புகார் அளித்துள்ளோம் என தெரிவித்தனர்.
- புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.
- ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சா ராயம் காய்ச்சுபவர் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை விற்பனை செய்வதை தடுப்பது குறித்த கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் முன்னிலையில், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்ததாவது:-
கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து நாகை மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுப்பது, அனுமதி பெற்ற பார்களை தவிர பிற பார்களில் மதுபானங்கள் விற்பது, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பது போன்றவை தெரியவந்தால் 94981 81257 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவரின் பெயர் ரகசியமாக வைக்கப்படும், புகாரில் உண்மை தன்மை இருப்பின் மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஆன்லைனில் மோசடி செய்த ரூ.30 லட்சம் மீட்கப்பட்டது.
- பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
மதுரை
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் செயற்குழு கூட்டம் மதுரை யில் உள்ள சங்க அரங்கத்தில் நடந்தது. சங்கத்தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் கூறியதாவது:-
காவல்துறையினர் தொழில்துறையினருடன் இணக்கமான சூழலில் இருக்கிறோம். சரக்குகளை ஏற்றிச்செலவதற்கு வாகன போக்குவரத்து வியாபாரி களுக்கு மிகவும் முக்கிய மானதாகும. அப்போது பிரச்சினை ஏற்படும்போது போலீசார் மிகவும் உதவியாக இருக்கிறோம்.
சமீபத்தில் பைக்-லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தவறு பைக் ஓட்டி வந்தவர் மீதுதான் என்று தெரிந்தது. இது என் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது பற்றி நான் விசாரித்தபோது மோதிய 2 வாகனங்களில் எது பெரியதோ அதன்மீது தான் வழக்கமாக வழக்குப்பதிவு செய்து உள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
நான் அவர்களை எச்சரித்து தவறு இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுங்கள். பொய்யாக இப்படி செய்யாதீர்கள் என்று சொல்லி உண்மை குற்றவாளி மீது வழக்குப்பதிய கூறினேன்.
டோல்கேட் அருகே சரக்கு வாகனங்களை மறித்து பணவசூல் செய்வதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று திடீர் சோதனை செய்தேன். பின்னர் இதில் தொடர்பு டைய ஆர்.ஐ. மீது நடவடிக்கை எடுத்தேன். அவர் உடனடியாக விருது நகருக்கு மாற்றப்பட்டார். இவ்வா றாக வியாபா ரிகளின் நியாயமான புகாருக்கு உதவியாக இருந்து வருகி றோம்.
மேலும் இணைய வழியில் வர்த்தகம் செய்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக பண பரிவர்த்தனை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் நிறைய மோசடி கும்பல் செயல் படுகின்றன. அவர்கள் போலியான ஜி.எஸ்.டி. எண்கள் வைத்து போலியான முகவரியில் செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்தவர்கள் 1 மணி நேரத்துக்குள்ளாக கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்தால் இழந்த பணத்தை உடனடியாக மீட்டு விடலாம்.
மதுரை மாவட்டத்தில் ரூ.30 லட்சம் மீட்க்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் ஓராண்டில் கஞ்சா வழக்குகளில் ரூ. 9 கோடி அளவிற்கு சொத்துக் கள் முடக்கக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்கள் 9498181206 என்ற எண்ணில் புகார் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவில் திருவிழா ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் உச்சக்கட்ட ஆபாசமாக நடைபெற்றது
- நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ளது பழைய கோட்டை மேத்தக்கான்பட்டி கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. உயர் நீதிமன்ற அனுமதி பெற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேடையில் ஆடிய கலைக்குழுவினர்மிகவும் மோசமாக அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனம் ஆடியதாகவும், நடனத்தை பார்க்க வந்த 2,000-க்கும் மேற்பட்டோர் முன்பு நடனம் என்ற பெயரில் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நடன நிகழ்ச்சியை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோவை பார்த்த தமிழ் நாடு திரைப்பட மேடை நடன கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜசேகரன் தலைமையிலான நிர்வாகிகள், மணப்பாறை டி.எஸ்.பி. ராமநாதனை நேரில் சந்தித்து இது குறித்து புகார் செய்தனர். அந்த புகாரில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நடனம் ஆடியவர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், மற்றும் கைகட்டி வேடிக்கை பார்த்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். கோவில் திருவிழாவில் நடைபெற்ற ஆபாச நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது சமூக நல ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கடலூர் முதுநகரில் கல்லூரி மாணவி மாயமானார்.
- பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் முதுநகரை சேர்ந்த கல்லூரியில்3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
- தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்கும் வகையில் போதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் போலீசாரால் புகையிலை பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனைகளுக்கு எதிராகவும் சிறப்பு சோதனைகளை நடத்தி குற்றவாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கள்ளச் சாராயம், போலி மதுபானம், கஞ்சா மற்றும் மெத்தனால் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள், கடத்தி வருபவர்கள் பதுக்கி வைப்பவர்கள் தொடர்பான புகாரை போலீசாரிடம் பொதுமக்கள் தெரிவிக்க செல்போன் எண்களை சென்னை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.
மதுவிலக்கு அமலாக்க பிரிவு வடக்கு மண்டலத்தில் பூக்கடை, வண்ணாரப்பேட்டை புளியந்தோப்பு காவல் மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் 8072864204 என்ற செல்போன் எண்ணிலும், மேற்கு மண்டலத்தில் அண்ணா நகர், கொளத்தூர், கோயம்பேடு காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042380581 என்ற செல்போன் எண்ணிலும், தெற்கு மண்டலத்தில் அடையாறு, புனித தோமையர் மலை, தி.நகர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 9042475097 என்ற செல்போன் எண்ணிலும், கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, கீழ்பாக்கம், மயிலாப்பூர் காவல் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 6382318480 என்ற செல்போன் எண்ணிலும் பொது மக்கள் தொடர்பு கொண்டு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்து உள்ளது.
தகவல் கொடுக்கும் பொது மக்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்படுகின்றன.
- பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.
கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்