search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 166375"

    • வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு நடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை காமராஜர் சாலையை சேர்ந்தவர் மதிவாணன் (62).சம்பவத்தன்று இவர் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருடுபோனது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடந்தன.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே பெத்துலுப்பட்டி விலக்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக நிர்வாக அதிகாரி சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கன்னிதேவன்பட்டியை சேர்ந்தவர் ரவீந்திரநாத் (57). இவர் வட்டார கல்வி அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் சென்றபோது கீழே விழுந்து காயம் அடைந்தார். அதன் பின்னர் உடல்நிலை பாதிப்பால் ெதாடர்ந்து அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந் தார். இதுகுறித்து ரவீந்திர நாத்தின் மனைவி விமலா கொடுத்த புகாரின்பேரில் கீழராஜகுலராமன் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர்.
    • கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சாவேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கஞ்சா வேட்டை நடத்த உத்தரவிட்டார். அதன்படி கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் அதிரடியாக கஞ்சா வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 48) மற்றும் வேங்காடு கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(39) ஆகிய இருவரும் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து சுமார் 1 கிலோ கஞ்சாவை பறி முதல் செய்து போலீசார் கோவிந்தராஜ் மற்றும் சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தனர்.
    • இது தொடர்பாக கௌசி, பரத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையிலான போலீசார் மலையம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபர்களை விசாரணை செய்தனர்.  விசாரணையில் புக்குளம் மந்தவெளி பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் கௌசி (வயது 19), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் பரத் (19) என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து 100 கிராம் அளவிலான கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக கௌசி, பரத் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    • வேறு நிறுத்தத்தில் இறங்கி கொள்ள ெசான்னதின் பேரில் தகராறு ஏற்ப்பட்டுள்ளது.
    • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    மதுரை உசிலம்பட்டி பாலுசாமி நாடார் வீதியை சேர்ந்தவர் சங்கர் கணேஷ். இவரது மகன் மோகன் பிரபு(17). பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். இவர்களது உறவினர்கள் கோவையில் இருப்பதால், மோகன் பிரபுவை கோவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க அவரது பெற்றோர் விரும்பினர்.

    இதற்காக மோகன்பிரபு கல்லூரியில் சேர விண்ணப்பிப்பதற்காக நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் ஏறினார். அப்போது கண்டக்டர், மோகன் பிரபுவிடம் பஸ் சிங்காநல்லூர் செல்லாது, ரெயில் நிலையம் வரை மட்டுமே செல்லும், அங்கிருந்து சிங்காநல்லூருக்கு செல்லுமாறு கூறினார்.

    அதற்கு அவர் கண்டக்டரிடம் ஏன் தகவல் பலகையை மாற்றாமல் வைத்துள்ளீர்கள் என கேட்டார். அதில் சிங்காநல்லூர் என்று போடப்பட்டுள்ளதே என கேள்வி எழுப்பினார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பஸ் கண்டக்டர் மோகன் பிரபுவை தகாத வார்த்தைகளால் பேசினார். பஸ்சை நிறுத்தி எழுந்து வந்த டிரைவர், மோகன் பிரபுவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க்கில் கீழே தள்ளி இறக்கி விட்டு சென்றார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    அக்கம்பக்கத்தினர் மாணவனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து மோகன் பிரபு ஆர்.எஸ். புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆனந்த கிருஷ்ணன், பஸ் கண்டக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீரமுத்து ரத்த காயத்துடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சூராங்காடு வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து வயது(. 32 ).இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் வீரமுத்து நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை அவரது மனைவி கோமதி மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலையில் பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையம் அருகில், பட்டுக்கோட்டையிலிருந்து வெண்டாக்கோட்டை செல்லும் சாலையில் வீரமுத்து ரத்த காயத்துடன் இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து பொது மக்கள் பட்டுக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வீரமுத்து உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வீரமுத்துவின் மனைவி கோமதி பட்டுக்கோட்டை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    வீரமுத்துசை யாரும் அடித்து கொலை செய்தார்கள? அல்லது வேறு காரணமா? என பலகோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ள நெடுவரம்பாக்கம் பெரிய காலணியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 32). இவரது தம்பி இளங்கோவன். தி.மு.க.வை சேர்ந்த இவர் ஊராட்சி துணைத்தலைவராக உள்ளார்.

    நேற்று முன்தினம் அப்பகுதியில் தேவாலயத்தில் நடந்த விழாவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக சகோதரர்கள் லட்சுமணன், இளங்கோவன் ஆகியோர் சோழவரம் போலீசில் புகார் அளித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தனர்.

    நெடுவரம்பாக்கம் காலனி அருகே வந்தபோது மர்மகும்பல் அவர்களை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் இறந்தார். அவரது தம்பி இளங்கோவனுக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் என்ன? கூட்டாளிகள் யார்? யார்? என்று விசாரணை நடந்து வருகிறது. கொலை தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

    • ரோந்து பணியில் சிக்கினர்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ் பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாட்டறம்பள்ளி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்த ஆனந்தன் (வயது 52), நேரு தெருவை சேர்ந்த முருகேசன் (58) ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் சுபாஷினி மற்றும் போலீசார் நாட்டறம் பள்ளி மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப் போது சுண்ணாம்பு குட்டை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சூதாடிக் கொண்டிருந்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கமலநாதன் (வயது 62), வேட்டப்பட்டு வட்ட கொல்லை பகுதியை சேர்ந்த மூர்த்தி (47) ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்குகளில் வி.கே.புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் போகன் குமார் மற்றும் 2 போலீசார் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 4-வது வழக்கு ஒன்றை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கல்லிடைக்குறிச்சி அருகே ஜமீன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் மீது 4-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த வழக்கில் சம்பவம் நடந்த காலகட்டத்தில் கல்லிடைக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த ராஜகுமாரி, அங்கு பணியாற்றும் காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் உலகராணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

    • சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • ரயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் நேற்று காலை அண்ணா நகர், விஜயபுரம், திரு.வி.க. நகர், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது நயினார் பாளையம் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அந்த வாலிபரை சின்னசேலம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த இளைஞர் தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (வயது 22) என்பது தெரிய வந்தது. பிறகு அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படித்து சிறையில் அடைத்தனர்.

    • பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அலிப்பிரி வன உயிரியல் பூங்காவில் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

    திருப்பதி ராயல் நகரை சேர்ந்தவர் சுப்ப ரத்ன சுஷ்மா. இவர் தனது 3 மகன்கள் மற்றும் அவரது சகோதரர் மகனையும் உடன் அழைத்துக் கொண்டு உயிரில் பூங்காவிற்கு சென்றார்.

    உயிரில் பூங்காவில் விலங்குகளை சிறுவர்கள் ரசித்தனர். அங்கும் இங்குமாக சந்தோஷமாக ஓடியாடி விளையாடினர். சுப்ப ரத்ன சுஷ்மா அருகில் இருந்து சிறுவர்கள் விளையாடுவதை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.

    சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டனர். அங்குள்ள உணவகத்தின் வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேட்டரி கார் திடீரென சுப்ப ரத்னா சுஷ்மாவின் மகன் பிரணவ் (வயது 3) என்பவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைக் கண்ட அவரது தாய் கதறி அழுதார். பூங்கா ஊழியர்கள் சிறுவனை ரூயா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிறுவனின் தாய் எம்.ஆர்.பள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பேட்டரி வாகன டிரைவரை கைது செய்தனர்.

    சிறுவனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    இனி உயிரியல் பூங்காவில் உள்ள பேட்டரி வாகனங்கள் 10 கிலோ மீட்டருக்கு பதிலாக 5 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்படும் என ஆந்திர அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×