என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 174792"
- இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீசார் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி:
ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தை அடுத்து இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறதா என கூறி ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, மதுரை ரெயில்வே உட்கோட்ட பொறுப்பு நெல்லை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின் படியும், நெல்லை வட்டம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று தென்காசி ரெயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகில் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டவாள ரோந்து பணிகள் மேற்கொண்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டனர்.
- குளித்தலை-பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை நடைபெற உள்ளது.
- கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருப்பூர் :
குளித்தலை - பெட்டவாய்த்தலை ரெயில் நிலையம் இடையே பொறியியல் பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுன் - திருச்சி டவுன் செல்லும் ரெயில் காலை 6.30 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 1.50 மணிக்கு திருச்சிக்கு செல்லும். இந்த ரெயில் நாளை பாலக்காட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதுபோல் திருச்சி - பாலக்காடு டவுன் ரெயில், திருச்சியில் மதியம் 1 மணிக்கு புறப்பட்டு பாலக்காட்டை இரவு 8.25 மணிக்கு சென்றடையும். இந்த ரெயில் நாளை திருச்சியில் இருந்து கரூர் வரை ரத்து செய்யப்படுகிறது. கரூரில் இருந்து பாலக்காடு வரை ரெயில் இயக்கப்படும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
- இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரெயில் நிலையங்களில் நிற்கும்.
கோவை,
கோவையில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த ரெயிலில் கோவை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இந்த ரெயிலில் பயணித்து திருப்பதிக்கு சென்று வந்தனர்.
இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்தது. ரெயிலை கூடுதல் நாட்களும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் எழுந்தது.
இந்த நிலையில் கோவை-திருப்பதி இடை யே செவ்வாய்க்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வந்த ரெயில், நிரந்தரமாக வாரத்துக்கு 4 நாட்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை-திருப்பதி இடையே செவ்வாய்க்கிழமை தோறும் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ரெயிலானது, வாரத்துக்கு 4 நாட்கள் நிரந்தரமாக இயக்கப்பட உள்ளது.
அதன்படி கோவை-திருப்பதி விரைவு ரெயில் (எண்:22616) செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும்.
திருப்பதி-கோவை ரெயில் (எண்: 22615) திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்கு திருப்பதியில் புறப்பட்டு, அதே நாள் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும்.
இந்த ரெயிலானது திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
- கிண்டி, பரங்கிமலை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன.
சென்னை:
சென்னையில் ரெயில் போக்குவரத்து ஆங்கிலேயர்கள் காலத்தில் தொடங்கப்பட்டது. அப்போது கடற்கரை- தாம்பரம் வழித் தடத்தில் உள்ள ரெயில்வே நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பாக ஒவ்வொரு பிளாட்பாரங்களுக்கும் செல்லும் வகையில் நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட்டன.
அந்த காலத்தில் 3 மீட்டர் அகலத்துடன் இந்த நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது பயணிகள் வருகை அதிகரிப்பு ரெயில் நிலையங்கள் விரிவாக்கம் ஆகிய காரணங்களால் நூற்றாண்டை கடந்த இந்த நடை மேம்பாலங்கள் போதுமானதாக இல்லை.
இதனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் 12 மீட்டர் அகலத்துடன் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டது.
கிண்டி, பரங்கிமலை, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் பழைய நடை மேம்பாலங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் தற்போது கிண்டி ரெயில் நிலையத்தில் உள்ள பழைய ரெயில்வே நடை மேம்பாலம் இடிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக ரெயில்வே நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி ரெயில் நிலையத்தையும், மெட்ரோ ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் இந்த புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பழைய மேம்பாலத்தை இடித்துவிட்டு நடை மேம்பாலம் அமைப்பது சவாலான பணியாகவே இருந்தது. இதனால் படிப்படியாக இடித்தனர். முதலில் கீழ் பக்கம் இருந்த டிக்கெட் கவுண்டரை இடித்துவிட்டு மேல் தளத்தில் கட்டி புதிய நடை மேம்பாலத்துடன் இணைத்தனர்.
பழைய நடை மேம்பாலம் 2 விரைவு ரெயில் பாதைகளையும், புறநகர் மின்சார ரெயில் பாதைகளையும் கடந்து செல்லும்படி அமைந்திருந்தது. இந்த நிலையில் மேற்கு பகுதியில் புறநகர் மின்சார ரெயில் வழித்தடத்தில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் அமைக்கப்பட்டது. அதன் அருகே மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்தது.
எனவே தற்போது மேற்கு பக்கம் ஜி.எஸ்.டி. சாலையும், கிழக்கு பக்கம் ரேஸ் கோர்ஸ் சாலையையும் இணைத்து புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு சாலைகளுக்கும் செல்ல வேண்டிய பாதசாரிகள் இந்த புதிய நடை மேம்பாலம் வழியாக எளிதில் செல்ல முடியும்.
அந்த காலகட்டத்தில் கட்டப் பட்ட பழைய நடை மேம்பால தூண்கள் ரெயில்வே பாதையின் அருகில் இருந்தது. இதனால் ரெயில்களில் படிக்கெட்டில் தொங்கியபடி செல்பவர்கள் ஆபத்தில் சிக்கியதும் உண்டு.
கடந்த 2018-ம் ஆண்டு படிக்கட்டில் அதிகமானோர் தொங்கியபடி சென்றதில் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கட்டுமானத்தில் இடிபட்டு விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தார்கள்.
தற்போது புதிய நடை மேம்பாலம் அகலமாகவும், தேவையான அளவு இடை வெளிகளில் தூண்கள் அமைத்தும் கட்டப்பட்டு இருப்பது பயணிகள் பயணத்துக்கு பாதுகாப்பாக இருக்கும்.
இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் இன்னும் 30 நாட்களில் முழுமையாக அகற்றப்பட்டுவிடும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இனி ரேஸ் கோர்ஸ் ரோட்டில் இருந்து புறநகர் ரெயில் நிலையத்தில் இருக்கும் எந்த பிளாட் பாரத்துக்கும் செல்ல முடியும். மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் செல்ல முடியும். பாதசாரிகள் ஜி.எஸ்.டி. சாலைக்கும் சிரமமின்றி செல்லலாம்.
- மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
- மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை விமான நிலையம் - விம்கோ நகர் இடைேய, மெட்ரோ தடத்தில், அலுவலக நேரத்தில் 5 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும், மற்ற நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயிலும் இயக்கப்படுகிறது.
அதே போல் பரங்கிமலை - சென்ட்ரல் இடையே அலுவலக நேரத்தில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரெயில், மற்ற நேரத்தில் 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. மெட்ரோவில் தினமும் காலை 5 மணிக்கு ரெயில் சேவை தொடங்கி இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது.
ஆனால் சென்னை விமான நிலையத்தில் இரவு 11 மணிக்கு மேல் 20க்கும் மேற்பட்ட விமானங்கள் புறப்பட்டு செல்கின்றன. எனவே தற்போது உள்ள மெட்ரோ ரெயில் சேவையை நள்ளிரவு 12 மணிவரை நீடித்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறுகையில், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இச்சேவையை நள்ளிரவு வரை நீட்டித்து இயக்குவது குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
- அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
- தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் தீயை அணைத்தனர்.
ஓங்கோல்:
ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பதிக்கு நேற்று இரவு புறப்பட்டு வந்தது.
பிரகாசம் மாவட்டம் டங்கடூர் அருகே வந்தபோது திடீரென ரெயிலில் புகை கிளம்பியது.
அடிப்பகுதியில் இருந்து தீப்பொறி எழுந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனே ரெயிலில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் கீழே இறங்கி தப்பி ஓட முயன்றனர். ஆனால் அதற்குள் தகவல் அறிந்து குறிப்பிட்ட பெட்டிக்கு வந்த ரெயில்வே அதிகாரிகள் அந்த தீயை அணைத்தனர்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் தப்பினர். உராய்வு காரணமாக சக்கரத்திலிருந்து தீ வந்ததாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறகு அந்த ரெயிலில் மராமத்து பணிகள் செய்யப்பட்டு மீண்டும் திருப்பதிக்கு புறப்பட்டது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.
- ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திருச்சி:
திருச்சி-சென்னை ரெயில்வே வழித்தடத்தில் லால்குடி அருகே கடந்த 1-ந்தேதி இரவு தண்டவாளத்தில் குறுக்கே இரண்டு லாரி டயர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நள்ளிரவு இந்த வழியாக சென்னை நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியதில் என்ஜின் அடிப்பகுதியில் இருந்த வயர்கள் துண்டிக்கப்பட்டதால் பழுது ஏற்பட்டது.
இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 40 நிமிடங்கள் தாமதமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னை புறப்பட்டு சென்றது. இதுகுறித்து விருதாச்சலம் ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டவாளத்தின் குறுக்கே டயர்களை வைத்ததில் சதிச்செயல் ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக சம்பவம் நடந்த இடத்தில் ரெயில்வே போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை சார்பில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையில் சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அந்தப் பகுதியில் யார் யாருடைய செல்போன் நம்பர்களின் சிக்னல் காண்பித்ததோ அவர்களையும், அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நடமாடியவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்பநாய் மேக்ஸ் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 10 நிமிட தாமதத்திற்கு பிறகு ஊட்டி புறப்பட்டு சென்றது.
- 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தின் அடையாளமாக மலை ெரயில் சேவை திகழ்ந்து வருகிறது. இது அடா்ந்த வனப் பகுதி வழியாக குறைந்த வேகத்தில் செல்லும். எனவே மலை ரெயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இந்த நிலையில் அந்த ரெயில் நேற்று காலை குன்னூரில் இருந்து ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது டிரைவர் கணேசன் ரெயிலை இயக்கினார். குன்னூரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில் வெலிங்டன் மேம்பாலப் பகுதி அருகே வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே 25-க்கும் மேற்பட்ட காட்டு எருமைகள் நின்று கொண்டு இருந்தன. இதனை தற்செயலாக பார்த்த டிரைவர் கணேசன் அதிர்ச்சி அடைந்தார். எனவே அவர் உடனடியாக பிரேக் போட்டு மலை ெரயிலை நிறுத்தினாா். அதன்பிறகு அவா் ரயிலில் இருந்து இறங்கி சென்று தண்டவாளத்தின் குறுக்கே நின்ற காட்டு எருமைகளை காட்டு ப்பகுதிக்குள் விரட்டி னாா். அதன்பிறகு குன்னூ ரில் இருந்து புறப்பட்ட மலை ரெயில், சுமார் 10 நிமிடம் தாமதமாக ஊட்டி க்கு புறப்பட்டு சென்றது.
- ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் ரெயில் பெட்டிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- பாடாவதியான ரெயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத் தில் ராமேசுவரம், ஏர்வாடி, திருப்புல்லாணி, உத்தரகோச மங்கை, உப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆன்மிக தலங்கள் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்க ணக்கானோர் வேண்டுதலுக் காக வருகின்றனர். இது தவிர ஏராளமான வெளி நாட்டினர் ராமேசுவரத்திற்கு வந்து செல்கின்றனர்.
இங்கு வருபவர்களில் பெரும்பாலானோர் ரெயில் பயணத்தை விரும்பி தேர்வு செய்கின்றனர். ராமேசுவரம், ராமநாதபுரம் ரெயில் நிலை யம் வழியாக சென்னை, கோவை, திருப்பதி, போன்ற நகரங்களுக்கு முன்பதிவு செய்து பயணம் மேற் கொண்டு வருகின்றனர்.
ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்லும் ரெயில் பெட்டிகளில் முன்பதிவு பெட்டிகள் எஸ்-1 முதல் எஸ் 13 வரை இணைக்கப் பட்டு டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. ராமேசு வரம் மற்றும் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகள், இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மிக மோசமான நிலையில் உள்ளது. கிழிந்த இருக்கையில் தையல் போடப்பட்டு உள்ளது. தரை தளம், கழிப்பறைகள் படுமோசமாக உள்ளது. மூன்று அடுக்கு ஏ.சி. பெட்டியில் கதவுகளில் உள்ள இடைவெளியில் குளிர் காற்று வெளியே செல்வதால் பெட்டிக்குள் வெப்பகாற்று ஏற்படுகிறது.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
ராமநாதபுரம் ெரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான வசதியில்லை. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குளிர் சாதன ெரயில் பெட்டிக்குள் சென்றால் அனல் காற்று தான் வீசுகிறது. தரை தளம் படு மோசமாக உள்ளது. முன்பதிவு செய்து செல்வதை விட ஜெனரல் பெட்டியில் பயணிக்கலாம் என்ற நிலை உள்ளது.
கழிப்பறையில் சோப், பேப்பர் போன்றவைகளை காண முடியவில்லை. ராமேசுவரம் வரும் யாத்ரீகர்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு பாடா வதியான ெரயில் பெட்டி களை மாற்ற ரெயில்வே பொது மேலாளர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தில்லைவிளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
- ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாச்சிகுளத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நலச்சங்க தலைவர் தாஹிர் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சங்கரன், செயலாளர் கோவி பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பொருளாளர் அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் தங்கராஜன், சாகுல் ஹமீது, முருகானந்தம், முகமது அலி ஜின்னா, முகமது மைதீன், குருநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தில்லைவி ளாகம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வேண்டும், பகல் நேரத்தில் செல்லக்கூடிய சோழன் எக்ஸ்பிரசுக்கு காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறை வரை பட்டுக்கோட்டை, தில்லைவி ளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக இருமுனைகளில் இணைப்பு ரெயில் விட வேண்டும்.
தில்லைவிளாகம் ரெயில் நிலையத்திலிருந்து ஈ.சி.ஆர். சாலை வரை தார்சாலை வேலையை உடனடியாக தொடங்கி முடிக்க வேண்டும், ரெயில் நிலையத்திற்கு வடக்கு பகுதியில் படிக்கட்டு அமைத்துத்தர வேண்டும்.
ரெயில் நிலைய வளாகங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் செயற்குழு உறுப்பினர் ஷேக் அலாவுதீன் நன்றி கூறினார்.
- கோவை- போத்தனூர் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- 3 ரெயில்கள் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, போத்தனூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
திருப்பூர் :
கோவை வழி ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை- போத்தனூர் இடையே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் பாலக்காடு- கோவை (06806), ஷொர்னூர்- கோவை (06458), மதுரை- கோவை (16722) ஆகிய 3 ரெயில்களும் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை, போத்தனூர் ரெயில்வே நிலையத்தில் நிறுத்தப்படும். கோவை ரெயில் நிலையம் செல்லாது.போத்தனூரில் புறப்படும் ரெயில்கள் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். கோவை - கண்ணூர்(16608), கோவை - ஷொர்னூர் (06459), கோவை - பாலக்காடு (06807) ஆகிய ரெயில்கள், ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் நாளை 1-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அலங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 50) விவசாயி.
இவரது மனைவி மல்லிகா (47) ஒரு மகள், மகன் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
கணவன்-மனைவி இருவரும் மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.
மோகன், மல்லிகா இருவரும் நேற்று இரவு 8 மணியவில் லத்தேரி-காட்பாடி செல்லும் ரெயில் தண்டவாளத்திற்கு வந்தனர்.
அப்போது நாகர்கோவிலில் இருந்து, மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கணவன், மனைவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்