search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 176033"

    • அதிகாரிகள் விசாரணை
    • கடும் வாக்குவாதம் ஏற்பட்டது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை அருகே உள்ள பிஎம்வட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமுத்தன் ( வயது 60). பீடி சுற்றும் தொழிலாளி.

    இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அனுமுத்தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று திடீரென உயிரிழந்தார்.

    இதனையடுத்து அவரது உடலை புதைப்பதற்காக, உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு குழி தோண்ட சென்றனர்.

    அப்போது சுடுகாடு அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள், உடலை புதைக்க குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அனுமுத்தன் உறவினர்களுக்கும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, கிராம நிர்வாக அலுவலர் மத்தான் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் சுடுகாட்டில் உடலை புதைக்க அதிகாரிகள் அனுமதி வழங்கினர். இதனை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் கிராம மக்கள் ஈடுபட்டனர்.
    • சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில், மேலத் தெரு மற்றும் கிழக்குத்தெரு பகுதி மக்களுக்கு குடிநீர் சரிவர விநியோகம் செய்யப் படவில்லை. இதனால் ஒரு வாரமாக அந்த பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிதண்ணீரை பணம் கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மேற்கண்ட பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய தயாராகினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மணி மேகலை மற்றும் மண்டல அதிகாரி மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட போவதாக கூறி அதிகாரி களுடன் வாக்குவாத்தில் னஈடுபட்டனர்.

    ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் பிரச்சினைகள் சரி செய்யப்பட்டும், அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.
    • இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்தவர் சேக்அலி(வயது 42) பெயிண்டர். இவருக்கும் கோசாகு ளத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்நிலையில் பாஸ்கரை தேடி வந்த பெயிண்டர் சேக்அலிக்கும் பாஸ்கர் மகன் ஸ்ரீபனுக்கும் தகராறு ஏற்பட்டது.

    பின்னர் இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஸ்ரீபன் மற்றும் அவரது தயார் செல்வி ஆகியோர் சேக் அலியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த சேக்அலி இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபனை கைது செய்தனர்.

    அவரது தயார் செல்வியை தேடி வருகின்றனர்.

    • கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.
    • சாராயம் விற்பனை செய்தவர்கள் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மொளசூர் கிராமத்தில் ஜெயலலிதா என்ற பெண் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக சாராயம் மற்றும் மது விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அந்த பகுதியில் சாராயம், அந்நிய மதுபானங்கள் விற்கக் கூடாது என ஊராட்சி மன்ற தலைவர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால்கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ஊருக்கு கட்டுப்பட்டு சாராயம் விற்க மாட்டேன் என பொதுமக்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிளியனூர் போலீஸ் நிலையத்திலும் ஜெயலலிதா எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இவர் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்படுகிறது.கடந்த வாரம் அதே பகுதியில் சாராயம் குடித்து கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக போலீசார் சாராயம் விற்பனை செய்தவர்கள்மற்றும் பல்வேறு நபர்களை கைது செய்து வருகின்றனர்.

    இதையடுத்து ஜெயலலி தாவை இன்று காலை திடீரென போலீசார் கைது செய்ய வந்தனர். ஊராட்சி மன்ற தலைவரும் பொதுமக்களும் ஜெயலலிதா சாராயம் விற்பனை செய்து பல ஆண்டுகள் ஆகிறது. போலீஸ் நிலையத்திலும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் சாராயம் விற்க மாட்டேன் என எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் அவரை கைது செய்யக்கூடாது என 50-க்கும் மேற்பட்ட .பொது மக்கள் போலீசாரை மறித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இதனால்,அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை விட்டால் தான் நாங்கள் இங்கிருந்து செல்வோம் என பொதுமக்கள் தெரிவித்ததன் பேரில் போலீசார் ஜெயலலிதாவை அங்கே விட்டு விட்டு சென்றனர்.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
    • கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    கொடைரோடு:

    தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சீமான் சிறப்புரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அக்கட்சி நிர்வாகிகள் வாகனங்களில் தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரு தனியார் பஸ்சில் தூத்துக்குடிக்கு சென்றனர். அவர்கள் இன்று காலை திண்டுக்கல் அடுத்துள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் வந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி கட்டணம் செலுத்துமாறு கூறினர்.

    அதற்கு எங்கள் கட்சி கொடியை பார்த்ததும் கட்டணம் கேட்பீர்களா என அவர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். கட்டணம் செலுத்தாமல் செல்ல முடியாது எனக்கூறி அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தினர். இதனால் அக்கட்சி நிர்வாகிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் பணிக்கு செல்லும் ஊழியர்களும், மற்ற வாகனங்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின.

    • பேனரை முன்னாடி வையுங்கள், யார் கிழித்து விடுவார் என்பதை பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார்.
    • இதனால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருந்து கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடத்தூர் தனி ஒன்றியமாக பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் கட்டுவதற்கு கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்பொழுது புதிய அலுவலகத்தினை நேற்று முதல்-அமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

    இந்த திறப்பு விழா நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க., தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்தனர். இதில் திறப்பு விழாவிற்காக அ.தி.மு.க. ஆட்சியில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டதால், அ.தி.மு.க.வினரும் ஒருபுறம் சாலையோரம் கட்சி கொடி கட்டியும், விளம்பர பதாகையும் வைத்திருந்தனர்.

    மேலும் தற்பொழுது முதல்-அமைச்சர் காணொளியில் திறப்பதால் தி.மு.க.வைச் சார்ந்தவர்களும் சாலையின் மறுபுறம் தி.மு.க. கொடி கட்டி, முதல்-அமைச்சர் படம் பொறித்த விளம்பர பதாகைகளை வைத்தனர்.

    இதில் அ.தி.மு.க. விளம்பர பதாகை முன்பு, தி.மு.க.வினர் விளம்பர பதாகை வைத்தனர். இதனால் அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் அ.தி.மு.க.வினரும், தி.மு.க.வினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்பொழுது அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதாலும், ஒன்றியக் குழு தலைவர் அ.தி.மு.க.வை சார்ந்தவர் என்பதால், நாங்கள் விளம்பர பதாகைகள் வைத்துள்ளோம் என தெரிவித்தனர். அதேபோல் முதல்-அமைச்சர் காணொளிக் காட்சியின் மூலம் திறப்பதால் நாங்கள் விளம்பர பதாகைகள் வைத்திருக்கிறோம் என தி.மு.க.வினரும் தெரிவித்தனர்.

    இதனையடுத்து இரு தரப்பினரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி சமரசப்படுத்தினர். ஒரு கட்டத்தில் தி.மு.க.வினர், அ.தி.மு.க. பேனர் வைத்தால் அதை கிழித்து விடுவதாக போலீசார் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் கோபம் அடைந்த காவல்துறையினர் பேனர் மீது கை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க.வினரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து அங்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து பேனரை முன்னாடி வையுங்கள், யார் கிழித்து விடுவார் என்பதை பார்க்கலாம் என ஆவேசமாக பேசினார். இதனால் சிறிது நேரம் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அலுவலகத்திற்கு அழைத்து சென்றார். இந்த சலசலப்பு நடந்த நேரத்திலேயே, மாவட்ட கலெக்டர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்செந்தில்குமார் அலுவலகத்திற்கு வந்தனர்.

    ஆனால் எல்லோரும் சலசலப்பு முடிந்த பிறகு அலுவலகத்திற்கு செல்வதற்குள்ளேயே, முதல்-அமைச்சர் வட்டார வளர்ச்சி அலுவலகங்களை காணொளி வாயிலாக திறந்து வைத்து விட்டார்.

    இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். தொடர்ந்து கடத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு விழாவில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் திறப்பு விழா முடியும் வரை அலுவலக வளாகம் பரபரப்பாகவே இருந்தது.

    • முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என வாக்குவாதம்.
    • இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பெருந்தோட்டம் கோடாலி தெருவை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன் இவரது வீட்டின் பின்புறம் தனக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியில் செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காக பெருந்தோட்டம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

    கடந்த சில நாட்களாக மண் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு மண் எடுக்கும் பொழுது மண்ணிற்கான முழு தொகையை வழங்காமல் ஏன் மண் எடுக்கிறீர்கள் என்று ராஜேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    வாக்குவாத முற்றியதால் ஆத்திரமடைந்த பணியாளர்கள் ராஜேந்தி ரனை மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளனராம். இதில் சுயநினைவிழந்து கீழே விழுந்த ராஜேந்திரன் அசைவற்று கிடந்துள்ளார்.

    இதனை அடுத்து பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் அவரது ஊழியர்கள் பின்னர் டிராக்டரை ஏற்றி விபத்து நடந்தது போல் உருவகத்தை ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    விவசாயி ராஜேந்திரன் வெகு நேரமாக வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் வயலின் பின் பகுதிக்கு சென்ற போது தான் உடல் நசுங்கி கொடூரமாக ராஜேந்திரன் இறந்து கிடப்பது தெரிய வந்தது.

    தகவல் இந்த திருவெண்காடு போலீசார் ராஜேந்திரனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர் பாஸ்கரன் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவரது பணியாளர்களை கைது செய்ய வேண்டும் என ராஜேந்திரன் உறவினர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் பெருந்தோட்டம் கிராமத்தில் பதற்றம் நிலவுவதால் திரளான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    ராஜேந்திரனை அடித்து கொலை செய்துவிட்டு டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது போல் சித்தரிப்பு செய்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாஸ்கரன் மற்றும் அவரது டிராக்டர் ஓட்டுநர் பாலா ஆகிய இருவரை திருவெண்காடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு அதிக அளவில் வேலை கொடுப்பதாகவும்,
    • தி.மு.க மற்றும் கூட்டணி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பேரூராட்சி மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.பென்னாகரம் பேரூராட்சியில் மட்டும் 18 வார்டுகள் உள்ளது. இதில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணியும், 6 வார்டுகளில் அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகள் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இக் கூட்டத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஊழியருக்கு அதிக அளவில் வேலை கொடுப்பதாகவும், மற்ற சமூகத்தைச் சார்ந்த ஊழியர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என சாதியை பெயரை சொல்லி மன்ற கூட்டத்தில் தி.மு.க.வைச் சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் பேசியதால், தி.மு.க மற்றும் கூட்டணி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக திமுக வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வார்டுகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கும் போது, அந்தப் பணிகளை செய்யக்கூடாது என அலுவலர்களை மிரட்டுவதாக தி.மு.க வார்டு உறுப்பினர்களே புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பென்னாகரம் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும் தொடர் புகார் எழுந்துள்ளது. பென்னாகரம் பேரூராட்சியில் சாதிய பெயரைச் சொல்லி கூட்டத்தில் பேசிய உறுப்பினர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, சக தி.மு.க வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பென்னாகரம், மே.3-

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பேரூராட்சி மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.பென்னாகரம் பேரூராட்சியில் மட்டும் 18 வார்டுகள் உள்ளது. இதில் 13 வார்டுகளில் தி.மு.க கூட்டணியும், 6 வார்டுகளில் அ.தி.மு.க உள்ளிட்ட பிற கட்சிகள் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இக் கூட்டத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த ஊழியருக்கு அதிக அளவில் வேலை கொடுப்பதாகவும், மற்ற சமூகத்தைச் சார்ந்த ஊழியர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என சாதியை பெயரை சொல்லி மன்ற கூட்டத்தில் தி.மு.க.வைச் சார்ந்த வார்டு உறுப்பினர் ஒருவர் பேசியதால், தி.மு.க மற்றும் கூட்டணி உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக திமுக வார்டு உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வார்டுகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகள் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கும் போது, அந்தப் பணிகளை செய்யக்கூடாது என அலுவலர்களை மிரட்டுவதாக தி.மு.க வார்டு உறுப்பினர்களே புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பென்னாகரம் பேரூராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்களிடம் தரக்குறைவாக பேசுவதாகவும் தொடர் புகார் எழுந்துள்ளது. பென்னாகரம் பேரூராட்சியில் சாதிய பெயரைச் சொல்லி கூட்டத்தில் பேசிய உறுப்பினர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, சக தி.மு.க வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொத்தமங்கலம் கிராமத்தில் சுமார்-5௦௦க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • மின்துறை ஊழியர்கள் அதைசரிசெய்வதற்கு அரசு பள்ளிக்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கொந்த மங்கலம் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு சாலைகளில் உள்ள மின்கம்பங்களின் வயர்கள் தாழ்வாக செல்கின           இது குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதே போலஅரசு பள்ளி வளாகத்தில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாகவும் பலமுறை புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மின் வயர் அருந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் உயிர்த்தப்பினர். இதுகுறித்து மின்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின் துறை ஊழியர்கள் அதை சரி செய்வதற்காக அரசு பள்ளிக்கு வந்தனர்.  மின் உயர் கீழே அறுந்து விழுந்ததை கேள்விப்பட்ட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மின் ஊழியர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். கொத்தமங்கலத்தில் பல்வேறு தெருகளில் உள்ள மின்கம்பங்களில் வயர்கள் தாழ்வாக உள்ளதை அதை சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்  .மேலும் பள்ளி மாணவர்கள் கூறுகையில், இந்த பள்ளியில் படிப்பதற்கே எங்களுக்கு பயமாக உள்ளது மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது எனவும், பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பலமுறை நாங்களும் எங்கள் பெற்றோரும் பள்ளி தலைமை ஆசிரியரிடமும், மின்துறை ஊழியர்களிடமும் கூறி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறினா ர்கள். எனவே, இதனை உடனடியாக மின்க ம்ப ங்களை மா ற்ற தேவை யான நடவ டிக்கை களை எடுக்க வே ண்டு மென கோரிக்கை விடுத்தனர்.

    • கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் 2பேரும் திருணம் செய்து கொண்டர்.
    • கணவன்-மனைவிக்கு இடைேய தகராறு ஏற்பட்டு வந்தது.

    கோவை,

    கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சர்மிளா (வயது 27). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர்.இந்தநிலையில் சர்மிளா அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

    இதனால் அவரது கணவருக்கு நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த சர்மிளா வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சர்மிளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம் மெலட்டூர் மேல தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 45). இவர் தஞ்சை கரந்தையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பம்ப் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் தஞ்சை வடக்கு வாசல் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (24) என்பவர் குடிபோதையில் பெட்ரோல் பங்கிற்கு வந்தார்.

    திடீரென அவர் போதையில் கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    வாக்குவாதம் முற்றி வெங்கடேஷ் ஆத்திரமடைந்து கத்தியால் கேசவனின் கையில் குத்தினார்.

    இதில் காயம் அடைந்த கேசவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கேசவன் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

    • 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர்.

    கடலூர்:

    பா.ம.க. நிறுவனர் மரு.ராமதாஸ் வரும் 21-ம் தேதி சென்னையில் துவங்கி, 28-ம் தேதி மதுரையில் நிறைவு செய்யும் வகையில் தமிழைத் தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்த உள்ளார். அரசியல் சார்பில்லாமல், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்காக கடலுார் வடக்கு மாவட்டம் பா.ம.க. சார்பில், மாவட்ட செயலாளர் ஜெகன் பல்வேறு இடங்களில் துண்டு பிரசுரங்களை வழங்கியும், சுவர் விளம்பரம் எழுதும் பணியையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், நேற்று, சென்னை கும்பகோணம் சாலையில் உள்ள வீராணம் நீரேற்றும் மையத்தின் சுவரில் விளம்பரம் எழுதுவதற்கான தீவிர பணியில் பா.ம.க.வினர் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த தி.மு.க.வினர் சிலர், வரும் 1 ஆம் தேதி முதல்வரின் பிறந்த நாள் வருகிறது. ஆகையினால் இங்கு எழுத வேண்டாம் என ஆட்சேபணை தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி சரக டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பா.ம.க. வடக்கு 

    ×