என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிவாரணம்"
- 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
- பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். மாரிமுத்து எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 151 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
முத்தூட் குழும சமூக பொறுப்பு திட்ட மேலாளர் ஜெயக்குமார் நலத்திட்டம் குறித்து பேசும்போது:-
முத்தூட் குழுமம் சமூக பொறுப்பு திட்டத்தின் மூலம் ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ உதவி, டயாலிசிஸ், கல்வி உதவி, விதவைகளின் பெண்கள் திருமண உதவி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதார உதவி மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட திருப்பாலி, சோலைக்குளம், நெய் குன்னம், நல்ல நாயகிபுரம் கிராமங்களில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழை விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2.13 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதில், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சுந்தர், மாவட்ட பேரிடர் ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகணபதி, முத்தூட் தஞ்சாவூர் கிளை மேலாளர் வினோத் ரமேஷ், கிளை மேலாளர் அகல்யா, கவுன்சிலர் வசந்த் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் பாலம் திட்ட அலுவலர் பரந்தாமன் நன்றி கூறினார்.
- சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
- வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பாடத்தில் ஈடுப்பட்டனர்.
சீர்காழி:
மயிலாடுதுறைமாவ ட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக குடியிருப்புகள் மற்றும் விளைநிலங்கள் முற்றிலு மாக தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது.
கனமழையால் பாதிக்கப்ப ட்ட அனைவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது அதன்படி சீர்காழி தரங்கம்பாடி பகுதியில் பொதுமக்களுக்கு ரூபாய் 1000 வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதை கண்டித்தும் கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் பாதிக்க ப்பட்ட விளைநிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 வழங்க கோரியும் கால்நடைகள் மற்றும் வீடுகள் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் அ.தி.மு.க.வின் ஆர்ப்பா டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் பவுன்ராஜ் தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாரதி, ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசே கரன், ரவிச்சந்திரன், நற்குணன், சிவக்குமார், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சருமான ஓஎஸ் மணியன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாமல்லன், திருமாறன், மனோகரன், ஏவி.மணி பார்த்தசாரதி, பேராசிரியர்ஜெயராமன், அஞ்சம்மாள், ரமாமணி, வழக்கறிஞர்கள் தியாகரா ஜன், பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த திருவாலி, நாராயணபுரம்,மங்கைமடம், புதுப்பட்டினம், வேட்டங்குடி ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் நேரில்பா ர்வையிட்டு பாதிப்பு குறித்து விசாயிகளிடம் கேட்டறிந்தார்.
எடமணல், வேட்டங்குடி, அகர வட்டாரம், புதுப் பட்டினம் ஆகிய பகுதிகளில் கனமழை பாதிப்பை பார்வையிட்டு புதுப்பட்டினத்தில் 300 குடும்பங்களுக்கு, அரிசி , சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,சீர்காழி பகுதியில் பெய்த44 சென்டிமீ ட்டர் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவசர கால நிவாரணம் வழங்க வேண்டும்.
தொடர் மழையால் வீடுகள், மீனவர்கள், இரால் குட்டைகள் அழிவு ஏற்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரண தொகை வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு 100 சதவீதம் காப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொகுப்பு வீடுகளுக்கு பதிலாக புதிய தொகுப்பு வீடு கட்டி தர வேண்டும்.
நியாய விலை கடை மூலம் பொது மக்களுக்கு பருப்பு,சர்க்கரை,கோதுமை இலவசமாக பொருட்கள் வழங்க வேண்டும்.
பழையார் துறைமுகத்தில் 300 விசைப்படைகள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் முடங்கியு ள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடரால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.
அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், மாவட்டத் தலைவர் சங்கர்,மாவட்ட இளைஞரணி தலைவர் வரதராஜன், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
- வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதார ண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வருபவர் மூதாட்டி நாகவள்ளி (வயது 68).
இவரது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
இந்த சூழலில் உடல் முழுவதும் ஊனமுற்ற மூளை வளர்ச்சி இல்லாத மாற்று திறனாளி மகன் 30 வயது நிரம்பிய பாலசுப்பி ரமணியனுடன் தனியாக ஒரு குடிசை வீட்டில் வருமானம் இன்றி தவித்து வருகிறார்.
இவர்கள் படும் கஷ்டம் குறித்த வீடியோ நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ்க்கு கிடைத்தது .
உடனடியாக தனது செல்போனில் வேதாரண்யம் வட்டார வளர்ச்சிஅலுவலர் தொடர்பு கொண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இலவச வீடு கட்டி கொடுக்க வேண்டிய ஆவணங்களை சரிபார்த்து உடன் வீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் துணை இயக்கு னர் சுகாதார பணிகள் தொடர்பு கொண்டு அந்த குடும்பத்திற்கு வேண்டிய அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவமனைக்கு அரசு செலவில் அழைத்து சென்று மருத்துவ உதவியும்மாற்று திறனாளிகள் நல அலுவலரிடமும் வேண்டிய பொருட்களை உடன் வழங்கவும் 5 மாதமாக நின்று போனமாத உதவித்தொகை வீட்டிற்கே ஒவ்வொரு மாதமும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்தார்.
உடனடியாக அனைத்து அரசு அதிகாரிகளும் நேரில் சென்று அனைத்து உதவிகளுக்கான பணிகளை யும் முழுவீச்சில் செய்து வருகின்றனர்.
திடீரென்று மாவட்ட கலெக்டர்வீட்டிற்கு நேரில் வந்து வீல் சேர்வாட்டர் பெட், 2 ஊன்றுகோல், மாற்று திறனாளி உதவிதொகைமற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.
மாற்றுத்திறனாளி 30 ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வந்த நிலையில் தகவல் கிடைத்தவுடன் 30 நிமிடத்தில் அனைத்து உதவிகளையும் செய்த கலெக்டர் அருண்தம்பராஜ் நேரில் சென்று அனைத்து உதவிகளையும் செய்தது ஆறுதல் கூறியது அந்த குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்தது. அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை பாராட்டி வருகின்ரனர்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர்ஜெயராஜ பெளலின், மாவட்ட மாற்றுதி றனாளி மாவட்டஅலுவலர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்புஅலுவலர் செய்வகுமார், வருவாய் ஆய்வாளர் மாதவன், கிராம நிர்வாக அலுவல ர்கனகசுந்தரம், சமூக ஆர்வலர் சிவகுமார் மற்றும் சுகதார துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
- சுந்தரமூர்த்தி என்பவரது குடிசை வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது.
- தீ விபத்து நடந்த இடத்தை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தாலுகா ராமாபுரம் சரகம் 35 திருவேதுகுடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது குடிசை வீடு எதிர்பாராத விதமாக தீப்பிடித்து எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்தது.
இந்த நிலையில் தீ விபத்து நடந்த இடத்தை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு சுந்தரமூர்த்திக்கு ஆறுதல் கூறினார். மேலும் அரசால் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்வில் தஞ்சாவூர் தாசில்தார் சக்திவேல், ராமாபுரம் சரக வருவாய் ஆய்வாளர் மற்றும் திருவேணிகுடி கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்.
- ரூ.1000 நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை.
- விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்க வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட த்தில் கடந்த 10-ம் மற்றும் 11ம் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரு லட்சம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. பல்லாயிரம் குடியிருப்புகள் தண்ணீரில் தத்தளித்தது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி, இரண்டு தாலுகாவுக்கு மட்டும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் நிவாரணம் வழங்க வேண்டும் வெறும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது உயர்ந்து வரும் விலைவாசிகளுக்கு ஏற்ப சரியான தொகையில்லை. நிவாரணத்தை வீடுகளுக்கு பத்தாயிரம் ரூபாயாகவும் விவசாய நிலங்களுக்கு ஹெக்டேருக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும் வழங்க வேண்டும்.
என வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம், டெல்டா விவசா யிகள் பாசனதாரர் சங்கம், வீரசோழன் விவசா யிகள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள், விவசாயிகள் பங்கேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுப ட்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தின் எதிரே கண்டன கோஷங்க ளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் ஊர்வலமாக மனு அளிக்க சென்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜி விவசாயிகளிடம் மாவட்ட கலெக்டர் அலுவலக வாசலில் வைத்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
- 250 பேருக்கு உணவு பொருட்கள், அரிசி, காய்கறி, பிஸ்கட், மற்றும் நிதி உதவி வழங்கினார்.
- நிழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜய ரெங்கன் தலைமை வகித்தார்.
சீர்காழி:
சீர்காழி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை நீர் வீடுகளை சூழ்ந்து, பாதிக்கப்பட்ட பனங்காட்டு தெரு இணாம் குனதலப்பாடி, எலுமிச்சங்குடி, மேல தெரு திருநகரி அம்பேத்கர் நகர், உள்ளிட்ட பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வர்த்தக அணி மாநில துணை செயலாளர் விஜய ரெங்கன் தலைமை வகித்து பாதிக்கப்பட்ட 250 பேருக்கு உணவு பொருட்கள், அரிசி, காய்கறி, பிஸ்கட், மற்றும் நிதி உதவி வழங்கினார்.
மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ரஹூப் நிர்வாகிகள் சிவா, யுவராஜ், ஆசிரியர்கள் பிரபு, தமிழரசன், ராஜா, ரஞ்சித் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாலதி மின்னல் தாக்கி உயிரிழந்தார்
- தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (வயது 47) கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயப் பணியை முடித்துவிட்டு மார்த்தா ண்டம்பட்டி கிராமத்திற்கு இடையே பாலத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பலத்த சத்தத்துடன் மின்னல் தாக்கியது.இதில் மாலதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் அறிந்த நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று மார்க்கண்ேடயன் எம்.எல்.ஏ. குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் கீதாஜீவன், மார்கண்டேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் அவரது வீட்டிற்கு நேரில் சென்று உயிரிழந்த மாலதி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும் தமிழக அரசின் நிவாரண நிதி ரூ.4 லட்சத்திற்க்கான காசோலையை வழங்கினர்.
குடும்பத்தார் தரப்பிலும் தனது மகள்களுக்கு அரசு வேலை வழங்கிட கோரிக்கை விடுத்தனர்.
உயிரிழந்த மாலதிக்கு தங்கப்பிரகாஷ் (24) என்ற மகனும், தங்கமாரி (22), கன்னிகா (18) என்ற 2மகள்களும் உள்ளனர்.
நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டா ட்சியர் மகா லட்சுமி, விளா த்தி குளம் வட்டாட்சியர் சசிக்குமார், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்புராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் நகர செயலாளர்
வேலுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானகுருசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், மார்த்தா ண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முனியம்மாள் முத்து கரும்புலி, குளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 40 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம்.
- விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழை நிவாரணம் ரூ. 10ஆயிரம்.
சீர்காழி:
கனமழை பாதித்த சீர்காழி பகுதியை தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது, கனமழையால் சீர்காழி வட்டாரத்தில் 40ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி நேரடி, விதைப்பு பயிர்கள் முற்றிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.2021 - 22 பயிர்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் நிவாரண தொகை வழங்குவதுடன் 100சதவீதம் மானியத்தில் உரம் வழங்கிடவேண்டும்.
2022 - 23 பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கிடைத்திட உத்திரவாதம் அளித்திடவேண்டும்.சிறப்பு திட்டத்தின்கீழ் அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்திடவேண்டும், விவசாய தொழிலாளர்கள் ஏழை குடும்பங்களுக்கு மழைநிவாரணம் ரூ.10ஆயிரம் வழங்கிடவேண்டும், மழையால் சேதம்அடைந்த கிராமப்புற, நகர்புற சாலைகளை உடனடியாக செப்பனிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
- குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது.
நாகப்பட்டினம்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான குத்தகை நிலங்களை அப்பகுதி விவசாயிகள் பரம்பரையாக சாகுபடி செய்து வருகின்றனர்.
பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சாகுபடி செய்த பயிர் பாதித்து உரிய குத்தகை செலுத்த முடியாத சூழலில் அரசு கடன் தள்ளுபடி, நிவாரணம் போன்ற உதவிகளால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்,விவசாயிகள் கோவில் நிர்வாகத்திடம் குத்தகை செலுத்தி வரும் நிலையில் திடீரென அறநிலையத்துறை அதிகாரிகள் நவம்பர் 18-ம் தேதி ஏலம் விடப்படுவதாக பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராசு,
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர், மற்றும் தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்டோர் நாகை இந்து சமய அற நிலையத்துறை இணை ஆணையரை சந்தித்து நேரில் நிலத்தை ஏலம் விடும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைள் அடங்கிய மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாகை எம்.பி. செல்வராசு கூறுகையில்; குத்தகையை முடிந்த அளவுக்கு கட்டுவதற்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், தற்சமயம் சாகுபடி செய்து வரும் நிலத்தை குத்தகை தொகையை கேட்டு பெறாமல் திடீரென ஏலம் அறிவித்திருப்பது குத்தகை உரிமை சட்டடத்திற்கு எதிரானது என்று கூறினார்.
எனவே, தமிழக அரசு தலையிட்டு ஏலத்தை தடுத்து நிறுத்தி உரிய குத்தகை பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நாகை எம்.பி. செல்வராசு கோரிக்கை வைத்துள்ளார்.
- பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் அழுகும் நிலை.
- பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.
மெலட்டூர்:
கொத்தங்குடி அருகே தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், துணை இயக்குனர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கொத்தங்குடி அருகே உள்ள உதாரமங்களம் பகுதியில் சம்பா பருவத்தில் தெளிப்பு மற்றும் நடவு செய்திருந்த சம்பா பயிர்கள் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி பல நூறு ஏக்கரில் நடவு செய்திருந்த சம்பா நாற்றுகள் முற்றிலும் அழுகி போகும் அபாய நிலை ஏற்பட்டது.
இது குறித்த செய்தி மாலைமலரில் செய்தி வெளிவந்திருந்தது.
இதன் எதிரொலியாக மத்திய வேளாண்மை கூடுதல் இயக்குனர் மத்திய திட்டம், சென்னை, துணை இயக்குனர்ஆ கியோர் தலைமையிலான வேளாண்மைத்துறை உயர்அதிகாரிகள் உதா ரமங்கலம் பகுதிக்கு விரைந்தனர்.
அங்கு தொடர் மழையினால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை நேரில் பார்வையிட்டனர்அப்போது விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை கணக்கீட்டு நிவாரனம் வழங்க வேண்டு மென வலியுறுத்தினர்.
உடன் கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, மற்றும் உரங்கள் சென்னை, தஞ்சை வேளாண்துறை இணை இயக்குனர், துணை இயக்குனர் உள்பட வேளாண்மைதுறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- விடுதலை செய்யப்பட்ட 7 பேருக்கும் தலா ரூ.50 லட்சம் நிவாரண தொகையை அரசு வழங்க வேண்டும் என்று அ.தி.ம.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
- 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மதுரை
அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்று 31 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின் 7 தமிழர்களும் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள், இதனை உலகத் தமிழினமே கொ ண்டாடி மகிழ்கிறது,
7தமிழர்களின் விடுதலைக்காக மனித நேய ஆர்வலர்கள், அனைத்து தரப்பு மக்களும் போராடி இருக்கிறார்கள். அவர் களுக்காக அ.தி.ம.மு.க. சார்பில் என் நெஞ் சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,
முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 7தமிழர்களின் விடுதலையை சட்டப் போராட்டம் மூலம் நிறை வேற்றி இருக்கும் திமுக அரசை பாராட்டுகிறோம்.
இந்நிலையில் 32 ஆண்டு களாக இளமையையும், வளமையையும் சிறையி லேயே கழித்து விட்டு வெளியில் வந்திருப்ப வர்களுக்கு இளமையை நம்மால் திரும்பித் தர முடியாது, வளமையை நம்மால் உருவாக்க முடியும், இவர்களின் எதிர்கால நலன் கருதி 7பேருக்கும் தலா 50 லட்ச ரூபாய் நிதி அளித்திட தமிழக அரசையும், முதல்வரையும் கேட்டுக்கொள்கிறேன்,
தமிழகத்திலேயே 7 பேரும் வாழ விரும்பினால் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி இந்திய குடிமகன்களாக வாழ சட்ட வழிவகை செய்திட மாநில அரசை கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்