என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 187529"
- கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும்.
- ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
கட்டுமான தொழிலாளர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கியது போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க வேண்டும், விசாரணை என்ற பெயரில் ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் சின்னையன் தலைமை தாங்கினார். சி.டபிள்யூ.எப்.ஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, பொருளாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் , மாவட்ட தலைவர் கண்ணன், பொருளாளர் பேரிநீதிஆழ்வார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தராஜூ, ராஜாராமன், முருகேசன், அன்பு, வீரையன், பாலமுருகன், ராஜா, மில்லர்பிரபு, பவாணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மழைக்கால நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது.
- மண்பாண்ட தொழிலாளர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள கொள்ளிடம், திருமயிலாடி, ஆச்சாள்புரம், வேட்டங்குடி, மாதிர வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் பொங்கல் பானை, சட்டி உள்ளிட்ட மண் பாண்டங்கள் செய்து அதை சுடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமத்தை சேர்ந்த நெடுஞ்சாலைதுறையில் பணிபுரிந்து வரும் மாரிமுத்து என்பவரின் மகன் ஏரோநாட்டிகல் பட்டதாரியான துளசேந்திரன் கூறும்போது,
மண்பாண்டங்களை பயன்படுத்தி அதில் சமைத்து உண்பதன் மூலம் உடலுக்கு நல்ல ஆரோக்கியத் தன்மை உருவாகிறது. நமது பாரம்பரிய தொழிலாக இருந்து வந்த இந்த மண்பாண்ட தொழில் கடந்த 15 ஆணடுகளில் நசிந்து வருகிறது.
சில்வர் மற்றும் அலுமினியம் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்கள் எளிதில் கிடைப்பதாக நினைத்து அதனை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
மண்பானை செய்து, அதனை சூலையில் வைத்து சுடுவதற்கு மூல மூலப் பொருட்களான வைக்கோல், வராட்டி, தென்னை மட்டை போன்ற பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
மழைக்கால நிவாரனமாக ரூ.5000 வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இந்த நிவாரணம் போதாத நிலையில் அதை உயர்த்தி 10 ஆயிரமாக வழங்கவேண்டும். பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே மண்பாண்ட தொழிலாளர்களிடம் மண்பானை, அடுப்பு, சட்டி உள்ளிட்ட பொருட்களை உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்து அதனை அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலை கடைகள் மூலமும், கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலை கடைகள் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்.
தற்போது தமிழகத்திலேயே எங்களைப் போன்ற மண்பாண்ட தொழிலாளர்கள் 12000 பேர் மட்டுமே நிவாரணம் பெற்று வருகின்றனர். மீதமுள்ள அனைவரையும் கணக்கெ டுப்பு செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.
- மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா வேதாரண்யத்தில் நடைபெற்றது. விழாவிற்கு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு தலைவர் வீரசுந்தரம் தலைமை தாங்கினார்.
துணை தலைவர் சாமிநாதன் கந்தசாமி, அமைப்பு செயலாளர் வைரக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இணை செயலாளர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் மணவழகன், வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் செல்வராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி நுகர்வோர் வினாடி- வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
கூட்டத்தில் வேதாரண்யத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, வேதாரண்யம், ஆயக்காரன்புலம், வாய்மேடு வரையிலான பஸ் வழித்தடத்தில் மகளிர் நலன் கருதி இலவச பஸ் இயக்க வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை அரசு உடனே வழங்க வேண்டும்.
மானங்கொண்டான் ஆற்றில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் பொருளாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
- மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள டிப்போ முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- இதில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மதுரை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (29-ந் தேதி) அரசை கண்டித்து மறியல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று காலை மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு அந்த அமைப்பை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் அலுவலகம் முன்புள்ள மெயின் ரோட்டில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
மாநில தலைவர் கிருஷ்ணன், துணை பொது செயலாளர் தேவராஜ், அனைத்து துறை ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் பிச்சைராஜன், மாவட்ட செயலாளர் பால்முருகன் உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் பங்கேற்றவர்கள் பதாகைகளை ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மாதந்தோறும் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 86 மாத அகவிலைப்படி உயர்வு தொகை நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மறியல் காரணமாக இன்று காலை பைபாஸ் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நின்றன.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது விபரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- தொழிலாளர் நலத்துறை வலியுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை
தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படியும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி ஆலோசனை படியும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வெளிமாநில அல்லது புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்களை Labour.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இதனை பதிவு செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொ ள்ளப்படுகிறது. மேலும் சந்தேகங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் 04562-252130 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
- அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
- புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
அனுப்பர்பாளையம், டிச. 22 -
திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 200- க்கும் மேற்பட்ட எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. அங்கு பாத்திர தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாத்திரத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
இதன் முடிவில் எவர்சில்வர் வகை பாத்திரத்திற்கு 50 சதவிகிதமும், பித்தளை, தாமிரம், வார்பு பொருட்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் ஊதிய உயர்வு கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து எவர்சில்வர் பாத்திரப் பட்டறைதாரர் சங்கத்திற்கும், பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும் கோரிக்கைக்கடிதம் அனுப்புவது என்றும், தொழிலாளர் துறைக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
- வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூர் :
விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.
சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .
- இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் ரெயில் நிலையத்தில் சரக்கு ரெயில்கள் நிற்கும் இடங்களில் பிளாட்பாரம் இல்லாததால் சரக்குகளை ஏற்றி , இறக்குவதில் சிரமம் ஏற்படுவதாகவும் , அதனால் சமதளமாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் , கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிதண்ணீர் மற்றும் கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் .
அடையாள அட்டையை உடனடியாக வழங்க வேண்டும் , இஎஸ்ஐ, பிஎப் மற்றும் சட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி வழங்க வேண்டும் , வேலை நேரத்தை அதிகப்படுத்தக் கூடாது , சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ெரயில்வே கூட்செட் சுமைப்பணி தொழிலாளர்கள் ெரயில்வே கூட்செட் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும்.
- எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லடம் :
பல்லடத்தில், அனைத்துக் கட்சி கூட்டம் தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க.மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். இதில் பல்லடத்தில் தொழிலாளர்களை ஏமாற்றும் நிறுவனம், நகராட்சி எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கூட்டம் துவங்கிய போது இது எரிவாயு தகன மேடை அமைப்பது குறித்த ஆதரவுக் கூட்டம். இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள் வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க, பா.ம.க., இந்து முன்னணி, கிளை நிர்வாகிகள் எழுந்து வெளி நடப்பு செய்தனர். இது குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அழைத்துவிட்டு, எரிவாயு தகன மேடை ஆதரவுக் கூட்டம் என்று அறிவிப்பது முறையில்லாத செயல், அப்படி இருந்தால் முன்னரே எரிவாயு தகன மேடை ஆதரவு கூட்டம் என்று எங்களிடம் சொல்லி இருந்தால், நாங்கள் வந்திருக்க மாட்டோம், என அவர்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அரசியல் கட்சியினர் பேசுகையில், பல்லடம் பகுதிக்கு எரிவாயு தகன மேடை வேண்டும், மக்களின் ஒத்துழைப்போடு அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் எதிர்க்கிறார்கள் என அவர்களிடம் விளக்கம் கேட்டு,எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து எரிவாயு தகனமேடை அமைக்கவும், தொழிலாளர்களுக்கு, விரோதமாக செயல்படும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டரை சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
- ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி.
- 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு மற்றும் ஜாம்புவானோடை கிராமங்களில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் பனைவிதை நடும் பணி நடைபெற்றது.
இதை தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமையில் மாநில தலைவர் வழக்கறிஞர் சிறுகளத்தூர் ஜெய்சங்கர் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.
இதில் ஆலங்காடு கோட்டகம், குளக்கரை ஆற்றங்கரையோரம் மற்றும் ஜாம்புவானோடை கந்தபரிச்சான் ஆற்றங்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட பனை விதைகள் விவசாய தொழிலாளர்கள் மூலம் நடப்பட்டது.
இதில் ஆலங்காடு கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற தலைவர் பிரவீன்குமார், ஜாம்புவானோடை கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் ராமஜெயம், சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இருதயராஜ், கோட்டூர் ஒன்றிய தலைவர் நடராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- கேரளாவில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும்.
- அடையாள அட்டை வழங்க வேண்டும்
நாகர்கோவில்:
தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரளா வில் இருப்பது போன்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அடை யாள அட்டை வழங்க வேண்டும் என்பது உட்பட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு இன்று கண்டன ஆர்ப்பா ட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கி னார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகனன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பொன் சோபன ராஜ், மாநில குழு உறுப்பினர்கள் இந்திரா, சித்ரா மற்றும் நிர்வாகிகள் நாகராஜன், பொன் சுந்தர், மாரிமுத்து, பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.
- திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி யுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலை நேரங்களில் வானம் மேக மூட்டத்துடன் மப்பும் மந்தாரமுமாக காணப்படும்.
பின்னர் மாலை நேரங் களில் வனத்தில் கருமே கங்கள் சூழ்ந்து மழை பெய்யத்தொடங்குகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகப்படியான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது.
இதனால் அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் பிரதான அணையான பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
திருவட்டார், குலசேக ரம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, திற்பரப்பு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உயர்தரமான ரப்பர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.தற்போது தொடர் மழை பெய்து வருவதால் ரப்பர் மரத்தில் இருந்து பால் வடிக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்ப டுகிறார்கள். ரப்பர் உற்பத்தி செய்யும் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் செங்கல் சூளை அதிக அளவில் உள்ளன. இந்த தொடர் மழையால் குழித்துறை, ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்