search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்லைன்"

    • தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது.
    • வருகிற 23-ந் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

    நாமக்கல்:

    மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தன்ராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாலையோரம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நிறுத்தப்பட்டு இருக்கு வாகனங்களுக்கும், சாலைகளின் முறையாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களுக்கும் வாகன பதிவு எண்ணை மட்டும் குறிப்பிட்டு போலீசார் மற்றும் போக்குவரத்துறை அதிகாரிகள் ஆன்லைனில் அபராதம் விதிக்கின்றனர்.

    அதில் என்ன குற்றம் என தெரிவிக்காமல் பொதுவான குற்றம் என கூறி அபராதம் விதிக்கின்றனர். ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்க ளுக்கும் தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை, தலைக்கவசம் அணிய

    வில்லை உள்ளிட்ட முரணான காரணங்க ளுக்காக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

    இவ்வாறு விதிக்கப்படும் அபராதங்கள் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் வாகனத்துக்கான காலாண்டு வரை தகுதி சான்றிதழ் உரிமை பெறும்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி அனைத்து

    மாவட்ட தலைநகரங்களில், அந்தந்த லாரி உரிமையா ளர்கள் சங்கங்கள் சார்பில் எஸ்.பி மற்றும் மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், போக்குவரத்து ஆணையர், டி.ஜி.பி ஆகியோருக்கும் ஈமெயில் மூலம் மனு அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்
    • வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் நில புரோக்கர் சேவியர் பாபு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கொலையாளி சுபின் என்பவரை கைது செய்தனர். அவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும், உணவு கொண்டு செல்லும் பையில் கத்தி வைத்திருந்த தும் தெரிய வந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு விநியோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பாக அவர்களை வரவழைத்து அறிவுரையும் வழங்கினார்.

    உணவு விநியோகிக்கும் பணியை செய்பவர்கள், மக்களுடன் நேரடி தொடர்பு வைக்கிறார்கள். எனவே பொறுப்புடன் செயல்பட வேண்டும். வேலைக்கு சேர்க்கும் போது நன்னடத்தை சான்றி தழ்களை நிறுவனங்கள் பெற வேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டிச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தெரிவித்தார். இதேபோல் உணவு விநியோகிக்கும் ஊழியர்கள், தங்களுக்கு உள்ள பிரச்சினைகளை போலீசாரிடம் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

    • ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன.

    புதுடெல்லி:

    ரெயில் டிக்கெட்டுகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

    அதில், "ரெயில்வே சேவைகள் மற்றும் தரவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிஜிட்டல் முன்னெடுப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு ஊடகங்கள் மூலம் ஊரக மற்றும் கிராமப்புறங்களில் வழக்கமான முகாம்கள் நடத்தப்படுகிறது.

    ரெயில் பயணச்சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. முன்பதிவு மற்றும் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகளை பெறுவதற்கு பல்வேறு தளங்களில் மொபைல் செயலிகள் உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • 2 செல்போன்கள், ரூ.13ஆயிரம் பறிமுதல்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் ஆன்லைன் மூலம் கேரளா மற்றும் பூட்டான் மாநில லாட்டரிகள் விற்பனை செய்து பணம் வசூலித்து வருவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    அதில் அவர் முகமது அசாருதீன் (வயது 23) என்பதும், தூத்துக்குடி பிரைன் நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர் ஆன்லைன் லாட்டரிகளை விற்றது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை கைது செய்தனர். அவர் ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் ரூ.13 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆன்லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடாமல் பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஆன்லைன் மூலமாக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆன்லைன் மோசடி தொடர்பாக கொடுக் கப்பட்ட புகாரின் அடிப்ப டையில் போலீசார் விசாரித்து 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 பணத்தை மீட்டு இன்று அவர்களிடம் ஒப்ப டைத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதை உரியவர்களிடம் வழங்கி னார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி ஜிபே, போன் பே மூலமாக மோசடி என பல மோசடிகள் தொடர்பாக புகார்கள் வருகிறது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் 24 மணி நேரத்தில் புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

    சைபர் கிரைம் போலீசார் இந்த ஆண்டு 27 வழக்குகளில் 21 குற்ற வாளிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    ஆன்லைனில் பணம் கொடுத்து ஏமாந்த 41 பேருக்கு ரூ.31 லட்சத்து 69 ஆயிரத்து 843 ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இன்டர் நெட் மற்றும் ஆன் லைனில் கவர்ச்சியாக பேசும் நபர்களை கண்டு ஏமாந்து விடக்கூடாது. பொதுமக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், நான் ஜி பே மூலமாக உறவினர் ஒருவருக்கு பணம் அனுப்பி னேன். ஆனால் ஜி பேயில் ஒரு எண்ணை தவறுதலாக மாற்றி அனுப்பியதால் பணம் வேறு நபருக்கு சென்று விட்டது. இது தொடர்பாக நான் பலமுறை அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் அந்த பணத்தை தருவதற்கு காலதாமதப்படுத்தினார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தேன். புகார் அளித்த ஒரு வாரத்தில் போலீசார் எனது பணத்தை மீட்டுத் தந்து விட்டனர் என்றார் .

    மேலும் ஒருவர் கூறுகை யில், எனது மகளின் வேலைக்காக பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்தோம். பணம் அனுப்பிய பிறகு அந்த நபர் எங்களுடனான தொடர்பை துண்டித்தார். வேலையும் தரவில்லை. பணத்தையும் தரவில்லை. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தோம்.

    போலீசார் நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தந்துள்ளனர். துரித நடவ டிக்கை எடுத்த அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம்.
    • மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    திருப்பூர் :

    மின் கட்டண உயர்வு அமலான நிலையில், இரண்டாயிரம் ரூபாய்க்கு அதிகமான பரிவர்த்தனையை, 'ஆன்லைன...வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    புதிய நடைமுறைப்படி வரும் 19ம் தேதி முதல், 2,000 ரூபாய் வரையிலான கட்டணத்தை, வசூல் மையத்தில் செலுத்தலாம். அதற்கு அதிகமான தொகையை, ரொக்கமாக செலுத்த முடியாது.ஆன்லைன் பரிவர்த்தனை வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

    • பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார்.
    • ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை.

    மதுரை:

    அரசின் சேவைகளை பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில் பல துறைகளின் சேவைகள் ஆன்லைன் முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

    குறிப்பாக சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் முழுமையாக ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன. உள்ளாட்சி துறை மூலம் வழங்கப்படும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை www.crstn.org என்ற இணையதளத்தில் இருந்து பொதுமக்கள் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.

    அதேபோல் வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சாதி, வாரிசுதாரர், இருப்பிடம், வருமானம் உள்பட பல்வேறு சான்றிதழ்களை பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இது தவிர https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுமக்கள் நேரிடையாக விண்ணப்பம் செய்யலாம்.

    இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பம் செய்யும் வசதியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்படி பொதுமக்கள் எளிதாக பட்டா மாறுதலுக்கு வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம்.

    பட்டா மாறுதலை பொறுத்தவரை உட்பிரிவற்ற பட்டா மாறுதல், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என இருவகை உள்ளது. ஒருவர் தன்னுடைய பட்டாவில் உள்ள முழு நிலத்தை, முழுவதுமாக ஒருவருக்கு விற்பனை செய்தால், அது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் ஆகும். அதுவே அந்த நிலத்தை பகுதி, பகுதியாக பிரித்து விற்பனை செய்தால் உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.

    தற்போது ஒருவர் பத்திரம் பதியும் போது உட்பிரிவு இல்லாத நிலங்கள் அனைத்திற்கும், பத்திரப்பதிவு துறையில் இருந்து வருவாய் துறைக்கு குறிப்பு அனுப்பப்பட்டு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படுகிறது. உட்பிரிவு இனங்களுக்கு பொதுமக்கள் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதே போல் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட உட்பிரிவு இல்லாத இனங்களுக்கும் இ-சேவை மையம் மூலமே விண்ணப்பிக்கும் நிலை இருந்தது. இ-சேவை மையம் மூலம் பொதுமக்கள் பட்டா விண்ணப்பம் செய்வதற்கு கால விரயம் ஏற்படுகிறது. சரியான ஆவணங்கள் அங்கு கொண்டு செல்லாவிட்டால், சில நேரங்கள் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய ஒரு நாள் கூட ஆகிவிடுகிறது.

    இந்த நிலையில் தான் தமிழக அரசு, பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்ய www.tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த இணையதளத்தின் மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே மனு செய்யலாம். இந்த இணையதளத்திற்கு சென்றவுடன்முதலில் உங்களது பெயர், செல்போன் எண், இ-மெயில் முகவரியை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அதன்பின் பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டியது உட்பிரிவற்ற பட்டா மாறுதல் அல்லது உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் என்பதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் உங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து நிலத்தின் விவரங்களை குறிப்பிட வேண்டும். அது எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே நம்பர் மற்றும் சப்-டிவிஷன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து இந்த நிலம் உங்களுக்கு சொந்தமானதற்கு என்பதற்கான சான்றாக கிரைய பத்திரம் உள்பட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இறுதியாக உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு வரிகள் இல்லாமல் ரூ.60-ம், உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதலுக்கு ரூ.460-ம் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின் உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்படும். அவர் மூலம் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்வார்கள்.

    ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் வசதி செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இ-சேவை மையத்திற்கும், தாலுகா அலுவலகத்திற்கும் அலைய தேவையில்லை. சரியான ஆவணங்களை வழங்குவதால், உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்படும். சரியான காரணங் கள் இல்லாமல், உங்களது மனு திருப்பி அனுப்படமாட்டாது. எனவே லஞ்சம் கொடுப்பதும் தடுக்கப்படுகிறது.

    பட்டா மாறுதலுக்கான ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    1. கிரையப் பத்திரம்.

    2. செட்டில்மெண்ட் பத்திரம்

    3. பாகப்பிரிவினை பத்திரம்

    4. தானப்பத்திரம்

    5. பரிவர்த்தணை பத்திரம்

    6. விடுதலை பத்திரம்

    இதர ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை

    குடியிருப்பு ஆவணங்கள்

    (ஏதாவது ஒன்று)

    ஆதார் அட்டை, தொலைப்பேசி ரசீது,

    மின் கட்டணம், சமையல் எரிவாயு ரசீது, பாஸ்போர்ட்,

    வாக்காளர் அடையாள அட்டை.

    • ஆன்லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன
    • சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர்

    நாகர்கோவில் :

    நாடு முழுவதும் ஆன் லைன் மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலால் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். பணத்தை இழந்த சிலர் தங்கள் உயிரை விட்டுள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசார் அவ்வப்போது சில மோசடி கும்பலை கைது செய்தாலும், மோசடிகள் நின்ற பாடில்லை. இதில் ஆன் லைன் மூலம் வேலை தருவதாக கூறி வாலிபர்களிடம் பணம் பறிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன. இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் மும்பையை சேர்ந்த ராஜா என்பவர் மலேசியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

    இவர் மும்பை, மலேசியா, நாகர்கோவில் போன்ற பல்வேறு பகுதிகளில் ஒரு கும்பலை வைத்து ஆன்லைன் மூலம் வேலை வழங்குவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்ததும், இதில் ஈடுபட்ட ஒருவர் நாகர்கோவில் அருகே உள்ள பூதப்பாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட திட்டுவிளைவு பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் சாரோன் (வயது 30) என்பதும் தெரியவந்தது.

    அவர் தற்போது சொந்த ஊரில் இருப்பதை அறிந்த மும்பை சைபர் கிரைம் சி.ஐ.டி. ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் போலீ சார் கொண்ட குழுவினர், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசாரின் துணையுடன் திட்டுவிளை குருசடி வந்தனர்.

    அங்கு வீட்டில் இருந்த பிரின்ஸ் சாரோனிடம் விசாரணை நடத்தியதில் மோசடியில் அவருக்கு பங்கு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து சுமார் 100 சிம் கார்டுகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்ட பிரின்ஸ் சாரோனை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட தால் நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்கு பிறகு அவரை விசாரணைக்காக போலீசார் மும்பை அழைத்துச் செல்ல உள்ளனர்.

    100 சிம் கார்டுகள் வைத்திருந்தது ஏன் என்பது பற்றி பிரின்ஸ் சாரோனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

    ஆன்லைன் வேலை என்ற பெயரில் பெயரளவில் நேர்முகத் தேர்வு நடத்தி வேலையில் சேர்த்துக் கொள்வதாக கூறுவது வழக்கம். பின்னர் சம்பளம் தர வேண்டுமெனில் டெபாசிட் தொகை தேவை எனக்கூறி ஆயிரக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர். மேலும் வேலைக்கு டெபாசிட் தொகை என்ற பெயரிலும் பணம் பெற்றுள்ளனர். அதன் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது.அதன் பின்னர்தங்களது சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பயன்படுத்தி மற்றொரு மோசடியில் ஈடுபடுவது உண்டு. இதனால் தான் 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் அவனிடம் இருந்துள்ளது.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • சேலம் மாவட்டத்தை சேர்ந்த அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
    • 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    சேலம்:

    சேலம் தொழிலாளர் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை ஒருங்கிணைக்க அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவுதளம் என்ற ஒரு தரவுதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

    இந்த தரவு தளத்தல் கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வீட்டுப்பணியாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங் செய்வோர், தச்சு வேலை செய்வோர், கல் குவாரி தொழிலாளர்கள், மர ஆலைத்தொழிலாளர்கள், உள்ளூர் கூலித் தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின கீழ் பணிபுரியும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 156 வகையான இ.எஸ்.ஐ., பி.எப், பிடித்தம் செய்யப்படாத அமைப்புச்சாரா தொழிலாளர்கள் தங்களின் விவரங்களை பதிவு செய்யலாம்.

    அனைத்து பொது சேவை மையங்களிலும் மற்றும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. https://eshram.gov.in என்ற இணைதளத்தில் தொழிலாளர்கள் சுயமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்துத் தொழிலாளர்களும் இத்தரவுதளத்தின் கீழ் பதிவு செய்ய வழிவகை உண்டு.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஹெல்மெட் அணியாததால் ஆன்லைன் மூலம் 16 நாட்களில் ரூ.10 லட்சம் அபராதம் விதிப்பு துணை கமிஷனர் மாடசாமி தகவல் தெரிவித்தார்.
    • கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் வாகன விபத்தை தடுக்கும் வகையில் சேலம் வடக்கு பகுதிக்கு உட்பட்ட ஏ.வி.ஆர், 5 ரோடு,சேலம் தெற்கு பகுதிக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி, கலெக்டர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இதில் இருச்சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை பிடித்து அவர்களுக்கு முகாமில் வைத்து விபத்து வீடியோ மற்றும் அறிவுரை வழங்கப்பட்டது. 16 நாட்கள் நடத்த இந்த சிறப்பு முகாமில் 10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ஒரே ஒரு வாலிபர் மட்டும் ஹெல்மெட், ஓவர் ஸ்பீடு மூலம் ஒரு ஆண்டில் 120 முறை ஆட்டோமெட்டிங் கேமரா மூலம் ரூ.12 ஆயிரத்து 900 கட்டி உள்ளார். முதல் தடவை அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

    எனவே பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து போலீசாருக்கு ஒத்துழைப்பு தருமாறு துணை கமிஷனர் மாடசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆன்லைனில் மட்டுமே உரிய தொகையை செலுத்தி விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    பேராவூரணி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.தனராஜன் வெளியிட்டுள்ள செய்திகு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகள் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல் ஆகிய கலைப் பிரிவுகளுக்கும், கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல் ஆகிய அறிவியல் பிரிவுக ளுக்கும் விரைவில்மாணவர் சேர்க்கை நடைபெறவு ள்ளது.

    இதற்கான விண்ணப்பம் கல்லூரியில் நேரடியாக வழங்கப்பட மாட்டாது. தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளங்கள் வழி விண்ணப்பிக்க வேண்டும். www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையத்தில் ஜூலை 7 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.எஸ்.சி, எஸ்.டி மாணவ ர்கள் பதிவுக் கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். பிற மாணவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.50 ஆகும். ஆன்லைன் மூலம் மட்டுமே உரிய தொகையை செலுத்த முடியும். மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் மிக முக்கியம்.

    மேற்கொண்டு விண்ணப்பம் பதிய மாண வரின் சாதி சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும் விவரம்அறிய விரும்புவோர் பேராவூரணி அரசுக் கல்லூரியில் இயங்கும் மாணவர் சேர்க்கை உதவி மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழியை அடுத்த குன்னம் மற்றும் பாலுரான் படுகையில் அரசு மணல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. இங்கு அரசு விதிமுறைப்படி ஆன்லைன் மூலம் மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் பதிவு செய்த லாரிகளுக்கு சீர்காழி புறவழிச்சாலை துறையூர் செல்லும் பகுதியில் டோக்கன் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் ஆன்லைன் பதிவு மூலம் குறைந்த லாரிகளுக்கு மணல் அல்ல டோக்கன் வழங்கப்படுவதாகவும் மீதமுள்ள லாரிகளுக்கு ஆப்லைன் முறையில் மணல் அள்ள அனுமதிக்க படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில் ஆப் லைன் முறையில் மணல் அள்ள வெளி மாவட்ட லாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்தனர்.

    இதனால் சீர்காழி, மயிலாடுதுறை, வல்லம்ப–டுகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அங்கு அதிகாரி–களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது வெளி மாவட்ட லாரி ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் லாரி ஓட்டுனர்கள் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அதன் பிறகு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசு அறிவித்தபடி ஆன்லைனில் புக்கிங் செய்து மணல் அள்ள அனுமதிக்க வேண்டும், அரசு அறிவித்த யூனிட் அளவில் மட்டுமே அனைத்து லாரிகளுக்கும் மணல் நிரப்ப வேண்டும் என சுமார் 50 -க்கும் மேற்பட்ட லாரிகளை டோக்கன் வழங்கும் இடத்திற்கு முன்பாக குறுக்கே நிறுத்தி திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் உள்ளே டோக்கன் பெற்ற 70-க்கும் மேற்பட்ட வெளிமாவட்ட லாரிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன. இதனால் ஆத்திரமடைந்து கிராம மக்களும் அப்பகுதியில் லாரி ஓட்டுநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இந்த இரு தரப்பு திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    இதனை அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் சீர்காழி வருவாய்த் துறையினரும் உரிமையாளர்கள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் சுமார் 3 மணிநேரத்திற்கு பிறகு கலைந்து சென்றனர்.

    ×