என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223236"
- ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட தெரு சாலையினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- இளநிலை உதவியாளர் ராமசாமி, தொழில்நுட்ப உதவியாளர் தேசிங்கு, பேரூராட்சி கவுன்சிலர் பாபு ஊழியர்கள் உடன் இருந்தனர்.
விழுப்புரம்:
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் மங்களாம்பிகை நகர், ஜெயசக்தி நகர் ஆகிய இடங்களில் மூலதன மானிய திட்டம் மூலம் பேவர் பிளாக் சாலை ரூ.48 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட தெரு சாலையினை பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம்கணேசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் இளநிலை உதவியாளர் ராமசாமி, தொழில்நுட்ப உதவியாளர் தேசிங்கு, பேரூராட்சி கவுன்சிலர் பாபு ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- சேதமடைந்த சாலையை சரி செய்து தரும்படி மேயரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
- சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
திருப்பூர் :
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு சி.டி.சி கார்னர் கபஸ்தான் சாலையில் மக்கள் பயன்பாடு அதிக அளவில் உள்ளதால் சேதமடைந்த அந்த சாலையை சரி செய்து தரும்படி மேயர் தினேஷ்குமாரிடம் இஸ்லாமிய பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கையை ஏற்று புதிய தார் சாலை அமைக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார். அதன்படி அங்கு புதிய தார் சாலை அமைக்கப்பட்டு அதனை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு மேயர் அர்ப்பணித்தார்.மேலும் முடிவுற்ற தார் சாலை பணிகளை இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தி.மு.க. பகுதி செயலாளர் உசேன், வட்ட கழக செயலாளர்கள் ரபீக், முகமது அலி, பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
- ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜைபோடும் நிகழ்ச்சி நடந்தது.
- மொக்தியார்மஸ்தான் பூமிபூஜை தொடங்கிவைத்தார்.
விழுப்புரம்:
செஞ்சி பேரூராட்சியை சேர்ந்த வ.உ.சி. தெருவில் ரூ.21 லட்சம் மதிப்பிலும், கட்டபொம்மன் தெரு விரிவாக்கத்தில் ரூ.37 லட்சம் மதிப்பிலும், குறிஞ்சி நகர் பகுதியில் ரூ.22 லட்சம் மதிப்பிலும், வேலன் நகர் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பிலும், தேசூர் பட்டை விரிவாக்க பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பிலும் மொத்தம் ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கு பூஜை போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜய குமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணி களை தொடங்கி வைத்தனர். பேரூராட்சித் துணைத் தலைவர் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கார்த்திக், பொன்னம்பலம், சங்கர், சுமித்திரா சங்கர், சீனிவாசன், கோட்டை குமார், ஜான்பாஷா, நெடுஞ்செழியன், தமிழ் ஆசிரியர் தமிழரசன், ஒப்பந்ததாரர் கவுஸ் பாஷா, உதவி பொறியாளர் சுப்பிர மணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கிடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலை சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி வரும் 24-ந்தேதி( திங்கட்கிழமை) முதல் 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை 5 நாட்களுக்கு சேலம் - கோரிமேடு வழியாக ஏற்காடு செல்லும் சாலை வழியாக 2 சக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
இதர இலகு ரக மற்றும் கன ரக வாகனங்கள் மாற்று வழியாக அயோத்தியாப் பட்டணம் - அரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குப்பனூர் சாலையினை ஏற்காடு செல்ல பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இக்குறிப்பிட்ட நாட்களில் குப்பனூர் சாலை வழியாக ஏற்காடு செல்லும்
அனைத்து வாகனங்க ளுக்கும் சுங்க கட்டணத்தி லிருந்து விலக்கு அளிக்கப் படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது.
- பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை.
வீரபாண்டி :
திருப்பூர் பல்லடம் ரோட்டில் ஏற்பட்டு வரும் கடும் போக்குவரத்து நெரிச லால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தினந்தோறும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருப்பூர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பஸ் நிறுத்தம் நால்ரோடு சந்திக்கும் இடத்தில் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த நால் ரோட்டில் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் இங்கு போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. இங்கு சிக்னல் அமைத்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை . எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மூடப்படாமல் இருப்பதால், பஸ்கள் நடுரோட்டில் நிற்கின்றன.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இன்றியும், சிக்னல் செயல்படாமல் இருப்பதாலும் வாகனங்கள் தாறுமாறாக வருவதால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் வாகன ஓட்டிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து சிக்னலை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் . ஒரு மாதத்துக்கு மேலாகியும் மூடப்படாமல் உள்ள எரிவாயு குழாய் பதிக்க தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும். பஸ்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்க வழிவகை செய்ய வேண்டும். போக்குவரத்து போலீசாரை நிரந்தரமாக நியமித்து, வாகன நெரிசலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
- விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக் குட்பட்ட முதுநகர் பகுதிகளில் உள்ள 36, 37, 38, 39, 41, 42, 45 ஆகிய வார்டு களில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3.41 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான பணிகள் மற்றும் 45- வது வார்டில் 9.80 லட்சம் மதிப்பீட்டில் கல்வெட்டு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர் இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் விஜயலட்சுமி செந்தில், பாலசுந்தர், கவிதா ரகு ராமன், தகவல் தொழில்நுட்ப அணி பிரவீன் மற்றும் வெங்கடேசன், செந்தில், ரகுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சாலைகளில் குப்பைகளை சிதறவிட்டு செல்லும் மாநகராட்சி லாரிகளால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.
- சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது.
மதுரை
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் நாள்தோறும் 100 டன் குப்பைகளை சேகரித்து மாநகராட்சி 92-வது வார்டு பகுதியில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் குப்பைகள் சுத்தரிக்கும் நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.
இந்த குப்பைகள் ஒவ்வொரு வார்டு பகுதியிலும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் அந்தத் தொட்டியில் குப்பை களை கொட்டியும் மேலும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு அதனை அந்தந்த வார்டுகளில் உள்ள குப்பைத் தொட்டிகளில் வந்து சேர்க்கின்றனர். இந்த குப்பைகளை எல்லாம் மாநகராட்சி குப்பை லாரிகள் மூலமும், டிராக்டர் மூலமும் கொண்டு செல்லப்படுகிறது.
இவ்வாறு கொண்டு செல்லும் குப்பை லாரிகள், டிராக்டர்கள் ஓரிடத்தில் அள்ளிய குப்பைகளை வீதி எங்கும் சிதறவிட்டும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு குப்பைகளை காற்றில் பறக்க விட்டும் செல்கின்றன. இதனால் சாலைகள் முழுவதும் குப்பைகள் சிதறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
இதுகுறித்து பலமுறை கவுன்சிலர்கள் மாநகராட்சி கூட்டத்தில் கூறியும் எந்த பலனும் இல்லாத நிலையில் தான் இருக்கிறது. மேலும் இந்த குப்பை களை கொண்டு சேர்க்கும் குப்பை லாரிகள் காண்ட்ராக்டர் மூலம் எடுத்து செல்வதால் காண்ட்ராக்டர்கள் அதிக குப்பைகளை கொண்டு சென்றால் அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அளவுக்கு அதிகமாக லாரி மற்றும் டாக்டர்களில் குப்பைகளை எடுத்துச் செல்வதினாலும் குப்பைகள் இப்படி வீதி களில் சிதறி விழுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மெத்தனமாக நடந்து வருகின்றன. குப்பைகள் அள்ளப்படாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாக்கடைகள் நிரம்பி வழிகின்றன.
இது போதாதென்று சேகரிக்கும் குப்பைகளை சாலை முழுவதும் சிதறவிட்டுச் செல்கின்றன. இதற்கு மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
- ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி.
- தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காமராஜர் சாலையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கி ணைந்த சாலை உட்கட்ட மைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6.47 கோடி செலவில் 1,200 மீட்டர் தூரம் சாலை அகலப்படுத்தும் பணி மற்றும் தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதுகுறித்து கலெக்டர் மகாபாரதி நிருபர்களிடம் கூறுகையில்:-
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 2 பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவற்றில், தரங்கம்பாடி மயிலாடுதுறை-காமராஜர் சாலையில் ரூ. 6 கோடி 47 லட்சம் செலவில் சாலையில் இருபுறமும் அகலப்படுத்தியும், தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதேபோல், கல்லணை காவேரிப்பட்டினம் தென்னமரசி சாலை ரூ. 2 கோடியே 50 லட்சம் செலவில் சாலைகள் இருபுறமும் அகலப்படுத்தும் பணி, தேவையான இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இந்திரன் உடன் இருந்தார்.
- 15 நாட்களாக உடலை வாங்க யாரும் வராததால் அடக்கம் செய்வதில் சிக்கல்
- அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும்
கன்னியாகுமரி :
தக்கலை அருகே மணலி சந்திப்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக தக்கலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர் பரிசோதனை செய்து விட்டு முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து பத்மநாபபுரம் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியோரின் உறவினர்களை விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 15 நாட்கள் ஆன பிறகும் இறந்த முதியவரை தேடி உறவினர்கள் யாரும் வரவில்லை. தற்போது முதியவரின் உடல் தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் உள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் இவரது முகவரி கண்டு பிடிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கபட வில்லையெனில் அரசு மூலம் உடல் அடக்கம் செய்யப்படும் என தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தெரிவித்தார்.
15 நாட்களாக முதியவர் உடலை உறவினர்கள் யாரும் வாங்க வராத தால் என்ன செய்வதென தெரியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
- ரூ.115 கோடி மதிப்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
- சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பல்லடம் :
திருப்பூர் நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில், பல்லடம் - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச் சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், வடிகால் கட்டுதல், தடுப்புச் சுவர் கட்டுதல், உள்ளிட்ட சாலை விரிவாக்க பணிகள் ரூ.115 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டபொறியாளர் ரமேஷ் கண்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சாலை விரிவாக்க பணிகளை தரமாகவும், அதே நேரத்தில் விரைவாகவும், பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை பல்லடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவிப் பொறியாளர் பாபு, மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- இதனால் சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
- ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம்- மல்லிப்பட்டிணம் சாலையில் உள்ள ரெயில் தண்டவாளம் அருகில் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை இயக்க முடியாமல் மாற்றுப்பாதையில் செல்லும்போது வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, உடனடியாக குண்டும் குழியுமான சாலையை சீரமைத்து தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
- ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் திருப்பூர் மெயின் ரோட்டில் தனியார் நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், எரிவாயு குழாய் அமைக்கும் பணிகளை ரோட்டின் ஓரத்தில் அமைக்காமல், ரோட்டின் நடுவில் தோண்டி பதிப்பதால், அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கடும் அவதி ஏற்பட்டது. இதற்கிடையே, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தலைவர் அண்ணாதுரை பல்லடம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதைத்தொடர்ந்து கோட்டப் பொறியாளர் தனலட்சுமி, உதவி பொறியாளர் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ரோடு ஓரமாக குழாய் பதிக்க வேண்டும். வாகன ஒட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.
எரிவாயு குழாய் அமைக்கும் பணி மேற்கொள்ளும்போது, இரவில் விபத்துக்கள் நிகழாமல் இருக்க ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் ஒளிரும் ஒளிபட்டைகளை வைக்க வேண்டும். குழாய் பதித்த பின்னர் குழிகளை நன்றாக மண் போட்டு மூட வேண்டும். ரோட்டில் மண் தேங்க கூடாது.இவ்வாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்