search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224003"

    • ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவில் கும்பாபிஷேக பணிகளுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
    • திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.

    மதுரை

    கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா கோவிலில் புரனமைப்பு மற்றும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக தேவ பிரசன்னம் மற்றும் அதற்கான சாஸ்தாபரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, அடுத்த கட்ட பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் ஆரியங்காவு கோவிலில் நடந்தது. இதில் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உண்ணிகிருஷ்ணன், சப் குரூப் ஆபிசர் விஜேஷ், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    ஆரியங்காவு தேவஸ்தான சவுராஷ்டிரா மஹாஜன சங்க மூத்த தலைவர் ராகவன், ரவிச்சந்திரன், கணேஷ், விஜி குமார், சுரேஷ் கண்ணா ஆகியோரும் ஆரியங்காவு கோவில் அட்வைசரி கமிட்டி தலைவர் ராதா கிருஷ்ணன் பிள்ளை, காரிய தரிசி சுஜாதன் மற்றும் உறுப்பினர்கள், ஆரியங்காவு ஊர் முக்கியஸ்தர்கள், புளியரை, செங்கோட்டை, தென்காசி பிரமுகர்கள், மற்றும் ஆரியங்காவு ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில், ஆரியங்காவு கோவில் புனரமைப்பு மற்றும் கும்பாபிஷேக பணிகளை மதுரை தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சரவணன் தலைமையில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான கடிதத்தை திருவாங்கூர் தேவஸ்தான போர்டு உதவி கமிஷனர் உன்னிகிருஷ்ணன் சரவணனிடம் வழங்கினார்.

    • தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது.
    • வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிக்குமார், டெய்லர். இவரது மனைவி ஜோதிமணி. இந்த தம்பதியரின் மூத்தமகன் உபநிஷாந்த். இளையமகன் திஷாந்த். சகோதரர்கள் இருவரும் மாடலிங் துறையில் சாதிக்கவேண்டும் என்பதையே லட்சியமாக கொண்டுள்ளனர்.

    தேசிய அளவிலான மாடலிங் போட்டி ைஹதராபாத்தில் நடந்தது. இப்போட்டியில் 13 - 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உபநிஷாந்த், 8 - 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திஷாந்த் பங்கேற்றனர்.புதுமையான ஆண்கள் ஆடை ரகங்களை அணிந்து, பேஷன்ஷோவில் கேட்வாக் செய்தனர், நடனமாடினர்.அதன்பின் நேர்முகத்தேர்வில் கேள்விகளுக்கு பதிலளித்தனர். அவ்வகையில் தேசிய அளவிலான மாடலிங் போட்டியில் உபநிஷாந்த் முதலிடம், திஷாந்த் மூன்றாமிடம் பிடித்தனர்.இதனால் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டி வருகிற செப்டம்பர் 21-ந் தேதி தாய்லாந்து நாட்டில் நடைபெறும் போட்டியில், பங்கேற்கும் வாய்ப்பை உபநிஷாந்த், திஷாந்த் பெற்றுள்ளனர்.இருவரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீன் சூப்பர் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க விரைவில் தாய்லாந்து செல்கின்றனர்.சர்வதேச போட்டியில் பங்கேற்க உள்ள மாடலிங் சகோதரர்களை திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் பாராட்டினார்.

    • முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
    • அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது.

    கோவை,

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டு தோறும் குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு 1,105 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல் நிலை தேர்வு எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் இன்று நடந்தது.

    கோவை மாவட்டத்தில் 7,742 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 18 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. காலையில் முதல் தாள் பொது அறிவு தேர்வு நடந்தது. மதியம் 2-ம் தாள் திறனறிவு தேர்வு நடக்கிறது.

    தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்துக்குள் மையத்துக்குள் வர அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். நேரம் கடந்து வந்தவர்களை மைய கண்காணிப்பாளர்கள் தேர்வு மையத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து விட்டனர். இதனால் வெகுதொலைவில் இருந்து வந்த பலர் தேர்வு எழுத முடியாமல் போனது.

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் தலைமையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரிகள் 18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒருவர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    தேர்வையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அனைத்து மையங்களிலும் செல்போன் ஜாமர் கருவி பொருத்தப்பட்டிருந்தது. தடையில்லா மின்சார வசதியும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வர்கள் மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் பஸ்நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • மதுரையில் 17 மையங்களில் குடிமைப்பணி தேர்வு நடந்தது.
    • 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மதுரை

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) சார்பில் குடிமைப்பணிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு மதுரை மாவட்டத்தில் 17 மையங் களில் இன்று நடந்தது. இதில் 6 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். மதுரை மாவட்டத்தில் 15 கல்வி மையங்களில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. காலை 9.30 முதல் 11.30 மணி வரையும், மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடந்தது.

    • யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வு எழுத 2,211 பேர் வரவில்லை
    • 14 மையங்களில் தேர்வு நடைபெற்றது

    திருச்சி,

    நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வுகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர் ஆகிய நகரங்களில் இந்த தேர்வு நடந்தது.திருச்சி மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகரில் 14 மையங்களில் இந்த தேர்வுகள் இன்று நடந்தன. இந்த மையங்களில் மட்டும் 5 ஆயிரத்து 31 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களில் 2,820 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2,211 பேர் தேர்வெழுத வரவில்லை. ஒட்டுமொத்தமாக விண்ணப்பித்தவர்களில் 56 சதவீதத்தினர் மட்டுமே தேர்வை எதிர்கொண்டு இருக்கிறார்கள். 44 சதவீதம் பேர் தேர்வெழுத முன் வரவில்லை. இது அதிகப்படியான சதவீதமாக உள்ளது.

    • மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.
    • எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக மாவட்ட வள நபர் (பண்ணை சாரா) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதற்கு இளங்கலை பட்டபடிப்பு - ரூரல் டெவலப்மண்ட், சமூக வேலை, பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் மற்றும் முதுகலை பட்டபடிப்பு- பிஸ்னஸ் மேனேஜ்மண்ட் கல்வி தகுதியாகும்.

    தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதன்மை பணி கிராமப்புறங்களில் இருப்பதால், தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்து தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும்.

    மேலும் அலுவலக நடைமுறைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கில அறிவு இருத்தல் அவசியம்

    கணினி இயக்குவதில் போதுமான அறிவு இருத்தல் அவசியம். 10 அல்லது அதற்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.3500 ஊதியமும், 6 முதல் 8 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்களுக்கு தினமும் ரூ.2500, 2 முதல் 6 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.2500 ஊதியமும் வழங்கப்படும்.

    மாதத்தில் அதிகபட்சமாக 15 நாட்கள் வரை பணி இருக்கும்.

    விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற 2-ந் தேதி ஆகும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி- இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், எண்.223, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தஞ்சாவூர்-613010.

    மேற்குறிப்பிட்டுள்ள தற்காலிக காலிபணியிடத்திற்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.

    தகுதிவாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியல் சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்படும்.

    உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கு621 பணிக்காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வுடன் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் 129 காலிப்பணியிடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு 1.6.2023 முதல்www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி தேதி 30.6.2023 ஆகும்.

    இத்தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டத்தில் 30.5.2023அன்று தொடங்கப்படவுள்ளது. மேலும் திங்கள் முதல் வெள்ளி வரை இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரைநடைபெறும். இவ்வகுப்பில் தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது.

    மேற்காணும் இத்தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் பெயரை முன்பதிவு செய்ய திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகத்தில் நேரிலோ அல்லது 0421-2999152, 9499055944 என்ற எண்ணிலோதொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அனிதா முடிவு செய்தார்.
    • திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி அனிதா தெரிவித்துள்ளார்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ஓடக்கரையை சேர்ந்தவர் செல்வராஜ். காய்கறி வியாபாரியான இவருக்கு இசக்கிராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இருவரும் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இதனிடையே மூத்த மகளான அனிதாவுக்கும் கட்டாலங்குறிச்சியை சேர்ந்த யோசேப்பு மகன் சாமுவேல் கில்டன் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயக்கப்பட்டது. பி.ஏ. தமிழ்த்துறை 3-ம் ஆண்டு படித்து வந்த அனிதா தேர்வை எதிர்நோக்கி இருந்தார். திருமண நாளான 25-ந்தேதி (நேற்று) அவருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

    ஏனென்றால் அதே நாளில் தான் அவருக்கான கல்லூரி தேர்வும் நடப்பதாக இருந்தது. படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட அனிதா முந்தைய தேர்வுகளில் எல்லாம் முதலிடத்தை பிடித்து வந்துள்ளார். திருமண நாளாக இருந்தாலும் எப்படியாவது தேர்வு எழுதி விட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.

    இதனை தனது பெற்றோரிடம் தெரிவித்த போதிலும், தனது எண்ணம் ஈடேறுமா என்று தவித்த நிலையில் இருந்து வந்துள்ளார். இதனிடையே திருமண நாளும் நெருங்கிவிட்ட நிலையில் தனது விருப்பத்தை வருங்கால கணவரிடம் தயங்கியபடி தெரிவித்துள்ளார்.

    இதனை கேட்ட மணமகன் உடனடியாக அனிதாவின் விருப்பத்திற்கு பச்சைக்கொடி காட்டி உள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் இவர்கள் இருவருக்கும் காயல்பட்டினத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்த கையோடு மணமக்கள் இருவரும் காரில் கல்லூரிக்கு சென்றனர். குறித்த நேரத்தில் அனிதா தேர்வை எழுதினார். அவரை கல்லூரியின் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

    • யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளியிட்டுள்ளது.

    சேலம்:

    இந்திய அரசு துறைகளில் உள்ள உயர் பதவிகளுக்கு யு.பி.எஸ்.சி. ஆணையம் பல்வேறு கட்ட தேர்வுகள் நடத்தி, அதில் வெற்றி பெறும் நபர்களை நியமனம் செய்கிறது. அந்த வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய பாது காப்பு படையில் சேரு வதற்கான அறிவிப்பு யு.பி.எஸ்.சி தற்போது வெளி யிட்டுள்ளது. ராணுவ பிரி வில் 208 பேர், கப்பல் படை யில் 42 பேர், விமானப்ப டையில் 120 பேர், பயிற்சி அகாடமிக்கு 25 பேர் என மொத்தம் 395 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்த 395 பணியிடங்க ளுக்கு கல்வி தகுதி நிர்ண யிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராணுவ பிரி வுக்கு இயற்பியல், கணிதம் பாடத்துடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதுபோல் விமானப்படை, பயிற்சி பிரிவு, கப்பல் படையில் சேருவதற்கும் தனித்தனியாக கல்வி தகுதிகள் உள்ளது.

    எழுத்துத்தேர்வு, உள வியல் திறன், நுண்ணறிவு தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் எழுத்துத் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.06.2023 ஆகும்.

    • தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
    • விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    திருப்பூர் :

    பாரதியார் பல்கலையின் கீழ் அனைத்து எம்.பில்., பி.எச்டி., மாணவர்களுக்கான எழுத்து தேர்வுகள் மே 29, 31 மற்றும் ஜூன் 2-ந் தேதி நடைபெறவுள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் அனைத்து துறை மாணவர்களுக்கான தேர்வு மையம் பல்கலையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்களை சேர்ந்த மாணவர்களுக்கு என்.ஜி.பி.,கல்லூரியில் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரிவான தகவல்களை https://b-u.ac.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

    தேர்வுக்கான ஹால்டிக்கெட் அந்தந்த மையங்களில், 24, 25, 26 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.
    • நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம்:

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்ட படிப்பு களில் மாணவர்கள் சேர ஒவ்ெவாரு ஆண்டும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) சார்பில் பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வு (கியூட்) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

    நடப்பாண்டுக்கான தேர்வுக்கு அதிகம் பேர் விண்ணப்பித்ததை தொடர்ந்து தேர்வு 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    சேலம், நாமக்கல்

    அதன்படி முதற்கட்டமாக நாடு முழுவதும் நேற்று 271 நகரங்களில் உள்ள 447 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்- 2 தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் திரளானோர் எழுதினர். சுமார் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது. வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாகவும், தடுமாற்றம் இல்லாமல் தேர்வை எதிர்கொண்டதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    அடுத்தக் கட்ட தேர்வுகள் ஜூன் முதல் வாரம் வரை நடைபெறுகின்றன. அதுபோல் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளது.

    விளையாட்டு விடுதி, மையங்களில் சேர தேர்வு போட்டிகள் நடக்கிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை, திருச்சி, நெல்லை, கிருஷ்ணகிரி, கோவை, கடலூர், தஞ்சா வூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாத புரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களில் மாணவர்களு க்கான விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது.

    மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்க ளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் நெல்லை யிலும், மாணவிகளுக்கான முதன்மை நிலை விளை யாட்டு மைய விடுதி சென்னை நேரு விளை யாட்டு அரங்கம் மற்றும் ஈரோட்டிலும் செயல்பட்டு வருகிறது.

    மாணவ-மாணவி களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி வேலூர் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்காக 7, 8, 9 மற்றும் பிளஸ்-1 வகுப்பு, முதன்மை நிலை விளை யாட்டு மையங்களில் 6 ,7, 8-ம் வகுப்பு சேர்க்கையும் நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 7 மணி அளவில் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்பதை திவிறக்கம் செய்து விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தேர்வு போட்டியின்போது கொண்டு வர வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு ஆடுகள தகவல் தொடர்பு மையத்தின் 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேர்வு போட்டிகளில் கலந்து கொள்ள 24-ந் தேதி காலை 7 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×