என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225867"
- தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் தஞ்சை ரெயில் நிலையம் வந்தது.
- இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
தஞ்சாவூா்:
மும்பை- தூத்துக்குடி- மும்பை இடையே தஞ்சை, கும்பகோ ணம் வழியாக நேரடி சிறப்பு ரெயில் புதிதாக இயக்கப்பட்டது.
இரு மார்க்கங்களிலும் இரண்டு தடவை ரெயில் இயக்கப்படுகிறது.
அதன்படி மும்பையில் இருந்து கடந்த 26-ந் தேதி கும்பகோணம், தஞ்சை வழியாக தூத்துக்குடிக்கு ரெயில் இயக்கப்பட்டது.
அடுத்து ஜூன் 2-ம் தேதி இயக்கப்படுகிறது.
இதேபோல் தூத்துக்குடி யில் இருந்து நேற்று தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு ரெயில் புறப்பட்டது.
இந்த ரெயில் இன்று மாலை மும்பைக்கு சென்றடையும்.
அடுத்ததாக ஜூன் 4-ஆம் தேதி ரெயில் சேவை இயங்கும்.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ரெயில் மாலையில் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்து ஓரிரு நிமிடம் நின்றது .
அப்போது இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் ரெயிலை இயக்கிய ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த ரெயிலில் வந்து தஞ்சையில் இறங்கிய பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
அப்போது தூத்துக்குடி -மும்பை இடையே இரு மார்க்கத்திலும் 2 தடவை மட்டுமே இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் சேவையை நிரந்தரப்படு த்த வேண்டும்.
தஞ்சையில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் அதிவிரைவு ரெயிலை இயக்க வேண்டும் என்று காவிரி டெல்டா ரெயில்வே உபயோ கிப்பா ளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டன.
இந்த வரவேற்பு நிகழ்ச்சி யில் சங்க பொருளாளர் வக்கீல் உமர்முக்தர், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, கண்ணன், ரெங்கராஜ், பைசல் , வேதப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சி.ஐ.டி.யு. நடைப்பயணக் குழுவிற்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அரியலூர்:
கடலூரிலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சி.ஐ.டி.யு. குழுவினருக்கு அரியலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26,000 வழங்க வேண்டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறையை செயல்படுத்துதலை கைவிட வேண்டும். தொழிலாளர் நலன் பாதுகாக்கும் வகையில் முத்தரப்பு குழுக்களை செயல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சிஐடியுவினர் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.இந்தக்குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் அரியலூர் மாவட்டம் வந்தடைந்த நிலையில், அரியலூர் அண்ணா சிலை அருகே அவர்களுக்கு அரியலூர் மாவட்ட சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கோரிக்கைகள் வலியுறுத்தி பேசப்பட்டது. பின்னர், திருமானூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டத்துக்கு திருமானூர் கிளைச் செயலாளர் புனிதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் கண்ணன் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினர்.
- தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன.
- இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
சேலம்:
தமிழகத்தில் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தொழில்நுட்ப பட்டய படிப்புகளுக்கு 19120 இடங்கள் உள்ளன.
விண்ணப்பதிவு தொடங்கியது
இதில் முதலாமாண்டு மற்றும் பகுதிநேர படிப்புக ளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணைய வழியில் நேற்று தொடங்கியது.
இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்ப ட்டுள்ளது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவின ருக்கு கட்டண மில்லை. விருப்பமுள்ள வர்கள் http://www.tnpoly.in/ எனும் வலைதளம் வரியாக வருகிற ஜூன் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி பெற்ற மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியல், அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரி களில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்படும்.
கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணைய தளத்தில் அறிந்து கொள்ள லாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
- இருப்பிடம் திரும்பிய வீர அழகருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகைஆற்று தென்கிழக்கு பகுதியில் வீர அழகர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். கடந்த 1-ந்தேதி தொடங்கிய திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் 5-ந்தேதி வீர அழகர் இறங்கினார்.
அதைதொடர்ந்து கிராமத்தார் மண்டகப்படி, கோர்ட்டார் மண்டகப்படி, கடைதெரு மண்டகப் படிகளில் எழுந்தருளி கருட வாகனம் மற்றும் பல்லக்கில் மானாமதுரையில் உள்ள பல்வேறு பகுதிக்கு சென்று வீர அழகர் கோவிலுக்கு திரும்பினார்.
இந்த விழாவில் முதல்நாளில் வீர அழகர் நகராட்சி அலுவலகம், ஆற்றில் இறங்குவதற்கு முன்பு போலீஸ் நிலையம், ஆற்றில் இறங்கும் அன்று சார்-குற்றவியல் நீதிமன்றம் சார்பில் நடைபெறும் கோர்ட்டார் மண்டகப்படி, அதை தொடர்ந்து மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மெயின் கடைவீதியில் எழுந்தருளும் நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
அரசுஅலுவலகத்திற்கு வீரஅழகர் வரும்போது நகராட்சி தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்துத்துறை அதிகாரிகள் வீர அழகரை வணங்கி வரவேற்பு கொடுத்தனர். சுவாமி தூக்கி வந்த பக்தர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தனர்.
- கடந்த 1995-ம் ஆண்டு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர்.
- மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
இவரது மனைவி அமிர்தவல்லி. உப்பு உற்பத்தி மற்றும் விவசாய பணிகள் செய்து வருகின்றனர்.
இவர்களது மகன் முருகேசன்.
இவர் கடந்த 1995-ம் ஆண்டு இந்திய ராணுவத்திற்கு தேர்வாகி ராணுவத்தில் பணியாற்றியவர். கார்கில் போரிலும் சிறப்பாக பணியாற்றியவர்.
தற்போது முருகேசன் பணி ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பினார்.
அவருக்கு வேதாரண்யத்தில் முன்னாள் ராணுவ நல சங்க தலைவர் தமிழரசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பொருளாளர் நாகராஜன் முன்னிலையில் முன்னாள் ராணுவ வீரர்கள் சார்பில் மாலை அணிவித்து, தேசிய கொடி கொடுத்து தேசிய கீதம்பாடி சல்யூட் அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பின்னர் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. காமராஜ், வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், நகர்மன்ற தலைவர் புகழேந்தி, கவுன்சிலர் ராஜு, மாநில வர்த்தக சங்க துணை தலைவர் தென்னரசு, நுகர்வோர் கூட்டமைப்பு தலைவர் வீரசுந்தரம் உள்பட முக்கிய பிரமுகர்கள், கிராமக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆசிரியர் கருணாநிதி வரவேற்றார். முடிவில் ராணுவ வீரர் முருகேசன் மனைவி அம்பிகா நன்றி கூறினார்.
- காவல்கிணறு சந்திப்பில் உற்சாக வரவேற்பு
- மாவட்ட செயலாளர் மகேஷ் அறிக்கை
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாகர்கோவில் வடசேரி வஞ்சியாதித்தன் புதுதெருவில் நாளை (7-ந்தேதி) மாலை 5 மணிக்கு திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகள் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் தி.மு.க. பொது செயலாளரும், நீர்வ ளத்துறை அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. கொள்கை பரப்பு செய லாளர் பி.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (7-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வரும் அமைச்சர் துரைமுருகன், ஜெகத்ரட்ச கன் எம்.பி. ஆகியோர் அங்கிருந்து சாலை மார்க்க மாக குமரிக்கு வருகிறார்கள்.
அவர்களுக்கு பகல் 12 மணிக்கு காவல்கிணறு சந்திப்பில் எனது தலைமையில், குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பிறகு கன்னியாகுமரி விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர் மாலை 5 மணிக்கு வடசேரி வஞ்சியாதித்தன் புதுதெருவில் நடைபெற இருக்கும் பொதுக் கூட்டத்தில் சிறப்புரை யாற்றுகிறார்கள்.
எனவே நாற்கரசாலை காவல்கிணறு சந்திப்பில் வைத்து நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சி, பின்பு மாலை நடைபெறும் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஆகியவற்றில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை கழக நிர்வாகிகளும் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகளும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது
- உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசி–னார்.
விழுப்புரம்:
விழுப்புரத்திற்கு நாளை (புதன்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடகூறியுள்ளார்.
தி.மு.க. ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர்சிவா, மாநில ஆதிதிராவிர் நலக்குழு இணை செயலாளர் புஷ்ப–ராஜ், மாவட்ட துணை செயலாளர் முருகன், தயாளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.
சிறப்பான வரவேற்பு
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளையும் (புதன்–கி–ழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட தி.மு.க. சார்பில் நகர எல்லை யான அய்யூர்அகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்.
நகர தி.மு.க.வினர் விழுப்புரம் நான்கு முனை சாலை சிக்னல் பகுதியில் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். பெண்கள் இதில் திரளாக பங்கேற்கவேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கூட்டத்தில் யாரும் பங்ேகற்க அனுமதி கிடையாது. காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கும் அனுமதி கிடையாது. எனவே வரவேற்போடு உங்–கள் பணி முடிந்து விட்டது.
மேலும் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பதோடு, கட்சி பணிகளை சிறப்–க மேற்–கொள்ளவேண்–டும் என்றார். இதில் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, மும்மர்த்தி, தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன், வேம்பிவி, நகர மன்றதலைவர் சக்கரைதமிழ்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்–றி–யக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செய–லாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினக–ரன், மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், மாவட்ட வர்த்–தக அணி அமைப்–பா–ளர் கோல்டு வெங்–க–டே–சன், நக–ர–மன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகர இளைஞ–ணி அமைப்பாளர் மணிகண்டன் விழுப்புரம் நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
- ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதார ண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக ரூ.480 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ஓ.எஸ் மணியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த ரெயிலானது, தினசரி காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 7.45 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த இயக்கப்படுகிறது.
- பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த அரசு பேருந்தை கே.அக்ரஹாரம் வரை இயக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.
- நகர பேருந்து எண் 24 பி.என்ற பேருந்தை அக்ரஹாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ளது கே.அக்ரஹாரம். இக் கிராமத்திற்கு பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் தருமபுரியிலிருந்து கம்பைநல்லூர் வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த அரசு பேருந்தை கே.அக்ரஹாரம் வரை இயக்க வேண்டி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று கம்பைநல்லூரிலிருந்து தருமபுரியில் இருந்து கம்பைநல்லூர் வழியாக பெரமாண்டப்பட்டி வரை இயங்கி வந்த நகர பேருந்து எண் 24 பி.என்ற பேருந்தை அக்ரஹாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை அக்ரஹாரம் கிராமத்திற்கு புதிதாக பேருந்து இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேருந்திற்கு ஆராத்தி எடுத்து வரவேற்று சிறப்பு பூஜை செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரத்னவேல்,மொரப்பூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவரும்,முன்னாள் மொரப்பூர் ஒன்றிய குழு துணை தலைவருமான ஆர்.பன்னீர்செல்வம், ம.தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆர்.ஜெகநாதன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் மொ.குமரவேல், தி.மு.க. மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகி பேசும் தெய்வம், இளைஞரணி நிர்வாகி ராசி தமிழ், ஊர் பிரமுகர்கள் நாகேந்திரன், சின்னசாமி, சொக்கலிங்கம், கிருஷ்ணன், சிங்காரம், திருப்பதி, ரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- டெல்லி போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய விவசாய சங்க தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர்.
சோழவந்தான்
டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பிரதமரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாராளுமன்றம் நோக்கி நீதி கேட்டு நெடும் பயணம் சென்றனர். இதற்கு விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முதலைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சங்க மாநில கவுரவத் தலைவர் எம்.பி. ராமன் கிராமத்திற்கு திரும்பினார். அவரை முதலைக்குளம் கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் வரவேற்றனர். இதில் திருமங்கலம் பாசன கால்வாய் உறுப்பினர்கள் ஜெயக்குமார், சிவஅறிவழகன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் முனியாண்டி, அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன், கிளைச்செயலாளர் தவமணி, தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மூக்கன், தொழிலதிபர் பால்பாண்டி, ஊராட்சி செயலாளர் பாண்டி, காங்கிரஸ் நிர்வாகி செல்லசாமி, விவசாயிகள் பால்சாமி, பாண்டி, ஒச்சு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.
- ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
பெங்களூர்- வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே துறை அறிவித்தது.
அந்த அறிவிப்பில் 25-ந் தேதி, வரும் 1, 8 மற்றும் 15-ந் தேதிகளில் ( சனிக்கிழமைகளில்) பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கும், 26-ந் தேதி, வரும் 2, 9 மற்றும் 16-ந் தேதிகளில் ( ஞாயிற்றுக்கிழமைகளில் ) வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூருக்கும் இடையே 4 வாரங்கள் புதிய சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக அறிவித்தது.
அதன்படி இந்த சிறப்பு ரெயிலின் முதல் சேவை நேற்று ( சனிக்கிழமை ) பெங்களூரில் இருந்து தொடங்கியது. நேற்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு கன்டோன்மென்ட் ,கிருஷ்ணாபுரம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ,தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக வேளாங்கண்ணிக்கு நேற்று இரவு சென்று அடைந்தது.
வரவேற்பு
இந்த சிறப்பு ரெயிலை வரவேற்கும் விதமாக தஞ்சாவூருக்கு ரெயில் வந்த போது சில நிமிடம் நின்றது. அப்போது காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்க தலைவர் அய்யனாபுரம் நடராஜன், செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் ஆகியோர் தலைமையில் ரெயில் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும் ரெயிலில் ஏறி அதில் பயணம் செய்த பயணிகள் மற்றும் இறங்கிய பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். அப்போது பெங்களூர்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே மறுமார்க்கமாக இந்த ரெயில் நேற்று இரவு 11.55 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு திருவாரூர், தஞ்சை, திருச்சி, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இன்று மதியம் பெங்களூருக்கு சென்றடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் பேராசிரியர் திருமேனி, செல்லகணேசன், வக்கீல் உமர்முக்தார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- சென்னை - முதல் குமரி வரை பெண் போலீசார் சைக்கிள் பேரணி
- திருமாந்துறை சுங்கச்சாவடியில் வரவேற்பு
பெரம்பலூர்,
தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர்களை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்