என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225972"
- ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
- ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.
மதுரை
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.
இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.
2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.
பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
- கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
- முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முத்துப்பேட்டை:
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
இதனை கொண்டாடும் வகையில் முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட்டாசு வெடித்தனர்.
அதேபோல் முத்துப்பே ட்டை பெரிய கடைதெரு விலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி பெற்றியை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னா முகமது, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ஜேம்ஸ், நகர துணைத்தலைவர் ஹசன், நகர பொருளாளர் குலாம் ரசூல், நிர்வாகிகள் ஜிபிலி, இஜாஸ், ஷகீல், சேக்தாவூது, அப்சல், தமீம் அன்சாரி, முஜமில் உட்பட ஏராளமாேனார் கலந்துக் கொண்டனர்.
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைதெருவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு களும் வழங்கினர்.
- கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
- மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா செல்லப்பம்பாளையம், பெரிய மருதூர், சின்ன மருதூர், கபிலர்மலை, கபிலக்குறிச்சி, பெரிய சோளி பாளையம், சின்ன சோளி பாளையம், ஆனங்கூர், பாகம்பாளையம், கவுண்டம்பாளையம், சிறுநல்லி கோவில், சுள்ளிப்பாளையம், பெருங்குறிச்சி, குரும்பலமகாதேவி, குப்பிரிக்காபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளத்தை. கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர்.
மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் சோளக் கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
அதேபோல் மக்காச்சோள கதிர்களை சந்தை பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வியாபாரிகள் கொண்டு சென்று மக்காச் சோளக் கதிரை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
- இன்று காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கி தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள தர்பூசணி கிருனிப்பழம் நுங்கு பழ வகைகள் பழச்சா றுகள் குளிர்பானங்கள் கரும்பு சாறுகள் போன்றவற்றை வாங்கி குடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்ததை காண முடிந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதையும் காணமுடிந்தது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடும் வெயிலை தணிக்கும் விதமாக மழை பெய்யாதா? என பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஏங்கி க் கொண்டிருந்தனர்,
இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது வழக்கமான வெயிலின் தாக்கம் அதிகளவில் இல்லாமல் குளிர்ந்த காற்றும் வீசி வந்தன இந்த நிலையில் காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குடைபிடி த்தபடி சென்றதையும் காண முடிந்தது மேலும் ஒரு சில மக்கள் மழையை அனுபவிக்கும் விதமாக நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது மேலும் திடீர் மழை காரணமாக பொதுமக்கள் ஆனந்தத்தில் மிதந்ததையும் அவர்களது மகிழ்ச்சியில் காண முடிந்தது மேலும் சாலை வியாபாரிகள் திடீர் மழை காரணமாக சற்று பாதிப்படைந்தனர். ஆனால் கோடை வெயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திடீர் மழை பெய்த காரண த்தினால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது.
- விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி,ஆடு,மாடு சந்தை கூடுவது வழக்கம்.
- இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காய்கறி,ஆடு,மாடு சந்தை கூடுவது வழக்கம்.
இதில் ஆட்டுச் சந்தை பிரபலமானது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை யை யொட்டி இன்று வார சந்தையில் ஆட்டு சந்தை கூ:டியது. அதிகாலை 2 மணிக்கே விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து விட்டனர். அதேபோல் செங்கம், திருவண்ணாமலை, வேலூர், சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த விவசாயிகளும் ஆடுகளை கொண்டு வந்தனர். மேலும் சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், சேலம் வேலூர் தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மினி லாரிகளில் நேற்று முன்தினமே வந்து விட்டனர். ஆட்டு சந்தை தொடங்கியதும் வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கினர். வெள்ளாடு, குரும்பாடு, செம்மறி ஆடு, ராம்நாடு, மலை ஆடு உள்ளிட்ட 7 வகையான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.செஞ்சி வாரசந்தை வெள்ளாடுகளுக்கு பெயர் பெற்றதால் இங்கு வியாபாரிகள் அதிகம் ஆடுகளை வாங்குவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு செம்மறி ஆடு (15 கிலோ எடை) கடந்த வாரம் ரூ.6 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட நிலையில் இன்று ரூ. 9 ஆயிரம் முதல் 11 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. மற்ற வகை ஆடுகள் ஒன்று ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்க ப்பட்டன. வாரச்சந்தையில் சுமார்ரூ 5 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் ஆடுகளை வாங்கிச்சென்றனர். விலை சற்று கூடுதலாக கிடைத்ததால் விவசாயி களும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் வியாபாரிகள் அதிகமாக வருவார்கள் என சுற்றுவட்டார கிராம பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அளவுக்கு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் விலையும் சிறிது அதிகமாக இருந்ததாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
- மதுரை பறக்கும் பாலத்தில் பயணித்த வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
- அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.
மதுரை
மதுரை தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை 7.3 கி.மீ நீளத்திற்கு ரூ.751 கோடி மதிப்பில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை (பறக்கும் பாலம்) அமைக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகவும் நீளமான இந்த உயர்மட்ட சாலையை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து மதுரை பறக்கும் பாலத்தில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி பொங்க பாலத்தில் சென்றனர். பலர் செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். பிரதமர் மோடி பாலத்தை திறந்து வைத்ததும், பாலத்தில் செல்ல வந்த வாகன ஓட்டிகளை பா.ஜ.க.வினர் மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர்.
பின்பு பா.ஜ.க.வினரும் வாகங்களில் பறக்கும் பாலத்தில் சென்றனர். அவர்கள் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை வாகனங்களில் அணிவகுத்து சென்றார்கள். உற்சாகம் பொங்க காணப்பட்ட அவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.
இந்த பாலத்தில் வாகனத்தில் பயணித்தவர்கள் கூறுகையில், ''இந்த சாலையில் பயணிப்பது புதுவித அனுபவத்தை தருகிறது. இந்த பாலத்தால் வாகன ஓட்டிகளின் பயண நேரம் வெகுவாக குறையும். மதுரை மாநகரில் போக்குவரது நெருக்கடி குறையும்'' என்றனர்.
பிரதமர் மோடி மதுரை பறக்கும் பாலம் மட்டுமின்றி மேலும் பல திட்டங்களையும் நேற்று தொடங்கி வைத்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து வடுகப்பட்டி பிரிவு வரையிலான ரூ.1,077 கோடி மதிப்பிலான 36 கி.மீ தூர நான்கு வழிச்சாலை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மதுரையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் வாடிப்பட்டி முரளி ராமசாமி, பா.ஜ.க. ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் காந்தி குமாரி, விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், ஊடக பிரிவு கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில் என்கிற செல்வமாணிக்கம், புறநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை பறக்கும் பாலம் திறக்கப்பட்டதையடுத்து இன்று அங்கு வழக்கமான போக்குவரத்து தொடங்கியது. அனைத்து வாகனங்களும் பாலத்தில் சென்று வந்தன.
- ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்தனர்.
- கல்லூரி கால நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டு நண்பர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த புத்தூரில் சீனிவாசா சுப்பராய அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது.
பழைமை வாய்ந்த இக்கல்லூரியில் 1960 ஆம் ஆண்டு முதல் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் வைர விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
1960-ம் ஆண்டு முதல் இக்கல்லூரியில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் பணியாற்றி மற்றும் ஓய்வு பெற்ற நிலையில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி காலத்தில் தங்களுக்கு கல்வி பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி மரியாதை செய்து கவுரவித்தனர்.
1993 ஆம் ஆண்டு கல்வி முடித்த முன்னாள் மாணவர்கள் ரூ.5 லட்சம் செலவில் இந்நாள் மாணவர்களுக்கான உணவருந்தும் கூடத்தை அமைத்துக் கொடுத்து அதனை திறந்துவைத்தனர்.
பலர் பணிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்பொழுது முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்த நிகழ்வில் அனைவரும் இளைஞர்கள் போல் ஒருவருக்கொருவர் தங்களது கல்லூரி கால நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொண்ட துடன் தங்களது சக நண்பர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதில் முன்னாள் மாணவர்களாகிய விஸ்வநாதன், சேகர், கண்ணன், திருநாவுக்கரசு, சுப்ரமணியன், தில்லை நடராஜன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
- கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம்.
- விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம், அகர கொந்தகை, ஆலத்தூர், ஏர்வாடி, கீழபூதலூர், உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதல் முறையாக தோட்டக்கலைத்துறை மூலமாக 100 சதவீதம் மானியத்துடன் சாமந்திப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுவரை நெல் உளுந்து பயிறு பருத்தி உள்ளிட்ட சாகுபடிகளில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு சோதனை முறையில் மாற்று பயிராக சாமந்திப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதற்காக நாற்றுகள் இடுபொருள்கள் உரம் உள்ளிட்ட அனைத்தும் ஏக்கருக்கு ரூ.16 ஆயிரம் வரை முழு மானியத்துடன் வழங்கப்படுகிறது.
இதனை பயன்படுத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் திருமருகல் தோட்டக்கலைத்துறை அலுவலர் வித்யா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிலோ ஒன்றுக்கு ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்யப்படுவதால் அதிகம் லாபம் கிடைப்பதாகவும் பறிக்கப்படும் பூக்களை காரைக்கால் நாகப்பட்டினம் திருமருகல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பூ வணிகர்கள் தோட்டத்திற்கு வந்து கொள்முதல் செய்வதால் விற்பனை செய்வதும் எளிமையாக இருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் முறையாக சோதனை அடிப்படையில் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது நல்ல விளைச்சல் இருப்பதாலும் விற்பனை செய்வதில் எளிமையை ஆக இருப்பதாலும் இதனை மாவட்ட முழுவதும் அனைத்து கிராமங்களிலும் விரிவுபடுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
- மதுரையில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.
மதுரை
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக வெயில் அதிகமாக காணப்பட்டது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்க ளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மதுரை மாவட்டத்திலும் இந்த தாக்கம் இன்று காணப்பட்டது அதிகாலை முதல் கருமேகங்கள் வானில் சூழ்ந்து சூரியனை மறைத்ததுடன் வாட்டி வதைத்த வெயிலுக்கும் இன்று 'குட்பை' சொல்லும் வகையில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
மதுரை நகரில் விமான நிலையம், பெரியார் பஸ் நிலையம், காளவாசல், காமராஜர் சாலை, தெப்பக்குளம், அவனியாபுரம், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
திடீர் மழை காரணமாக சில நாட்களாக இருந்த வெப்பமும் தணிந்து குளுமையான காலநிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் சாரல் மழையை ரசித்த படி நனைந்து சென்றனர்.
- சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
- சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர்.
கன்னியகுமரி:
குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தொடர் மழை காரணமாக கடந்த சில நாட்களாக தண்ணீர் அதிக அளவில் கொட்டியது. இது அவ்வப்போது வெள்ளப்பெருக்காக மாற, சுற்றுலா பயணிகள் குளிக்க சில நேரங்களில் தடையும் விதிக்கப்பட்டது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் தினமும் அருவிக்கு நீராட வந்து கொண்டே உள்ளனர். தற்போது அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களது வருகையும் அதிகரித்து உள்ளது.
அதிலும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளாவில் இருந்தும் பைக், கார், வேன், பஸ் போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு வந்து அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
சிறுவர்கள் நீச்சல் குளத்தில் ஆனந்தமாக நீராடியதோடு, நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவையும் சுற்றி பார்த்தனர்.
- இது போன்ற இயக்க பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
- மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்தம் நகரில் மாநகர தி.மு.க. அலுவலகம் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளரும் மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன் வரவேற்றார்.
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான துரை. சந்திரசேகரன் , எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம் , அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாநகர தி.மு.க. அலுவலக புதிய கட்டிடத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பேரறிஞர் அண்ணா சொன்னது போல் எங்கு சென்றாலும் தி.மு.க.விற்க்கென்று அலுவலகம் இருப்பது அவசியம். மாவட்டங்களில் மாவட்ட கழக அலுவலகங்கள் இருப்பது போல் தஞ்சையில் மாநகர தி.மு.க.வுக்கென்று புதிய அலுவலகம் திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நாள் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டாலும், இது போன்ற இயக்கப் பணிகளில் ஈடுபடும்போது தனிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கிறது.
கனமழை, மேட்டூர் நீர் நிலைகள் குறித்து அவ்வப்போது அறிந்து கொள்ள வாட்ஸ்அப் குரூப் ஒன்று உள்ளது.
அதை கவனித்து வருவோம். மழைகாலங்களில் தேவைக்கேற்ப்ப பள்ளிகள், மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் இருந்து திருக்கருகாவூர் வழியாக சாலியமங்களம் வரையிலான நெடுஞ்சாலையில் பல இடங்களில் குண்டு, குழி பள்ளங்கள் உருவாகி இருந்தன அதனால் வாகன ஓட்டிகள் தினசரி சிரமப்பட்டு வந்தனர்.
நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து சாலியமங்களத்தில் இருந்து பாபநாசம் வரையிலான சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கும் பணி நடைபெற்றது இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை புதுப்பிக்கும் பணிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது
பாபநாசம் சாலியமங்களம் முக்கிய நெடுஞ்சாலையில் தினசரிநூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக, இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன அதனால் சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலை அகலம் இல்லாததால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
தற்போது சாலையை விரிவாக்கம் செய்து அகலமாக சாலையை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் இந்த சாலையை பயன்படுத்தகூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாலை புதுப்பிக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் குறையும் என நினைக்கிறோம் என தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்