search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226145"

    • பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும்.
    • கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன்.

    கும்பகோணம்:

    சென்னை வில்லிவா க்கத்தை சேர்ந்தவர் பழனிசாமி.

    இவர் கும்பகோணம் அருகே சாலையில் இருமுடி தலையில் வைத்து சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரிடம் பொதுமக்கள் விசாரித்தபோது, நான் தினக்கூலி அடிப்படையில் எலக்ட்ரிகல் வேலை செய்து வருகிறேன்.

    சபரிமலை ஐயப்பன் துணையாலேயே நல்ல விதமாக எனது குடும்பத்தை நடத்தி வருகின்றேன்.

    17-வது வருடமாக சபரிமலை செல்லும் நான் பொதுமக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்பதற்காக சுமார் 650 கிலோமீட்டர் வரை சைக்கிளில் செல்ல முடிவு செய்து கடந்த 8-ம் தேதி சென்னை வில்லிவாக்கத்தில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றேன் என்றார்.

    நேற்று இரவு உணவை சோழபுரத்தில் முடித்துவிட்டு சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். இன்று காலை தஞ்சாவூர், திருச்சி, கரூர், திண்டுக்கல் வழியாக சபரிமலை செல்கிறார்.

    • புவி வெப்பமாவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்
    • கன்னியாகுமரியில் இருந்து இன்று காலை தொடங்கினார்

    கன்னியாகுமரி:

    பீகார் மாநிலம் கயா என்ற இடத்தை சேர்ந்தவர் ஹசன் இமாம் (வயது 25).

    போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத இவர் டெல்லி யில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற வர்.

    இவர் மத நல்லிணக்க த்தை வலியுறுத்தியும் புவி வெப்பமாதல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்ப டுத்தும் வகையிலும் கன்னியாகுமரி யில்இருந்து காஷ்மீர் வரை பேட்டரி இரு சக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற்கொள்ள திட்ட மிட்டார். இதற்காக தொண்டு நிறுவனம் மூலம் பிரத்யேகமாக வடிவமை க்கப்பட்ட பேட்டரி இரு சக்கர வாகனம் மூலம் ஹசன் இமாம் இன்று காலை பயணத்தை தொடங்கினார். இந்த பயணம் பற்றி அவர் கூறும் போது, தினமும் 25 கிலோமீட்டர் வரை பயணம் மேற்கொள்ள இருப்ப தாகவும் கன்னியாகுமரி யிலிருந்து காஷ்மீர் சியாச்சின் பகுதி வரையிலான தூரத்தை 100 நாட்களில் சென்றடைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறினார்.

    வழிநெடுகிலும் மக்களை சந்தித்து புவி வெப்ப மயமாதலின் ஆபத்தை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இவரது இந்த சாதனை பயணத்திற்கு சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களால் வடிவமைக்கப் பட்ட பேட்டரி சைக்கிள் ஒன்றினை தொண்டு நிறுவனம் இலவசமாக வழங்கி உள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகரிக்கும் விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
    • இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தேவிபட்டினம், ஏர்வாடி, உத்தரகோசமங்கை, திருப்புல்லாணி, சேதுக்கரை ஆகிய இடங்களில் புண்ணிய தலங்கள் உள்ளன. இதன் காரணமாக வெளி மாநி லங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ராமநாதபுரம் மாவட்ட நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ''ஹைவே பேட்ரோல்'' போலீசார் பணியை முறையாக மேற்கொள்ளாததால் வாகனங்களின் விதி மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த வழியாக செல்லும் லாரிகள் அசுர வேகத்தில் செல்வதால் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த வழித் தடத்தில் குடி போதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வோரின் எண்ணிக்கையும் அதி கரித்து வருகிறது. செக் போஸ்ட்டில் போலீசார் இல்லாதால் விபத்துகளை ஏற்படுத்தும் டிரைவர்கள் எளிதில் தப்பிச் சென்று விடுகின்றனர்.

    இரவில் நடந்து செல்ப வர்கள் மீது வாகனம் மோதுவதும், அதி வேகத்தில் செல்லும் வாகனங்கள் தலை குப்புற கவிழ்வதும், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்வதும், இந்த சாலையில் தொடர்கதையாக உள்ளது. நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ரோந்து போலீசார் தலை காட்டுவதே கிடையாது.

    இதனால் இந்த பகுதியில் உயிர்பலி எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் வரை 262 வாகன விபத்துகள் ஏற்பட்டு, அதன் மூலம் 281 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதில் 123 விபத்துகள் இருசக்கர வாகனங்களால் ஏற்பட்டு 126 பேர் உயிரிழந்துள்ளனர். கண் துடைப்பு நடவடிக்கையாக மாதத்திற்கு ஒரு முறை போக்குவரத்து போலீசார் ஆய்வு என்ற பெயரில் இரண்டொரு வழக்குப் பதிவு செய்து 'சாதனை' செய்கின்றனர்.

    இதை தடுக்க ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    • காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
    • காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    காசி தமிழ் சங்கம விழாவை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் காசிக்கு செல்ல வசதியாக சிறப்பு ரயில்களை காசி தமிழ் சங்கம எக்ஸ்பிரஸ்களாக ரயில்வே நிர்வாகம் இயக்கத் தொடங்கியுள்ளது. காசி தமிழ் சங்கம விழாவிற்கு செல்லும் தமிழர்களை ரயில்வே நிலையங்களில் உற்சாகமாக வரவேற்று உபசரித்து அனுப்பி வைக்கும் பணி யில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, சேலத்தில் இருந்து காசி தமிழ் சங்கம விழாவிற்கு ஆன்மீகவாதிகள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செல்ல வசதியாக எர்ணாகுளம்- பாட்னா எக்ஸ்பிரசில் (22669) சிறப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இன்று முதல் இயக்கப்படுகிறது. எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு வரும் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ள சிறப்பு பெட்டிகளில், கோவையில் இருந்து 81 பயணிகளும், சேலத்தில் இருந்து 51 பயணிகளும் என 132 பேர் புறப்பட்டு சென்றனர். சேலம் ஜங்ஷன் ரெயில்வே ஸ்டேஷனுக்கு இன்று காலை 7.20 மணிக்கு காசி தமிழ் சங்கம சிறப்பு எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து 51 பேர் புறப்பட்டனர்.

    • மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர்.
    • இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் துறையில் மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் காரைக்குடியில் உள்ள சிஎஸ்ஐஆர் சிக்கிரி நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு வேதியியல் அரி மானம், ஆற்றல் மூல ஆதாரங்கள் மற்றும் கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்பு போன்றவற்றை விபரமாக கேட்டு தெரிந்து கொண்டனர்.

    இந்நிகழ்வில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 2 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.
    • ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ளன. தேவகோட்டை நகர் மற்றும் கிராமங்களை சுற்றியுள்ள மாணவ-மாணவிகள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்கள் வாயிலாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தேவகோட்டை-காரைக்குடி சாலையில் உள்ளது. காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.

    பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் இருந்தால் மட்டுமே ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்களை தடுக்க முடியும் என போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தெரிவித்தனர். மாவட்ட துணை கண்காணிப்பாளர் காலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் காவலர்கள் பஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி மையத்தில் இல்லாதது கேள்விக்குறியாக உள்ளது.

    • மாவட்ட விளையாட்டு அலுவலர் தொடங்கி வைத்தார்
    • சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் சபீர் (வயது27). இவர் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு 58 மணி நேரத்தில் 3ஆயிரத்து 600 கிலோமீட்டர் தூரத்தை காரில் கடந்து சாதனை நிகழ்த்தி உள்ளார்.

    இதனை முறியடிக்கும் வகையில் கன்னியா குமரியில் இருந்து காஷ்மீருக்கு அதே தூரத்தை 48 மணி நேரத்தில் கடக்க சபீர் திட்டமிட்டார். அதன்படி அவரது சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி 4 வழி சாலை முடிவடையும் சீரோ பாயிண்ட் பகுதியில் நடந்தது.

    அவரது சாதனை பய ணத்தை குமரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலு வலர் டேவிட் டேனியல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சபீர், தேசிய நெடுஞ்சாலை 44 வழியாக பல்வேறு மாநிலங்களை கடந்து 3600 கிலோ மீட்டர் தூரத்தை 48 மணி நேரத்தில் கடந்து காஷ்மீர் சென்றடைகிறார்.

    இதன் மூலம் இவரது சாதனை பயணம் சாதனை பயணம் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது புத்தகத்தில் இடம் பெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
    • காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கருவப்பஞ்சேரி என்கிற இடத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அபிலேஷ் குடும்பத்தினருடன் வேளாங்கண்ணிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    தூக்க கலக்கத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.

    அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காரில் பயணித்த 2 ஆண்கள், ஒரு பெண், 2 குழந்தைகள் என 5 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வேளாங்கண்ணி புறப்பட்டு சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து எடையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
    • 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி கேரளாவை சேர்ந்த 23 இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசம் வரை மோட்டார் சைக்கிள் சாதனைப் பயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த மோட்டார் சைக்கிள் சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சாதனை மோட்டார் சைக்கிள் பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட6 மாநிலங்கள் வழியாக வருகிற 11-ந்தேதி மத்தியபிரதேசத்தை சென்றடைகிறது. மொத்தமுள்ள 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.

    • நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கனியாகுளம் பாறையடி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது 54).

    இவர் ஒற்றைக் காலை இழந்த மாற்றுத்திறனாளி ஆவார். பெயிண்டராக வேலைபார்க்கும்இவர் இளைஞர்களிடையே நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி இவரது சைக்கிள் பயணத்தின் தொடக்க விழா கன்னியா குமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபம் முன்பு நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான வக்கீல் ஆர். மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அவரது சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, வடக்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் மதியழகன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் டென்னிஸ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பய ணம் புறப்பட்ட இவர் நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னையை அடுத்த மாதம் (செப்டம்பர்) பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான 15-ந்தேதி சென்றடைகிறார். நாளொன்றுக்கு நூறு கிலோமீட்டர் வீதம் மொத்தம்1500 கிலோமீட்டர் தூரம் இவர் சைக்கிள் பணம் மேற்கொள்ள உள்ளார்.

    • பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.
    • பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன் ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு அதன் செயல்முறை விளக்கம் குறித்து அறிந்து கொண்டனர்.

    சீர்காழி:

    சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி மாணவ -மாணவியர்கள் கல்வி களப்பயணங்களை மேற்கொண்டனர். கல்வி பாடத்திட்டத்தின் ஒரு அங்கமான கல்வி களப்பயணங்களை, சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலக த்திற்கும், செம்மங்குடி பிரட் தொழிற்சாலைக்கும் மற்றும் காய்கனி மொத்த விற்பனை நிலையங்களுக்கும் களப்பய ணங்களை மேற்கொ ண்டனர். பள்ளி முதல்வர் வித்யா கள பயணங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பள்ளி மாணவ-மாணவி யர்கள் பள்ளி வாகனங்களில் களப்பயண இடத்திற்கு அழைத்துச் செல்ல ப்பட்டனர். மழலையர் பள்ளி குழந்தைகளை, வகுப்பு ஆசிரியைகள் அருணா மற்றும் சிந்து ஆகியோர் தலைமையேற்று அழைத்துச் சென்றனர். மாம்பழம் மற்றும் காய்கனி வளாகத்திற்கு சென்று காய்கறி மற்றும் பழங்களை தொட்டு உணர்ந்து அதன் நிறம், மணம், வடிவம் அதன் தன்மை பற்றியும், சமையலில் அதன் பங்கு பற்றியும் கற்றுணர்ந்தனர்.

    இரண்டாம் வகுப்பு மாணவர்கள் மகாலட்சுமி ஆசிரியையின் தலைமையில் செம்மங்குடி பிரட் பேக்கரிக்கு சென்று பிரட், பன், ரொட்டி, பிஸ்கட்ஸ், கேக் மற்றும் அனைத்து பேக்கரி உற்பத்திகளையும் கண்டு, அதன் செயல்முறை விளக்கம், அது எவ்வாறு பேக்கிங் செய்யப்படுகின்றது போன்ற செயல்களை அறிந்து கொண்டனர்.

    1-ம் வகுப்பு மாணவ -மாணவியர்கள் ஆசிரியை பரணி ஸ்ரீ தலைமையில் சீர்காழி தலைமை அஞ்சலகம் மற்றும் கடவுச்சீட்டு அலுவலகம் ஆகியவற்றை நேரில் பார்க்கும் வாய்ப்பை பெற்றனர். அஞ்சலக செயல்பாடுகள், பயன்கள், சேவைகள் ஆகியவற்றை அலுவலக அதிகாரிகள் செயல்முறை விளக்கத்துடன் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளியின் நிர்வாக அதிகாரி அன்பழகன் நன்றி தெரிவித்தார்.

    • மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
    • ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்கள் அந்தக் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த 13-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து பள்ளி வாகனங்கள் தரமான நிலையில் உள்ளதா? மாணவர்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்ய அனைத்து வசதிகளும் உள்ளதா என வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட இடங்களை சேர்ந்த 270 பள்ளி வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைத்து தணிக்கை செய்யப்பட்டது.

    இதில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். ஒவ்வொரு வாகனமாக ஏறி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? அவசரகால வழி கதவு உள்ளதா? வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பது உள்ளிட்ட பலவற்றை தணிக்கை செய்து ஆய்வு செய்தார். இதில் சிறு சிறு குறைகள் கண்டறியப்பட்ட சில வாகனங்களை இயக்கக் கூடாது. அந்தக் குறைகள் அனைத்தும் முழுமையாக சரி செய்த பிறகு தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். முன்னதாக பள்ளி வாகன டிரைவர்களுக்கு நடந்த கண் பரிசோதனை முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதையடுத்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    தஞ்சை மாவட்டத்தில் இன்று 718 பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பள்ளிகளை சேர்ந்த வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் சிறுசிறு குறைகள் கண்டறியப்பட்ட வாகனங்கள் அந்தக் குறைகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்த பிறகே இயக்க அனுமதிக்கப்படும். மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் கண்டிப்பாக 5 வருடம் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். உரிய நேரத்திற்கு பஸ்கள் செல்ல அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. செல்போன் பேசியபடி வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஆனந்த், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×