search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227376"

    • விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.

    தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.
    • சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார். இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய மான்செஸ்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடி உள்ளார். சேலை அணிந்து கொண்டு அவர் மாரத்தான் ஓடியது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். தனது மாரத்தான் அனுபவம் குறித்து மதுஸ்மிதா ஜெனா கூறுகையில், சேலை அணிந்து மாரத்தான் ஓடிய ஒரே நபர் நான் தான். இவ்வளவு நீண்ட தூரம் ஓடுவது ஒரு தொடர் வேலை.. ஆனால் சேலையில் இவ்வாறு செய்வது இன்னும் கடினமானது. முழு தூரத்தையும் 4.50 மணி நேரத்தில் முடிக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    எனது பாட்டி, தாயார் எப்போதும் சேலை அணிந்திருந்ததால் அவர்களை பார்த்து இந்த ஆடையை தேர்ந்தெடுத்தேன். பெண்கள் சேலை அணிந்து கொண்டு ஓட முடியாது என்று பலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் முடிவு தவறானது என நிரூபித்துள்ளேன் என்றார். 

    • வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு
    • கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறை சார்பில் தீ தொண்டு வார விழாவை முன்னிட்டு தீ விபத்து ஏற்படாத வகையிலும், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வாகன விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்று காலை தீயணைப்பு துறை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டி கடலூர் டவுன் ஹாலில் இருந்து புறப்பட்டு தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை வரை நடைபெற்றன.

    இப்போட்டியில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு துறை வீரர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும் தீயணைப்பு துறை சார்பில் தீ விபத்து நடைபெறாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு மாவட்ட தியணைப்பு அதிகாரி குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். அப்போது தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் ஆறுமுகம், நிலைய அலுவலர்கள் விஜயகுமார், கொளஞ்சிநாதன், கொளஞ்சிநாதன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • கந்தர்வகோட்டையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார்.

    கந்தர்வகோட்டை

    கந்தர்வகோட்டையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. மற்றும் மாவட்ட அயலக அணி சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மாவட்ட கழகச் செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்து போட்டியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ் அய்யா, நகரச் செயலாளர் ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் பாலகுமார், சுரேஷ் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

    • விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி மாரத்தான்.
    • 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு.

    தஞ்சாவூர்:

    சுற்றுசூழலை பாதுகாத்திட வேண்டும். விபத்தை தடுத்திட, பொது போக்குவரத்தை பலப்படுத்தி பொதுத்துறையை பாதுகாத்திட வலியுறுத்தி தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம்- சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    மண்டல தலைவர் காரல்மார்க்ஸ், பொது செயலாளர் மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டியை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் ஆண்கள், பெண்களுக்கு தனி தனி பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு மாரத்தான் ஓடினர்.

    போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.8000, ரூ.6000, ரூ.5000 மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு ரூ.6000, ரூ.5000, ரூ.3000 மற்றும் 2 பிரிவுகளிலும் தலா 7 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

    பரிசுகளை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், சி.ஐ.டி.யூ தமிழ்நாடு மாநில துணை பொது செயலாளர் திருச்செல்வன், மாநில செயலாளர் ஜெயபால், அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல், சின்னை.பாண்டியன் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    போட்டியை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன், சி.ஐ.டி.யூ மாவட்ட தலைவர் கண்ணன், எஸ்.இ.டி.சி- சி.ஐ.டி.யூ மாநில துணை தலைவர் வெங்கடேசன், சி.ஐ.டி.யூ மாவட்ட துணை செயலாளர்கள் அன்பு, செங்குட்டுவன், எஸ்.எப்.ஐ. மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஜீவா, திருநாவுக்கரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மண்டல பொருளாளர் ராமசாமி நன்றி கூறினார்.

    • திருச்சி உழவர் சந்தையில் மாதவிடாய் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது
    • இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருச்சி:

    திருச்சி ரீகேப் இந்தியா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் 16 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. மாதவிடாய் சுகாதாரம் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற இந்த மாரத்தானில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ரீகேப் இந்தியா சாரிட்டபிள் டிரஸ்ட் இன் தலை–வர் தலைவர் மற்றும் அறங்காவலர் தலைமையில் நடைபெற்ற மாரத்தான் போட்டிக்கு, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் சுப சோமு, மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை, ஜங்ஷன் கோட்டத் தலை–வர் பிரியங்கா பட்டேல், பிரிவு பஜார் மைதீன், வெல்லமண்டி பாலசுப்பிர–மணியன், வீரேஸ்வரம் சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நந்தினி சக்திவேல் நன்றி கூறினார்.


    • மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார்.
    • 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    சிட்னி :

    ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வயதான இவர் ஆரம்பத்தில் தொழில்முறை ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்தார்.

    ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப்பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார். மேலும் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை கேட் ஜேடனின் சாதனையை முறியடிக்கவும் அவர் விரும்பினார்.

    அதன்படி 5 மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஒரு முனையில் இருந்து நாட்டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மாரத்தான் ஓட்டத்தை முர்ரே தொடங்கினார்.

    ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதிக்கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார். தொடர் மாரத்தான் ஓட்டத்தால் உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள், கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்தபோதும் முர்ரே மாரத்தானை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடினார். அதன்படி அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி 6,300 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தார்.

    இதன் மூலம் கேட் ஜேடனின் சாதனையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை முர்ரே படைத்துள்ளார்.

    • கோவை மாநகர போலீஸ் நிலையங்களில் நடைபெற்றது.
    • போலீஸ், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகர போலீஸ் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    கோவை நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி இந்த மாரத்தான் போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து மாரத்தான் போட்டியில் பங்கேற்றார்.

    இந்த மாரத்தானானது அவிநாசி ரோடு வழியாக வ.உ.சி மைதானம் வரை 5 கி.மீ. நடைபெற்றது. இதில் போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன், துணை கமிஷனர் சிலம்பரசன் உதவி கமிஷனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதேபோன்று கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாரத்தான் ஓட்டம் பாலக்காடு ரோடு இடையர்பாளையம் பிரிவில் இருந்து கோவைப்புதூர் பிரிவு வரை நடைபெற்றது.

    மாரத்தான் ஓட்டத்தை தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா சாலை பாதுகாப்பு குறித்த பேசினார். அதனை தொடர்ந்து ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் குனியமுத்தூர் போலீஸ் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.உக்கடம் போலீசார் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் முதல் இடத்தை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    சாலை பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு இன்று கோவை மாநகர போலீஸ் நிலையங்கள் அனைத்திலும் மாரத்தான் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    • 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்
    • மாநில அளவிலான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது

    கரூர்:

    கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும், மூன்றாமிடத்தை கரூர் மாவட்ட அரசு கலைக் கல்லூரி மாணவர் வல்லரசு பெற்றார். மூன்றாமிடம் பெற்ற மாணவரை கல்லூரி முதல்வர், உடற் கல்வித்துறை இயக்குநர் உள்பட அனைவரும் பாராட்டினர்.

    • மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.
    • ஆண்கள், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது.

    சென்னை:

    சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் சென்னை மாரத்தான் ஓட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான 11-வது மாரத்தான் பந்தயம் இன்று நடந்தது. நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி திரட்டும் நோக்கிலும் இந்த பந்தயம் நடத்தப்பட்டது.

    ஆண்கள், பெண்களுக்கான இந்த மாரத்தான் ஓட்டம் 4 வகையாக நடத்தப்பட்டது. முதலில் முழு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த பந்தயம் 42.195 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. 32.186 கிலோ மீட்டர் (16 வயதுக்குட்பட்டோர்) தூரத்துக்கு ஓட்டம் நடந்தது. மினி மாரத்தான் (21.097 கிலோ மீட்டர்) 10 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளில் பந்தயம் நடந்தது.

    4 பிரிவுகளில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முழு மாரத்தான் பந்தயம் நேப்பியர் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், அக்கரை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே முடிவடைந்தது.

    21 கிலோ மீட்டர் தூரத்துக்கான மினி மாரத்தான் ஓட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.

    இந்த போட்டியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பந்தயம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவடைந்தது. அமைச்சர் மனோ தங்கராஜ், டி.ஜி.பி. சைலேந்திர பாபு இதில் பங்கேற்றனர். 10 கிலோ மீட்டர் தூர பந்தயம் காலை 6 மணிக்கு நேப்பியர் பாலத்தில் இருந்து தொடங்கியது. சாந்தோம், அடையாறு வழியாக தரமணி சென்றடைந்தது.

    மாரத்தான் ஓட்டத்தையொட்டி கடற்கரை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

    • கந்தர்வகோட்டையில் மாவட்ட தி.மு.க. சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை வடக்கு தி.மு.க. கழகம் சார்பில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை எளியோர் எழுச்சி நாளாக கொண்டாடும் வகையில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை வடக்கு மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பரமசிவம், நகரச் செயலாளர் ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராணி முருகேசன், கவிதா மணிகண்டன், தெற்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் கலையரசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கலந்து கொண்டு ஓடினார்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டது.


    • சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் போதை விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகர போலீஸ் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் இன்று காலை சேலம் காந்தி ஸ்டேடியத்தில் போதை பொருட்களுக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    இதை துணை கமிஷனர்கள் ராதா–கிருஷ்ணன், மாடசாமி, லாவண்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மினிமாரத்தான் காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து 4 ரோடு, புதிய பஸ் நிலையம், ஏ.வி.ஆர் ரவுண்டானா வரை சென்று மீண்டும் விளையாட்டு மைதானத்தில் முடிவடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதையொட்டி முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×