search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 233586"

    • பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
    • இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை அழகர் மலையில் உள்ள முருகனின் 6-வது படை வீடான பழமுதிர்சோலை முருகன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் நல்லதம்பி, மேலூர் ஆய்வா ளர் அய்யம்பெருமாள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர்.

    இதில் கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
    • போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    திருப்போரூரில் உள்ள புகழ்பெற்ற கந்தசுவாமி கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்பட்டது.

    இந்து சமய அறநிலைத் துறை ஆய்வாளர் பாஸ்கர் முன்னிலையில், திருப்போரூர் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல், மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் செயல் அலுவலர் மேகவண்ணன், திருப்போரூர் கோவில் மேலாளர் வெற்றிவேல் ஆகியோர் மேற்பார்வையில் கோவில் ஊழியர்கள் மற்றும் சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பக்தர்கள் ஏராளமனோர் இதில் ஈடுபட்டனர்.

    இதில் ரொக்கமாக ரூ.28 லட்சத்து 80 ஆயிரத்து 639-ம், 288 கிராம் தங்கமும், 2,305 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. உண்டியல் பணம் எண்ணும் பணியையொட்டி பக்தர் கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    • சிங்கம்புணரி அம்மன் கோவிலில் பணத்துடன் உண்டியலை திருடிச்சென்ற கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.
    • அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி- வேங்கை பட்டி ரோட்டில் தனியா ருக்கு சொந்தமான கன்னிகா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாய்பாபா சன்னதியும் உள்ளது.

    இங்கு ஒரு அடி உயரத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று இரவு பூஜைகள் முடிந்ததும் கோவிலை வழக்கம் போல் மூடிவிட்டு கோவில் ஊழி யர்கள் சென்று விட்டனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையன் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து சாய்பாபா சன்னதி யில் பணத்துடன் இருந்த உண்டியலை திருடிச்ெசன்று விட்டான்.

    இன்று காலை வழக்கம் வழக்கம் போல் அர்ச்சகர் பாலசுப்பிரமணியன் கோவிலை திறந்தார். அப்போது சாய்பாபா சன்னதியில் இருந்த உண்டி யல் திருட்டு போயிருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந் தார். இது பற்றி அவர் கோவில் நிர்வாகிக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உண்டியல் திருடப்பட்டது பற்றி சிங்கம்புணரி போலீசில் கோவில் நிர்வாகி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது திருடப்பட்ட உண்டியல் அருகில் உள்ள வர்த்தக சங்க கட்டிடத்தின் மாடியில் கிடப்பது தெரியவந்தது. அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையன் உண்டியலை அங்கு போட்டு சென்று உள்ளான். உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என்பது தெரியவில்லை.

    அங்கு கண்காணிப்பு காமிரா வசதி இல்லாததால் கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? என்பது தெரியவில்லை. இந்த துணிகர திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அழகர்கோவில் சித்திரை திருவிழாவில் தள்ளுவண்டி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.
    • சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மதுரை

    அழகர்கோவில் சித்திரை திருவிழா சிறப்புடன் நடைபெற்று முடிவடைந்தது. சித்திரை திருவிழா புறப்பாட்டின் போது கள்ளழகருடன் மதுரை சென்று வந்த தற்காலிக தள்ளுவண்டி உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கோவில் செயல் அலுவலர் ராமசாமி, இருக்கன்குடி மாரியம்மன் கோவில், செயல் அலுவலர் கருணாகரன், இந்து சமய அறநிலையத்துறை வடக்கு மண்டல ஆய்வாளர் கர்ணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள், பக்தர்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே புலவர் நத்தம் கிருஷ்ணாபுரத்தில் சர்வ சித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.

    நேற்று தரிசனம் முடிந்து கோவில் பூட்டப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்தனர்.

    கோவில் உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரித்தனர்.

    உண்டியல் கடந்த ஓராண்டாக எண்ணப்ப டாமல் இருந்ததால் அதில் பல ஆயிரம் பணம் இருக்கும் என தெரிகிறது.

    இது பற்றிய புகாரின் பேரில், உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது:-

    எங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது.

    மின் மோட்டாரின் காப்பர் வயர்கள் அடிக்கடி திருடு போகிறது.தற்போது கோவில் உண்டியல் பணம் மர்ம நபர்களால் கொள்ளைய டிக்கபட்டு உள்ளது.

    தொடர் திருட்டு சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மர்ம நபர்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை போனது.
    • இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது.

    விருதுநகர்

    சிவகாசி ராதாகிருஷ்ணன் காலனியை சேர்ந்தவர் பால்பாண்டி(29). இவர் அண்ணாநகர் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு எதிரில் முனீஸ்வரர் கோவில் பீடம் உள்ளது. இங்கு உண்டியல் வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் மர்மநபர்கள் உண்டியலை எடுத்துச்சென்று அதில் இருந்த பணத்தை திருடிவிட்டனர். இதுபற்றி அறிந்த பால்பாண்டி சிவகாசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம்
    • உண்டியல் எண்ணும்பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும் கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் இந்த அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சுஜித், கோவில் பொருளாளர்கண்ணதாசன், கணக்காளர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும்பணி யில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.93ஆயிரத்து39வசூல்ஆகி இருந்தது.

    • கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது.
    • 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் உண்டியல் திறப்பு கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதிக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை இந்து சமய அறநிலைய த்துறை திருப்பூர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன், காங்கயம் ஆய்வாளர் அபிநயா முன்னிலையில் திறக்கப்ப ட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை அறநிலைத்துறை பணியா ளர்கள் எண்ணினார்கள்.

    அதில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரத்து 323 ரொக்கமும், 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    • காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது
    • , சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்காபக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.


    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்க ளும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இறுதியில்(டிசம்பர் மாதம்) இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற இருப்பதால், கடந்த வாரம் 16-ந் தேதி உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது.

    இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாரம் இரு நாட்கள் என 4 நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணி நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முடிவில், ரூ.2 கோடியே 7 லட்சம் பணமும், 150 கிராம் தங்கம், 1.5 கிலோ வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது. உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உண்டியலில் கிடைக்க ப்பெற்ற காணிக்கை மற்றும் பணம் உரிய பாதுகாப்புடன் கோவில் நிர்வாக வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

    • இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
    • பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது

    கடலூர்:

    இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.அப்படிசிவபெருமான்விரும்பிஎழுந்தருளிபிரசித்திப்பெற்றதுதிருவதிகை வீரட்டானேஸ்வரர்கோவில். இங்கு அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    சாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வரும் வழியில் தான் காணிக்கைஉண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த காணிக்கை உண்டியல்கள் திறப்பு கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது

    • கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - காட்டுக் கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.           கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    உண்டியலில் ரூ. 5 ஆயிரம் வரை பணம் இருந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் எதுவும் இல்லை. மெயின் ரோடு பகுதியில் தான் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    சாத்தூர்,

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் இம்மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. 8 நிரந்தர உண்டியல் 1 கோசாலை உண்டியல் உள்பட 9 உண்டியல்கள் திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன.

    அதில் ரொக்கம் ரூ.37 லட்சத்து 67 ஆயிரத்து 839-ம், தங்கம்- 179.96 கிராம், வெள்ளி- 551.84 கிராம் ஆகியவை காணிக்கையாக கிடைத்தது.

    இந்து அறநிலைய துறை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உதவி ஆணையர் மற்றும் நேர்முக உதவியாளர் யக்ஞநாராயணன், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள் உண்டியல் எண்ணும் பணியினை பார்வையிட்டனர்.

    தமிழக அரசு உத்தரவின் படி உண்டியல் திறப்பானது கோவில் யூடியூப்பிலும் ஒளிபரபரப்பு செய்யப்பட்டது.

    ×