search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரிசனம்"

    • நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி நடைபெற்றது.
    • சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே திருக்காட்டுப் பள்ளியில் அன்னகாமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.

    முன்னதாக கடந்த 19-ந் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. பின்னர், காவிரி கரைக்கு தீர்த்தகுடம் எடுத்து வரும் நிகழ்வு நடந்தது.அதனைத் தொடர்ந்து, மாலையில் விக்னேஷ்வர பூஜைகள் நடைபெற்று கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள யாக குண்டத்தில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 2-ம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி விக்னேஷ்வர பூஜை, கோ பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்று தீபாராதனை காண்பி க்கப்பட்டது. பின்னர், கடம் புறப்பாடு நடந்து, கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, மூலவர் அன்னகாமாட்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின், பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் ஆமாதள நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    மருங்கூர் கோவில்

    இதேபோல், மருங்கூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் சவுந்தரநாயகி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு நேற்று புவனேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது.‌
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கோவிலூர் நெல்லி தோப்பில் பிரசித்தி பெற்ற காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழக மச்சம் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது காத்தாயி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.முதல் நாள் காத்தாயி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று புவனேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. இன்று மகேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டது. நவராத்திரி விழாவில் ஒவ்வொரு நாட்களும் காத்தாயி அம்மனுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்யப்படுகிறது.

    விழாவில் காலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் , அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது . பின்னர் கன்னியா பூஜை, துர்கா பூஜை, சரஸ்வதி, லட்சுமி பூஜைகள் நடைபெற்றன. மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காத்தாயி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே காத்தாயி அம்மன் கோவில் வளாகத்தில் நவராத்திரி கொலு பொம்மை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனையும் பக்தர்கள் பார்வையிட்டனர்.

    • தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டார்.
    • கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த திருநா கேஸ்வரம் நாகநா தசாமி கோவிலுக்கு புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தரிசனம் செய்வதற்காக வந்தார்.

    அவருக்கு கோவில் அறநிலையத்துறை சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கோவிலில் தனி சன்னதியில் அருள்பா லித்து வரும் நாககன்னி, நாகவல்லி சமேத ராகுப கவானுக்கு மஞ்சள், சந்தனம், பால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் அவர் கலந்து கொண்டு ராகு பகவானை தரிசித்தார்.

    ராகு தோஷம் நீங்க தட்டுகளில் உளுந்தை நிரப்பி 9 நல்லெண்ணெய் விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தார்.

    தொடர்ந்து, அம்பாள் சன்னதிக்கு சென்று வழிபாட்டார்.

    பின்னா, திருபுவனத்தில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தர்மசம்வர்த்தினி சமேத கம்பகரேஸ்வரர் கோவிலுக்கு சென்று கம்பகரேஸ்வரர், அம்பாள் மற்றும் சரபேஸ்வரர் சன்னதிகளில் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.

    முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது.

    • இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையொட்டி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள்.
    • சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

    மதுரை

    இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு மதுரை மற்றும் சுற்றுவட்டார பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூடலழகர் பெருமாள் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கூடலழகர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதிகளிலும் பக்தர்கள் வரிசையில் நின்று வழிபட்டனர்.

    தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி-அம்பாளை தரிசனம் செய்தனர்.

    அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர். இதனால் அழகர் கோவில் பகுதியில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் சுவாமி-அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலையில் இருந்தே பக்தர்கள் தொடர்ச்சியாக வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் யோகநரசிங்க பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெருமாள் சிறப்பு அலங்கா ரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திருப்பரங்குன்றம் வீர ஆஞ்சநேயர் கோவில், கைத்தறிநகர் பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், முனிச்சாலை பாலாஜி வெங்கடேசுவர பெருமாள் கோவில், காமராஜர் சாலை ஆஞ்சநேயர் கோவில், தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • ஸ்ரீவில்லி. திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
    • இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அருகே ஆண்டாள் கோவி லின் உப கோவிலான பிரசித்தி பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. இந்த கோவிலில் கோவிலில் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இதற்காக அதிகாலை நான்கு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு அலங்கார ஆராதனைகள் நடை பெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி வந்து பெருமாளை தரிசனம் செய்தனர் முன்னதாக கோவில் அடிவாரத்தில் உள்ள கோனேரி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடியும், கால்களை அனைத்தும் அங்குள்ள ஆதி விநாயகர் மற்றும் நாகர் சிலைகளை வழிபட்டு ஸ்ரீனிவாச பெருமாளை தரிசனம் செய்ய சென்றனர்.

    அங்கு பக்தர்களுக்கு துளசி கற்கண்டு மற்றும் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது இதை அடுத்து அலர்மேல் மங்கை தாயார் சன்னதி மற்றும் வேணுகோபால சன்னதி ஆகிய இடங்களிலும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

    புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழ மையை முன்னிட்டு பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி உள்ளிட்ட ஊர்களில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    இதே போல் பக்தர்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் கழிப்பறை வசதி களும் செய்து தரப்பட்டு இருந்தன. மேலும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப் படுத்தவும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதிகளிலும், திரு வண்ணாமலை கோவிலி லும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் ரங்க மன்னருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதிலும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • மகா நந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலகப் புகழ் பெற்றது.

    மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோவில் கட்டி டக்க லைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவதோடு உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது.

    பெரிய கோவிலில் உள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தப்படும்.

    அதன்படி நேற்று பிரதோஷம் என்பதால் மகாநந்திக்கு பால், மஞ்சள் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
    • பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெற்றையடியில் அமைந்துள்ளது ஸ்ரீஷீரடி சாயிபாபா ஆனந்த ஆலயம். இந்த ஆலயத்தில் வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாய்பாபாவின ஒளிரூப தரிசனவிழா நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு ஆனந்த சாய் பஜன்ஸ் வழங்கும் பாபாவின் கானமழை நடைபெறுகிறது.

    காலை 11.20 மணி முதல் கூட்டு பிராத்தனை, மவுன ஆராதனை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு ஸ்ரீஷீரடி சாயிபாபாவின் திவ்ய பாதங்களில் 3 நிமிடங்கள் ஏற்படும் பாபாவின் திவ்ய அதிர்வுகளும், இந்திரலோக பிரகாசமும் நடைபெறுகிறது. மதியம் 12.15 மணிக்கு ஆர்த்தி மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாயி சேரிட்டபுள் டிரஸ்ட் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள், ஸ்ரீஷீரடி சாயி சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

    • காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்ட ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும்.
    • தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் ஒரே அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் வானமுட்டி பெருமாள் அருள்பாலி க்கிறார்.

    இக்கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

    முன்னதாக ஆலய நிர்வாகம் சார்பில் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தார்.

    தொடர்ந்து செய்தியாளர்க ளிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது :-

    ஆன்மீகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    காவிரி பிரச்சனையை தமிழக அரசு சட்டரீதியாகவும் நட்பு ரீதியாகவும் கையாள வேண்டும், தமிழக முதல மைச்சர் கொள்கை கூட்டணி என கூறுகிறார்.

    ஆனால் அனைவருக்கும் தண்ணீர் சமம் என்ற கொள்கைக்கு ஏற்றார்போல் செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.

    சென்ற காலங்களில் இருந்த முதலமைச்சர் போல் தமிழக முதல்வர் தண்ணீர் பெற்று தருவதற்கு தீவிரமான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

    தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை.

    இதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியின் போது மயிலாடுதுறை பொறுப்பு ஆர்.டி.ஓ. அர்ச்சனா, தாசில்தார் மகேந்திரன், மற்றும் பிஜேபி கட்சி தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நாட்டுமட மாரியம்மன் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    8-ம் நாள் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள் பால் தயிர் பஞ்சாமிர்தம் பன்னீர் இளநீர் சந்தனம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்பு அம்மன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் பரிவார தேவதைகளுடன் கோவிலை சுற்றி வீதி உலா காட்சி நடைபெற்றது வேதாரணியம் கோயில் வாதின வித்துவான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

    • கோவில் உட்பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் அமைந்துள்ள ராஜ கோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    இங்குள்ள 16 கரங்களுடைய சக்கரத்தாழ்வார் 16 வகையான செல்வங்களை தருவதாக ஐதீகம்.

    பக்தர்கள் இக்கோவில் உட்பிரகாரத்தை 24முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்த காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் இன்று புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.

    • பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் உள்ளது
    • விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டியில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஹரித்ரா விநாய கருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வழிபட்டால் கடன் தொல்லை களை நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.

    இந்த நிலையில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது .

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள் .

    ×