search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 234502"

    • 4 பேர் கும்பல் அட்டகாசம்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த ஒலப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). மெக்கானிக். இவர் வெளியூர் சென்று விட்டு நேற்று அதிகாலை பஸ்சில் வந்தவாசிக்கு திரும்பினார்.

    அதன்பின் வந்தவாசியிலிருந்து ஒலப்பாக்கத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். மேல் பாதிரி இருளர் குடியிருப்பு அருகே சென்றபோது பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மணிகண்டனை மடக்கியுள்ளனர்.

    பின்னர் அவரை மிரட்டி அவரிடமிருந்து ரூ.23 ஆயிரம், செல்போன், வெள்ளி செயின் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து மணிகண்டன் வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடு பட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • 2 போலீஸ்காரர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
    • பணியில் சேர்ந்த நாள் முதல் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டனரா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று மாஜிஸ்தி ரேட்டு அதிரடியாக உத்தரவிட்டார்.

    சென்னை:

    தாம்பரம் அடுத்துள்ள மணிமங்கலத்தில், கடந்த வாரம் ஒரு காதல் ஜோடி காரில் தனிமையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மணிமங்கலம் போலீஸ்காரர்கள் மணிபாரதி (வயது 37), அமிர்தராஜ் (35) ஆகியோர் காதல் ஜோடி காரில் இருப்பதை கண்டனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    அப்போது அவர்களது முகவரிகளை வாங்கி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்போவதாக மிரட்டியுள்ளனர்.

    பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றால் நாங்கள் சொல்வதை செய்ய வேண்டும் என்றும் போலீசார் நிபந்தனை போட்டனர். இறுதியாக பணம் கேட்டபோது, காதல் ஜோடியிடம் ரொக்கம் இல்லை. இதையடுத்து கூகுள்பே மூலம் ரூ.4 ஆயிரம் பெற்றுக் கொண்டு பல மணி நேரத்துக்கு பின்னர் விடுவித்துள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட காதல் ஜோடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் மணிமங்கலம் போலீசார், 2 போலீஸ்காரர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தி போலீஸ்காரர்கள் மணிபாரதி, அமிர்தராஜ் ஆகியோரை கைது செய்தார்.

    இவர்களை தாம்பரம் மாஜி்ஸ்திரேட்டு எஸ்.சஹானா முன்பு ஆஜர்படுத்தினர். ஆவணங்களை படித்துப் பார்த்த மாஜிஸ்தி ரேட்டு எஸ்.சஹானா, "இந்த வழக்கு ஆவணங்களை பார்க்கும்போது, இந்த 2 போலீஸ்காரர்களும் பணம் பறித்த குற்றத்தை மட்டும் செய்ததாக தெரியவில்லை. அதையும் தாண்டி மிகப்பெரிய குற்றத்தை செய்திருப்பதாக தெரிகிறது.

    இளம் பெண்ணிடம் பெண் போலீஸ் இல்லாமல் இவர்கள் விசாரணை நடத்தியது ஏன்? இவர்கள் ஏற்கனவே இதுபோல குற்றங்களை செய்திருக்க வேண்டும். அதனால், இவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஏதாவது குற்றச்செயலில் ஈடுபட்டனரா? என்பதையும் போலீசார் விசாரிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டார். பின்னர் கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

    • மடிப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த பிரகாசை நண்பர்களான முருகராஜ், ரமேஷ், ஜவகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றனர்.
    • பணத்திற்காக பிரகாஷ் காரை கட்டாயப்படுத்தி விற்க வைத்தனர். அதில் வந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து விட்டு பிரகாசை விடுவித்தனர்.

    ஆலந்தூர்:

    அண்ணாநகரை சேர்ந்தவர் பிரகாஷ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு மடிப்பாக்கம், மேடவாக்கம் மெயின் ரோட்டில் ரியல் எஸ்டேட் அலுவலகம் உள்ளது.

    இவர், மடிப்பாக்கத்தை சேர்ந்த முருகராஜ், கீழ்கட்டளையை சேர்ந்த ரமேஷ், மயிலாப்பூரை சேர்ந்த ஜவகர் ஆகியோருடன் சேர்ந்து ஒரு இடத்தை விற்பனை செய்ததாக தெரிகிறது.

    இதில் பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கிடையே பணம் கொடுக்கல்-வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதையடுத்து மடிப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்த பிரகாசை நண்பர்களான முருகராஜ், ரமேஷ், ஜவகர் ஆகிய 3 பேரும் சேர்ந்து கடத்தி சென்றனர். பின்னர் பணத்திற்காக அவரது காரை கட்டாயப்படுத்தி விற்க வைத்தனர். அதில் வந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து விட்டு பிரகாசை விடுவித்தனர்.

    இதுகுறித்து பிரகாஷ் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்த மடிப்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    போலீசார் விசாரணையில் பிரகாஷை கடத்தி, அவருடைய காரை விற்று ரூ.50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து மடிப்பாக்கம் போலீசார் முருகராஜ் ,ரமேஷ், ஜவகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தொழிலாளி-வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை தேடி வருகின்றனர்.
    • அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    மதுரை

    மதுரை மேலத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன் அழகர்(வயது21). இவர் சம்பவத்தன்று இரவு வில்லாபுரம் ஆர்ச் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி 950 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக அழகர், அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது கீரைத்துறையை சேர்ந்த சண்முகவேல் மகன் ரத்தினகுமார்(22), காமராஜபுரம், குமரன் தெரு குமரய்யா மகன் முனீஸ்வரன் (20) என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆனையூர் ஹவுசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது30). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று மாலை கே.வி.சாலையில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி, 4500 ரூபாயை பறித்துச் சென்றனர்.

    இது தொடர்பாக செல்வ ராஜ், செல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் பணம் பறித்தது அருள்தாஸ்புரம், பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்ல பாண்டியன் மகன் சேக் என்ற ஜெயக்குமார்(24) மற்றும் தினேஷ் என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • மோகனசுந்தரம் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார்.
    • ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம்(65). மீன் கடை ஊழியர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு செல்வதற்காக சத்தி ரோடு கணபதி அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். ஆத்திரமடைந்த வாலிபர் கத்தியை மோகனசுந்தரத்தின் கழுத்தில் வைத்து மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.600-யை எடுத்து கொண்டு தப்பினார்.

    இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கத்தி முனையில் பணம் பறித்தது கணபதி சின்னசாமி நகரை சேர்ந்த அரவிந்தசாமி(28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கணபதி மாநகரை சேர்ந்தவர் காவலாளி சாமிநாதன்(52). சம்பவத்தன்று இவர் கணபதி மணியக்காரம் பாளையத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம் பறித்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் பணம் பறித்த ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த ஆதித்யன்(28) என்பவரை கைது செய்து ஜெயிலில் யில் அடைத்தனர்.

    • ரவுடிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை

    சிவகங்கையை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவர் கோவையில் தங்கி காந்திபுரம் 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை ராஜ்குமார் பாரில் சுத்தம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ராஜ்குமாரிடம் மதுபாட்டில் தருமாறு கேட்டனர். அதற்கு அவர் கடை திறக்கவில்லை. 12 மணிக்கு பிறகு வந்து வாங்குமாறு தெரிவித்துள்ளார். இதில் அவர்களு க்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி ராஜ்குமாரை தாக்கினர். பின்னர் அவரிடம் இருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

    இதுகுறித்து ராஜ்குமார் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில் பார் ஊழியர் ராஜ்குமாரை தாக்கி பணம் பறித்தது ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த தொழிலாளி மோசஸ் (28), ரத்தினபுரி வ.உ.சி வீதியை சேர்ந்த மெக்கானிக் தீபக் (20) மற்றும் ரத்தினபுரி பட்டேல் வீதியை சேர்ந்த பூபதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் 3 பேர் மீதும் கோவை போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. அவர்கள் அந்த பகுதியில் ரவுடிகளாக சுற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

    • 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர்.
    • நடன ஆசிரியர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

    கோவை,

    கோவை சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவர் சரவணம்பட்டி- காளப்பட்டி ரோட்டில் கரும்பு ஜூஸ் மற்றும் தர்பூசணி பழ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு வாலிபர் ஒருவர் அடிக்கடி வந்து ஜூஸ் குடித்தும், பழங்கள் வாங்கியும் முழு பணத்தை தராமல் தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று மீண்டும் கடைக்கு வந்து பழங்கள் வாங்கி பணத்தை தராமல் இருந்தார்.இதனால் சசிகுமார் அவரை கண்டித்து அங்கிருந்து ெசல்லுமாறு கூறினார். பின்னர் சில நாட்கள் கழித்து அந்த வாலிபர் தனது 2 நண்பர்களை அழைத்து சசிகுமார் கடைக்கு வந்தார்.

    அங்கு 3 பேரும் சேர்ந்து ஜூஸ் குடித்து, தர்பூசணி பழங்களை வாங்கினர். அதற்கான பணத்தை சசிகுமார் கேட்டார். அதற்கு அவர்கள் பணம் தர மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சசிகுமாரிடம் இருந்த பணத்தை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து சசிகுமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் கணபதியை வ.உ.சி நகரை சேர்ந்த நடன ஆசிரியர் நித்திஷ்குமார் (21), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் திருமுருகன் (40) மற்றும் பீளமேடு காந்திமாநகரை சேர்ந்த மோகன் பிரசாத் (29) ஆகியோர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சரவணம்பட்டியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி சம்பவம் நடந்து வருகிறது.

    இதுகுறித்து போலீசார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து உள்ளனர்.

    • 2 பேர் கைது
    • ரூ.500 மற்றும் கத்தி பறிமுதல்

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை கன்னி கோவில் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 51).மார்க்கெட் பகுதியில் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

    இவர் நேற்று மாலை கோட்டை பின்புறம் உள்ள டவுன் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை முள்ளிபாளையத்தை சேர்ந்த உதயா (23) காகிதப்பட்டறையை சேர்ந்த ஆகாஷ்( 18 )ஆகியோர் வழிமறித்தனர். இருவரும் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி முனியப்பனிடமிருந்து ரூ.500-ஐ பறித்தனர்.

    இது குறித்து முனியப்பன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த உதயா, ஆகாஷ் இருவரையும் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.500 மற்றும் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இது போன்ற சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் கோட்டை சுற்றுச்சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தனிச்சியம் வடக்கு தெருவை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ரமேஷ் கண்ணன்(வயது36). இவர் நேற்று தனிச்சியம் பிரிவில் அலங்காநல்லூர் சாலையில் உள்ள செம்புகுடிபட்டி கால்வாய் பாலத்தில் உட்கார்ந்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரில் வந்த 4 மர்ம நபர்கள் இறங்கி வந்து ரமேஷ் கண்ணனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரை தாக்கினர். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காரில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது பற்றி ரமேஷ் கண்ணன் வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ‌.700 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார்.
    • சந்திரன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது 26), மண்ணிவாக்கம் பகுதியில் பழைய இரும்பு பொருட்கள் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல கடையை திறந்து கடையில் வெளியே பழயை பொருள்களை அடுக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபர் சந்திரனிடம் முகவரி கேட்டுள்ளார். பின்னர் சந்திரன் கீழே குனிந்து பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சந்திரன் சட்டை மேல் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.700 பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சந்திரன் ஒட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது.
    • அலாவுதீன், வாகித் ஆகியோர் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு முகநூலில் இருந்து துணை நடிகை பெயரில் நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    நடிகர் கனா தர்ஷனின் பெயரில் அவரது புகைப்படத்துடன் கூடிய பேஸ்புக் பக்கத்தில் இருந்து விடுக்கப்பட்ட நட்பு அழைப்பை ஏற்று இளம்பெண்ணும் முகநூல் வழியாக பழக தொடங்கினார்.

    அப்போது முகநூல் வழியாக இளம்பெண்ணுக்கு சினிமா, தொலைக்காட்சி தொடர்பாக பல்வேறு தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. நாங்கள் நினைத்தால் உங்களையும் பெரிய நடிகையாக்க முடியும் என்று ஆசை வார்த்தைகளை தெரிவித்து உள்ளனர். உங்களது போட்டோக்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் நடிகையாக தேர்வு செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

    இதனை நம்பி சினிமா நடிகையாகும் ஆசையில் இளம்பெண் தனது விதவிதமான போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இதன்பிறகு இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்து அவரது செல்போன் எண்ணுக்கே அனுப்பி 2 பேர் மிரட்டி உள்ளனர். இதன்பிறகே சினிமா நடிகர் பெயரில் தொடங்கப்பட்டது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.

    நடிகரின் பெயரில் போலி கணக்கை தொடங்கியது ஈரோட்டை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான அலாவுதீன், வாகித் என்பது தெரியவந்தது. இருவரும் காஞ்சிபுரம் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

    நாங்கள் கேட்கும் பணத்தை தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து ரூ.2 லட்சம் வரை பறித்துள்ளனர். அதன் பின்னரும் தொடர்ச்சியாக பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண் காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதன் பேரில் போலீசார் பணம் பறித்த சகோதரர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அண்ணன்-தம்பி இருவரின் செல்போன் எண்ணை வைத்து அவர்களின் முகவரியை போலீசார் கண்டுபிடித்தனர். இருவரும் ஈரோட்டில் பி.பி.அக்ரகாரம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் 2 பேரையும் கைது செய்து காஞ்சிபுரத்துக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    அலாவுதீன், வாகித் இருவரும் இதுபோன்று பல பெண்களை மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இதையடுத்து இருவரது செல்போன்கள், அவர்கள் பயன்படுத்திய லேப்-டாப் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஏராளமான பெண்களின் புகைப்படங்களும் இருந்தன.

    இதனை கைப்பற்றிய போலீசார் ரகசியமாக அப்பெண்களிடமும் புகார்களை வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

    • தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர்.
    • சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பெண்ணாடம் பகுதியை சேர்ந்த சுதாவிற்கு கடந்த செப்டம்பர் 27-ந்தேதி தனியார் ஆப் மூலம் ரூ.8,40,000 பரிசு கிடைத்துள்ளதாக தபால் வழியாக மர்ம நபர்கள் மூலம் கூப்பன் அனுப்பினர். அதை உண்மை என்று நம்பிய சுதா அதில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுதாவிடம் பிரேம் குமார் மற்றும் சுனில் குமார் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேசினர். உடனே அவர்கள் கூப்பனில் உள்ள பரிசு தொகையை பெறுவதற்கு ரிசர்வ் வங்கியில் என்.ஓ.சி பெற வேண்டும் என்று கூறி அதற்கான தொகையை வங்கி கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளனர். 

    இதனையடுத்து சுதா 27.09.2022 முதல் 27.01.2023 வரை சில தவணைகளாக மொத்தம் ரூ.3,79,100 பணத்தை வங்கியிலிருந்து அனுப்பியுள்ளார். பின்னர் போனில் பேசிய நபர்கள் மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால பாதிக்கப்பட்ட சுதா நேஷனல் க்ரைம் ரிப்போர்ட்டிங் கோர்ட்டில் புகார் செய்தார். புகாரின் பேரில் கடலூர் மாவட்ட இணையவழி குற்ற காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×