என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 261462"
- 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
- இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
சேலம்:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அருள் எம்.எல்.ஏ. உள்பட பா.ம.க.வினர் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11-ந்தேதி சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.
இதையடுத்து, ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றதாக 5 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு முதலாவது கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்.எல்.ஏ., மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்தி, மாநகர் மாவட்ட தலைவர் கதிர்ராசரத்தினம் உள்பட 5 பேரை விடுதலை செய்து நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். வழக்கில் வக்கீல்கள் விஜயராசா, குமார் ஆகியோர் ஆஜராகினர்.
- மானாமதுரையில் ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசாரை கைது செய்தனர்.
- சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.
மானாமதுரை
ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பழைய பஸ் நிலையத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் செய்ய ஊர்வலமாக புறப்பட்டனர். ெரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற கட்சியினரை டி.எஸ்.பி.கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்த போராட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.ஆர்.பி.முருகேசன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் சஞ்சய், கவுன்சிலர் புருஷோத்தமன் மற்றும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி பகுதியில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ெரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரசார் 80 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
- காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினர்கள் மீது பொய் வழக்கு தொடுத்து வரும் மத்திய பாஜக., அரசை கண்டித்தும் மக்களுக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தியின் செயல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் ரெயில் நிலைய நுழைவாயிலின் முன்பு தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து போலீசாரின் தடுப்பையும் மீறி ஊர்வலமாக ெரயில் நிலையத்திற்குள் நுழைந்த காங்கிரஸ் கட்சியினர் ெரயில் நிலைய முகப்பில் நின்று கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.காங்கிரஸ் கட்சியினரின் போராட்டத்தால் ெரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
- நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
- முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர்.
களக்காடு:
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாங்குநேரி ரெயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் பால்ராஜ் உள்பட 183 பேர் கலந்து கொண்டனர். அவர்களை நாங்குநேரி போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, நாகர்கோவிலில் இருந்து கச்சிகுடா செல்லும் ரெயிலில் வள்ளியூரில் ஏறிய காங்கிரஸ் தொண்டர் ஜெயபாண்டி என்பவர் ரெயில், நாங்குநேரி அருகே வந்தபோது அவசரகால சங்கிலியை இழுத்து நிறுத்தினார்.
இதையடுத்து அவரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
- நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ரெயில் நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி அந்த சாலையில் பேரி கார்டு வைத்து தடுக்கப்பட்டிருந்தது. அதனை மீறி காங்கிரசார் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் உள்ள குழித்துறை ரெயில்வே நிலையத்தில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங் தலைமையில் காங்கிரசார் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இரணியல் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் கே.டி. உதயம் தலைமையில் போராட்டத்திற்கு கட்சியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
தொடர்ந்து பேரணியாக ரெயில் நிலையம் செல்ல முயன்ற பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
- மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும், டெல்லியில் அவர் தங்கியிருந்த வீட்டை காலி செய்ய உத்தரவிட்ட மத்திய அரசை கண்டித்தும் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் சங்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
தொடர்ந்து சந்திப்பு ரெயில் நிலையத்திற்குள் போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் உள்ளே நுழைந்தனர். அப்போது 3-வது நடை மேடையில் தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் துணைத்தலைவர் வக்கீல் அய்யலுசாமி தலைமையில் கடம்பூர் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அய்யலுசாமி, ஒன்றிய தலைவர் செல்லத்துரை, வட்டார செயலாளர் ராம்தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் இன்று செங்கோட்டை ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் ஈடுபட்ட 132 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
- காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.
தஞ்சாவூர்:
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தஞ்சை ரெயில் நிலையம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.
ராகுல்காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சி கி. வரதராஜன், தெற்கு மாவட்ட துணை தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தப் போராட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராஜா தம்பி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் பூதலூர் மோகன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ பேராவூரணி சிங்காரம் உள்ளிட்ட ஏராளமானோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ரெயிலை மறிக்க முயன்றனர். ஆனால் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் ரெயில் நிலையம் முன்பு பேரிகார்டு கொண்டு தடுப்பு அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரெயில் நிலையத்துக்குள் யாரும் நுழையாதவாறு பாதுகாப்பில் இருந்தனர்.
காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வலுக்கட்டாயமாக ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றதால் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
- காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோவை:
கோவையில் ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் 80-க்கும் மேற்பட்டோர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கோஷமிட்டபடி கோவை ரெயில் நிலையத்தை நோக்கி வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்துக்குள் செல்ல முயன்றனர்.
அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 75 பேரை கைது செய்தனர்.
- மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
- காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து ஆரணி அருகே களம்பூர் ரெயில் நிலையத்தில் மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதியிலிருந்து விழுப்புரம், ஆரணி மார்க்கமாக சென்ற அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆரணி டி.எஸ்.பி ரவிசந்திரன் தலைமையிலான போலீசார் காங்கிரஸ் கட்சியினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
காட்பாடியில் வேலூர் மாநகர் மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமையில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.
- விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
விழுப்புரம்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து விழுப்புரத்தில் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் இன்று காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரசார் கண்ணன் திரையரங்கம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.
ரெயில் நிலையம் வந்த அவர்கள் புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலை மறித்தனர்.
போலீசார் அவர்களை கைது செய்தனர். பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
- விழுப்புரத்தில் புவனேஸ்வர் விரைவு ரெயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
- நெல்லை, நாங்குநேரியில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 23 பெண்கள் உட்பட 183 காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசார் ஆர்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்கள் நடத்தினார்கள். ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று முக்கிய நகரங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரசார் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்வதற்காக கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரசார் எழும்பூர் அழகு முத்துகோன் ரவுண்டானா அருகில் கையில் கொடி மற்றும் பதாகைகளுடன் திரண்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வ பெருந்தகை, முன்னாள் எம்.பி. தங்கபாலு, மாவட்ட தலைவர்கள் சிவ.ராஜசேகரன், ரஞ்சன்குமார், டெல்லிபாபு, முத்தழகன், அடையாறுதுரை மற்றும் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர், திருவான்மியூர் டி.கே. முரளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பியபடி ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக புறப்பட்டனர். உடனே போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினார்கள்.
இந்த போராட்டத்தையொட்டி எழும்பூர் ரெயில் நிலைய பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், இரணியல், குழித்துறை ரெயில் நிலையங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் நவீன் குமார் தலைமையில் போராட்டம் நடந்தது. விஜய் வசந்த் எம்.பி. உள்பட நிர்வாகிகள் பலரும் போராட்டத்தில் பங்கு பெற்றனர்.
ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.
திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தில் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் தேவர் சிலையில் இருந்து ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
விருதுநகரில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று காலை கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் சிலை முன்பிருந்து மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ரெயில் நிலையத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.
போலீசார் தடுத்தபோது மறியலில் ஈடுபட்டதால் போலீசார் மாணிக்கம் தாகூர் எம்.பி. உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் திருப்பூர், திருச்சி, ஆரணி, உள்பட தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.
- மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியலுக்கு முயற்சி செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மதுரை
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி மதுரை ஆர்.எம்.எஸ் அலுவலகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக புறப்பட்டு, மதுரை ெரயில் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து அவர்கள் ரெயில் நிலைய வளாகத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொதுச் செயலாளர் நந்தாசிங் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண்கள் உள்பட 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்