என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கலை திருவிழா"
- ராமநாதபுரம் அருகே நடந்த மாவட்ட கலை திருவிழாவில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
- பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் மாவட்ட அளவிலான கலை திருவிழா பள்ளி கல்வி துறை சார்பில் நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார்.
எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நகரசபை தலைவர் ஆர்.கே.கார்மேகம், துணை தலைவர் டி.ஆர்.பிரவீன் தங்கம், ராமேசுவரம் நகர சபை தலைவர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய பெருந்தலைவர் கே.டி.பிரபாகரன், மண்டபம் ஒன்றிய தலைவர் சுப்பு லட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திசைவீரன்,
ஊராட்சி மன்றத் தலைவர்கள் முத்தமிழ் செல்வி பூரணவேல் (வாலாந்த ரவை), சந்திரசேகர் (வெள் ளிடை), தி.மு.க. மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர்கான், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் தேர்போகி முத்துக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
- 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தாரமங்கலம்:
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலை திறனை மேம்படுத்தும் வகையில் மாணவ, மாணவி களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் தாரமங்கலம் வட்டார அளவில் செங்குந்தர் அரசு உதவி பெறும் பள்ளியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 6- ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் 500- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கலந்து முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெறுவோர் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
- வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.
- மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.
நம்பியூர்:
ஒருங்கிணைந்த பள்ளி க்கல்வி நம்பியூர் வட்டாரம் பள்ளி கல்வி த்துறையின் கீழ் இயங்கும் அரசு நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு பயிலும் 3000 மாணவர் களில் பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2023–-24-ம் ஆண்டிற்கான வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி தொடங்கியது.
இதில் நேற்று முன்தினம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், நேற்று 9 முதல் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சி நடை பெற்றது. இன்று 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஓவியம் வரைதல், அழகு, கையெழுத்து, நாட்டுப்புற ப்பாடல் வில்லுப்பாட்டு, நாடகம், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி கவிதை போட்டி, செவ்வியல் நடனம், தனிநபர் நடனம், கும்மி நடனம், கரகாட்டம் போன்ற 9 வகையான பிரிவுகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த 350 மாணவர்கள் கலந்து போட்டிகளில் பள்ளி ஆசிரியர்களும் 30 கலை வல்லுனர்களும் நடுவர்களாக இருந்தனர்.
போட்டியில் முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெறுவர்.மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறுவர்.
மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கலையரசன் விருதும், மாணவிகளுக்கு கலையரசி விருதும் வழங்கப்படும்.
மேலும் வெற்றி பெறும் மாணவர்களை தரவரிசையில் முதன்மை வரும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர்.
கலை நிகழ்ச்சியில் நம்பியூர் பேரூராட்சி தலைவர் செந்தில்குமார், நம்பியூர் வட்டார கல்வி அலுவலர் வேலுமணி மற்றும் வட்டார வழ மைய மேற்பார்வையாளர் பொறுப்பு செல்வராஜ் மற்றும் தலைமை ஆசிரியர்க ள், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
- தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார்.
- நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி வேளாங் கண்ணி பப்ளிக் பள்ளியில் (சி.பி.எஸ்.இ.) கலையரங்கம் திறப்பு விழா மற்றும் கலை விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவ கல்லூரியின் அறங்காவலர் லாசியா தம்பிதுரை தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பள்ளிகளின் தாளாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில் பள்ளியின் நிறுவனரும், முன்னாள் மத்திய, மாநில அமைச்சருமான தம்பிதுரை எம்.பி., பங்கேற்று, கலையரங் கத்தை திறந்து வைத்தார். இந்த விழாவில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் கரூர் சின்னசாமி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, பாலகிருஷ்ணா ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில், முன்னாள் எம்பி., பெருமாள், முன்னாள் எம்எல்ஏ, முனிவெங்கட்டப்பன், முன்னாள் ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபாலன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் முனியப்பன், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரிதேவி கோவிந்தராஜ், அதியமான் பொறியியல் கல்லூரி அறங்காவலர் சுரேஷ்பாபு, வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளிகளின் இயக்குநர் விஜயலட்சுமி, அறிஞர் அண்ணா கல்லூரியின் முதல்வர் தனபால் மற்றும் வேளாங்கண்ணி கல்வி குழும பள்ளிகளில் முதல்வர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொறியாளர் சரவணன், வேலாயுதம், தொழிலதிபர் ரகுராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில், திருச்சி சரவணகுமார் குழுவினரின் பலகுரல் நிகழ்ச்சி மற்றும் நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இறுதியில் பள்ளியின் முதல்வர் அசோக் நன்றி கூறினார்.
- வட்டார அளவிலான கலை திருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
- அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.
கீழக்கரை
திருப்புல்லாணி வட்டார அளவிலான அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 6-வது முதல் 8-வது வகுப்பு மாணவர்கள், 9-வது முதல் 10-வது வகுப்பு மாணவர்கள், 11-வது முதல் 12-வது வகுப்பு மாணவர்களுக்கு என தனி பிரிவாக ஓவியம், பேச்சுப்போட்டி, மொழித்தி றன், இசைக்கருவி, நடனம், பாட்டு, நாடகம், பட்டி மன்றம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட உதவி திட்ட அலுவலர் கர்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் முருகவேல் தொகுத்து வழங்கினார்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். திருப்புல்லா ணி ஒன்றியத்தில் 20 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள், தலைமயாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஒன்றிய அளவில் நடை பெற்ற கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு முதல் மற்றும் 2-ம் பரிசாக கேடயம் மற்றும் சான்றிதழ் ஊராட்சி ஒன்றியத்தலைவர் புல்லாணி, ஊராட்சி மன்றத்தலைவர் கஜேந்திர மாலா ஆகியோர் வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சண்முக நாதன் நன்றி கூறினார்.
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் பாண்டி யராசு, செந்தில்கு மார், ரமேஷ், செல்வகுமார், சித்ராதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் ஏற்பாடுகளை செய்தார்.
- மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் மாவட்ட அளவிலான கலைத்தி ருவிழா போட்டிகள் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நிறைவு விழாவிற்கு வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி வரவேற்று பேசினார்.
வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர், சுஜாதா ஆனந்தகுமார், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் எஸ்.மகாலிங்கம், காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை, நெல்லூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எஸ்.திருநாவுக்கரசு ஆசிரியர் தமிழ்திருமால், ஜுனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், தலைமையாசிரியர்கள் எ.ஜெயதேவரெட்டி, சண்முகம், எஸ்.எஸ்.சிவவடிவு, கோ.பழனி, எம்.மகேந்திரன், எஸ்.சுரேஷ், கே.கார்த்திகேயன், எம்.சினேகலதா, பேபி, லதா சங்கர், சித்தார்த்தன், உதவித்தலைமையாசிரியர் குமரன், தேசிய மாணவர் படை முதன்மை அலுவலர் க.ராஜா, பாரத சாரண சாரணீய மாவட்ட செயலாளர் எ.சிவக்குமார் பள்ளித்துணை ஆய்வாளர்கள் ஆ.மணிவாசகம், ஷைனி வட்டார மேற்பார்வையாளர்கள், தலைமையாரியர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கான கலை திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
- நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வட்டார வள மையத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளிடம் உள்ள கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் கலைத் திருவிழா நடந்தது. 5 தினங்களாக நடந்த இந்த விழாவில் கரகாட்டம், காய்கறி சிற்பங்கள், ஒவியம் வரைதல், களிமண் சிற்பங்கள் உள்ளிட்ட 92 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. சிறந்த மாணவ-மாணவிகள் குழுக்கள் முதல் 2 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் கலை குழுக்கள் வெளிநாடு கல்வி சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிறைவாக கிருங்காக்கோட்டை, அனியம்பட்டியைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெறும் முதல் 2 குழுக்கள் மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். கலை திருவிழா போட்டிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில், கிருங்காக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர் இந்திரா தேவி, கலைச்செல்வி, தலைமை ஆசிரியர் ரமேஷ், துணைத் தலைமை ஆசிரியர் ஞான அற்புதராஜ் முன்னிலை வகித்தனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் ஆரோக்கியராஜ், ஐ.டி.கே. ஒருங்கிணைப்பாளர் பாக்கியகுமார் மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
- தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் நடைபெற்றது.
- மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலை திருவிழா, நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் தலைமை தாங்கினார்.
நன்னிலம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனிவேல், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஸ்துரை, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருகபாஸ்கர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்தனர்.
இதில் நன்னிலம் வட்டாரத்தை சேர்ந்த 7 உயர்நிலை பள்ளிகள், 16 நடுநிலை பள்ளிகள், 11 மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த சுமார் 380-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியானது கவின் கலை, நுண் கலை, இசைப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம் மொழித்திறன் ஆகிய ஆறு தலைப்புகளின் கீழ் தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு நினைவுகளை போற்றி பாதுகாக்க கூடிய வகையில், தமிழ் இலக்கியம் கூறும் கலைகளை பாதுகாக்கும் வகையில் புத்துணர்வு ஊட்டக்கூடிய வகையில் நடைபெற்றது.
இதில் மாணவ- மாணவிகள் ஏராள–மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற கலைக்குழு மாணவர்கள், மாவட்ட அளவில் நடைபெறும் கலை திருவிழாவில் பங்கேற்க தகுதி பெறுவர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
- அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் காமலாபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
- 6 முதல் 8-ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஓமலூர்:
ஓமலூர் வட்டாரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள், அரசு உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையில், ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின் சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் காமலாபுரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஓமலூர் வட்டாரத்தை சேர்ந்த 59 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிபடுத்தி வருகின்றனர்.
மேலும், 6 முதல் 8-ம் வகுப்பு ஒரு பிரிவு, 9 மற்றும் 10-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு, 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு ஒரு பிரிவு என 3 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. போட்டிகள் வரும் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், மயிலாட்டம், ஒயிலாட்டம், நடனம், நாட்டியம், பறையாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், பாரம்பரிய சாமியாட்டம், நுண்கலை, வாய்ப்பாட்டு இசை, கருவி இசை, நடன நாடகம், விழிப்புணர்வு நாடகம், கலாச்சார நாடகம், குடும்ப உறவு ஒற்றுமை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்சிகளை நடத்தி காட்டி அசத்தி வருகின்றனர்.
இந்த போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்துவதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள், அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டிகளை பள்ளி மாணவ மாணவிகள், மேலாண்மை குழு நிர்வாகிகள், ஆசிரியர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பள்ளி மாணவர்களும் ஒவ்வொரு தலைப்புகளை கொண்டு கலை நிகழ்சிகளை தத்ரூபமாக நடத்தி வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஓமலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தனுஜாவுடன் இணைந்து ஒன்றிய குழு உறுப்பினர் செல்விராஜா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேவி கணேசன் ஆகியோர் செய்துள்ளனர். கலை போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
- திருப்புல்லாணியில் நடந்த கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
- ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
கீழக்கரை
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.
திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி போட்டியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.
திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவி கஜேந்திரமாலா ஒன்றிய கவுன்சிலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.
விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி தலைமை ஆசிரியர் (பொ) பிரேமா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், செந்தில் குமார் மற்றும் ஆசி ரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஏராள மானோர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்தார்.
- மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
நாட்டறம்பள்ளி பேரூராட் சிக்கு உட்பட்ட அதிபெரமனூர் ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் நேற்று கலைத் திருவிழா நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளிகல்விக் குழு தலைவர் ஜெயக்கொடி ஜெயக்குமார் தலைமை தாங் கினார். பள்ளி தலைமை ஆசி ரியை தேன்மொழி வரவேற்றார். வார்டு கவுன்சிலர் லட்சுமி தேவராஜ் முன்னிலை வகித்தார்.
விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் நாடகம், நட னம், பாட்டு போட்டி உள் ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. பா.ஜ.க. கவுன்சிலர் குருசேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலை திருவிழாவில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.
- அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.
- பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளில் கலை திருவிழா நடந்து வருகிறது.அவ்வகையில், தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடனம், பேச்சுபோட்டி, திருக்குறள் ஒப்புதல், கதை சொல்லுதல், கட்டுரை போட்டி, தமிழ் கையெழுத்து, ஓவியம், நாடகம், களிமண் கதை வேலைப்பாடு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கருமாரம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு 34-வது வார்டு கவுன்சிலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் உமாசாந்தி வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ரேஷ்மா முன்னிலை வகித்தார். ஓவியம் வரைதலில் 8-ம்வகுப்பு மாணவர் யோகேஸ்வரன், தனிநபர் நடிப்பில் 6-ம் வகுப்பு மாணவி பிரியா, சிற்பம் செதுக்கும் போட்டியில்7-ம் வகுப்பு மாணவி செல்சியா முதலிடம் பெற்றனர்.போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்