என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94387"
- கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது ராஜேஷ் என்பவர் போன் செய்து பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள்.
- கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம், நாராவாரி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கண்ணனின் முதலாளி பாரதிராஜா கன்னிகைபேர் கிராமத்தில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக பழைய இரும்பு பொருட்களை எடுத்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் கண்ணன் தொழிற்சாலையில் வேலையில் இருந்தபோது செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் போன் செய்து கன்னிகைபேர் கிராமத்தில் பழைய இரும்பு பொருட்கள் எடுப்பதை நிறுத்தி விடுங்கள். இல்லை என்றால் உன்னையும் உனது முதலாளி பாரதிராஜாவையும் தீர்த்து கட்டி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கண்ணன் பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
- கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பொய் சொல்லான் பிரிந்து உள்ளார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மட்டக்கடை பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் தொழில் அதிபர் பொய் சொல்லான் (வயது 58). பாரதிய ஜனதா நிர்வாகியான இவர் தனது 2-வது மனைவி கிரேசி (42) என்பவருடன் கடந்த 17 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
பொய் சொல்லான் மனைவியுடன் சேர்ந்து இருந்தபோது ஏராளமான சொத்துக்கள் கிரேசி பெயரில் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக கிரேசியிடம் இருந்து பிரிந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் பொய் சொல்லான் அவரது முதல் மனைவியின் தூண்டுதலின் பெயரில் தன்னிடம் உள்ள சொத்துக்களை திருப்பித் தரும்படி கேட்டு, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாகவும், நேற்று 3 மர்மநபர்களுடன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டதாகவும், எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும் படி வடபாகம் போலீஸ் நிலையத்தில் கிரேசி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு பொய் சொல்லானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வாங்கினார்.
- பணத்தை எல்லாம் உனக்கு திருப்பித் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுகிறார்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 46). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். திருப்பூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கும் சென்னையை சேர்ந்த கிருஷ்ணராஜ் என்பவருக்கும் 15வருடம் பழக்கம். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. எனக்கும் என் மனைவிக்கும் அவ்வப்போது சிறு சிறு குடும்ப பிரச்சனைகள் இருந்து வந்தது. எனது மனைவி என்னை பிரிந்து எனது பாட்டி வீடான அவிநாசிபாளையம் தோட்டத்தில் பாட்டி மற்றும் பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார்.
2016ம் ஆண்டு என்னுடைய கட்டிடம் ஒன்றை விற்பனை செய்து 60 லட்சம் ரூபாய் ரொக்கமாக கையில் வைத்திருந்தேன். என் மனைவியுடன் என்னை சேர்த்து வைக்க கிருஷ்ணராஜ் அவ்வப்போது தோட்டத்திற்கு சென்று எனது பாட்டியுடனும் எனது மனைவியுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தார்.
பின்பு என்னிடம் பேசிய கிருஷ்ணராஜ், உங்களதுதோட்டத்திற்கு நான் சென்ற பொழுது எனக்கு ஒரு வைப்ரேஷன் வந்தது. உங்கள் தோட்டத்தில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புதையல் உள்ளது. அந்தபுதையலை சில பூஜைகள் செய்தால் எடுக்கலாம். மேலும் தோட்டத்தில் புதையல் உள்ளவரை நீயும் உன் மனைவியும் சேர்ந்து வாழ முடியாது.
அந்த புதையலை எடுத்துவிட்டால் நீயும் உன் மனைவியும் கடைசி வரை வாழலாம். யாரும் உங்களை பிரிக்க முடியாது என்று கூறினார். இதனை நான் உண்மை என்று நம்பினேன். இதையடுத்து கிருஷ்ணராஜ், புதையல் எடுப்பதற்காக கடந்த 2014ம் ஆண்டு முதல் சிறிது சிறிதாக என்னிடம் இருந்து ரூ.25 லட்சம் பணம் வாங்கினார். ஆனால் புதையலையும் எடுக்க வில்லை. என் மனைவியுடன் என்னை சேர்த்தும் வைக்கவில்லை.
இது சம்பந்தமாக நான் பலமுறை கிருஷ்ணராஜை தொடர்பு கொண்டபோது பணத்தை எல்லாம் உனக்கு திருப்பித் தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என மிரட்டுகிறார். மேலும் என்னுடைய மனைவி வேறொருவருடன் தகாத உறவில் இருப்பதாக வீடியோ ஒன்றை மார்பிங் செய்து என்னிடம் காண்பித்தார். அதிர்ச்சி அடைந்த நான் ஏன் இப்படி செய்தாய் என்று கிருஷ்ணராஜிடம் கேட்டபோது நான் அப்படித்தான் செய்வேன். உன் குடும்பம் பாரம்பரியமான குடும்பம். நீ என்னிடம் கொடுத்த 25 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு கேட்டு க்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
- ஓய்வு பெற்ற பெண் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது
- கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
திருச்சி,
திருச்சி உய்யக் கொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ் சுந்தரம். இவரது மனைவி பாத்திமா ரோஸ்லி ராஜு (வயது 72). இவர் திருச்சி யூனியன் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.இவரிடம் திருச்சி வயலூர் ரோடு குமரன் நகரை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் தனது மளிகை கடையை மேம்படுத்த ரூ. 12 லட்சம் பணம் கடன் வாங்கி உள்ளார். அதன் பிறகு பாத்திமா அந்த பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் இழுத்தடித்து வந்தார். பின்னர் சமீபத்தில் ஜெய்சங்கர் ரூ 3லட்சத்து 15 ஆயிரம் பணத்தை திரும்பி கொடுத்துவிட்டார். மீதிபணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும் கடன் தொகையை திருப்பி கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர் பாத்திமா வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இது குறித்து பாத்திமா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில்திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் ஜெய்சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு நிலத்தை மீட்க முயன்ற கிராம அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர், கள்ளிக்குடி போலீசில் புகார் கொடுத்தார்.
திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே மேலநேசனேரி கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் செல்வம்(வயது54). இவர் அந்தப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 50 சென்ட் அரசு நிலத்தை தாசில்தார் உத்தரவின் பேரில் மீட்டு அளந்து வேலி போட நடவடிக்கை எடுத்தார்.
இது நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த கும்பலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, வெள்ளைச்சாமி, துரைச்சாமி, பெரிய கருப்பன், சின்னச்சாமி, சேது நாராயணன், தன்னாசி ஆகிய 7 பேரும் கிராம நிர்வாக அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் செல்வம், கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 2 ரவுடிகளை கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே 2 பேர் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்து வருவதாக மருத்துவ கல்லூரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலையை சேர்ந்த மணிகண்டன் (வயது 35), கிருஷ்ணகுமார் (22) என்பதும், இவர்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள உள்ளதும், பிரபல ரவுடிகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், கிருஷ்ணகுமார் ஆகிய 2 ரவுடிகளையும் கைது செய்தனர்.
- வேலுச்சாமி மீது அவரது மனைவி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- சப்-இன்ஸ்பெக்டர் உமாவிற்கு,வேலுச்சாமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் கக்கன் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வேலுச்சாமி (வயது 23). இவரது மனைவி துரைச்சி. வேலுச்சாமி அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலுச்சாமி மீது அவரது மனைவி சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று வேலுச்சாமி டவுன் போலீஸ் நிலைய த்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் உமாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததோடு, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். இது குறித்து சப்-இன்ஸ்பெ க்டர் உமா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர்.
- முசிறி அருகே ரேஷன் கடை பெண் விற்பனையாளருக்கு வாலிபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
- ரேஷன் பொருள்களுக்கு வரிசையில் நிற்கச் சொன்னதால் ஆத்திரம்
திருச்சி:
திருச்சி முசிறி காந்திநகர் நான்காவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி பாமா (வயது 42). இவர் முசிறி அருகே நாச்சம்பட்டி பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல அவர் ரேஷன் அட்டைதாரர்களை வரிசையில் நிற்க வைத்து அரிசி, பருப்பு, ஆயில் போன்ற பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் நாச்சம்பட்டி குடித்தெரு பகுதியை சேர்ந்த குமார் (23) என்ற வாலிபர் ரேஷன் பொருட்கள் வாங்க வந்தார்.
அப்போது அவர் வரிசையில் நிற்பவர்களை புறந்தள்ளிவிட்டு தனக்கு உடனடியாக பொருட்கள் விநியோகிக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அதற்கு விற்பனையாளர் பாமா ஒப்பு கொள்ள மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த குமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாமா முசிறி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பேரில் பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாழைப்பழ வியாபாரியை மிரட்டி பணம் பறித்தார்
- இதையடுத்து சரவணன் அளித்த புகாரின்படி லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
கரூர்:
லாலாப்பேட்டை அருகே, சிந்தலவாடி, கீழவிட்டுக்கட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது55). வாழைப்பழ வியாபாரியான இவர், கருப்புத்துார் சிவன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சி மாவட்டம், புலிவலம், குடிதெருவை சேர்ந்த துரைராஜ் என்பவர் சரவணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த 1,500 ரூபாய் மற்றும் வாட்ச் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து சரவணன் அளித்த புகாரின்படி லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
- சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.
- திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள அனுமான் கோவிலான பாகேஷ்வர் தாம் கோவிலின் இளம் பீடாதிபதியாக திரேந்திர கிருஷ்ண சாஸ்திரி உள்ளார்.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
இந்த கோவிலுக்கு சமீபத்தில் மாநில முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத், பா.ஜனதா மாநில தலைவர் சர்மா உள்பட பல அரசியல்வாதிகள் சென்று வந்தனர்.
இந்நிலையில் இவரது இளைய சகோதரரான சவுரப் என்ற ஷாலிகிராம்( வயது 26) என்பவரும் தற்போது ஒரு வீடியோவால் பரபரப்பாக பேசப்படுகிறார்.
சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கர்ஹா கிராமத்தில் கடந்த 11-ந்தேதி ஆகாஷ்-சீதா அகிர்வார் என்ற தலித் தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.
இந்த திருமண விழாவிற்கு வந்தவர்கள் இரவு விருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் வந்த சவுரப் கையில் நாட்டு துப்பாக்கியை வைத்துக்கொண்டு விருந்தினர்களை மிரட்டுவது போன்றும், கையில் சிகரெட்டை புகைத்தவாறும் வீடியோவில் காட்சியளிக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து சத்தர்பூர் மாவட்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஒரு குழு அமைத்துள்ளனர்.
விசாரணையின் அடிப்படையில் சவுரப் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மாதம் ரூ.10 லட்சம் மாமூல் கேட்டு திறந்தவெளி திரையரங்க மேலாளருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்
- 3 பேர் மீது வழக்கு
திருச்சி:
திருச்சி அருகே நவலூர் கொட்டப்பட்டு பகுதியில் சமீபத்தில் திறந்தவெளி திரையரங்கம் திறக்கப்பட்டது. இதன் மேலாளராக ரமேஷ் என்பவர் பணிபரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பரமேஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது காரில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் மாதந்தோறும் ரூ. 10 லட்சம் மாமூல் வாங்கி தர வேண்டும். இல்லையென்றால் உன்னை தொலைத்து விடுவோம் என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக ரமேஷ், திரையரங்க பங்குதாரர் டாக்டர் ஹரிஷ் குமாரிடம் தெரிவித்தார். உடனே அவர் இதுகுறித்து ராம்ஜி நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மாமூல் கேட்டு தியேட்டர் மேலாளருக்கு மிரட்டல் விடுத்த நவலூர் கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகேசன், போஸ்கோ என்கிற வாண்டையார், மகேந்திரன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
- கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை:
கோவை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கோகுல்(23). இவர் கடந்த 13-ந்தேதி கோவை கோர்ட்டு அருகே 5 பேர் கும்பலால் வெட்டி கொல்லப்பட்டார்.
மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியதோடு மட்டுமல்லாமல், கையில் ஆயுதங்களுடன் அவர்கள் சாவகாசமாக நடந்து சென்றது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோர் கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதில் கோகுல் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டதும், இந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை கொன்றதும் தெரியவந்தது.
கோகுல் கும்பலும், குரங்கு ஸ்ரீராம் கும்பலும் கட்டப் பஞ்சாயத்து, அடி-தடி மோதலில் அடிக்கடி ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர இவர்கள் சமூக வலைதளங்களிலும் வீடியோக்களை வெளியிட்டு அடிக்கடி மோதலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
குரங்குஸ்ரீராம் கொலையில் தொடங்கி கோகுல் கொலை வரை அவர்கள் சமூக வலைதள பதிவுகள் மூலம் மோதிக்கொண்டனர்.
குரங்கு ஸ்ரீராமை கொன்றதுமே அவரது நண்பர்கள் குரங்கு ஸ்ரீராமின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்கப்படும் என்ற வாசகத்தை அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஸ்ரீராம் பிரதர்ஸ், ஸ்ரீராம் பிளட்ஸ் என்ற பெயரில் சினிமாவையே மிஞ்சும் வகையில், கையில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சினிமா பாடல்களையும், வசனங்களையும் ஒலிக்க விட்டு நடந்தபடி வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.
அதிலும் ஒரு பெண்ணின் கையிலும் உருட்டு கட்டையை கொடுத்து அவரின் பின்னால் 5 பேர் நடந்து வருவது போல பாடலை ஒளிபரப்பி தங்களை சினிமா வில்லன்களை போலவே காட்டி கொண்டதும் தெரியவந்தது.
இப்படி ரவுடிகள் தங்கள் இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுபிடித்த போலீசார் அவர்களை களை எடுக்கும் நடவடிக்கையில் இறங்கினர்.
யார்? யார் எல்லாம் வீடியோக்களை வெளியிட்டனர் என்பதை கண்டறிய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர் சந்தீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் ஒரு குழுவையும் அமைத்தனர்.
அந்த குழுவினர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பார்வையிட்டு அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் இன்ஸ்டாகிராமில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கத்தி, அரிவாள் ஆயுதங்களுடன் வீடியோ மற்றும் வெறுப்பை தூண்டும் வகையிலும் கருத்துக்களை பதிவிட்ட 11 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து இது போன்று வேறு யாராவது இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடியோக்களை பகிர்ந்துள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்