என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 96460"
கூடலூர் வனப்பகுதியில் சந்தனம், ரோஸ்வுட், வெண்தேக்கு, ஓமம் உள்பட விலை உயர்ந்த மரங்கள் உள்ளது. இதனால் கேரளா- கர்நாடகா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் பகுதியில் வனத்துறையினர் சோதனைச்சாவடி அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் நின்றிருந்த சந்தன மரங்களை இரவு நேரத்தில் மர்ம கும்பல் வெட்டி கடத்தி சென்றது. இது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கூடலூர் ஆவின் பால் வளாகம், கோத்தர்வயல் பகுதியில் கடந்த வாரம் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. இது குறித்து கூடலூர் வன அலுவலர் ராகுல் உத்தரவின் பேரில் வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையில் வனவர் ரவிச்சந்திரன், வன காப்பாளர்கள் பிரகாஷ், சங்கர், பிரதீப் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த வனத்துறை தனிப்படையினர் நேற்று முன்தினம் தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் ரோந்து சென்றனர். அப்போது இரவு 2 மணிக்கு கூடலூர் சின்னப்பள்ளிவாசல் தெருவில் இருந்து கோத்தர்வயலுக்கு செல்லும் சாலையில் சந்தேகப்படும்படி 4 பேர் நடந்து வந்து கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் கையில் மரக்கட்டைகள் வைத்திருந்தனர்.
வனத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த முயன்றனர். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் மரக்கட்டைகளை போட்டு விட்டு இருள் சூழ்ந்த பகுதிக்குள் தப்பி ஓடினர். இதனால் அவர்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் அந்த கும்பல் விட்டு சென்ற மரக்கட்டைகளை வனத்துறையினர் ஆய்வு செய்தபோது சந்தன மரங்கள் என தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் நாலாபுறமும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது வெவ்வேறு இடங்களில் பதுங்கி இருந்த 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து கூடலூர் ஈட்டிமூலா வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூடலூர் பகுதியில் பல இடங்களில் வளர்ந்து இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்த சந்தன மரக்கட்டைளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் கூடலூர் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து கர்நாடகா மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (வயது 25), அஜிஷ் (43), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த ஓஜீர் (39), ஜைனூல்ஆபிது (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டவர்கள் சந்தன மரங்களை வெட்டி கர்நாடகாவுக்கு கடத்தி அங்கு ஒரு கிலோ ரூ.2 ஆயிரம் என விற்பனை செய்து வந்துள்ளனர். இதேபோல் கூடலூர் பகுதியில் 7 கிலோ வரை சந்தன கட்டைகளை கடத்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள மாணவிகளுக்கு மதிய உணவு சரிவர வழங்கப்படுவதில்லை என்றும், சத்துணவில் முட்டைகள் கிடைப்பதில்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதனையடுத்து கடந்த 10 நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மதியம் பள்ளிக்கு வந்த 2 பெண்கள் ஒரு அட்டைபெட்டியை தூக்கிக்கொண்டு வேகமாக வெளியே வந்தனர். இதனை கவனித்த அப்பகுதி மக்கள் அவர்களை கையும், களவுமாக பிடித்து அட்டைப்பெட்டியை பிரித்து பார்த்தனர். அதில் மாணவிகளுக்கு வழங்கவேண்டிய 210 சத்துணவு முட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகேந்திரனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர் சத்துணவு முட்டைகளை கடத்தி வந்த அமைப்பாளர் சாந்தி உள்பட 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து மியான்மர் வழியாக சென்னைக்கு அபூர்வமான வெளிநாட்டு பறவைகளும், விலங்குகளும் கடத்தி வரப்பட்டு உள்ளதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சென்னை புறநகர் பகுதியில் உள்ள 2 பண்ணை வீடுகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். அபூர்வ குரங்கு மற்றும் பல்வேறு வகையான அபூர்வ கிளிகள் உள்ளிட்ட பறவைகள் அந்த பண்ணை வீடுகளில் கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.
மொத்தமுள்ள 70 அபூர்வ கிளிகள் மற்றும் அபூர்வ குரங்கு ஒன்றையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையொட்டி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை சாலிகிராமம் ஸ்டேட் பாங்க் காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் இம்ரான். இவர் திருவண்ணாமலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணியாற்றினார். இதற்கிடையே சாலிகிராமத்தில் வீட்டில் இருந்த அவரை தாக்கி ஆட்டோவில் வந்த கும்பல் கடத்தி சென்றது.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் இம்ரானின் மனைவி சரஸ்வதி புகார் செய்தார். அதை தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ஸ்டேட் பாங்கி சாலையில் உள்ள கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்த போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவின் பதிவு எண் திருவண்ணாமலையை சேர்ந்தது என தெரிய வந்தது.
உடனே திருவண்ணாமலை சென்ற போலீசார் இம்ரானை மீட்டனர். மேலும் அவரை கடத்தி சென்ற மெக்கானிக் ராஜசேகர், அஸ்லாம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இப்போது மெக்கானிக் ராஜசேகர் கூறியதாவது:-
இம்ரான் திருவண்ணாமலையில் ஓட்டல் ஒன்றில் பணியாற்றினார். அதன் அருகே ஒரு மெக்கானிக்கடையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 10 நாட்களுக்கு முன்பு எங்கள் கடையில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரின் மோட்டார் சைச்கிளை இம்ரான் திருடிக்கொண்டு சென்னை வந்து விட்டார்.
கண்காணிப்பு காமிரா மூலம் எங்களுக்கு இது தெரிய வந்தது. எனவே இம்ரானை தேடி சென்னைக்கு ஆட்டோவில் வந்த நானும் எனது நண்பர் அஸ்லாமும் அவரை கடத்தி வந்தோம். அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் எடுத்து வந்து விட்டோம் என்றார். #tamilnews
திருத்தங்கல்லைச் சேர்ந்த செல்வம் (32), சதீஷ்குமார் (28) ஆகிய இருவரும் ஒரு மினி வேனில் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டைக்கு அனுமதியின்றி பட்டாசு பண்டல்களை கொண்டு சென்றனர். அப்போது போலீசார் அவர்களை பிடித்து கைது செய்து வேனுடன் 12 பண்டல் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போல் ஒரு மினி வேனில் 120 கிலோ பட்டாசுகளை அனுமதியின்றி கொண்டு சென்ற சிவகாசியைச் சேர்ந்த செல்வம் (37), முருகன் (35) ஆகியோரையும் வெம்பக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து வேனுடன் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த சிவகாமிபுரம் மாயக்கண்ணன் (36), விளாமரத்துப்பட்டி முத்துராஜ் (51), விஜயகரிசல்குளம் காளிராஜ் (30), செந்தில்குமார் (34), துரைசாமிபுரம் நாராயணசாமி (52), பாண்டியன் (39) ஆகியோரையும் போலீசார் கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் கார்த்தி (வயது 15). அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற அவன், இரவு அங்கு நண்பர்களுடன் சாலையோரம் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக ஒரு காரில் சிலர் வந்தனர்.
திடீரென காரை நிறுத்திய அவர்கள், கார்த்தியை அழைத்து, ஒரு முகவரியை கூறி அங்கு எந்த வழியாக செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளனர். கார்த்தி, எப்படி செல்ல வேண்டும் என்று கூறிக்கொண்டிருக்கும் போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாததை பார்த்து, காரில் வந்தவர்கள், கார்த்தியின் முகத்தை கைக்குட்டையால் பொத்தியுள்ளனர்.
அதன் பின்னர் அவன் மயக்கமடையவே, அவனை யாருக்கும் தெரியாமல் காருக்குள் தூக்கிப்போட்டு கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.
இதனிடையே இரவு ஆகியும் கார்த்தி வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவன் எங்கு சென்றான் என்று பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே கருங்குளம் பகுதியில் உள்ள 45 அடி ஆழ கிணற்றில் இருந்து சிறுவனின் சத்தம் கேட்டது.
அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனே அங்கு சென்று பார்வையிட்ட போது அங்கு சிறுவன் ஒருவன் 5 அடி தேங்கியிருந்த தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து வையம்பட்டி போலீசார் மற்றும் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் கிணற்றுக்குள் இருந்து சிறுவனை மீட்டனர்.
பின்னர் போலீசார் விசாரிக் கும் போது அந்த சிறுவன் மாயமான கார்த்தி என்பது தெரியவந்தது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விரைந்து சென்றனர். நல்ல வேளையாக பொதுமக்கள் பார்த்து சொன்னதால் கார்த்தியை காப்பாற்ற முடிந்தது. இல்லையென்றால் இரவு முழுவதும் அவன் கிணற்றுக்குள்ளேயே கிடந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியிருக்கும்.
தொடர்ந்து கார்த்தியிடம் விசாரிக்கும் போது, காரில் வந்தவர்கள் தனது முகத்தை கர்ச்சிப்பால் மூடியதும் மயக்க மடைந்ததாகவும், அதன்பிறகு தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும், கிணற்றுக்குள் கிடந்ததாகவும் தெரிவித்தான்.
காரில் வந்த கும்பல் கார்த்தியை மயக்கமடைய செய்து கடத்தி சென்றதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அந்த கும்பல் குழந்தைகள் கடத்தலை சேர்ந்தவர்களாக இருக்கலாமா? அல்லது ஏதாவது முன்விரோதம் காரணமாக? கடத்தி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நரபலி கொடுப்பதற்காக சிறுவனை காரில் கடத்தி சென்ற நிலையில், அவன் மயக்கம் தெளிந்து சத்தம் போடவே, பொதுமக்களுக்கு பயந்து கிணற்றுக்குள் வீசிச் சென்றனரா? என்றும் விசாரணை நடத்தி கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. #tamilnews
சென்னையில் இருந்து இலங்கைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த சுரேந்திரன், ராஜ்குமார் ஆகியோரது சூட்கேசில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் இருந்தது. இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அமெரிக்க டாலர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுரேந்திரன், ராஜ்குமாரிடம் விசாரணை நடந்து வருகிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த முகமது ஆரிப்பின் சூட்கேசை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அவர் சூட்கேசில் ரகசிய அறை அமைத்து 1 கிலோ 200 கிராம் தங்க கட்டி கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து தங்ககட்டியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
முகமது ஆரிப் முதலில் துபாயில் இருந்து அகமதாபாத்துக்கு விமானத்தில் வந்து இருக்கிறார். பின்னர் அங்கிருந்து இந்தூர் சென்று சென்னைக்கு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. #tamilnews
சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (25).
இவர் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் சிறை வைத்தனர்.
இது குறித்து அந்த மாணவி தமிழரசனுக்கு செல்போனில் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் அந்த மாணவியை வீடு புகுந்து கடத்தி சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.
அதன்படி தமிழரசன் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேருடன் நேற்று அந்த மாணவியின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார். பின்னர் அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் கடத்தி செல்ல முயன்றது. அதனை தடுத்த மாணவியின் தந்தையை தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.
மாணவியின் தந்தை எழுப்பிய கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
சிறுப்பாக்கம் பகுதியில் கள்ள சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக விருத்தாச்சலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீசார் விருத்தாச்சலம் அருகே உள்ள சிறுப்பாக்கம் அடுத்த வடபாதி ஏரிக்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு காரில் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த வட பாதியை சேர்ந்த சரத்குமார் (வயது 28). திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தை சேர்ந்த முரளி(27) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் 550 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் மணமல்லி கூறும் போது, திண்டிவனத்தை சேர்ந்த முரளி, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரிடம் எரிசாராயம் வாங்கி அதனை சரத்குமார் என்பவர் மூலம் கடத்திச் சென்று சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர்.
இதுகுறித்து வந்த தகவலின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 150 லிட்டர் சாராயத்துடன் ஒரு காரையும், 2 வாலிபர்களையும் கைது செய்தோம். அதில் சரத்குமார் என்பவர் தப்பி ஓட்டம் பிடித்தார். அவரைத் தேடி வந்தோம்.
இந்நிலையில் ஏழுமலையை போலீஸார் கைது செய்து விட்டதால் தற்போது காஞ்சிபுரம் மலைப்பகுதியிலிருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து சரத்குமாரும், முரளியும் சிறுபாக்கம் பகுதியில் விற்பனை செய்து வந்தனர். அவர்களை தற்போது கைது செய்து 550 லிட்டர் கள்ள சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார். பகுதியில் கள்ள சாராயம் மற்றும் எரிசாராயம் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முழுமையாகத் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சி , மதன்பட்டவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி காந்திமதி.
சம்பவத்தன்று சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர், காந்திமதியின் கால் வலிக்கு நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இரவு நேரம் ஆனதால், திருநங்கை காந்திமதி வீட்டிலேயே தங்கி விட்டார்.
மறுநாள் அதிகாலையில் வீட்டில் தூங்கிய திருநங்கையும், காந்தி மதியின் மகள் அதிர்ஷ்டமேரியும் (வயது21) காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் அவர்கள் 2 பேரையும் காணவில்லை.
இந்த நிலையில், திருநங்கை விட்டுச் சென்ற செல்போன் சிம்கார்டை பரிசோதனை செய்து பார்த்த போது திருநங்கையின் படமும் அவரது பெயர் முனியம்மா என்பதும் தெரியவந்தது. அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்?என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் குறித்து காந்திமதி திருச்சிற்றம்பலம் போலீசில் புகார் செய்தார். திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அதிர்ஷ்டமேரியை கடத்தி சென்ற திருநங்கை முனியம் மாவை தேடி வருகிறார்கள். #tamilnews
தஞ்சாவூர்:
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மகன். விஜய்ராஜேஸ் குமார் (வயது 35). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி யாழினி (30). இவர் தஞ்சையை சேர்ந்தவர். இந்த தம்பதிகளுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்ராஜேஸ் தரப்பில் இருந்து தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் ஒரு மனு கொடுத்தனர். அதில் யாழினியை நாகை அக்கரை பேட்டையை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் (30) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்பட்டிருந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று காலை தஞ்சை ஜே.எம்.(எண் 1) - கோர்ட்டில் யாழினி ஆஜரானார். கடத்தப்பட்டதாக கூறிய யாழினி கோர்ட்டில் ஆஜரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி இந்த வழக்கு குறித்து இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த யாழினி நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் அமைச்சர் ஜெயபால் மகன் ரித்தீஷ் என்பவர் என்னை கடத்தி விட்டதாக எனது கணவர் விஜய் ராஜேஸ் குமார் தரப்பில் தஞ்சை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அந்த புகார் முற்றிலும் தவறானது. என்னை யாரும் கடத்தவில்லை. நான் எப்போதும் போன்று சென்னையில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறேன். தேவைப்பட்டால் கல்லூரிக்கு தினமும் சென்று வந்த வருகை பதிவேட்டை பார்த்து சந்தேகத்தை தீர்த்து கொள்ளட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவின் அண்டை நாடுகளான மியான்மர், வங்காள தேசம் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக உள்ளது. அதனை தடுக்க சிறப்பு பிரிவு அதிகாரிகள் கடுமையாக முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய் நுண்ணறிவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து சென்னைக்கு வந்த ரெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், தனது கைப்பை மற்றும் கிட்டாரில் மறைத்து தங்கம் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Myanmar #Chennai #GoldCaptured
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்