என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனு"
- பால் பூத்துகளிலும் அடிக்கடி பால் திருட்டு போய் வருகிறது.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முகவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவை,
கோவை மாவட்ட ஆவின்பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 708 ஆவின் பூத்துகள் உள்ளன. இதில் ஒரு சில பூத்துகள் மட்டுமே கடைகள் எடுத்து பாலை கடைக்குள் வைக்கின்றன. மற்ற முகவர்கள் சாலையின் ஓரமாக இறக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனர். ஆவின் பால் முகவர்கள் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வாடகை கொடுத்து வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமானது.
ஆவின் முகவர்கள் பால் பொருட்களை வினியோகம் செய்ய இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது மர்மநபர்களால் அடிக்கடி தாக்கப்பட்டு பணம், உடமை இழக்கும் சம்பவம் நடக்கிறது.
மேலும் பால் பூத்துகளிலும் அடிக்கடி பால் திருட்டு போய் வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, அங்கு சந்தேகப்படும் படியாக யார் நின்றாலும் அவர்களை விசாரித்து செல்ல வேண்டும். முகவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
- என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அடுத்த பத்ரஅள்ளி ஊராட்சி பூவன்காடு காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
பத்ரஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் பணிக்கு நான் விண்ணப்பித்தேன். எனக்கு இரண்டு நாள் பயிற்சிக்காக அழைத்து பயிற்சியையும் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
எனவே லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு அந்த பணியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
- ஏரிக்கு வரும் தண்ணீர் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது
- ஆக்கிரமிப்பினால் மழைகாலங்களில் ஊருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதாக மனுவில் அச்சம் தெரிவித்து உள்ளனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கடுகூர் ஊராட்சிக்கு உட்பட்ட தலையாரிகுடிகாடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சாலைக்குறிச்சி கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் புதி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால், மழைக்காலங்களில் பெய்யும் நீரானது கிராமத்தில் உட்புகுந்து வீடுகள், பள்ளிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதால், பயிர்கள் சேதம் அடைகின்றன. இந்த வாய்க்கால் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் ஏரி நில ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது
- கிராம மக்கள் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்து வலியுறுத்தல்
பெரம்பலூர்,
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் கற்பகம் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 324 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை ஊராட்சிக்குட்பட்ட புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள், உள்ளாட்சி பிரநிதிகள் ஆகியோர் சார்பில் கலெக்டர் கற்பகத்திடம் மனு அளித்தனர்.அந்த அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,புதுக்குறிச்சி கிராமத்தில் சர்வே எண் 275 எண்ணில் சுமார் 120 ஏக்கரில் ஏரி உள்ளது. ஆனால் தற்போது தனிநபர்கள் சுமார் 30 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் ஏரியின் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால் ஏரியின் நீரின் கொள்ளவு குறைந்து நீர் பரப்பளவு குறைந்துள்ளது.நீர்வழி வாய்க்காலை மறிந்து தற்போது சாலை வசதி ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. இதனால் நீர்வருவதற்கு வழியில்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.மழைக்காலங்கள் துவங்கும் முன்பு ஏரியின் நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றிலும் கரை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- இருளர் காலனியில் 14 வீடுகளில் 60 பேர் வசித்து வருகின்றோம். இங்குள்ள 15 மாணவ, மாணவியருக்கு சாதிச்சான்றுகள் இல்லை.
- சாதிச்சான்று கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஒப்பதவாடி பக்கமுள்ள கிருஷ்ணாநகர் இருளர் காலனியைச் சேர்ந்த இருளர் இன மக்கள் நேற்று பள்ளி, மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் சாதிச்சான்று கேட்டு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் காலனியில் 50 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு 50 மாணவ, மாணவிகள் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கல்வி படிக்கிறார்கள். இதில் 17 பேருக்கு சாதிச்சான்றுகள் இல்லை.
கடந்த 2020-ம் ஆண்டு முதல் சாதிச்சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி சாதிச்சான்று வழங்க வேண்டும்.
அதே போல், கிருஷ்ண கிரி மாவட்டம், பர்கூர் தாலுகா மல்லப்பாடி, குள்ளங்குட்டை கிரிக வட்டம் இருளர் காலனியில் வசிக்கும் பொதுமக்கள், சாதிச்சான்று மற்றும் அடிப்படை வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில், கிரிக வட்டம் இருளர் காலனியில் 14 வீடுகளில் 60 பேர் வசித்து வருகின்றோம். இங்குள்ள 15 மாணவ, மாணவியருக்கு சாதிச்சான்றுகள் இல்லை. சாதிச்சான்று கேட்டு பல முறை மனு அளித்தும் இதுவரை வழங்கவில்லை. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது.
எனவே மாணவர்களின் நலன் கருதி சாதிச்சான்று வழங்க வேண்டும். அதே போல் எங்கள் காலனியில், குடிநீர் பற்றாக்குறை உள்ளது. சாலை வசதி இல்லை. சாக்கடைக் கால்வாய் வசதியும் இல்லை. எனவே அடிப்படை வசதிகளையும் செய்துதர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனு அளிக்கலாம்.
கோரிக்கை மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்படும்.
வயது வரம்பு ஏதும் இல்லை. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களும் விண்ணப்பம் அளிக்கலாம்.
முகாமுக்கு வருபவர்கள் இருப்பிட முகவரிக்கான ஆதாரம் குடும்ப அட்டை நகல், மாற்றுத்திறனாளிளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றின் அசல், 2 நகல்கள் மற்றும் தற்போதைய புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
இதற்கு முன் விண்ணப்பம் அளித்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின், அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.
எனவே, நாகை மாவட்ட மாற்றுத்திற னாளிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
- பொதுமக்களிடையில் இருந்து 579 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டார்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 579 மனுக்களை பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி யில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளிததனர்
- 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்
ஈரோடு,
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த பொது மக்கள் தங்களது குறைகள் குறித்து மனுக்க ளை அவரிடம் வழங்கினர். அப்போது விவசாயிகள் திரண்டு வந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறு த்தி கலெக்டரிடம் மனு வழ ங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு தென்னை-பனையிலிருந்து கள் இறக்கி, விற்க அனுமதிக்க வேண் டும், தேங்காய், கடலை நல் லெண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை விவசாயிகளிடமிருந்து நேர டியாக கொள்முதல் செய்து மானிய விலையில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக விற்பனை செய்ய வேண்டும்,
இந்திய அரசு கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதார விலை யாக ரூ.150 நிர்ணயம் செய்ய வேண்டும், தமிழ்நாடு அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை அனைத்து வேளாண் பணி களுக்கு மட்டுமே பயன்ப டுத்த வேண்டும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் விவசாயிகள் அவர்களது சொந்த நிலத்திலேயே உழை ப்பை செலுத்திட அனுமதி வழங்க வேண்டும், இந்திய அரசு பயிர் காப்பீடு திட்டத்தை காப்பீடு செய்த ஒவ்வொரு விவசாயி களுக்கும் தனிப்பட்ட முறை யில் இழப்பீடு பெரும் வகை யில் மாற்றி அமைக்க வேண் டும்,
வனவிலங்கால் தாக்க ப்பட்டு உயிர் இழப்பு ஏற்ப டும் குடும்பத்திற்கு இழப்பீ டாக ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்,அரசு விவசாயிகள் பெற்ற அனை த்து கடன்களையும் தள்ளு படி செய்ய வேண்டும், தமிழ்நாட்டில் விவசாயி களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும், பாண்டியாறு- புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், பவானிசாகர் சிப்காட் திட்டங்களை ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத் தினர். இவ்வாறு அந்த மனு வில் கூறப்பட்டுள்ளது.
- ராமநதி அணை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
- காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
கடையம்:
கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் நேரில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 14 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயம் சார்ந்த மக்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ராமநதி அணை அருகில் சூச்சமுடையார் கோவிலுக்கு தென்புறம் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இக்கிணற்றில் விசை பம்புகள் மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோட்டார்களை இயக்க மின்சாரம் பழைய மின்மாற்றி மூலம் சீரின்றி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கவும், கடையத்திலிருந்து கிழமேலாக மின்தடத்தை கொண்டு வந்து , புதிய மின்மாற்றி அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேன்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
மனுவை பெற்ற கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
- சீமான் மீது நடவடிக்கை கோரி புகார்
- இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்
திருச்சி
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் மாவட்ட பொருளாளர் தென்னூர் கலீல் ரகுமான், மாவட்ட துணை செயலாளர் முஹம்மது தாஹா, தொழிற்சங்கமான மக்கள் ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட செயலாளர் டேவிட் ஆரோக்கியராஜ் மற்றும் சிலர் இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர் .அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தனக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சாத்தான்களின் பிள்ளைகள் என்று கூறிவிட்டு, இது நாள் வரை தனது கருத்துக்கு வருத்தமும், தனது வார்த்தையை திரும்ப பெறாமலும் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- கண்மாய் வாரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை மனு அளிக்கப்பட்டு உள்ளது
- ஆவுடையார்கோவில் தாசில்தாரிடம் மனு அளிக்கப்பட்டது
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவில் கோதைமங்களம் கிராமம் உள்ளது.புதுக்கோட்டை மாவட்ட எல்லையிலும், சிவகங்கை மாவட்ட எல்லை ஓரத்திலும் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோதைமங்களம் கண்மாயின் வரத்து வாரி பகுதியில் சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் கண்ணேரியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் வாரியை அடைத்து விவசாயப் பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் கோதைமங்களம் கண்மாய்க்கு வர வேண்டிய வரத்து நீர் தடுக்கப்பட்டு, விவசாயம் பொய்க்கும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய தண்ணீர் இன்றி விவசாயம் செய்ய முடியாமல் கடும் வறட்சியை சந்தித்த மக்கள் நிலை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கை இல்லையென கூறப்படுகிறது. எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதனை தொடர்ந்து வட்டாட்சியர் மார்டின்லூதர்கிங்கை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
- தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன.
- அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை பிடிக்க வேண்டும்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ப்ளூ நுகர்வோர் அமைப்பின் தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம் ஆகியோர் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- கோத்தகிரி பகுதியில் கூலித்தொழிலாளிகள் அதிகளவில் வசிக்கின்றனர்.
இவர்கள் அங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இந்த பகுதிகளில் தற்போது வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக இங்கு உள்ள தேயிலை தோட்டங்கள், கரடிகளின் குடியிருப்பாக மாறி வருகின்றன. எனவே அசம்பாவிதம் நடைபெறும் முன்பாக அந்த பகுதியில் சுற்றி திரியும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.
நீலகிரியில் தக்காளி விலை அதிகரித்து உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு பண்டக சாலைகளிலும் அரசு நிர்ணயித்த விலையின்படி, ஒரு கிலோ ரூ.60க்கு தக்காளி வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்