இந்தியா

டெல்லி முதல்வராகும் மார்லெனா.. ஆக்ஸ்போர்டு டு அரசியல் - அதிஷியின் பின்னணி என்ன?

Published On 2024-09-17 09:49 GMT   |   Update On 2024-09-17 09:49 GMT
  • மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர்.
  • பாஜக வேட்பாளராக களமிறங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.

டெல்லி அரசியல் 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து ஜாமீனில் வந்துள்ள அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அந்த பொறுப்புக்கு அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த அதிஷியை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கெஜ்ரிவால் சிறையிலிருந்த சமயத்தில் அரசை நிர்வகிப்பதில் முக்கிய பங்காற்றிய அதிஷி தற்போது முதலமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த சமயத்தில் அதிஷியின் கல்வி மற்றும் அரசியல் பின்புலம் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆக்ஸ்போர்டு பட்டதாரி

டெல்லி பல்கலைக்கழகத்தில் பேராசிர்களாக இருந்த விஜய் குமார் சிங், திரிபா வாஹி தம்பதிக்கு ஜூன் 8, 1981 ஆம் ஆண்டு பிறந்த அதிஷி, st. ஸ்டீபன் கல்லூரியில் இளங்கலை பட்டமும் ஸ்காலர்ஷிப் மூலம் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 2 முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். சமூக மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்ட அதிஷி மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் ஆர்கானிக் விவசாயம் மற்றும் கல்வி அமைப்பு மேம்பாட்டை வலுப்படுத்த 7 வருடங்களை கழித்துள்ளார்.

ஆம் ஆத்மி பிரவேசம் 

கடந்த 2012 ஆம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியதும் அதில் உறுப்பினராகச் சேர்ந்த அதஷி அதன்பின் முழு நேர அரசியலில் ஈடுபட்டுள்ளார். ஆம் ஆத்மி கொள்கைகளை வடிவமைப்பு குழுவில் முக்கிய பங்காற்றிய அதஷி தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர்களில் மக்களுக்கு பரிட்சியமான முகமாக மாறத் தொடங்கினார்.

 மார்லெனா

அதிஷியின் முழு பெயர் அதஷி மார்லெனா சிங் [ Atishi Marlena Singh] என்பதாகும். மார்க்ஸ் மற்றும் லெனின் ஆகியோரின் ஞாபகமாக மார்லேனா என்ற பெயரை பெற்றோர்கள் அவருக்கு சூட்டியுள்ளனர். 2018 இல் தனது பெயரில் உள்ள மார்லேனா வை அதஷி நீக்கியுள்ளார்.

தனது வேலையைப் பார்த்து மக்கள் தன்னை தீர்மானிக்க வேண்டும் என்றும் தனது பின்புலத்தை [ கமியூனிச] வைத்து தீர்மானித்துவிடக் கூடாது என்பதற்காக போது உபயோகத்தில் இருந்து மார்லேனவை நீக்கியதாக அதிஷி விளக்கம் அளித்தார். தொடர்ந்து 2019 மக்களவை தேர்தலில் கிழக்கு டெல்லியில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய  முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை எதிர்த்து போட்டியிட்ட அதிஷி தோல்வி அடைந்தார்.

ஆட்சியில் பங்கு 

தொடர்ந்து டெல்லி கல்வி அமைச்சக ஆலோசகராகச் செயல்பட்ட அதிஷி கல்காஜி தொகுதியில் 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். மணீஷ் சிசோடியா மற்றும் சத்தியேந்தர் ஜெயின் ஆகியோர் சட்ட சிக்கல் காரணமாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததால் 2023 ஆம் ஆண்டு மார்ச்சில் கல்வி அமைச்சராகவும் பு பொதுப்பணித் துறை, மின்சக்தி மற்றும் சுற்றுலாத்துறை பொறுப்புகளை நிர்வகித்து வந்தார்.

முன்னதாக மணீஷ் சிசோடியா துணை முதல்வராக இருந்தபோது அவருக்கு ஆலோசகராகச் செயல்பட்ட சமயத்திலேயே டெல்லி அரசுப் பள்ளிகளில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களைக் கொண்டுவந்த அதிஷி பள்ளிகள் மற்றும் பாடத்திட்டத்தில் தரத்தை உயர்த்தினார். மேலும் தனது சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் அதிக கவனம் செலுத்தினார் அதிஷி. இந்நிலையில் தற்போது முதல்வராக அதிஷியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags:    

Similar News