என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "College"
- கல்லூரி மாணவி உள்பட 5 பேர் மாயமானார்கள்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (22). இவரது சகோதரி கவிதா (18). சம்பவத்தன்று வீட்டிலிருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லாததால் கருப்பசாமி திருச்சுழி போலீசில் புகார் செய்தார். அதில் திருமணமான ராமபாண்டி என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் பாத்திமா நகரை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி சம்பத்தன்று தோழி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து பஜார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள பெரியபேராளியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி பெத்தக்காள் (38). இவர் மனநிலை பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று மகளுடன் சென்ற பெத்தக்காள் மட்டும் திடீரென மாயமானார். இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாத்தூர் அருேக உள்ள ஒ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் பாலமுருகன் (18). கல்லூரி மாணவரான இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனை பெற்றோர் கண்டித்தனர். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பாலமுருகன் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் ஐ.டிபி.டி.காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவரது மகள் ஆர்த்தி (20). கல்லூரி மாணவியான இவர் சம்பவத்தன்று மாயமானார். இதுகுறித்து அவரது தந்தை பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதில் மகள் மாயமானது தொடர்பாக திருமணமான தினேஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.
- கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழி காட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
- தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் நீட் தேர்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெறவேண்டும். மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் உள்ளது
கோவில்பட்டி:
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி யில் உயர்கல்வி வழி காட்டல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கு வழி எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேரவேண்டும் என்றால் நீட் தேர்வில் 585 மதிப்பெண்களுக்கு மேல் பெறவேண்டும். மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள் உள்ளது. வணிகவியல் மற்றும் பட்டய கணக்காளர் படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. தற்போதைய வளர்ந்துவரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் பொறியியல் படிப்புகள் பெரும் பங்கு வகிக்கின்றன.
அவற்றில், கணினி அறிவியல், பொறியியல், தகவல் தொழி ல்நுட்ப பொறியியல், செயற்கை நுண்ணறிவு தரவு அறிவியல் உள்ளிட்ட பொறியியல் படிப்புகள் வேலைவாய்ப்பினை வழங்கும் படிப்புக்களாக விளங்குகின்றன.
வரும் 4 ஆண்டு காலங்க ளில் கணினி அறிவியல் பொறியியலுடன் இணைந்த மின்னணு தொடர்பு பொறியியல் படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் 18-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 1800-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்ச லம், இயக்குனர் முனைவர் எஸ்.சண்முகவேல், முதல்வர் முனைவர் கே.காளிதாச முருகவேல் ஆகியோர்களின் வழிகாட்டு தலின்படி அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் எம்.ஏ.நீலகண்டன் தலைமையில் கல்லூரிப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியில் கல்லூரி மாணவர் பாலியானார்.
- தற்கொலைக்கு தூண்டியதாக தாய்-மகன் மீது வழக்கு
நங்கவள்ளி:
சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவர், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம்,5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரூ.65 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.
இதில், வட்டியுடன் சேர்த்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். மீதித்தொகை, 15 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாகர், அவருடைய தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் ஆனந்தன் வீட்டிற்கு சென்று, பாக்கித் தொகையை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
மேலும், ஆனந்தன் மகனான கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை, கடனுக்காக பிடிக்க சென்றுள்ளனர். எனது அப்பா வாங்கிய கடனுக்காக, நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை எதற்கு பிடிக்க செல்கிறீர்கள் என நிர்மல் ராஜ் கேட்டுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பித் தர துப்பில்லை, நீங்கள் எல்லாம் எதுக்குடா உயிரோடு இருக்கிறீங்க, போய் சாவுங்கடா என, சுதாகர் அவரது தாயார் சரஸ்வதி இருவரும் சேர்ந்து, நிர்மல் ராஜ் மற்றும் அவரது பெற்றோரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிர்மல் ராஜ் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நங்கவள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் விசாரித்தனர். விசாரணை யில் சுதாகர் மற்றும் சரஸ்வதி திட்டியதால் நிர்மல்ராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுதாகர், சரஸ்வதி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுதாகரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதியை போலீ சார் தேடி வருகின்றனர்.
- தேவகோட்டை அருகே கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
- இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.
தேவகோட்டை
கஞ்சா, புகையிலை விற்பனையை தடுக்க தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார் உத்தரவின் பேரில் தேவகோட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆறாவயல் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் மருது அமல்ராஜ், காவலர் ரமேஷ் ஆகியோர் முள்ளிக்குண்டு அருகே காரைக்குடி தேவ கோட்டை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கானதான்காடு கிராமத்தை சேர்ந்த மூன்றாம் ஆண்டு டிப்ளமோ கல்லூரி மாணவர் விஜய் (21) மறித்து சோதனை செய்தனர். இதில் அவர் 180 கிராம் கஞ்சா கடத்தியது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்து நீதிமன்றம் உத்தர வின்பேரில் சிறையில் அடைத்தனர்.
- திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலர் ஜெயக்குமார், பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாலையில் நாட்டு நலப்பணி திட்ட அணி எண்கள் 43 மற்றும் 45 சார்பாக போதை பொருட்கள் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் கல்லூரி உள்ளரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக திருச்செந்தூர் போலீஸ் டி.எஸ்.பி. ஆவுடையப்பன் கலந்து கொண்டார். திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன் சிறப்புரையாற்றினார். திருச்செந்தூர் துணை தாசில்தார் சங்கநாராயணன் கலந்து கொண்டு பேசினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் அபுல்கலாம் ஆசாத் மற்றும் மருதையாபாண்டியன் செய்திருந்தனர்.
- வாழ்வாதார தேவைகளை அறிய கல்லூரி மாணவிகள் முகாம் நடைபெற்றது.
- ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது.
கமுதி
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் உன்னத இந்தியா திட்டம் (உன்னத் பாரத் அபியான்) ஆகும்.
இந்த திட்டத்தின் கீழ் மதுரை, பரவை பகுதியில் உள்ள மங்கைய ர்க்கரசி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், அந்தப்பகுதியில் உள்ள கிராமங்களான குட்லாடம்பட்டி, செம்மினி ப்பட்டி, கச்சைகட்டி, ராமை யன்பட்டி, பூச்சம்பட்டி ஆகிய 5 கிராமங்களைத் தத்தெடுத்து கிராமங்களில் எரிசக்தி, சாலை வசதி, விவசாய வளர்ச்சி, குடிநீர், சுகாதாரம், கல்விக்கூட வசதி மற்றும் கிராம பஞ்சாயத்துக்களில் தொழில் நுட்ப வசதி முதலான தகவல்களை சேகரித்து கிராம மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஆய்வு செய்தனர்.
இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெஸ்டினா, ஜெயக்குமாரி, சரண்யா, உறுப்பினர்கள் சாந்தி, உமாமகேஸ்வரி மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்கள் தலைமையில் இந்த ஆய்வு தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்றது. மதுரை பரவை மங்கையர்க்கரசி கலைக்கல்லூரி மாணவிகள் கிராமப்புற மக்களின் வாழ்வாதார தேவைகளை அறிய இந்த முகாமை நடத்தினர்.
- அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டனர்.
வேதாரண்யம்;
வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக துவங்கியது இதில் ஆன்லைன் மூலம் விண்ணபித்த 475 மாணவ- மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டு தங்ளுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.
கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முருகன்சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரசிரியர்கள் அறிவுச் செல்வம், பிரபாகரன் மாரிமுத்து,ராஜா பங்கேற்றனர்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு நடைபெற்றது.
- 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு கலந்தாய்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.
பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வானது ஆக. 4ல் சிறப்பு ஒதுக்கீடு மாணாக்கர்களுக்கும், ஆக. 5ல் பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கும் நடைபெற்றதுஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது.
இணைய வழியில் பதிவு செய்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் மாணவர்கள், பொதுப்பிரிவு மாணாக்கர்கள் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொண்டனர். 2 நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் 158 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டுள்ளனர் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.
- கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
- தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.
கீழக்கரை
கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கடந்த
1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முஹம்மது ஷெரிப் தலைமையில் நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் தாங்கள் பலதுறைகளில் சிறந்து விளங்குவதையும், தொழில் துறைகளில் முன்னேறியுள்ளதையும், அதற்கு தங்களுடைய தொழிற்கல்வி உதவியதையும் எடுத்துரைத்தனர்.
மேலும் நாம் வெற்றியடைய வேண்டுமெனில் ஒரு குறிக்கோளை வகுத்து கொண்டு அதில் வெற்றியடைய வேண்டுமென்ற சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடனும் செயல்பட்டால் நாம் எண்ணிய வெற்றியை அடைய முடியும் என்றும் கூறினர். மேலும் கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவண செய்வதாக முன்னாள் மாணவர்கள் உறுதியளித்தனர்.
கீழக்கரைமுஹம்மதுசதக்பொறியியல்கல்லூரியின்
1999-2003-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் முன்னாள் மாணவர்கள் 35 பேர் அவர்களது குடும்பத்தினரோடு கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் சேக் யூசுப், பாலசுப்பிரமணியன், முன்னாள் மாணவர் அப்துல் பாஷித் ஆகியோர் செய்திருந்தனர்.
- தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- அசல் மாற்றுச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் அரசு கலைக்கல்லுாரிகளில், கடந்தாண்டைக் காட்டிலும், இந்தாண்டு கூடுதலாக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. சிக்கண்ணா கல்லுாரியில் வரும் 10ம் தேதியும், எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் வரும் 8ம் தேதியும் கலந்தாய்வு துவங்குகிறது.இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லுாரியில் வரும் 10ம் தேதி துவங்கி, 17 வரை நடக்கிறது. விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.cgac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணுவத்தி–னரின் குழந்தைகள் தேசிய மாணவர்படை ஏ' சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை வரும் 10ம் தேதி காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆடை வடிவமைப்பு நாகரிகம் பாடப்பிரிவிற்கும், கலந்தாய்வு நடக்கும். வணிகவியல் சார்ந்த பாடப்பிரிவுகளுக்கும், பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.காம்., ஐ.பி., பி.பி.ஏ., மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான தரவரிசை, 750 வரையிலான கலந்தாய்வு வரும் 11ல் நடக்கிறது. வரும் 12ம் தேதி, 751 முதல், 1,400 வரையிலும் நடக்கிறது.அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு, தரவரிசை, 700 வரையில், வரும் 13ம் தேதி நடக்கிறது.மேலும், 701 முதல், 1,400 வரையில் வரும் 16ல் நடக்கிறது. வரும் 17ம் தேதி தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவுகளுக்கு முதல், 1000 பேருக்கு தனித்தனியாக கலந்தாய்வு நடக்கும். இதுகுறித்த விவரங்கள், மாணவர்களின் இ மெயில், மொபைல் எண்ணிற்கு வரும். இதுகுறித்து சிக்க–ண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:- கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பிளஸ் 1, பிளஸ் 2 சான்றிதழ் அவசியம். மாற்றுச்சான்றிதழ், சாதி–ச்சான்றிதழ், சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்கள் அவசியம் எடுத்து வரவும். பாஸ்போர்ட் அளவிலான, 6 புகைப்படங்கள் வேண்டும். கல்லுாரி கட்டண தொகை செலுத்த வேண்டும்.அசல் மாற்று–ச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ் இல்லை எனில் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது. ஆன்லைனில் விண்ணப்பித்து, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை கட்டாயம் கொண்டு வரவும்.
இம்முறை அரசு கலை கல்லுாரிகளில் தமிழகத்தில் முதல்முறையாக ரேங்கிங் பட்டியல் இக்கல்லுாரியில்தான் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இதைபோல் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரி, காங்கயம் கலை அறிவியல் கல்லுாரிகளில் வரும் 8ம் தேதி கலந்தாய்வு துவங்கப்பட உள்ளது. ஊரடங்கிற்கு பின் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த முறை, 4 ஆயிரம் பேர் மட்டுமே சிக்கண்ணா கல்லுாரியில் சேர விண்ணப்பித்த நிலையில் இம்முறை, 6 ஆயிரத்து, 119 பேரின் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில் 4 ஆயிரத்து, 42 விண்ணப்ப–ங்கள் பெறபட்டுள்ளதாகவும், கடந்தாண்டை விட ஆயிரம் விண்ணப்பங்கள் அதிகம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் இந்த ஆண்டு பி. காம், பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ. ஆங்கிலம் போன்ற பாட பிரிவுகளுக்கு மாணவர்களிடையே போட்டி அதிகரித்துள்ளது.
- பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர்.
- கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட அறிவியல் ஆசிரிய ர்களுக்கான முதற்கட்ட இரண்டு நாள் பணியிடைப் பயிற்சியானது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் நாகப்பட்டினம் இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமத்தின் தலைவர் எஸ். ஜோதிமணியம்மாள் தலைமையேற்று சிறப்பித்தார். செயலர் எஸ்.செந்தில்குமார், இணை செயலர் எஸ். சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை தலைவர் மற்றும் பணியிடை பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் விஜயசுந்தரம் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் தலைமையுரை வழங்கினார். நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு பயிற்சியை தொடக்கி வைத்து கலந்து கொண்ட ஆசிரியர்களை ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரை வழங்கினார்.
இதில் நாகை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் உள் மற்றும் வெளிக்கல்லூரி பேராசிரியர்கள் வகுப்பு எடுத்தனர். இதனை கலந்து கொண்ட இடைநிலை அறிவியல் ஆசிரியர்கள் ஆர்வத்தோடு கவனித்து குறிப்பு எடுத்தனர். இறுதியாக இ.ஜி.எஸ் பிள்ளை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர்த்தொழில் நுட்பவியல் துறைத்தலைவர் முனைவர் காதர்நிவாஸ் நன்றியுரை வழங்கினார்.
- களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி நடைபெற்றது.
- இந்த பயிற்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
களக்காடு:
களக்காடு கடம்போடுவாழ்வு செயிண்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு 16 வாரங்கள், களக்காடு, இடையன்குளம், திருக்குறுங்குடி, ஏர்வாடி, நாங்குநேரி கரந்தாநேரி, பத்மநேரி, டோனாவூர், தளபதி சமுத்திரம், திருவேங்கடநாதபுரம் பள்ளிகள் கற்றல் கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை கல்லூரியின் தலைவர் தமிழ்செல்வன் மாணவர்களுக்கு வழங்கினார்.
இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் குமரேசன், பேராசிரியர்கள் பலவேச கிருஷ்ணன், கபிரியல்ராஜ், ரமேஷ், மாரியப்பன், ராதிகா, பத்ரகாளி, ஜமிலா பானு, ரெக்சி, அனிதா, கல்லூரி பணியாளர்கள் கலைசெல்வி, சுகன்யா, ரேக்கா, கெளரி உள்பட பலர் கலந்து கொண்டனர்,
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்