search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 105298"

    • காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நடந்தது.
    • விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    மதுரை

    திருமங்கலம் ஒன்றியம் ஆ.கொக்குளம் ஊராட்சி செக்கானூரணியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் 9-ம் ஆண்டு திருவிழா நடைபெற்றது.

    பால்குடம், மஞ்சள்நீர் எடுத்தல், முளைப்பாரி, கரகம் எடுத்து பூஞ்சோலை சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் விஸ்வகர்மா ஐந்தொழில் செய்வோர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    • நொய்யல் அருகே முனியப்பசாமி கோவில் வைகாசி திருவிழா நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், நொய்யல் அருகே முனிநாதபுரம் காவிரி ஆற்றங்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவில் உள்ளது. இக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை திரளான பக்தர்கள் சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக சேமங்கி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர்.அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புனிதநீருடன் ஊர்வலமாக முனியப்ப சாமி கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு மேல் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் முனியப்பசாமி கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், இரவு 7 மணிக்கு மாவிளக்கு எடுத்து வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வாண வேடிக்கை நடந்தது.நேற்று கிடா வெட்டு பூஜை நடைபெற்றது. மதியம் முனியப்பசாமிக்கு அசைவ படையல் போடப்பட்டு பூஜை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளுவர்.
    • 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் முத்துப்பல்லக்கு வீதி உலா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்து பல்லக்கு திருவிழா நாளை இரவு தொடங்கி 6-ந் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி தஞ்சையில் உள்ள கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகிய சுவாமிகள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 வீதிகளிலும் உலா வருவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கில் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. தஞ்சை சின்ன அரிசிக்காரத்தெருவில் உள்ள பழனி ஆண்டவர் கோவிலில் இருந்து விநாயகர், முருகன், மானம்புச்சாவடி விஜயமண்டப தெருவில் உள்ள ஜோதி விநாயகர் கோவிலில் இருந்து விநாயகர், முருகப்பெருமான், குறிச்சி தெருவில் உள்ள முருகன், மேலஅலங்கம் சுப்ரமணிய சாமி கோவிலில் உள்ள முருகர், கீழவாசல் வெள்ளை விநாயகர், உஜ்ஜையினி காளி கோவிலில் இருந்து கல்யாண கணபதி, தெற்கு ராஜ வீதி கமலரத்தின விநாயகர், காமராஜர் காய்கறி மார்க்கெட் செல்வ விநாயகர், வடக்கு வாசல் வட பத்திரகாளி அம்மன் கோவிலில் இருந்து முருகர், விநாயகர், மேல வெளி ரெட்டிப்பாளையம் சாலை வெற்றி முருகன் உள்பட 11 கோவில்களில் இருந்து சுவாமிகள் முத்துப் பல்லக்கில் எழுந்தருளி நாளை இரவில் தஞ்சையில் உள்ள 4 ராஜ வீதிகளிலும் வீதி உலா வர உள்ளது.இந்த பல்லக்குகள் எல்லாம் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, கீழவீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும். நாதஸ்வர கச்சேரி மற்றும் வான வேடிக்கைகளுடன் விடிய விடிய இந்த திருவிழா நடைபெற உள்ளது. 6-ந் தேதி காலை மீண்டும் சுவாமிகள் தங்களது கோவில்களுக்கு சென்றடையும்.

    திருவிழாவை முன்னிட்டு அந்தந்த கோவில்களில் முத்துப் பல்லக்கு தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வர்.

    • மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.
    • வைகாசி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.

    மூலவர் பெருமாள் தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாக காட்சி தருகிறார்.

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வாக தெப்ப திருவிழா நடைபெற்றது.

    முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது, தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தா.பழூர் விஸ்வநாதர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. காலையில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வில்லேந்திய வேலவர், உற்சவ தெய்வங்களான வள்ளி, தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    திருமுறைகள் உள்ளிட்ட பதிகங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க மங்கல வாத்தியங்கள் ஆராதனைகளுடன் சோடச உபசாரங்கள் செய்யப்பட்டு பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலையில் வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை செய்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் பிள்ளைமார் சமூகத்தினர் செய்திருந்தனர்.

    • கும்பாபிஷேகம் வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது.
    • பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு கோவில் செயல் அதிகாரி முருகையன் தலைமை தாங்கினார். குருக்கள் வினோத் மற்றும் பாலு விழாவுக்கான பூஜையை நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர் பாலகிருஷ்ணன் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், டாக்டர் ராஜா, சர்வாலய உழவார பணிக்குழுவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், துரை ராயப்பன், எடையூர் மணிமாறன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் சண்முக சுந்தரம், லாரி உரிமையாளர் சங்க தலைவர் ஆனந்த், செயலாளர் ஸ்ரீனிவாசன், கவுன்சிலர் எழிலரசன், சந்திரராமன் மற்றம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • தொடர்ந்து, பக்தர்கள் ரதக்காவடி எடுத்து வந்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்குப்பொய்கை நல்லூரில் பழமை வாய்ந்த சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    கோவிலில் வைகாசி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் முன்னாள் செல்ல ஒன்றன்பின் ஒருவராக மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்

    இதைத்தொடர்ந்து ரதக்காவடி அலகு காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களின் கோலாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.

    • திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    புதுக்கோட்டை:

    அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா கடந்த 25-ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. மேலும், ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலாவும், அதனை தொடர்ந்து வாணவேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா இன்று நடந்தது. இதையொட்டி, திரவுபதி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து, பக்தர்கள் சத்திரத்தில் உள்ள குளத்தில் புனித நீராடினர். இதையடுத்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் காப்புக்கட்டி விரதம் இருந்த பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் பொதுமக்களும் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    • கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திரு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்களாக நடந்து வந்த திருவிழா இன்றுடன் முடிவடைகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, இன்னிசை கச்சேரி, பக்தி சொற்பொழிவு மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    9-ம் திருவிழாவான நேற்று மாலை 6.30 மணிக்கு கன்னியாகுமரி பார்வதிகாரர் குடும்பத்தினர் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மனை எழுந்தருள செய்து மேளதாளம் முழங்க சன்னதி தெரு வழியாக தெற்குரத வீதியில் உள்ள கன்னியம்பலம் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடும் விசேஷ பூஜை களும், அலங்கார தீபாராத னையும் நடந்தது. இதில் மண்டகப்படி கட்டளைதாரர்கள் ஹரிகரன், சிவசுப்பிரமணியன் விஜய் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு சமயசொற்பொழிவும் அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பக்தி பஜனை யும் நடந்தது. அதன்பிறகு பகவதி அம்மன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி கலைமான் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. வாகன பவனி சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரதவீதி, வடக்கு ரதவீதி, நடுத்தெரு, கீழரதவீதி, சன்னதிதெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. வழிநெடு கிலும் பக்தர்கள் வாகனத்தில் எழுந்தருளி இருந்த அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து திருக்கணம் சாத்தி வழிபட்டனர்.

    • வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்
    • அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது

     தஞ்சாவூர்:

    ரெயில்வே துறை சார்பில் பண்டிகை மற்றும் திருவிழாக்களையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (எண்-06037) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    இந்த ரெயில் வருகிற ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி முதல் வருகிற 30-9-2023 வரை உள்ள சனிக்கிழமை தோறும் இயக்கப்படும்.

    நாகர்கோவிலில் இருந்து மதியம் 1.20 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

    மறு மார்க்கத்தில் இந்த ரெயில் (எண்-06038) ஆகஸ்ட் மாதம் 6-ந் தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை உள்ள ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 4.45 மணிக்கு நாகர்கோவில் செல்கிறது.

    இந்த ரெயில்கள் இருமார்க்கத்திலும் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் ஏசி, படுக்கை வசதிகள் உள்பட 20 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

    • அம்பாளுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தென்னம்புலம் மழை மாரியம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாள் சிம்ம, கிளி, அன்னபச்சி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று தென்னம்புலம் கருப்பங்காடு பகுதி சார்பில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, பின் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    பின்பு, புலி வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    தொடர்ந்து, கரகம், காவடி ஆட்டம், தப்பாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. நிகழ்ச்சியை கருப்பங்காடு கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • திருவிழாவையொட்டி பால்குட வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணை கோவிலான முப்பிடாதி அம்மன் கோவிலில் 56-ம் ஆண்டு பாலாபிஷேகம், சந்தன அபிஷேக விழா சங்கரன்கோவில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்தது. இதனை முன்னிட்டு பால்குட வீதி உலா நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து அபிஷேகங்களும் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இரவு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் தினசரி நாளங்காடி வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், துணைத்தலைவர் இளங்கோ, செயலாளர் செய்யது அலி, துணை செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன் மற்றும் கண்ணையா, கருப்பசாமி, சுப்பிரமணியன், வேல்சாமி, முருகன், மூர்த்தி, முத்துக்குமார், நாராயணன், முத்துசாமி, கருப்பசாமி, முப்பிடாதி, பாலசுப்ரமணியன், துரைராஜ், ஜெகநாதன், குருசாமி, ரவிச்சந்திரன், பரமசிவம், இசக்கி ராஜன், சின்னபாண்டியன், நடராஜன் மற்றும் தினசரி நாளங்காடி வியாபாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×