search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 108818"

    • மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
    • மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தஞ்சை மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது.

    இதனையொட்டி மேற்குறிப்பிட்ட மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள் அல்லது குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப்பே ரவை, சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும்.

    பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப்பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும்.

    ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.

    ஆனால் மனுவில் உள்ள பொருள் கீழ்கண்டவைகளாக இருத்தல் கூடாது:-

    தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டு தல், வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல், சட்ட மன்றப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.

    ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும். ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படும்.

    அப்போது மனுதாரர் முன்னிலையில், குழுக்கூட்ட த்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும்.

    இது குறித்து, மனுவில் உள்ள பொருள் கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் அனுப்பப்படும்.

    20-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் ஆய்விற்கு எடுத்துக்கொ ள்ளப்படாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்கள் பெறப்பட்டது.
    • விசாரணை செய்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர்உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி, குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 416 மனுக்களைபெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்துஅதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)அம்பாயிரநாதன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரவிச்சந்திரன், திட்டஇயக்குநர் (மகளிர் திட்டம்) வரலட்சுமி, துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
    • மக்கள் குறைதீர் கூட்டத்திடில் 323 மனுக்கள் பெறப்பட்டது

    புதுக்கோட்டை, 

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவி த்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 323 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் அளித்தனர். இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாற்று த்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், விபத்து மரணத்திற்கான நிதியுதவித் தொகையாக ரூ.1,00,000 ஒரு பயனாளிக்கும் மற்றும் இயற்கை மரணம் நிதியுதவித் தொகையாக தலா ரூ.17,000 வீதம் 20 பயனாளிகளுக்கு ரூ.3,40,000 -க்கான காசோலைகளையும், ரூ.7,500 மதிப்பிலான உதவி உபகரணங்கள் 2 பயனாளிகளுக்கும் என ஆகமொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.4,47,500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.சரவணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள்.
    • காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :- பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம் பஞ்சாயத்துக்கு உடபட்ட காளிவேலம்பட்டி கிராமத்திலிருந்து செம்மிப்பாளையம் ஊராட்சி சாமிகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தினமும் 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படிக்க செல்கிறார்கள். தினந்தோறும் இந்த பகுதிகளில் இருந்து நடந்தும் சைக்கிளிலும் சென்று வருகின்றனர்.

    இதனால் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பகுதியில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று திரும்பும் வகையில் காலை 8மணி, மாலை 4-30மணிக்கு பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் திருமணம் செய்தோம்.
    • கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    ஈரோட்டை சேர்ந்தவர் மாளவிகா (வயது22).திருநங்கையான இவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தார்.

    அப்போது அவர் கூறி–யதாவது:-என்ஜினீயரிங் பட்டதாரியான நான் சென்னி மலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறேன். நான் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் இருந்தபோது புதுக்கோட்டையைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் மணிகண்டன் (23)என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தோம். பின்னர் நாங்கள் திருமணம் செய்வது என முடிவு செய்தோம். அதன்படி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருநங்கைகள் முன்னிலையில் மருதமலை கோவிலில் வைத்து மாலை மாற்றி இருவரும் திருமணம் செய்தோம்.

    பின்னர் ஒத்தக்கால் மண்டபத்தில் வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.

    இந்த நிலையில் எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காணவில்லை என பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி நாங்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் எங்கள் 2 பேரையும் பீளமேடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு வந்த எனது கணவரின் குடும்பத்தினர் அவரை காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் அவர் மீண்டும் வரவில்லை. எங்கு சென்றார்? என்ன ஆனார்? என தெரியவில்லை. எனவே எனது காதல் கணவரை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியிருந்தார்.

    • இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார்.

    கன்னியாகுமரி:

    பூதப்பாண்டி அரும நல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அருமநல்லூர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறேன். எனக்கும் சேலம் கருப்பூரை சேர்ந்த சக்தி (வயது 34) என்பவருக்கும் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். பின்னர் எனது கணவருக்கு வேறு பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் என்னையும், என் குழந்தைகளையும் கவனிக்காமல் இருந்தார். நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு என்னை வீட்டை விட்டு துரத்தி விட்டார். இதைத்தொடர்ந்து அவரும் சேலத்தை சேர்ந்த சுகன்யா (34) என்ற பெண்ணுடன் அவருக்கு தகாத உறவு ஏற்பட்டது. அவருடன் தற்பொழுது குடும்பம் நடத்தி வருகிறார். தற்பொழுது எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறியிருந்தார்.

    இது தொடர்பாக நாகர்கோ வில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 498, 406, 494 ஐபிசி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது.
    • மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனை தொடர்ந்து அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டையினை சமூக பாதுகாப்பு துறையின் கீழ் பதிவு பெற்று செயல்படும் டி.இ.எல்.சி நாசரேத் குழந்தைகள் இல்லத்தில் தங்கி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் குளோரி குணசீலி, மாவட்ட திட்ட அலுவலர் விஜய் ஆனந்த் (முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்) மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.
    • இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

    நெல்லை:

    இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம் தலைமையில் மத்திய அரசு வக்கீல்கள் குற்றாலநாதன், பாலாஜி கிருஷ்ணசுவாமி, மாவட்ட தலைவர் சிவா மற்றும் கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    பாளை தாலுகா நொச்சி குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அனைத்து சமுதாய மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.

    இங்கு 800 வருடங்களுக்கு முன்னர் பாண்டிய மன்னர்க ளால் கட்டப்பட்ட பெருமாள் கோவில், சிவன் கோவில் மற்றும் திருச் செந்தூர் செல்லும் பாதை யாத்திரை பக்தர்கள் தங்கி செல்வதற்கு கல் மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் யாரால் அமைக்கப்பட்டது என்ற பெயருடன் கூடிய பதிக்கப்பட்ட கல்வெட்டுகள் சுவர்களில் இருந்து வருகிறது.

    இந்த சத்திரம் மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடங்களை கிருஷ்ணா புரத்தில் உள்ள தனி நபர்கள் ஆக்கிரமித்து வைத்து உள்ளனர்.

    அந்த இடத்திற்கு போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியாக சிலர் பட்டா பெற்றுள்ளனர். இதனை மீட்க போராடிய நபர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.

    இந்த இடம் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வழக்கு போடப்பட்டு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த இடம் தற்போது கோடிக்கணக்கில் இருக்கும் என்பதால் அதனை தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

    எனவே மாவட்ட கலெக்டர் இந்த பிரச்சினையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்ய முயலும் தனி நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தையும் மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    அப்போது அவர்களுடன் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் நிர்வாகி கள் விமல், தாஸ், ரமேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராய விற்பனை சட்ட விரோதமாக நடைபெற்று வந்தது.
    • டாஸ்மாக் கடைகளை கள்ளு கடைகளாக மாற்றி விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாரந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர்.

    அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் பெரிய கோவில் கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் வந்தனர்.

    திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை கையில் எடுத்து மனு கொடுக்க புறப்பட்டனர். உடனடியாக பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மதுபாட்டில்களோடு மனு கொடுக்க அனுமதி கிடையாது என எச்சரித்தனர்.

    இதனைத் தொடர்ந்து கார்த்தி தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    தமிழகத்தில் சமீபத்தில் கள்ள சாராயம் விற்பனை சட்ட விரோதமாக நடை பெற்று வந்தது. கள்ளச்சாராயம் குடித்ததில் 22-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

    மேலும் சில இடங்களில் போலி மதுபா னத்திற்கு அவ்வப்போது பலியாகி வரும் சம்பவம் நடந்து வருகிறது.

    இதனால் தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய கோரிக்கையான பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

    டாஸ்மாக் கடைகளைகள்ளு கடைகளாக மாற்றி பனை மற்றும் தென்னை விவசாயிகளுக்குகள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலி தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.
    • பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த வாராந்திர குறைதீர்க்கும் கூட்டத்தில் திருமங்கலக்கோட்டை கீழையூர் மேலக்காலணியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுகந்தி (வயது 32) என்பவர் தனது 2 கைக்குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் செந்தில்குமார் கடந்த 8 மாதத்திற்கு முன்பு கூலித் தொழிலாளி வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் செந்தில்குமார் இறந்து விட்டதாக எங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் வந்தது.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

    உடனடியாக அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும். 2 கைக்குழந்தைகளுடன் நான் எப்படி வாழ்வேன் என்று தெரியவில்லை.

    பட்டப்படிப்பு முடித்துள்ள எனக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். எனது ஏழ்மை நிலையை உணர்ந்து எனக்கு உதவி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கை–கள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர்.
    • வட்ட வழஙகல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் தலைமையில் கன்னிவாடி, தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களுக்கு நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 308 பேர் மனு கொடுத்தனர். அதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட ஒரு சில மனுக்களுக்கு மட்டும் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளது.இந்த நிகழ்ச்சியின் போது தாராபுரம் தாசில்தார் ஜெகஜோதி, தலைமையிடத்து துணை தாசில்தார் பரமேஷ், மண்டல துணை தாசில்தார் மகேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில் பிரபு, வருவாய் ஆய்வாளர்கள் சரவணன், பாரதி, செல்வி, பொற்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
    • கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.

    தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    ×