என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிலத்தகராறு"
கண்ணமங்கலம்:
ஆரணி அடுத்த தச்சூரை சேர்ந்தவர் சந்திரபாலன் (வயது 50). இவரது தம்பி தனபாலன் இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதன் காரணமாக சந்திரபாலன் கடந்த 2016-ம் ஆண்டு தனபாலனை தம்பி என்றும் பார்க்காமல் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஆரணி போலீசார் சந்திரபாலனை கைது செய்தனர். இதன் வழக்கு விசாரணை ஆரணி கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபாலன் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில் சந்திரபாலன் அம்மாபாளையம் அருகே உள்ள கல்லேரி என்ற இடத்தில் விஷம்குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் வந்து பரிசோதனை செய்த போது சந்திரபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை பெரிய மேல்தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் அப்துல்ஜலீல், தி.மு.க. பிரமுகர். இவரது வயல் அருகில் பாரூக் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அரங்ககுடியை சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் என்பவர் வீட்டு மனைகளை உருவாக்கி உள்ளார். அவர் அப்துல் ஜலீலுக்கு சொந்தமான வயலுக்கு வழியில்லாத வகையில் வீட்டுமனை அமைத்ததால் அப்துல் ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது காசிம் மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் அப்துல் ஜலீல் தனது தரப்பில் வாதாட வக்கீலை சந்தித்து பேசி அவரிடம் வழக்குக்கு உரிய இடத்தை காட்ட நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த முகமது காசிம், அவரது மகன் அனீஸ் ஆகியோர் வாக்குவாதம் செய்து அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ஜலீல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முகமது காசிம், அவரது மகன் அனீசும் தங்களை அப்துல் ஜலீல் தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் செம்பனார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள செம்மண்கூடல் பகுதியை சேர்ந்தவர் அம்மாசி (வயது 70). இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்ட முயன்றார். இதற்கு அதே ஊரை சேர்ந்த சின்னதுரை (42) என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அம்மாசி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், சின்னதுரை தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அம்மாசி, சின்னதுரை ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகர் காலனியைச் சேர்ந்தவர் ராஜூ மகள் இந்திராணி (வயது 58). ராஜூவுக்கு அதே பகுதியில் வயல் மற்றும் வீட்டடி நிலம் உள்ளது. இதன் ஒரு பகுதியை இந்திராணி தனது சகோதரர் பரமசிவத்துக்கு கொடுக்க விரும்பினார்.
ஆனால் பரமசிவம் குடும்பத்தினர் முழுவதும் தங்களுக்கு வேண்டும் என தகராறு செய்தனர். சம்பவத்தன்று ராஜூ மற்றும் இந்திராணியை அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது.
இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தந்தை மகளை தாக்கிய பரமசிவம் மகன் சோமசுந்தரம், பழனியம்மாள், ஜெயமணி, இந்திரன் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பெரியகுளம் காந்தி நகரைச் சேர்ந்தவர் முருகபாண்டி (24). ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பையா என்பவர் இவரது ஆட்டோவில் சென்றுள்ளார்.
ஆனால் பணம் தராமல் முருகபாண்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து தென்கரை போலீசார் வழக்குபதிவு செய்து கருப்பையாவை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள கொடகரை கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 62). ஓய்வு பெற்ற கிராம ஊழியர். அதே பகுதியை சேர்ந்த தொட்டப்பா என்பவருடைய மகன் சிவருத்திரா (25). ராமகிருஷ்ணனுக்கும், தொட்டப்பாவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சிவருத்திரா குடித்து விட்டு மது போதையில் வந்து நிலம் தொடர்பாக ராமகிருஷ்ணனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சிவருத்திரா கீழே கிடந்த கட்டையை எடுத்து ராமகிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே சிவருத்திரா அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து அஞ்செட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ணனின் மகன் மாரியப்பன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவருத்திராவை கைது செய்தனர்.
நிலத்தகராறில் ஓய்வு பெற்ற கிராம ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
பழனி அருகே வத்தகவுண்டன்வலசை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 75). இவருக்கு 4 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். இவர் தனக்கு சொந்தமான 75 சென்ட் நிலத்தை விற்பது குறித்து மகன்களிடம் கடந்த மாதம் 29 ம் தேதி பேசினார். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த செல்லமுத்து தன்னிடம் இருந்த கத்தியால் தனக்குதானே குத்தி கொண்டார்.
வயிற்றில் குத்தி கொண்டதில் கீழே விழுந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இச்சம்பவம் தொடர்பாக ஆயக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
கோபி அருகே உள்ள செம்மாம்பாளையம் வெள்ளியங்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. விவசாயி.
இவருக்கும் அவரது உறவினரான அவினாசி தாலுகா குட்டகத்தை சேர்ந்த சதீஸ்குமாருக்கும் (வயது 26) இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
கடந்த 20-11-2017 அன்று தனது தோட்டத்து வீட்டில் பழனிச்சாமி தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது சதீஸ்குமார் அங்கு வந்தார்.
அவர் பழனிச்சாமியிடம் நிலம் தொடர்பான தகராறில் ஈடுபட்டார். பின்னர் அரிவாளால் பழனிச்சாமியை வெட்டினார். தடுக்க வந்த பழனிச்சாமியின் மகள் துரைசாமிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.
இதில் பழனிச்சாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை தொடர்பாக வரப்பாளையம் போலீசார் சதீஸ்குமாரை கைது செய்த கோபி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் இன்று நீதிபதி மணி தீர்ப்பு கூறினார். பழனிச்சாமியை கொலை செய்த வழக்கில் சதீஸ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனகோட்டி ராம் ஆஜராகி வாதாடினார். #tamilnews
சின்னசேலம்:
சின்னசேலம் அருகே உள்ள பூசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 34). இவருக்கும் அதேஊரை சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணி கழிப்பறை கட்டும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்த ராமகிருஷ்ணன், அவரது தந்தை தேவேந்திரன், அக்காள் லட்சுமி ஆகியோர் சுப்பிரமணியிடம் ஏன் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கழிப்பறை கட்டுகிறீர்கள்? என தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது ஆதரவாளர்களான தங்கவேல், ராமர், கண்ணன், ராஜா, பெரியம்மாள் ஆகிய 6 பேரும் சேர்ந்து ராமகிருஷ்ணன், தேவேந்திரன், லட்சுமி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் ராமர் உள்பட 6 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, சுப்பிரமணி, தங்கவேல் ஆகியோரை கைது செய்தனர்.
வேலூர்:
கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தளபதி (வயது45). விவசாயி. இவரது சித்தப்பா மகன் ஜெயராமன் (40). இருவருக்கும் நிலத்தகராறு சம்பந்தமாக முன்விராதம் இருந்தது.
நேற்று மாலை தளபதி அங்குள்ள ஏரிக்கரையில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஜெயராமனுடன் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயராமன் தளபதியை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்து, முகத்தில் தளபதி படுகாயம் அடைந் தார். கே.வி.குப்பம் போலீசார் தளபதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் சி.எம்.சி.யில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து ஜெயராமனை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஈஸ்வரன்கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவெங்கடாச்சலம் (வயது62). இவருக்கு தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கத்தில் சொந்தமாக நிலம் உள்ளது. இதற்கிடையே முத்து வெங்கடாசலத்துக்கும், அபிஷேகப்பாக்கத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவருக்கும் நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடாச்சலம் தனது உறவினர் மீனாட்சி (60) என்பவருடன் அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நிலத்தை பார்வையிட சென்றார். அப்போது மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து முத்துவெங்கடாச்சலம் தவளக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மாயகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் விக்னேஷ் ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்