search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 124470"

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விமான எஞ்சின் தீப்பிடித்த காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
    • முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டனர்.

    பிரேசில் நாட்டை சேர்ந்த லோ-கோஸ்ட் ஏர்லைனின் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவின் சாண்டோஸ் டுமோண்ட் விமான நிலையத்தில் இருந்து போர்டோ அலெக்ரேவுக்கு புறப்பட்டது. விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது அதன் எஞ்சின் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதில் இருந்து அதன் எஞ்சின் திடீரென தீப்பற்றி எரியும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விமான எஞ்சின் தீப்பற்றியதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஓடுபாதையில் இருந்து விமானம் டேக் ஆஃப் ஆக சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், அதன் எஞ்சினில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. பின் எஞ்சின் தீப்பற்றி எரிந்தது. இதன் காரணமாக விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பின் முறையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு அதில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தின் எஞ்சின் வெடித்து விபத்து ஏற்பட்டதால் குறிப்பிட்ட ஓடுபாதை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மூடப்பட்டது. இதன் காரணமாக சில விமானங்களின் புறப்பாடு நேரம் தாமதமானது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த பயணிகள் அடுத்த விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். 

    • அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார்.
    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார்.

    அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

    இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார்.

    அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார்.

    இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • பயணி ஒருவரை காலி மதுபாட்டிலால் ஒருவர் தாக்குவது போன்ற காட்சியும் காணப்பட்டது.
    • குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்ற விமானத்தில் நடந்தது உறுதி படுத்தப்பட்டது.

    விமானத்தில் பெண் உள்பட சிலர் எழுந்து நிற்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக பேசிக்கொள்வதும், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதுமான வீடியோ ஒன்று ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வீடியோவில் ஹைலைட்டாக பயணி ஒருவரை காலி மதுபாட்டிலால் ஒருவர் தாக்குவது போன்ற காட்சியும் காணப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து இதுபற்றி விசாரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதில் சமூக வலை தளத்தில் வெளியான வீடியோ, குயின்ஸ்லாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்ற விமானத்தில் நடந்தது உறுதிபடுத்தப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் சிலர் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை விமான ஊழியர்கள் அமைதியாக இருக்கும்படி கூறியும் பயணிகள் கேட்கவில்லை.

    இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. அங்கு விமானத்தில் தகராறில் ஈடுபட்ட பெண் பயணி ஒருவர் தரை இறக்கப்பட்டார். அதன்பின்பு மீண்டும் புறப்பட்ட விமானத்தில் மற்ற பயணிகளில் சிலர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி இருந்தனர். இதையடுத்து விமானம் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதிக்கு சென்றதும் விமான ஊழியர்கள் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விமானத்திற்குள் தகராறில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பயணிகள் கைது செய்யப்பட்டனர்.

    • விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார்.
    • விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    டெல்லியில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 225 பயணிகள் இருந்தனர். விமானம் புறப்பட்டபோது அதில் இருந்து பயணி ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அவர் விமான ஊழியர்கள் 2 பேரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து விமானம் உடனடியாக மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ரகளை செய்த பயணி கீழே இறக்கிவிடப்பட்டார்.

    பின்னர் மீதமுள்ள பயணிகளுடன் அந்த விமானம் லண்டன் புறப்பட்டு சென்றது.

    • கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சென்னையில் இருந்து கோவா, டெல்லிக்கு ஒரு வழி டிக்கெட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    கோடைகாலம் தொடங்கி விட்டது.விரைவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.

    இந்த வாரத்தில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் அடுத்த வாரத்தில் 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழ் வருட பிறப்பு மற்றும் வழக்கமான விடுமுறை நாட்கள் வருகிறது. இதேபோல் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வர உள்ளன. இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதையடுத்து சென்னையில் இருந்து மும்பை, கோவா, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, ஐதராபாத், புனே, டார்ஜிலிங், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலான விமானங்களில் இறுதி கட்டத்தில் உள்ளன. கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது. கொரோனா நோய் தொற்று முடிவடைந்த பின்னர் தற்போது குறிப்பாக இந்த ஏப்ரல் மாத மத்தியில் ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமான பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து கோவா, டெல்லிக்கு ஒரு வழி டிக்கெட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்துக்கு ரூ.5 ஆயிரம், அந்தமானுக்கு ரூ.9,500, மும்பைக்கு ரூ.8500 கட்டணமாக உள்ளன.

    • சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர்.
    • அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர்.

    மும்பை:

    மராட்டிய மாநிலம் நலசோப்ரா பகுதியை சேர்ந்த 2 பேர் வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்றனர். ஒரு ஆண்டுக்கு பிறகு அவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்து கொண்டு இருந்தனர்.

    சொந்த ஊர் திரும்பும் மகிழ்ச்சியில் 2 பேரும் விமானத்தில் அளவுக்கு அதிகமாக மது குடித்தனர். இதனால் அவர்களுக்கு போதை தலைக்கேறியது. அதில் ஒருவர் தனது இருக்கையில் இருந்து எழுந்து நடந்துகொண்டே மது குடித்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற பயணிகள் 2 பேரையும் கண்டித்தனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் சக பயணிகளை ஆபாசமாக திட்டினார்கள். இதை தட்டிக்கேட்ட விமான பணியாளர்களை யும் 2 பேரும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர். உடனே விமான பணியா ளர்கள் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை கைப்பற்றினார்கள்.

    அந்த விமானம் மும்பையில் தரை இறங்கியதும் போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    • பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 10.10 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடம் பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் கதவை திறந்தனர்.

    இதையடுத்து நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட பயணிகள் கீழே இறங்கி புறப்பட்டு சென்றனர். மீண்டும் 178 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    • நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது.
    • விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து 469 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு விமானம் ஜெர்மனிக்கு புறப்பட்டது. கிளம்பிய சிறிது நேரத்துக்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானம் திடீரென பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்தனர். பயணிகள் அனைவரும் பயத்தில் கூச்சலிட்டனர். விமானம் குலுங்கியதில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். சிலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனையடுத்து வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். பின்னர், காயம் அடைந்த 7 பயணிகளும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    • நடிகை மீரா ஜாஸ்மின் 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.
    • இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார்.


    மீரா ஜாஸ்மின்

    மலையாளத்தில் சில படங்கள் நடித்து வந்தாலும் தமிழில் இதுவே அவர் கடைசியாக நடித்த திரைப்படம். இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று பிறந்த நாள் கொண்டாடும் இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


    விமானம் போஸ்டர்

    அந்த வகையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக 'விமானம்' படக்குழு மீரா ஜாஸ்மினுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் இப்படம் மூலம் ரசிகர்களை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.



    • ‘கோ பர்ஸ்ட்’ நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது.
    • இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது.

    புதுடெல்லி :

    'கோ பர்ஸ்ட்' விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 9-ந்தேதி பெங்களூருவில் இருந்து டெல்லி சென்றது. இந்த விமானத்தில் ஏறுவதற்காக 55 பயணிகள் பெங்களூரு விமான நிலைய முனையத்தில் இருந்து விமானத்துக்கு அழைத்து செல்லப்படும் பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    ஆனால் அவர்களை ஏற்றாமலேயே இந்த விமானம் அங்கிருந்து கிளம்பி விட்டது. இதனால் அந்த பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.

    இந்த விவகாரத்தை சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்தது. இது தொடர்பாக 'கோ பர்ஸ்ட்' நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கமும் பெற்றது. இந்த விசாரணை முடிவில் அந்த விமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.

    விமானத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக முனைய ஒருங்கிணைப்பாளர், வணிக ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே சரியான தகவல் தொடர்பு இல்லாதது கண்டறியப்பட்டதாக இயக்குனரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    ×