search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 136067"

    • வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.
    • வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை நகரப்பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி தற்போது பிளஸ்-2 முடித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டா கிராம் (சமூகவலை தளம்) மூலம் வாலிபர் ஒருவர் பழக்கமானார். தனது வசீகர பேச்சால் அந்த வாலிபர் மாணவியை தனது வலையில் வீழ்த்தினார்.

    இதன்பின் மாணவியின் புகைப்படம் ஒன்றை அவர் கேட்டுள்ளார். அதன்படி, மாணவியும் தனது புகைப் படத்தை அனுப்பியுள்ளார். அந்த படத்தை 'மார்பிங்' செய்து ஆபாசமாக சித்தரித்துள்ளார்.

    இந்நிலையில் அந்த படத்தை அனுப்பி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் இதுபற்றி கூறி முறையிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர்கள் கோரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அந்த வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.
    • முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து பணி ஆணையை வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியின் மகளான கலா (23).

    காவலர் தேர்வு

    கரிவலம்வந்தநல்லூரில் உள்ள அகாடமியில் படித்து கடந்த ஆண்டு நடைபெற்ற காவலர் தகுதிக்கான தேர்வில் பங்கேற்றார். எழுத்து, உடற்தகுதி, மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் பங்கு பெற்ற கலா மாநில அளவில் பெண்கள் பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    இதனைதொடந்து கடந்த வாரம் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், கலாவை நேரில் அழைத்து தமிழக காவல்துறைத்தலைவர் சைலேந்திரபாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா ஆகியோர் முன்னிலையில் காவலர் பணிக்கான பணி ஆணையை வழங்கினார்.

    எம்.எல்.ஏ. வாழ்த்து

    முதல்-அமைச்சரிடம், பணி ஆணை பெற்ற மாணவி கலாவை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. நேரடியாக கரிவலம்வந்தநல்லூர் பயிற்சி நிலையத்திற்கு சென்று வாழ்த்தி பரிசு மற்றும் மரக்கன்று வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

    இதில் அகாடமி ஜான்சன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, மதிமாரிமுத்து, நகர செயலாளர் பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் தேவதாஸ், பஞ்சாயத்து தலைவர் தினேஷ் மற்றும் பெற்றோர்கள், அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
    • சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

    அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார்.

    கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.

    • தோட்டத்தில் தென்னை மரத்தின் கீழ் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
    • காற்று வேகமாக வீசியதால் தென்னை மட்டையுடன் கட்டியிருந்த குளவிக்கூடும் கீழே விழுந்தது.

    குண்டடம் :

    தர்மபுரியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் சினேகா (வயது 17). பள்ளி மாணவியான இவர் கோடை விடுமுறை என்பதால் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அடுத்துள்ள எருக்கலாம்பாளையத்தில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் பெரியம்மாவான பஞ்சலை வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் அங்குள்ள ஒரு தோட்டத்தில் தென்னை மரத்தின் கீழ் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அந்த மரத்தின் தென்னை மட்டையில் குளவி கூடு கட்டியிருந்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தென்னை மட்டையுடன் கட்டியிருந்த குளவிக்கூடும் கீழே விழுந்தது. இதனால் அதில் இருந்து பறந்த அதிகளவிலான குளவிகள் சினேகாவை கொட்ட தொடங்கியது. இதனால் அவர் அலறி துடித்தார். சினேகாவின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி சினேகா பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
    • உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    பரமக்குடி

    கடந்த மார்ச், ஏப்ரலில் நடந்த 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 99 சதவீத தேர்ச்சியும்,பிளஸ்-1 வகுப்பில் 97 சதவீத தேர்ச்சியும் பெற்று பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி நகரில் முதலிடத்தைப் பெற்றது.

    முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தாளாளர் என்.ஷாஜஹான் தலைமை தாங்கினார். கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் எம்.சாகுல் ஹமீது, செயலாளர் எம்.சாதிக் அலி, பொருளாளர் ஏ.லியாகத் அலிகான் மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எம்.அஜ்மல்கான் வரவேற்றார். 10-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளான எம்.தீபிகா தர்ஷினி, ஹெச்.ரோஹித் கிருஷ்ணா, ஜெ.முகம்மது தஸ்பிக் ராஜா, எம்.சவுரா பிளஸ்-1 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள் எஸ்.பிரேமா, எஸ்.சுல்தானா ஜாஸ்மின், எஸ்.அபிராமி ஆகியோருக்கு பொன்னாடையும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. உதவித் தலைமையாசிரியர் எம்.புரோஸ்கான் நன்றி கூறினார்.

    • பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வி அடைந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் இந்திரா.

    இவரது மகள் குணவதி (வயது 15).

    இவர் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்தார்.

    இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    இதில் மாணவி குணவதி ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தேர்வில் தோல்வி அடைந்தது தெரியவந்தது.

    இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு மாட்டினார்.

    இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் குணவதியை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவர் இறந்தார்.

    இது குறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • சம்பவம் குறித்து மாணவியின் தாய் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    கோவை:

    கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன்.

    இவரது மனைவி சசிகலா. இவர் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஸ்ரீநிதி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஸ்ரீநிதி வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று காலை சுதாகரன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சசிகலா, அவரது மகள் ஸ்ரீநிதி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். மதியம் சசிகலா வீட்டில் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீநிதி தனது சகோதருடன் வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டிருந்தார். சசிகலா வேலையை முடித்து விட்டு மதியம் 1.30 மணிக்கு வெளியில் வந்து பார்த்த போது மகன் மட்டும் நின்றிருந்தார். மகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியான அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக அவர் வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து அக்கம்பக்கம் உள்ளவர்களின் வீடு மற்றும் அருகே உள்ள இடங்கள் முழுவதும் ஸ்ரீநிதியை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என நினைத்து அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். ஆனால் மாணவி அங்கும் செல்லவில்லை என்பது தெரியவந்தது.

    இதனால் மாணவியின் தாய் சசிகலா சம்பவம் குறித்து கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மாணவியின் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விசாரித்து விட்டு, அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் மாணவி வீட்டில் இருந்து நடந்து ஒண்டிப்புதூர் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதும், அங்கிருந்து உக்கடம் செல்லும் பஸ்சில் ஏறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் உக்கடம் பஸ் நிலையத்திற்கு சென்றனர். அங்கு பஸ் நிலையம் மற்றும் அங்கு வந்த அனைத்து பஸ்களிலும் ஏறி தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லை.

    மாணவி மாயமாகி ஒரு நாள் ஆகியும் இன்னும் கிடைக்காததால் மாணவியின் பெற்றோர் அழுதபடியே மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றி வருகின்றனர்.

    இதற்கிடையே மாயமான மாணவியை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மாணவியை தேடி வருகின்றனர். மாணவி மாயமானரா? அல்லது யாராவது கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் மாணவியை எங்கு தேடியும் கிடைக்காததால், மாணவியின் தந்தை சுதாகரன், தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் தனது மகளின் புகைப்படம், பெயர், வயது, வீட்டின் முகவரி என அனைத்து தகவல்களையும் சமூக வலைதளங்களான வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் பதிவிட்டார். அதில், இந்த புகைப்படத்தில் உள்ள மாணவியின் பெயர் ஸ்ரீநிதி, கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த அவரை நேற்று மதியம் முதல் காணவில்லை. அவரை யாராவது பார்த்தால் அதில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது.

    தற்போது இந்த தகவலானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மின்னல் வேகத்தில் வைரலாகி வருகிறது.

    இதனை பார்க்கும் பலரும் தங்களது செல்போனில் உள்ள வாட்ஸ் அப், பேஸ் புக் குழுக்களில் பகிர்ந்து மாணவியை கண்டுபிடிக்க தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். மாணவி மாயமானது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார்.

    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திடீரென்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்ப வில்லை. இதையடுத்து அவரை பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

    இந்த நிலையில் மாணவி, தனது தந்தைக்கு போன் செய்து தான் ரிக்ஷாவில் ஏறியபோது ரிக்ஷா டிரைவர் தனது வாயை துணியால் பொத்தி மயக்க மடைய வைத்து கடத்தி சென்றதாக கூறினார்.

    சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது கடத்தல் காட்சிகள் ஏதும் பதிவாகவில்லை.

    இதற்கிடையே உஜ்ஜயினி பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் மாணவி ஒருவர் தனியாக இருந்ததாக போலீசார் கண்டுபிடித்தனர். அப்போது அவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவி என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தேர்வில் தோல்வி அடைந்ததால் வீட்டை விட்டு ஓடி, கடத்தல் நாடகம் ஆடியதாக தெரிவித்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறினார்கள்.

    • கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.
    • வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா கடிநெல்வயல் அரசு மேல்நிலை பள்ளி மாணவி நிவேதிதா நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் முதல் இடம் பிடித்தார்.

    அவரை வேதாரண்யம் தி.மு.க ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன் பாராட்டி புத்தகம் வழங்கினார்.

    இதில் நகர் மன்ற தலைவரும் நகர செயலாளருமான புகழேந்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சன்.செல்லப்பன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச சிலம்ப போட்டியில் ராமநாதபுரம் மாணவி சாதனை படைத்தார்.
    • வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    கர்நாடக மாநிலம் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் வோல்டு யூனியன் சிலம்ப பெடரேஷன் சார்பில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

    இதில் சப்ஜூனியர் ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதல் பரிசான தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த போட்டியில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்ைக ஆகிய 5 நாடுகளில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    மாணவியுடன் சிலம்ப மாஸ்டர் மேத்யு இம்மானுவேலும் உடனிருந்தார். ராமநாதபுரம் திரும்பிய மாணவிக்கு பெற்றோர், மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • பிளஸ்-2 தேர்வில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவியை நகராட்சி தலைவர் பாராட்டினார்.
    • மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார்.

     மானாமதுரை

    பிளஸ்-2 தேர்வில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 595 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் சாதனை படைத்தார். இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இந்த நிலையில் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி மாணவி ஜனனியை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கினார். அப்போது துணைத் தலைவர் பாலசுந்தரம் மற்றும் ஆசிரியைகள் உடனிருந்தனர்.

    • வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
    • தமிழ் வழி கல்வியில் பயின்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கடினல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நிவேதிதா பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    மேலும், வேதியியல், கணிதம், உயிரியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    இந்த மாணவியின் தந்தை வேம்பையன், தாய் திலகா ஆகியோர் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆவர்.

    மாணவியின் தந்தை வேம்பையன் தான் பணியாற்றும்கடின ல்வயல் அரசு மேல்நிலைப்பள்ளி யிலேயே தனது மகளை சேர்த்து தமிழ் வழி கல்வியில் படிக்க வைத்து மாவட்ட அளவில் முதலிடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

    முதலிடம் பிடித்த மாண வியை தலைமையாசிரியர் சிவகுருநாதன் சால்வை அணிவித்து பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

    மேலும், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் வைரவல்லி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஜி.எச்.சி.எல். உப்பு தொழிற்சாலை மேலாளர் சுந்தர்ராஜன், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் ஆகியோர் மாணவியை பாராட்டினர்.

    ×