search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோதல்"

    • இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • இதில் இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கி கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள எம்.வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது32). கூலி தொழிலாளி . அதே பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி துளசி (42).

    இந்த நிலையில் ராஜ்குமார் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக குழி தோண்டியுள்ளார். அப்போது துளசி இதுபற்றி தட்டி கேட்டுள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கி கொண்டனர்.

    இதில் ராஜ்குமார், துளசி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இது குறித்து இருதரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் கல்லாவி போலீசார் கவுதம், வல்லரசு உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
    • போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவின்ராஜ் (வயது34).

    அதே பகுதியை சேர்ந்த பசுபதி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று இருதரப்பினர்கள் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.

    இது குறித்து இருத்தரப்பினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் பாரத், பிரவின்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    • 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45).

    இவர் நேற்று இரவு தனது மினிலாரியில் அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வனுடன் (50) தஞ்சாவூருக்கு வந்தார்.

    பின்னர் தஞ்சாவூர் மார்க்கெட்டில் காய்கறி லோடை ஏற்றி கொண்டு மீண்டும் அதே மினிலாரியில் திருவையாறு நோக்கி புறப்பட்டார்.

    அந்த மினி லாரி திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மற்றொரு லாரி வந்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன.

    இந்த கோர விபத்தில் மினி லாரியில் இருந்த ஆறுமுகம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

    இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர்.
    • மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் (45). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அஜய் என்பவருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் அலெக்சின் மகன்களிடம் அஜய் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதனை அலெக்ஸ் கண்டித்து அஜய்யை தாக்கினார். இதுகுறித்து அஜய் தனது நண்பர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த வாலிபர்கள் அலெக்சிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் அஜய்க்கு கத்தி வெட்டு விழுந்தது. அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த மோதலில் அலெக்சின் மகன், அஜய், அவரது நண்பர்கள் உள்பட மேலும் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    • சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
    • பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல நிர்வாகத்தின்கீழ் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தத் திருச்சபையின் பிஷப்பாக பர்னபாஸ் இருக்கிறார்.

    திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபையின் கல்வி நிலவரக் குழு செயலாளர் மற்றும் திருச்சபை கட்டுப் பாட்டின்கீழ் வரும் பாளையங்கோட்டை செயின்ட் ஜோசப் பள்ளியின் தாளாளர் பதவிகளை தி.மு.க.வைச் சேர்ந்த திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ். ஞானதிரவியம் வகித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி சி.எஸ்.ஐ. திருச்சபை மண்டல பிஷப்பின் ஆதரவாளர்களை தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குவதும், இந்தத் தாக்குதலில் பிஷப் காட்பிரே நோபிள் மோசமாக தாக்கப்பட்டதும், உதைக்கப்பட்டதும் வீடியோ காட்சிகளாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தனது ஆதரவாளர்கள் மூலம் ஒரு பாதிரியாரையும், அவரது ஆதரவாளர்களையும் தாக்குவது என்பது கடும் கண்டனத்திற்குரியது.

    எனவே அவர்களை கைது செய்யவும் அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, தண்டனையைப் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் ரூ. 5 லட்சம் பணம்-நகைகள் திருட்டு நடந்ததாக போலீசில் மனைவி பரபரப்பு புகார் செய்தார்.
    • பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே உள்ள கருவனூரை சேர்ந்தவர் பொன்னம்பலம் (வயது65). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் கடந்த 2001-2006-ம் ஆண்டு வரை சமயநல்லூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவில் உற்சவ விழா தொடங்கியது. இதில் முதல் மரியாதை யாருக்கு? என்பது தொ டர்பாக பொன்னம்பலம் தரப்புக்கும், தி.மு.க. கிளைச் செயலாளர் வேல்முருகன் தரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக ஏற்பட்ட மோதலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேல்முருகன் தரப்பினர், பொன்னம்பலம் வீட்டில் புகுந்து தாக்குதல் நடத்தினர். வீட்டில் நின்ற காருக்கு தீ வைத்தது மட்டுமின்றி, அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் வீட்டுக்குள் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

    கோவில் மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்தவர்களும் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய சத்திரப்பட்டி போலீசார், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தி.மு.க.பிரமுகர் வேல் முருகன், ராஜபாண்டி, செந்தமிழன், கலைவாணன், ராஜ்மோகன், படையப்பா, சங்கர், அருண் உள்பட 18பேர் மீதும், வேல்முருகன் தரப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொன்னம்பலம்,

    அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் மற்றும் பழனிவேல், சின்னகருப்பு, விஜய், வேலுமணி உள்பட 20பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

    அவர்களில் வேல்மு ருகன், செந்தமிழன், ராஜ்மோகன், முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலம், அவரது மகன்கள் திருச்சிற்றம்பலம், தில்லையம்பலம் ஆகிய 6பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்பலத்தின் மனைவி பழனியம்மாள், சத்திரப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீட்டை, எதிர்தரப்பினர் சூறையாடிய போது பீரோவை உடைத்து அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.5லட்சம் ரொக்கப்பணம் மற்றும் பத்திரப்பதிவு ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர்.
    • காவலாளிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி பள்ளிவிளை ரயில்வே தண்டவாளம் பகுதியில் நேற்று வாலிபர்கள் சிலர் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இரு கோஷ்டிகளாக பிரிந்து மோதி கொண்டனர்.

    இதில் மது பாட்டில்களை உடைத்து ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே எதிர்தரப்பை சேர்ந்த 2 பேரும் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மீண்டும் தாக்கிக்கொண்டனர். இதை பார்த்ததும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக சம்பவ இடத்தில் இருந்த காவலாளிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

    இதுதொடர்பாக இதுவரை எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
    • கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செங்குன்றம்:

    பெரியபாளையம் அடுத்த தண்டுமாநகர் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் என்கிற மண்டை பிரவீன்(வயது25). வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சோழவரம் அடுத்த பூதூர் பகுதியில் உள்ள ஏரியில் பிரவீன் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் பலத்த வெட்டுக்காயம் காணப்பட்டது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் கஞ்சா விற்பனை மோதலில் இந்த கொலை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பெரியபாளையத்தை சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாமூல் கேட்டு மிரட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரவீன் தலையிட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா விற்பனை மோதலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
    • போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே மாமுண்டி அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் சக்திவேல் (வயது 29), மளிகை கடை வைத்துள்ளார்.

    இவர் நண்பருடன் சேர்ந்து கடந்த 18-ந் தேதி இரவு காளிப்பட்டியில் வைத்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது ஆட்டையாம்பட்டி மாதேஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த முனுசாமி மகனான பெயிண்டர் நவீன்குமார் (27) என்பவரும் நண்பர்களுடன் வந்து மது அருந்தினார்.

    அப்போது திடீரென நவீன்குமார் நண்பர்களுக்கும், சக்திவேல் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த நவீன் குமார் கோஷ்டியினர், சக்திவேல் கோஷ்டியினரை சிறிது தூரம் துரத்தி சென்று தாக்கினர்.

    அப்போது சக்திவேல் வயிற்றில், குளிர்பான பாட்டிலை உடைத்து நவீன் குமார் குத்தினார். இதில் காயமடைந்த சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுக்க அன்று இரவு 10 மணிக்கு மேல் சென்றனர்.

    இந்த நிலையில், நவீன்குமார் தரப்பினரும் அங்கு வந்தனர். அப்போது, தங்களை தாக்க வருவதாக நினைத்து, நவீன்குமார் தரப்பினர் சக்திவேல் தரப்பினரை தாக்கினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதனால் போலீஸ் நிலையம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    இதை பார்த்த போலீசார் இரு தரப்பையும் விலக்கி விட்டனர். ஆனாலும் அவர்கள் மாறி மாறி தாக்கினர். இதில் ஒருவர் மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். போலீசாரும் அவர்களின் தாக்குதலுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் நிலை தடுமாறினர். இதனால் போலீஸ் நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ஒரு வழியாக, மோதலில் ஈடுபட்டவர்களை போலீசார் விலக்கிவிட்டு சமாதானப்படுத்தினர். இதனை தொடர்ந்து சக்தி வேல் கொடுத்த புகாரின் பேரில் ஆட்டையாம்பட்டி போலீசார் நவீன்குமார், சத்யராஜ் (28) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் மீது கெட்ட வார்த்தையால் திட்டுதல், கும்பலாக சேர்ந்து தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவான அவர்களையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த மோதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது பார்ப்பவர்களை பீதி அடைய செய்துள்ளது.

    • அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது

    திருப்பூர் : 

    திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது. அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி., காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மத்திய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் நடந்து செல்வதற்காக நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பயணிகள் நடைமேடையை பயன்படுத்தாமல் பஸ் நிலைய வளாகப்பகுதியிலேயே நடந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையம் மற்றும் சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களை வாகன நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மட்டுமின்றி பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக வருவதால் நடந்து செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் பஸ்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் நிலைய முன்பகுதி, மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் அரசு தொழிற்கல்வி மையம்(ஐ.டி.ஐ.) மற்றும் அரசு பள்ளிகள் அருகருகே உள்ளது. இங்கு பின்புறம் உள்ள பாதை வழியாக நடந்து செல்வதில் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் அங்கு படிக்கும் மாணவர்கள் 2 குழுக்களாக பிரிந்து ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர், பின்னர் அது கை கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயம்பட்ட மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினர்.

    இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்கள் 4 பேர், தொழிற்கல்லூரி மாணவர்கள் 4 பேர் 8 மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவிழாவில் மோதலில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் எஸ்.ராமலிங்கபுரம், சிவகாமிபுரம் வடக்கு தெரு வடக்கத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த சாரதாதேவி(29), அவரது கணவர் ஜெயபிரகாஷ்(35) உள்ளிட்ட பலர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது சிவக்குமார் என்பவர் குடிபோதையில் பெண்கள் நிற்கும் பகுதிக்கு தள்ளாடிக்கொண்டு வந்தார். இதை கண்ட ஜெயபிரகாஷ் பெண்கள் நிற்கும் பகுதிக்கு ஏன் மதுபோதையில் வந்தார்? என கேட்டதற்கு, அவர் மற்றும் அவரது மனைவியை சிவக்குமார் தாக்கியுள்ளார். மேலும் சாரதா தேவியின் சேலையை பிடித்து இழுத்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த சாரதா உறவினர்கள் சிவக்குமாரை தாக்கினர். இதுகுறித்து இருதரப்பினரும் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெகட்ர் சார்லஸ் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    ×