search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    • கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்
    • வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையத்தில் பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்

    கடந்த செப்டம்பர் 17 பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.

    ரத்த தான நிகழ்வில் பங்கேற்ற பாஜக மேயர் வினோத் அகர்வால் ரத்த தானம் கொடுப்பதுபோல் படுக்கையில் படுத்து கேமராவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ரத்தம் கொடுக்காமலேயே அங்கிருந்து வெளியேறிய வீடியோ லீக் ஆகியுள்ள நிலையில் இணையாயத்தில்  பாஜக மேயர் கேலி செய்யப்பட்டு வருகிறார்.

    கேமராவுக்கு போஸ் கொடுத்த பின்னர் அதற்கு மேல் எதுவும் செய்ய வேண்டாம் என்று டாக்ட்ரிடம் சைகை காட்டிவிட்டு சிரித்தபடி படுக்கையில் இருந்து எழுந்து பாஜக மேயர் வெளியேறுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு நிதிஷ் குமார் உணவளித்து மகிழ்ந்தார்.
    • நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தொட்டியில் இருந்த மீன்களை மக்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் சஹர்சா பகுதியில் மா விஸ்ஹாரி கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அமரப்பூரில் அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    அப்போது பையோப்ளோக் [biofloc] தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நிதிஷ் குமார் கண்காட்சியில் இருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய கண நேரத்திலேயே தொட்டியில் இருந்த மீன்களை பிடிக்க மக்கள் தள்ளுமுள்ளுப்பட்டுள்ளனர்.

    காவலுக்கு யாரும் இல்லாமல் மீன்களை மக்கள் அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை என்று இளைஞர்கள் கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து கீழே விழுந்த பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்தார்
    • தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.

    பாலத்தில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண் மீது வாகனம் மோதியதில் அவர் கீழே தூண் மீது விழுந்து உயிர் தப்பிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச தலைநகர் நொய்டாவில் இன்று மதியம் செக்டார் 25 பகுதியில் உள்ள பாலத்தின் மீது தனது இரு சக்கர வாகனமான ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த பெண் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதியுள்ளது.

    இதனால் ஸ்கூட்டரில் இருந்து தவறி பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண் பாலத்தின் தூணில் உள்ள பகுதியில் விழுந்ததால் உயிர்தப்பியுள்ளார். அங்கு அவர் சிக்கித் தவித்த நிலையில் சம்பவ இடத்துக்குப் போலீசும் ஆம்புலன்சும் விரைந்தது. இதனைத்தொடர்ந்து தூணிலிருந்து அப்பெண் காயங்களின்றி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.  தூணில் இருந்து டிராலி மூலம் பெண் மீட்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார்.
    • பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் கூறபடுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் திருட வந்ததாக கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது கணவனையும் மரத்தில் கட்டி வைத்து அடித்து பழுக்க காய்ச்சிய கம்பியால் சூடு போட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பியில் தியோரியா [Deoria] மாவட்டத்தில் சுரவுலி [Surouli] பகுதியில் உள்ள கிராமத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மன நலம் பாதிக்கபட்ட நடுத்தர வயது பெண் உலவியுள்ளார்.

    சுரவுலியில் மற்றொரு பகுதியை சேர்ந்த அந்த பெண் வழிதவறி அங்கு வந்ததாக தெரிகிறது. எனவே அவரை தேடிக்கொண்டு பெண்ணின் கணவனும் அந்த கிராமத்துக்குள் வந்துள்ளார். இவர்கள் இருவரையும் திருட வந்தவர்கள் என சந்தேகித்த கிராம மக்கள் இருவரையும் மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    மேலும் பழுக்கக் காய்ச்சிய கம்பியால் அந்த பெண்ணின் கால்களில் சூடு வைத்து அதன்பின் அவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். பெண்ணின் கட்டை அவிழ்த்து விடுவதற்கு முன் அவரிடம் சிலர் அத்துமீறியதாவும் தெரிகிறது. அவர்களை கிராமத்தினர் அடித்து சூடுவைத்து சித்ரவதை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    • ஈரான் தூதுவர் மொஜிதபா அமானி -யும் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
    • பேஜர்கள் வெடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 2,570 க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிவிபத்துகளில் லெபனானுக்கான ஈரான் தூதுவர் மொஜிதபா அமானி -யும் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.

    இதுவரை தாங்கள் சந்தித்த மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இது என்றும் இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன போரில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயமடைந்தார்களின் நிலை குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.

    • நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார்
    • ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீதிபதி திட்டியதால் காவல் துணை ஆணையர் [சப் இன்ஸ்பெக்டர்] ரெயில்வே டிராக்கில் அமர்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், உ.பி அலிகார் பகுதி காவல் துணை ஆணையர் ரெயில்வே டிராக்கில் அழுதுகொண்டே அமர்ந்திருந்ததும் அவரை சக போலீசார் சென்று சமாதானப்படுத்தி அங்கிருந்து மீட்டதும் பதிவாகியுள்ளது.

    மேலும் நீதிபதி அபிஷேக் திரிபாதி தன்னை தொடர்ச்சியாக அவரது அறைக்கு அழைத்து திட்டியும் மிரட்டியும் வந்தார் என்று சக போலீசிடம் அந்த சப் இன்ஸ்பெக்டர் கூறி அழுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

    அந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் சச்சின் குமார் என்பதும் சமீபத்தில் பைக் திருட்டு தொடர்பாக அவர் 5 பேரை கைது செய்ததற்கு ஏன் அப்பாவிகளைக் கைது செய்தாய் என கூறி நீதிபதி திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை செய்ய முடிவெடுத்து ரெயில்வே டிராக்கில் சென்று அமர்ந்துள்ளார்.

    • காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் [Saffron Rajesh] மிரட்டியுள்ளான்
    • சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கினார்

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சமூக வலைத்தளத்தில் தனக்கு தொடர்ந்து பலாத்கார மிரட்டல் விடுத்த நபரை காங்கிரஸ் உள்ளூர் பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாரணாசியில் லால்பூர் பந்தேபூர் பகுதியை சேர்ந்த காங்கிரசை சேர்ந்த இளம் பெண் பிரமுகரை அப்பகுதியில் வசித்து வந்த சாப்ரோன் ராஜேஷ் சிங் [Saffron Rajesh Singh] என்ற நடுத்தர வயது நபர் சமூக வலைதளத்தில்  தாகாத முறையில் பதிவிட்டு வந்ததுடன் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டியுள்ளார்.

    இதனால் கோபத்தில் இருந்த அந்த பெண் பிரமுகர் தனது ஆதரவாளர்களுடன் சாப்ரோன் ராஜேஷின் வீட்டுக்கே சென்று அவரது மனைவி மற்றும் மகன் முன்னிலையில் தாக்கியுள்ளார். சாப்ரோன் ராஜேஷின் கைகளை ஆதரவாளர்கள் பிடித்துக்கொள்ள பெண் பிரமுகர் அவரை சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களிடம் இருந்து தப்பித்து சாப்ரோன் ராஜேஷின்  தனது வீட்டுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டு தப்பித்துளான்.

    இதனைகோடர்ந்து போலீசில் புகார் அளிக்க சென்ற பெண் பிரமுகர் ஊடகத்தினரிடம் பேசுகையில், சாப்ரோன் ராஜேஷ் கடந்த 4 வருடங்களாக சமூக வலைதளத்தில் தன்னை பற்றி தாகத முறையில் பேசி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்குவதாக மிரட்டி வந்தான் என்று தெரிவித்துள்ளார்.

    • பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதல் நடந்தது
    • வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுகின்றனர்

    காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே கடந்த சனிக்கிழமை அன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கியால் தாக்கினர். கதுவா பகுதியில் நடந்த என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதையடுத்து அன்றைய தினமே பாராமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் தொடர்பான பரபரப்பூட்டும் டிரோன் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

    அந்த வீடியோவில் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகில் இருந்து பக்கத்தில் உள்ள மரங்களை நோக்கி பயங்கரவாதிகள் ஓடுவதும், ஒருவன் தரையில் விழுந்து தவழ்ந்து செல்லும்போது ராணுவ வீரர்களின் துப்பாக்கி குண்டுகள் கான்கிரீட் சுவரைத் துளைத்து அப்பகுதியை புழுதிப் புகை சூழ்வதும் பதிவாகியுள்ளது. இதனால் பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு இறுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் குண்டடிபட்ட பயங்கரவாதி  உயிருக்கு போராடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    • கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
    • கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார்.

    மைன் நீதிமன்றத்தில் குழந்தையை தாக்கிய குற்றத்திற்கு தண்டனை பெற்ற குற்றவாளி அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நிக்கோலஸ் கார்ட்டர் என்ற நபர் நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.

    யாரும் எதிர்பாராத சமயத்தில் நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறிய கார்ட்டர் படிக்கட்டுகளில் தாவி கீழே வந்தார். கையில் விலங்கு போடப்பட்டு இருந்த நிலையில் கார்ட்டர் தப்பியோட முயன்றார். நீதிமன்ற வளாகத்தில் இருந்து கிட்டத்தட்ட வெளியே வந்த கார்ட்டரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் மற்றும் துப்பறிவாளர் பிடித்துக் கொண்டனர்.

    தப்பி ஓட முயன்ற கார்ட்டரின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில், அவர் குழந்தையை தாக்கிய குற்றத்தோடு, தப்பிச்செல்ல குற்றத்திற்காகவும் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். 


    • சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.
    • கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்துள்ளனர்

    மகாராஷ்டிராவில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை காரில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பீட்[Beed] மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காரில் வந்த மூவர் உணவருந்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.

    அவர் வருவதற்குள் நைசாக அங்கிருந்து நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை பில்லுக்கு காசு கேட்டு அந்த வெயிட்டர் தடுக்க முயன்றுள்ளார். காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1 கிலோமீட்டருக்கு வெயிட்டரை இழுத்துசென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி அவரின் பாக்கெட்டில் இருந்த 11,500 ரூபாயை திருடிக்கொண்டு கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து அதன்பின் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    • சாலையோரத்தில் அமர்ந்திருந்த இருவர் மீது குள்ளநரி பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
    • அந்த குள்ளநரி சுமார் 15 அடி தூரம் சென்று கீழே விழுந்தது.

    மத்தியப் பிரதேச மாநிலத்தில் குள்ளநரிகளின் தாக்குதலால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது. குள்ளநரி தாக்குதலால் அம்மாநிலத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    அந்த வரிசையில் செஹோர் மாவட்டத்தில் இரண்டு பேர் குள்ளநரியால் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி வீடியோவின் படி, சாலையோரத்தில் அமர்ந்திருந்த இருவர் மீது குள்ளநரி பாயும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

    குள்ளநரி தாக்க முற்பட்டதை அடுத்து, அவர்கள் அதன் மீது கற்களை எறிந்து நரியை விரட்ட முயன்றனர். எனினும், அவர்களது முயற்சி தோல்வியடைந்தது. ஆனாலும், இருவரில் ஒருவர் நரியை பிடித்து தூக்கி எறிந்தார். இதில் அந்த குள்ளநரி சுமார் 15 அடி தூரம் சென்று கீழே விழுந்தது.

    இந்த சம்பவத்தில் குள்ளநரி தாக்குதலில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய இருவரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குள்ளநரி தாக்குதலை தொடர்ந்து குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்கவும், தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும் உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுகுறித்து கிராம பஞ்சாயத்து உதவி செயலாளர் ராமகிருஷ்ணா கூறும் போது, "கிராம மக்கள் குள்ளநரிகளை பிடிக்காமல் இருக்கவும், குழுக்களாக பயணம் செய்யவும் கேட்டுக் கொண்டுள்ளோம். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஞ்சர் ஹரிஷ் மகேஸ்வரி காயமடைந்தவர்களை பார்வையிட்டு இழப்பீடு வழங்கினார்" என்றார்.



    • ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
    • அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு  உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.

    பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.

    அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    ×