search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224091"

    • நெடுஞ்சாலை துறை நடவடிக்கை
    • போலீஸ் பாதுகாப்பு

    திருச்சி, 

    திருச்சி கிராப்பட்டி முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் இடித்த அகற்றப்பட்டன.நெடுஞ்சாலைதுறை சார்பில் அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டது. அதன்படி இன்று நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சாலை ஆக்கிரமிப்புகளை 4 பொக்ளைன் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். இதில் நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 30 கடைகள் மற்றும் சில வீடுகளின் முன் பகுதிகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. எடமலைப்பட்டி புதூர் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறும்போது, ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. அதன்படி சிலர் தங்களது ஆக்கிரமிப்புகளை தாமாகவே அகற்றிக் கொண்டனர். அகற்றப்படாத பகுதிகளில் இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. விரைவில் சாலை விரிவாக்க பணிகள் தொடங்கும் என்றனர்.

    தாசில்தார் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே காரணம்பேட்டையில்,அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக பல்லடம் தாசில்தார் நந்தகோபாலிடம்,சங்கோதி பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர்.இதையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் சங்கோதி பாளையத்தில் அளவீடு பணி நடைபெற்றது.

    சர்வேயர் மற்றும் கிராம அலுவலர் உள்ளிட்டோர் அளவீடு பணியை மேற்கொண்டனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பு புகார் கூறப்பட்டுள்ள இடத்தை தாசில்தார் நந்தகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்
    • 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர்.

    கன்னியாகுமரி:

    தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈத்தாமொழி வெள்ளாளர் தெருவில் சுமார் 50 ஆண்டுகளாக ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் பாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் தனியார் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற தர்மபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பாக தலைவர் ரெங்க நாயகி கணேசன், ஊராட்சி செயலர் பாமா ஆகியோர் சம்பவ இடம் சென்றனர்.

    அவர்கள் பொக்லைன் எந்திரம் மற்றும் ஆட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், வயதான முதியோர்கள், குழந்தைகள் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள், 50 ஆண்டுகளாக வசித்து வரும் இந்த இடத்தை விட்டு அகற்றினால் நாங்கள் இந்த இடத்திலேயே தீக்கு ளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் ஈத்தா மொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாமி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். தர்மபுரம் தெற்கு கிராம நிர்வாக அதிகாரி ராம லெட்சுமி (பொறுப்பு), ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் செய்யது அலி பாத்திமா, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கனக பாய், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோரும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொது மக்கள், நாங்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளை உடனடியாக காலி செய்து மாற்று இடத்திற்கு செல்ல முடியாத நிலையில் வறுமை யில் உள்ளோம். எங்கள் மீது மாவட்ட நிர்வாகம் கருணை கூர்ந்து நாங்கள் குடியிருப்பதற்கு மாற்று இடம் தந்து உதவ வேண்டும், முடியாத பட்சத்தில் எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

    இதன் பேரில் அதிகாரிகள் தற்காலிகமாக ஆக்கிர மிப்பு அகற்றுவதை நிறுத்தி வைத்து உள்ளனர்.

    • சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.
    • அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று கண்டிதன்பட்டு அருகே உள்ள உச்சுமான் சோலை கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தீயணைப்பு துறை அதிகாரி ஏசுதாஸ் தலைமையில் பொதுமக்கள் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    கண்டிதன்பட்டு, காட்டூர், தென்னக்குடி, பரவக்கோட்டை உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 24 ஏழை மக்கள், மொழிப்போர் தியாகிகள், முன்னாள் ராணுவத்திற்கு உச்சுமான்சோலை கிராமத்தில் கடந்த 1981-ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் தலா 1 ஏக்கர் நிலம் பட்டாவுடன் அரசு சார்பில் வழங்கப்பட்டது.

    சில ஆண்டுகள் மட்டுமே நாங்கள் அதில் விவசாயம் செய்தோம்.அதன் பிறகு தனி நபர் ஒருவர் எங்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்.பல ஆண்டுகளாக அவர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

    அவரிடம் இது குறித்து கேட்டதற்கு சரியான பதில் இல்லை.எனவே அந்த நபரிடமிருந்து எங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீட்டு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோயில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றபட்டது
    • திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை மேற்கு புதுக்குறிச்சி கிராமத்தில் அருள்மிகு கம்பப்பெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1.60 செண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்து சமய அறநிலையத்துறை பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் உத்திரவின்பேரில் தாசில்தார் பிரகாசம் தலைமையில் கோவில் ஆய்வாளர் தமிழரசி, வக்கீல் ஆனந்தராஜூ மற்றும் வி.ஏ.ஓ., கோவில் பணியாளர்கள் முன்னிலையில் சர்வேயர் கொண்டு கோயில் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு சுவாதினம் செய்யப்பட்டது. அப்போது புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர் பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு பகுதிகளை உடனடியாக மீட்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத், மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் ஆகியோர் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.

    அவர்களது உத்தரவின் பேரில் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், சர்வேயர்கள் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

    இந்த ஆய்வின்போது திருப்பூர் ஜம்மனை ஓடை பகுதியில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடங்கள், பனியன் நிறுவனங்கள், டையிங் நிறுவனம், தங்கும் விடுதிகள், பிரிண்டிங் பிரஸ் குடோன் என 25க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் இடத்தை உடனடியாக காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கினர். 2 முறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் இடத்தை காலி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி உதவி கமிஷனர் செல்வநாயகம், உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர், திருப்பூர் வடக்கு தாசில்தார் கோவிந்தராஜன் மற்றும் போலீசார், மாநகராட்சி ஊழியர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அதிரடியாக இடித்தனர்.

    இதையடுத்து கட்டிடத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். மேலும் அங்கிருந்த பொருட்களையும் அவசர அவசரமாக வாகனங்களில் ஏற்றி மாற்று இடத்திற்கு கொண்டு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஜம்மனை ஓடையை ஒட்டியுள்ள பகுதிகளில் 25 உரிமையாளர்களுக்கு சொந்தமான 3 மற்றும் 4 மாடி கட்டிடங்கள் என சுமார் ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்பிலான ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • ஆக்கிரமிப்புகளினால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.
    • ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்ததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    திருவாரூர்:

    திருவாரூர் கடை வீதிகளில் சாலையின் இருமருங்கிலும் ஆக்கிரமிப்புகள் அதிக ரித்து வருவதாகமாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

    இந்த ஆக்கிர மிப்புகளால் கடைவீதி பகுதிகளில் எந்நேரமும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வந்தது.

    பொதுமக்கள் வந்து செல்வதற்கு ஆக்கிரமிப்புகள் இடையூறாக இருப்பதாகவும் உடனடியாக அதனை அகற்றி பொதுமக்கள் இடையூறின்றி வந்து செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்–பட்டதை தாங்களாகவே அகற்றிக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் அறிவிப்பு செய்திருந்தார்.

    ஆனாலும் கடைவீதிகளில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.

    அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிருப்புகளை அகற்றினர்.

    ஆக்கிரமிப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் நகராட்சி அலுவலக வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இந்த ஆக்கிரமிப்புகளை முன்னிட்டு கடைவீதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்–பட்டிருந்தது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றியதற்கு பிறகு திருவாரூர் கடைவீதி விசாலமான அகலத்தில் காணப்பட்டது.

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்ப ட்டதால் பொது மக்கள் இடையூறின்றி பொருட்களை வாங்கி வர செல்ல முடிந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

    போலீஸ் பாதுகாப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்ற ப்பட்டது.

    • இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது.
    • மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார்.

     அவினாசி:

    அவினாசி அருகே மயான சாலையை மீட்டுத்தர வேண்டி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு கொடுத்தனர்.

    திருப்பூர் மாவட்டம் அவினாசி வட்டம் இராமநாதாரம் ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி தாலுகா அலுவல்கத்தில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-இராமநாதபுரம் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் மயான சாலை நூறு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேற்படி சாலையை தனி நபர் விலைக்கு வாங்கி அந்த மயான பாதையை வழிமறித்து கம்பிவேலி அமைத்துள்ளார். இதனால மயானத்திற்கு செல்லும் வழியில்லாத நிலை ஆகிவிட்டது. எனவே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள மயான சாலையை மீட்டுத் தரவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
    • வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில் பந்தல் அமைக்கப்பட்டு ள்ளது. பல்வேறு பகுதிகளில் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு திருமங்கலம் தினசரி மார்க்கெட் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவி ன்படி திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள், வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் தாசில்தார் சிவராமன் தலைமையில் நடந்தது.

    இதில் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், டவுன் பிளானிங் அதிகாரி வேல்முருகன், கவுன்சிலர் திருக்குமார், வீரக்குமார். வருவாய்த்துறை சார்பில் சர்வேயர் ரம்யா மற்றும் வியாபாரிகள் சங்கம் சார்பில் மணிசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய வியாபாரிகள் சங்கத்தினர் ஆக்கிரமிப்புகளை தாங்களே படிப்படியாக எடுத்துவிடுவதாகவும், மேற்கூரைகளை அகற்றிவிடுவதாகவும் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் திருமங்கலம் தினசரி மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

    • தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார்.
    • இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெரிய குளக்கரை பகுதியை சேர்ந்தவர் ரத்தினபிள்ளை. இவரது மகன் சேதுராமன். இந்நிலையில் ரத்தின பிள்ளைக்கு அதே பகுதியில் நிலம் ஒன்று உள்ளது. அந்த நிலத்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு துரைராஜ்கும் அவரது அண்ணன் தம்பிகளுக்கும் கொடுத்தார். அந்த நிலத்தில் துரைராசும் அவரது அண்ணன் தம்பியும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். தற்போது ரத்தினபிள்ளை தான் கொடுத்த நிலத்தை 2 ஆண்டுகளாக திருப்பி கேட்டு வந்துள்ளார். இதனால் துரைராஜின் அண்ணன் தம்பி அந்த இடத்தை விட்டு சென்றனர். ஆனால் பெட்டிகடை நடத்தி வரும் துரைராஜ் மட்டும் காலி செய்ய மறுப்பு தெரிவித்து கோர்ட்டில் மனு அளித்தார்.

    ஆனால் கோர்ட்டில் நிலம் உரிமையாளருக்கு சொந்தம் என்று தீர்ப்பானது. இதனால் இன்று கோர்ட் உத்தரவின் பேரில் காட்டுமன்னார்கோயில் வருவாய்த்துறையினர் போலீசாரின் முன்னிலையில் துரைராஜை அந்த இடத்தில் உள்ள வீட்டில் இருந்து அப்புறப்படுத்தினர். உடனே துரைராஜ் நான் காலி செய்ய மாட்டேன் என்று கூறி தன்மேல் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டார். இதைப் பார்த்த போலீசார் உடனே அவரை மீட்டு போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது. 

    • பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன.
    • 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது

    மதுரை

    மதுரை மாநகரில் காளவாசல்-பைபாஸ் ரோடு குறிப்பிடத்தக்கது. இங்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஆரப்பாளையம் முதல் பழங்காநத்தம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 100-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் உள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    மதுரை அழகப்பன் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் மோகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

    அதில், காளவாசல்- பைபாஸ் ரோட்டில் சாலை யோரம் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு மதுரை மாநக ராட்சி பதில் அளித்துள்ளது. அதில், பழங்காநத்தம் முதல் ஆரப்பாளையம் வரையிலான பைபாஸ் ரோட்டில் 31 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    பைபாஸ் ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளன. அவை மாநக ராட்சியின் அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படு கிறது. மேலும் பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கடைகள் அமைந்து இருப்ப தால் மாநகராட்சிக்கு பல லட்ச ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

    மாநகராட்சி அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலை யிட்டு காளவாசல்- பைபாஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×