search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆபத்து"

    • பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
    • ராமு (20) வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 42). விவசாயி, இவருக்கு பொன்னியம்மாள் (35) என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொன்னியம்மாள் தனது மகன் மற்றும் மகள்களுடன் பழைய சிறுவங்கூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இயைடுத்து வேலு 2-வது திருமணம் செய்து கொண்டு கண்ணம்மாள் (30) மற்றும் மகன், மகள் ஆகியோருடன் ரங்கநாதபுரத்தில் வசித்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னியம்மாள் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணச் செலவிற்கு பணம் வேண்டும் என தனது கணவர் வேலுவிடம் கேட்டுள்ளார். வேலு பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று அதிகாலை வேலுவின் மகன் ராமு (20) ரங்கநாதபுரத்திற்கு சென்றார். அங்கே வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தையை கத்தியால் குத்தினார். அப்போது வேலுவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனைக் கண்ட ராமு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனைத் தொடர்ந்து வேலுவை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து தப்பி ஓடிய ராமுவை வலை வீசி தேடி வருகின்றனர். சகோதரியின் திருமணத்திற்கு பணம் தராத தந்தையை மகன் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதி யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும்.
    • உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம்.

    குடிமங்கலம் :

    சிக்ஸ் பேக்ஸ்' உடலுக்காக இன்றைய இளைஞர்கள் தங்களை வருத்திக் கொள்ள தயங்குவதில்லை.இதற்காக மணிக்கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கின்றனர்.தசைகளை சிறந்த முறையில் வலுப்பெற செய்ய, புரோட்டீன் சார்ந்த மருந்துகள் எடுத்துக் கொள்கின்றனர்.

    இது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள். இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:- வயது மற்றும் எடைக்கு ஏற்ப தேவையான அளவு புரோட்டீனை எடுத்துக்கொ ண்டால் போதும்.ஒரு கிலோ எடைக்கு தினமும், 1.5 கிராம் புரோட்டீன் போதும். அதாவது ஒருவரின் எடை 50 கிலோ எனில் 75 கிராம் புரோட்டீன் போதும்.தொடர்ச்சியாக, உடற்பயிற்சி செய்வோருக்கு புரோட்டீன் மிக அவசியம். எளிதாக தசையை வலுப்பெற வைக்க உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் அதற்கு பின்னரும் ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு முறையை பின்பற்ற வேண்டும். இத்துடன் சிறிது கார்போ ஹைட்ரேட், கொழுப்பு கொண்ட உணவு சாப்பிடலாம். தேவையின்றி அதிக புரோட்டீன் உட்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.நாம் உண்ணும் உணவிலேயே புரோட்டீன் உள்ளது. காய்கறிகளில் புரோட்டீன் உள்ளவற்றை சாப்பிடலாம்.இதனால் எவ்வித பிரச்னையும் இல்லை. மாறாக அதிக புரோட்டீன் உள்ள உணவு உட்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்தாலும், செய்யாவிட்டாலும், சிறுநீரகம் பாதிப்படைவது உறுதி. உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக புரோட்டீன் தேவை என ஒரு சில புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்கின்றனர்.

    இது உடனடி பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் சிறிது காலத்துக்கு பின் பாதிப்பு ஏற்படும்.ஒரு சிலர் புரோட்டீன் உணவை தவிர வேறு எதையும் உட்கொள்வதில்லை. இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு உயிருக்கு அபாயம் ஏற்படலாம் என்றனர்.

    • விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர்.
    • விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள பாறைக்கு ழிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கறுகையில், திருப்பூரை சுற்றியுள்ள வீரபாண்டி, வெள்ளியங்காடு, போயம்பாளையம், சுகுமார் நகர், பாரப்பாளையம், பாப்பநாயக்க ன்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாறைக்குழிகள் உள்ளன. விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்கள் பலரும் இந்த பாறைக்குழிகளுக்கு சென்று குளிக்கின்றனர். குளிர்ச்சி யான நீரைக் கண்டதும் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், விவரம் அறியாத நீச்சல் தெரியாத சிலர் இறங்கி குளித்து புதை சேறில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கொண்டவர்களும் பாறைக்குழிகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கி றார்கள். பாறை குழிகளுக்கு துணி துவைக்கச் செல்லும் பெண்களும் சில நேரங்களில் தண்ணீருக்குள் தவறி விழுந்து பலியாகின்றனர். அத்துடன் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் குப்பைகள், இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி செல்வதால் சுகாதரா சீர்கேடு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடை களும் தாகம் தணிக்கச் சென்று அதில் விழுந்து சிக்கிக் கொள்கின்றன. திருப்பூரை சுற்றியுள்ள பாறைக்குழி களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பாறை குழிகளு க்கு பொதுமக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். அல்லது முழுமையாக குழிகளை மூடி விட நடவடிக்கை வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து மேலும் பொதுமக்கள் கூறுகையில், திருப்பூர் நகராட்சி பகுதியில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிக அளவிலான பாறைக்குழிகள் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழையால் தண்ணீர் தேங்குவதால் நீரோடை போல் காட்சியளிக்கிறது. இன்னும் சில நாட்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விட இருப்பதால் பள்ளி மாணவர்கள் ஆபத்தை உணராமல் சென்று குளிக்கிறார்கள். எளிதாக பாறைக்குழிகளில் ஆபத்தில் சிக்கிக்கொள்வார்கள். ஆகவே மாவட்ட நிர்வாகம் பாறைக்குழிகளை கணக்கெடுத்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- பாறைக்குழிகள் குறித்து அந்தந்த பகுதி மக்கள் புகார் அளித்தால் அது பற்றி மேயரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியே வெளியே அனுப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றனர்.

    • மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குலசேகரப்பட்டி ஊராட்சி குறும்பலா பேரி கிராமத்தில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் வளாகத்திற்குள் குறும்பலாபேரி கிராம மக்களுக்கு குடிநீர் சேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டு அதன் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் அடியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் பில்லர்கள் அனைத்தும் கம்பிகள் வெளியில் தெரியும் வண்ணம் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கோவிலின் வளாகத்திற்கு தினமும் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இடிந்து விழும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர் தேக்க தொட்டியை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறும்பலாபேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் ஒரு மினி பஸ் உடைந்த படிக்கட்டுகளுடன் இயங்கி வருகிறது.
    • கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    கடையம்:

    பாவூர்சத்திரத்திலிருந்து மேட்டூர் வழித்தடத்தில் இயங்கும் மினி பஸ் ஒன்று பராமரிப்பின்றி, உடைந்த நிலையில் உள்ள படிக்கட்டுகளு டன் ஆபத்தான நிலை யில் இயங்கி வருகிறது. சில மாதங்களாக இந்த நிலையிலே இயங்கி வருவதாக தெரிய வரு கிறது.

    பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் படிக்கட்டு களில் நின்றவாறு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படு கிறது. இதனால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே போக்குவரத்துதுறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.
    • பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே மரக்காவலசை கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

    இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் மேற்கூரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டிடத்தின் பல இடங்களில் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு தரையில் தண்ணீர் தேங்குகிறது.

    இதனால் இந்த கட்டிடத்தில் படிக்க வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

    தற்போது அங்கன்வாடி மையத்தில் பயின்று வரும் குழந்தைகள்அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி கட்டிடத்தில் வரண்டாவில் உணவருந்தி வருகின்றனர்.

    மேலும் மழைக்காலங்களில் தங்குவதற்கு இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அதே கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் கூறியதா வது, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய அங்க ன்வாடி கட்டிடம் கட்டும் வரை மாற்று இடத்தில் அங்கன்வாடி செயல்பட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது
    • இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எழிலி வரவேற்றாா்

    திருப்பூர் :

    திருப்பூா் எல்.ஆா்.ஜி. மகளிா் கல்லூரியில்திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, திருப்பூா் தெற்கு காவல் துறை சாா்பில் சட்ட விழிப்புணா்வு, இணைய வழி குற்றங்களைத் தடுப்பது தொடா்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் (பொறுப்பு)

    எழிலி வரவேற்றாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆதியன் பேசியதாவது:-

    மாணவிகள் அடிப்படை சட்டங்கள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். மாணவிகளுக்கு விருப்பம் இல்லாத ஒரு செயலை செய்ய மற்றவா்கள் கட்டாயப்படுத்துவதுகூட குற்றம் என்று பகடிவதை சட்டம் சொல்கிறது. மாணவ, மாணவிகள் செல்போன்களையும், இணையதளங்களையும் படிப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களில் உள்ள ஆபத்துகளை உணராமல் அதற்கு அடிமையாகிவிடக்கூடாது என்றாா்.

    • பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.
    • இந்த தொட்டியின் மைதானத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே ரீத்தாபுரம் பேரூராட்சி 4-வது வார்டு பத்தறை காலனியில் கடந்த 35 வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலை யில் கடந்த சில வருடங் களுக்கு முன்பு தொட்டி பழுதடைந்தது.

    இதையடுத்து இந்த தொட்டியில் நீர் ஏற்றம் நிறுத்தப்பட்டது. இந்த குடிநீர் தொட்டிக்கு பதில் அருகில் வேறு குடிநீர் தொட்டி கட்டப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பயனற்ற இந்த தொட்டியின் மேல் பகுதியில் முழுவதுமாக காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

    இந்த தொட்டியின் மைதா னத்தில் அப்பகுதி சிறுவர்கள் விளையாடுவது வழக்கம்.இதனால் ஆபத்தான இந்த தொட்டியை இடித்து அகற்ற முன்னாள் கவுன்சிலர் ரவி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தார். மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற ரீத்தாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுருளிவேல் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்கள் ஆபத்தான குடிநீர் தொட்டியை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். அப்பகுதி சிறுவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.
    • கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்களையும் மாற்ற வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் துணை மின் நிலையத்துக்கு மேலப்பெருமழை ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.முருகானந்தம் மனு அளித்தார்.

    அதில் கூறியிருப்ப தாவது;-

    திருத்துறைப்பூண்டி தாலுக்கா மேலப்பெருமழை ஊராட்சியில் மின்கம்பிகள் சேதமடைந்து அறுந்து விழுந்தன.

    கஜா புயலுக்கு பிறகு பாதிக்கப்பட்ட மின்கம்பிகளையும் போஸ்ட் மரங்கள் மாற்ற வேண்டும் என்று திருத்துறைப்பூண்டி மின் வாரியத்தில் 2021 ஆம் ஆண்டு கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலப்பெருமழை ஊராட்சி முழுவதும் மின் கம்பிகளும் போஸ்ட் மரங்கள் 25-க்கு மேல் மின் கம்பிகள் 9420 மீட்டர் கம்பிகள் பழுதடைந்துள்ளது.

    அந்த கம்பிகளை மாற்ற வேண்டும் .

    அப்படி செய்தால் மட்டுமே எந்த உயிர் சேதமும் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து உயரழுத்த மற்றும் தாழ்வழுத்த மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.மேலும் மின்கம்பங்கள் குடிசை பகுதிகளுக்கு நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அம்பேத்கர் நகரில் உள்ள மின்கம்பம் ஒன்று சிமெண்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் எந்நேரத்திலும் மின்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்

    இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர். எனவே உயிரிழப்பு ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின் கம்பத்தில் அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது.
    • வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது.

    உடன்குடி:

    உடன்குடிஅருகே உள்ள கந்தபுரம் மேலத் தெருவில்உடையார் சுவாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் மிகவும் ஆபத்தான நிலைமையில் உள்ளது. அடிப்பகுதியில் இருந்து மேல்பகுதி வரை உள்ள அனைத்து சிமெண்டுகளும் உடைந்து விழுந்து விட்டது. மின் கம்பத்தில்உள்ளே உள்ள இரும்புகம்பிகள் எல்லாம் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

    வேகமாக காற்றுவீசும் போதுஇந்த மின்கம்பம் அங்கும் இங்கும் அசைகிறது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • செல்லூர்-பந்தல்குடி சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் பாதாள சாக்கடையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி 26-வது வார்டு செல்லூர்- பந்தல்குடி சாலையில் இருந்து நரிமேடு செல்லும் சாலையில் நீண்ட நாட்களாக திறந்த நிலையில் பாதாள சாக்கடை உள்ளது.

    அதிக வாகனங்கள் மற்றும் பள்ளிக்கு குழந்தை கள் செல்லும் சாலையில் திறந்த நிலையில் பாதாள சாக்கடை இருப்பது ஆபத்தை ஏற்படுத்தும்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி சாலைகள் மோசமாக இருப்பதால் சாலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதாள சாக்கடை இருப்பது தெரியாது.

    மாநகராட்சியில் இருந்து அதில் தடுப்பு அமைக்கப்பட்டாலும் வாகனம் செல்ல வழியின்றி யாராவது அதை நகர்த்தி விட்டால் பாதசாரிகள் அல்லது பள்ளி மாணவர்கள் பாதாள சாக்கடையில் விழும் நிலை உள்ளது

    மாநகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை மூடி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    அரசரடியில் இருந்து காளவாசல் செல்லும் வழியில் எஸ்.எஸ்.காலனி வடக்கு வாசல் மெயின் ரோட்டில் சில நாட்களாக குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது.

    இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்புதான் அந்த தண்ணீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். இதனால் 2 நாட்கள் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. அதே இடத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தண்ணீர் வீணாகிறது.

    இதை மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து பெரிய அளவில் உடைப்பு ஏற்படும் முன்பு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    ×