search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94711"

    • இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ரெயில்வே போலீசார் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    ஒடிசாவில் நடைபெற்ற ரெயில் விபத்தை அடுத்து இந்தியா முழுவதும் ரெயில்வே தண்டவாள பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுகிறதா என கூறி ரெயில்வே போலீசார் ஒவ்வொரு ரெயில்வே தண்டவாள பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகள், ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்டத்தில் தென்காசி ரெயில்வே நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் திருச்சி ரெயில்வே காவல் கண்காணிப்பாளர் உத்தர வின்படி, மதுரை ரெயில்வே உட்கோட்ட பொறுப்பு நெல்லை இருப்புப்பாதை காவல் துணை கண்காணிப்பாளர் அறிவுரையின் படியும், நெல்லை வட்டம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரிலும் நேற்று தென்காசி ரெயில்வே காவல் நிலைய எல்லைகள், தண்டவாள பகுதிகள் மற்றும் மேம்பாலம் அருகில் நாசவேலைகள் ஏதும் நடைபெறாத வகையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் தண்டவாள ரோந்து பணிகள் மேற்கொண்டும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது.
    • குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    போரூர்:

    சென்னை மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது29) என்ஜினீயர். இவர் சினிமா துறையிலும் முயற்சி செய்து வந்தார்.

    நேற்று இரவு அவர் 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று தறி கெட்டு ஓடி முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதியது. பின்னர் முன்னால் சென்ற சரண்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரண்ராஜ் சாலையோரம் இருந்த மின்விளக்கு கம்பத்தின் மோதி தூக்கி வீசப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பலியான சரண்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தது சாலிகிராமம் பகுதியை சேர்ந்த துணை நடிகரான பழனியப்பன் (41) என்பது தெரிந்தது. அவர் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.

    இதையடுத்து துணை நடிகர் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

    கைதான பழனியப்பன், ரஜினி முருகன், சந்திரமுகி- 2 படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குடிபோதையில் துணை நடிகர் ஓட்டிய கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
    • கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவாரூர்:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்த நோபோ மஜி (வயது 30), சௌடோ மஜி (27). இவர்கள் தஞ்சாவூரில் தங்கியிருந்து அதே பகுதியில் மாதா கோயிலில் உள்ள மொத்த விற்பனை கோழிக்கடையில் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நோபோ மஜிக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும் சௌடோமஜிக்கு திருமணமாகி 1 குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்து சரக்கு லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு காரைக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை கலையரசன் என்பவர் ஓட்டினார். மேற்பார்வையாளராக மணிகண்டன் இருந்தார். இவர் லாரியின் உள்ளே அமர்ந்து இருந்தார். நோபோ மஜி, சௌடோ மஜி ஆகியோர் லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் லாரி இன்று அதிகாலை திருவாரூர் அருகே மேப்பலம் என்கிற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி ஒட்டக்குடி வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் லாரியின் மேலே அமர்ந்து வந்த நோபோ மஜி மற்றும் சௌடோமஜி ஆகிய 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த கலையரசன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் பரிதாபமாக இறந்தார்.
    • வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அய்யன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் லோகநாயகி (வயது 52). இவர் வாலாஜாபாத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோவிலில் துப்புரவு பணியாளராக பணி செய்து வந்தார். நாள்தோறும் அய்யன்பேட்டையில் இருந்து வாலாஜாபாத்திற்கு பஸ்சில் பணிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் லோகநாயகி வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு பஸ்சில் திரும்பி வந்து அய்யன்பேட்டையில் இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லோகநாயகியின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் சாலையில் விழுந்த லோகநாயகி படுகாயம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாலாஜாபாத் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது.

    அந்தியூர்:

    கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) என்பவர் ஓட்டி வந்தார்.

    லாரி ஆசனூர் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.
    • சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் கமுதிக்கு 46 பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ்சினை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள என்குன்றத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 54) என்பவர் ஓட்டி வந்தார்.  இந்த  பஸ் இன்று அதிகாலை 4 மணியளவில் உளுந்தூர்பேட்டைக்கு வந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூரில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு சொகுசு பஸ் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியின் பின்புறம் மோதியது. டிரெய்லர் லாரியில் இருந்த இரும்பு தகடு சரிந்து பஸ் டிரைவர் மீது விழுந்தது.

    இதில் டிரைவர் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவல் அறிந்த எடக்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடல் நசுங்கி இறந்து கிடந்த டிரைவரை மீட்க தீயணைப்பு துறையினரை வரவழைத்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி டிரைவரின் உடலை பஸ்சிலிருந்து மீட்டனர். தொடர்ந்து டிரைவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், பஸ்சில் பயணம் செய்த பயணிகள் 5-க்கும் மேற்ப ட்டோருக்கு லேசான காய ங்களுடன் உயிர் தப்பினர். இவர்களுக்கு உளுந்தூ ர்பேட்டை அரசு ஆஸ்ப த்தி ரியில் முத லுதவி சிகி ச்சை அளி க்கப்ப ட்டது. தொடர்ந்து மாற்றுப் பஸ் வரவழை க்கப்பட்டு பயணிகள் அனுப்பி வைக்க ப்ப ட்டனர். இந்த விபத்தால் உளுந்தூ ர்பேட்டை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் பக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஜாமியா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என தெரிகிறது

    புதுடெல்லி:

    டெல்லயின் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் உள்ள மரப்பெட்டியில் இரண்டு குழந்தைகள் இறந்து கிடந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.

    ஜாமியா நகரைச் சேர்ந்த காவலாளி பல்பீரின் குழந்தைகள் நீரஜ் (வயது 8), ஆர்த்தி (வயது 6) ஆகிய இருவரும் நேற்று மதியம் பெற்றோருடன் சாப்பிட்டுள்ளனர். பின்னர் 3.30 மணியளவில் காணாமல் போயிவிட்டனர். வீட்டில் உள்ளவர்கள் நீண்டநேரமாக தேடியும் தகவல் கிடைக்கவில்லை. அதன்பின்னர் வீட்டில் இருந்த பெட்டியை திறந்து பார்த்தபோது இரண்டு குழந்தைகளும் இறந்து கிடந்துள்ளனர்.

    இதுபற்றி ஜாமியா நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் விளையாட்டாக பெட்டிக்குள் இறங்கியபோது லாக் ஆகியிருக்கலாம் என்றும், இதன் காரணமாக மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

    குழந்தைகளின் உடலில் காயம் ஏதும் இல்லை என்றும், தற்செயலாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

    • கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
    • சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள கல்பாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 70). இவர் இன்று காலை தனது மொபட்டில் மனைவி மாரியம்மாள் (60), மகள் பூங்கொடி (27) ஆகியோருடன் உத்தமசோழபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

    கோவையில் இருந்து சேலம் வரும் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் 3 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சொகுசு கார், எதிர்பாராத விதமாக வெங்கடாசலம் ஓட்டி சென்ற மொபட் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் மாரியம்மாள் மற்றும் பூங்கொடி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த வெங்கடாஜலம் உயிருக்கு போராடினார்.

    அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள், வெங்கடாஜலத்தை மீட்டு அரியானூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்த தகவலின்பேரில், கொண்டலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    ரோட்டில் இறந்து கிடந்த மாரியம்மாள் மற்றும் பூங்கொடியின் உடல்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரக்கு வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
    • அங்கு சிகிச்சை பலனின்றி தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள குமாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த அஜய். இவரது மனைவி செர்ணமுகி. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம் தான் திருமணம் நடந்து முடிந்தது.

    இந்த நிலையில் திருமண விருந்து நிகழ்ச்சிக்காக குமாரம்பட்டி கிராமத்திலிருந்து மாப்பிள்ளை அஜய் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரது மாமனார் வேட்ரப்பட்டிக்கு வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்த சரக்கு வாகனத்தில் சுமார் குழந்தை உள்பட 28 பேர் பயணம் செய்தனர்.

    அப்போது அரூர்-திருப்பத்தூர் சாலை கூத்தாடிப்பட்டி பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக படுகாயம் அடைந்த தர்மன் (வயது65) உள்பட 4 பேர் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்மன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    அம்பத்தூர்:

    வானகரம் அடுத்த நூம்பல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம்(வயது34). இவர் பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் மானேஜராக பணியாற்றி வந்தார். இன்று காலை 6.50 மணியளவில் ராமானுஜம் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார்.

    பாடி மேம்பாலம் அருகே வந்த போது பின்னால் அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தண்ணீர் லாரியின் சக்கரத்தில் சிக்கிய ராமானுஜம் சம்பவ இடத்திலலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனாலும் ஹெல்மெட் அவரது உயிரை காப்பாற்ற வில்லை. லாரியின் சக்கரத்தில் சிக்கிய வேகத்தில் ஹெல்மெட்டும் நசுங்கி உடைந்து போனது. ராமனுஜம் ஹெல்மெட் அணிந்த நிலையிலேயே இறந்து போனார். விபத்து நடந்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து ராமானுஜத்தின் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    • மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.
    • கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    சென்னை:

    மெரினா கடற்கரை சாலையில் இருக்கும் உழைப்பாளர் சிலை சென்னையின் அடையாளங்களில் ஒன்று.

    மெரினா கடற்கரைக்கு செல்பவர்கள் இந்த சிலை முன்பு நின்று படம் எடுத்து கொள்வதை பார்க்க முடியும்.

    கடற்கரைக்கு ஆர்வமுடன் நடந்து செல்பவர்கள் சிக்னல் இருப்பதை கூட கண்டுகொள்ளாமல் கூட்டமாக ரோட்டை கடப்பதும் உண்டு. இதனால் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் சிரமப்படுகிறார்கள். இவ்வாறு பாத சாரிகள் போக்குவரத்து விதிகளை மீறி ரோட்டை கடப்பதால் விபத்துகளிலும் சிக்குகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் உழைப்பாளர் சிலை சந்திப்பில் 30 விபத்துகள் நடந்து உள்ளன.

    எனவே விபத்துகளை தவிர்க்கவும், பாதுகாப்பான பாதசாரிகள் பயணத்துக்காகவும் உழைப்பாளர் சிலை சந்திப்பை சீரமைக்க போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளார்கள்.

    இதற்காக இந்த சந்திப்பில் போலீசார் வாகன போக்கு வரத்து, பொதுமக்கள் சாலையை கடப்பது, சிக்னல்கள் நேரம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். அப்போது குறைந்தபட்சம் ஒரு நாளில் 10 ஆயிரம் பாதசாரிகள் உழைப்பாளர் சிலை சந்திப்பை கடந்த செல்வது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த பகுதியில் போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள்.

    இதன்படி பாதசாரிகள் ரோட்டை கடக்கும் தூரம் குறைக்கப்படுகிறது. வாகனங்களின் சீரான போக்குவரத்துக்காக சென்டர் மீடியன்கள் சீரமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதியில் கூடுதல் தூரத்துக்கு அமைக்கப்படும். இந்த சந்திப்பின் தெற்கு பகுதியில் கூடுதலாக ஒரு சென்டர் மீடியன் வைக்கப்படுகிறது.

    இந்த மாற்றங்களினால் பாதசாரிகள் வாகனங்களில் அடிபடாமல் இருக்க பிரத்யேகமான கிராசிங் லேன் அமைக்கப்படுகிறது. மேலும் ரோட்டை கடக்கும்போது சிக்னலுக்காக பாதுகாப்பாக காத்திருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படும்.

    சரியான நிறுத்த கோடுகள், திசை காட்டும் குறியீடுகள் பளிச்சென்று தெரியும் வகையில் வண்ணம் பூசப்படும். அனைத்து வயதினரும் எளிதாக கடந்து செல்லும் வகையிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல சாய்வு பாதைகளும் அமைகிறது.

    அமல்படுத்தப்போகும் இந்த புதிய சீரமைப்பு வசதிகள் 3 முதல் 5 வாரங்கள் வரை பரிட்சார்த்தமாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு நிரந்தர மாற்றம் செய்யப்படும்.

    போக்குவரத்து மட்டுமல்லாமல் முக்கிய சந்திப்பு என்பதால் நேர்த்தியாகவும் அழகாகவும் சீரமைக்கப்படும்.

    • கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 45), லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 1 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    நேற்று காலை 6 மணி அளவில் கார்த்திகேயன் லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு, ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்தார். அகரம்சேரி அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ் லாரி மீது மோதியது.

    இந்த விபத்தில் லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததது. இதில், கார்த்திகேயனுக்கு தலை மற்றும் தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனையில் உள்ள விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கார்த்திகேயனுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்டவைகள் எடுக்கப்பட்ட பின்பு சாதாரண பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தலை மற்றும் தாடையில் நர்சுகள் தையல் போட்டுள்ளனர். மாலை 4 மணி ஆகியும் டாக்டர் வராததால் கார்த்திகேயன் வலியால் துடித்துள்ளார். முறையான சிகிச்சை இல்லாத காரணத்தால் உறவினர்கள் கார்த்திகேயனை, நேற்று மாலை அரியூர் நாராயணி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு கார்த்திகேயனுக்கு மீண்டும் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அதிர்ச்சியான திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது. அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, விபத்தின் போது சிக்கிக்கொண்ட நட்டை அகற்றாமலே டாக்டர்கள் தையல் போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து கார்த்திகேயன் தலையில் சிக்கிக்கொண்ட நட்டு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த கார்த்திகேயனின் உறவினர்கள், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டரிடம் சென்று கேட்டுள்ளனர். அதற்கு டாக்டர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாப்பாத்தி கூறியதாவது:-

    இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும். இதற்காக சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு அனைத்திற்கும் விளக்கம் தெரியும். குற்றம் நிரூபனமாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஏழை எளிய மக்கள் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

    ×