என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94837"
- தருமபுரியில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
- அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கரண் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தருமபுரி,
தருமபுரி கோல்டன் தெருவைச் சேர்ந்த கனகராஜ். சுமை தூக்கும் கூலித்தொழிலாளி. இவரது மகன் கரண் (வயது25). லேப்-டெக்னீசியான இவர் தருமபுரியில் உள்ள தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கரண் தனியாக ரத்த பரிசோதனை நிலையம் அமைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது காலம் போகட்டும் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று கூறியதால் கரண் மனவேதனையுடன் காணப்பட்டார். சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட முயன்றார். உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அப்போது தான் விஷம் குடித்ததாக தெரிவித்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கரண் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தருமபுரி டவுன் போலீசார் உடனே கிருஷ்ணகிரிக்கு சென்று கரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரை அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை விராட்டிபத்து கிருதுமால் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜா (வயது21). இவருக்கு நிரந்தர வேலை இல்லாமல் இருந்து வந்தார். அவரை வேலைக்கு செல்லும்படி அவருடைய தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமடைந்த ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் ரயிலில் அடிபட்டு இறந்த விவகாரத்தில், இறந்தவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்தா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர், காலேஜ் ரோடு, சிக்கண்ணா அரசு கல்லூரி எதிரே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். பின்னர் ரெயிலில் அடிபட்டு இறந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருவண்ணாமலையை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த விக்னேஷ், கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், எட்டு மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் காலேஜ் ரோட்டில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது விசாலாட்சி என்ற பெண்ணுடன், விக்னேஷ்க்கு தொடர்பு ஏற்பட்டு கணவன் மனைவி போல் வசித்து வந்துள்ளனர்.
தகவல் முதல் மனைவிக்கு தெரிந்ததும் அவர் திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார்.
போலீசார் மூவரையும் அழைத்து விசாரித்து, அறிவுரை கூறி, விக்னேைஷ முதல் மனைவியுடன் அனுப்பி வைத்தனர். இதனால், கள்ளக்காதலி விசாலாட்சி விக்னேசை பிரிந்து சென்றார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட விக்னேஷ் கள்ளக்காதலியை பிரிந்த சோகத்தில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. கள்ளக்காதலிக்காக காதலித்து திருமணம் செய்த பெண் மற்றும் 2 பெண் குழந்தைகளை அனாதையாக விட்டு விட்டு வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- திருமணம் நடந்து 3 வருடமே ஆன நிலையில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்
- முசிறி கோட்டாட்சியில் விசாரணை நடத்தி வருகிறார்
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை சின்ன இலுப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 55). இவருக்கு மணி (50) என்ற மனைவியும், சத்யா (26), சந்தியா (23) என்கிற இரு மகள்களும் உள்ளனர்.இதில் இளைய மகளான சந்தியா என்பவரை தோனூர் கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் (26) என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் சந்தியாவின் கணவரான அழகேசன் என்பவர் டிரைவர் வேலைக்கு சென்று வந்ததாகவும், சந்தியா தனது கணவரை டிரைவர் வேலைக்கு செல்லக்கூடாது, கிராமத்திலேயே விவசாயம் செய்யலாம் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.ஆனால் இதனை மறுத்த அழகேசன் தொடர்ந்து டிரைவர் வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டு அலறி உள்ளார். சந்தியாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சந்தியா தீயில் கருகி முற்றிலுமாக எரிந்த நிலையில் கிடந்துள்ளார்.இதுகுறித்து உறவினர்கள் துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தியாவின் தாயாரான மணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சந்தியாவிற்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் முசிறி கோட்டாட்சியரும் தனியே விசாரணை மேற்கொண்டு வருகிறார்.இறந்த சந்தியாவிற்கு குழந்தை இல்லாததால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- காரைக்கால் நெடுங்காட்டில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
புதுச்சேரி:
காரைக்கால் அருகே நெடுங்காடு குரும்பகரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது33) இவர் மனைவி மணிபாரதி. இவர்களுக்கு ஸ்ரீலக்சனா(5), ஸ்ரீ தனிஷ்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். சரவணக்குமார், நெடுங்காட்டில் உள்ள சிமெண்ட் கிராதி கடையில் கூலிவேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகு மாருக்கு குடிபழக்கம் அதிகமானதால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
மணிபாரதி, குழந்தை களை பள்ளியில் சேர்க்க வேண்டும் என பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் கணவன் மடைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், சரவ ணக்குமார் இரவு சிமெண்டு கிராதி கடையில் தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். மறுநாள் காலை கடை க்கு சென்று பார்த்தபோது அங்கு சரணவகுமார் தனது கைலியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து மணி பாரதி, நெடுங்காடு போலீசில் புகார் கொடுத்தார். புகாரி ன்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி சபீர் ராஜா உயிரிழந்தார்.
- கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைக்கானல்:
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா (வயது 60). இவரது தம்பி சபீர்ராஜா (58). இவர்கள் 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.
கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் வியாபாரம் செய்து வந்தனர். இருவருக்கும் இடையே கடைக்கு செல்லும் பொது நடைபாதை யாருக்கு சொந்தம் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் பயாஸ் ராஜா தனக்கு சொந்தமான ஒரு பகுதியை இரும்பு வேலியால் அடைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சபீர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது கடை முன்பு நின்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சபீர் ராஜா உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
- சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், கக்குடா கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா ஜானி (வயது17). இவர் பெங்களூர், ஆனேக்கல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.
இது குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
- மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெலகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.
சம்பவத்தன்று இதனால் மனவேதனையில் இருந்த மஞ்சுநாத் வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம், பக்கத்தினர் இவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மஞ்சுநாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ருதி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் ரகு வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார்.
- இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள வி.என்.ஆர். நகரை சேர்ந்தவர் ரகு (வயது 39). டிரைவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் மைசூரை சேர்ந்த ஸ்ருதி என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.
திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டது. இதனால் ஸ்ருதி தனது கணவரை பிரிந்து மைசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். ரகு மைசூருக்கு சென்று தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஸ்ருதி விவாகரத்து கேட்டு தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ரகு கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதனை பார்த்து அவரது தந்தை அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ரகுவின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை கணபதி அருகே மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (வயது26). எம்.எஸ்.சி. பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.
இந்நிலையில் அபிலாஷ்க்கு அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இளம்பெண் அபிலாஷிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். அவர் பலமுறை நேரில் சந்தித்து பேச முயன்றார். ஆனால் இளம்பெண் பேச மறுத்து விட்டார். இதனால் அபிலாஷ் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அபிலாஷ் காதல் தோல்வியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை தல்லாகுளம் அருகேயுள்ள ஆத்திகுளம் கனகவேல் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹரீஸ்ராஜ் (வயது21). இவர் கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பெண் காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக ஹரீஸ்ராஜ் விரக்தியுடன் காணப்பட்டார். காதல் தோல்வியால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரீஸ்ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சகோதரி ரோகிணி கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பந்தல்குடியை சேர்ந்தவர் பலராமன் (வயது50). இவரது மனைவி சியாமளா தேவி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி குடிக்க பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். மனைவி பணம் கொடுக்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுவாராம். இந்த நிலையில் சம்பவத்தன்று பலராமன், மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த அவர் அறையின் கதவை பூட்டிக்கொண்டு பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சியாமளா தேவி பந்தல்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்