என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "car accident"
- தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.
- இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த திவான் மைதீன், செய்யது ஜலால், முகம்மது ஹாஜி, காஜாமுகைதீன், முகம்மது அர்சத் ஆகிய 5 வாலிபர்கள் ஒரு காரில் குற்றாலம் சென்றனர்.
மரத்தில் கார் மோதியது
அவர்கள் அனைவரும் அங்கு குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பிக்கொண்டிருந்த னர். இலஞ்சி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கார் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் காரில் வந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதில் செய்யது ஜலால், முகம்மது ஹாஜி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்திருந்தனர். இதனால் அவர்கள் ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கி உணவு டெலிவெரி செய்யும் நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்தவர் கௌஷல். இவர், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இரவில் உணவு டெலிவெரி செல்வதற்காக தனது இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, நொய்டா செக்டார் 14 பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வேகமாக வந்த கார் ஒன்று கௌஷல் சென்ற வாகனம் மீது மோதியது.
இதில், கீழே தடுமாறி விழுந்த கௌஷல் காருக்கு அடியில் சிக்கினார். விபத்தை ஏற்படுத்திய அந்த கார், காரில் கௌஷல் சிக்கியது தெரியாமல் சுமார் 500 மீட்டர் வரை கார் இழுத்து சென்றது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு கௌஷலின் உடல் வெளியே வந்தவுடன் கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கௌஷலின் சகோதரர் அமித் அவருக்கு போன்ற செய்தபோது, அங்கிருந்தவர்கள் அழைப்பை ஏற்று விபத்து குறித்து அவர்களுக்கு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கௌஷல் இறந்ததை உறுதி செய்ததை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
டெல்லியில் 20 வயது பெண் ஒருவர் கார் மீது மோதி சுமார் 13 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆசீர்வாதம், இவரது மகன் ஞானசேகர், (வயது 22). உறவினர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்று மீண்டும் பைக்கில் சேத்துப்பட்டு, நோக்கி ஆரணி, சாலையில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது செம்மாம்பாடி, கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்தபோது சேத்துப்பட்டில், இருந்து ஆரணி, நோக்கி சென்ற கார் அதிவேகமாக வந்து ஞானசேகர், மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானசேகர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
- தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது.
- விபத்தில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவன் உயிரிழந்தான்.
நியூயார்க்:
கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஆரவ் முதல்யா, 2 வயதான இவன் அமெரிக்கா வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவன். சம்பவத்தன்று இவன் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக அமெரிக்காவில் நேவாடா என்ற மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான பாலைவன பகுதிக்கு சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் உருண்டது. இந்த விபத்தில் சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அவன் இறந்தான். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 5 பேர் படுகாயம்
- திருமணத்திற்கு பட்டு சேலை வாங்குவதற்காக சென்ற போது விபத்து
ஜோலார்பேட்டை:
கர்நாடக மாநிலம் பெங்க ளூரு விநாயகா படவானா வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசாமி. இவரது மனைவி விஜயலட் சுமி (வயது 44). திருமணத் துக்கு பட்டுப்சேலை வாங் குவதற்காக இவர்கள் பெங்க ளூருவிலிருந்து புறப்பட்டு காஞ்சீபுரத்துக்கு காரில் வந்து கொண்டிருந்தனர்.
இவர்களு டன் பெங்களூரு தாவண கெரே பகுதியை சேர்ந்த சீனி வாசன், இவரது மனைவி பார்வதி (50), வெங்கடரெட்டி மனைவி சுப்பம்மா (60), பிர பாகரன் மனைவி சரஸ்வதி (45) மற்றும் வித்யா நகர் பகு தியைச் சேர்ந்த சீனிவாசா ரெட்டி, இவரது மனைவி கீர்த்தனா (42) ஆகியோரும் வந்தனர்.
காரை பெங்களூரு விதா யகா நகர் பகுதியைச் சேர்ந்த பீமாசாரி (35) ஒட்டி வந்தார்.
இவர்களது கார் திருப்பத் தூர் மாவட்டம் நாட்டறம் பள்ளியை அடுத்த பங்களா மேடு பகுதியில் வந்து கொண் டிருந்தபோது திடீரெனடிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி ஓடி தடுப்புசுவர் மீது மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் கீர்த்தனா காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம் பவ இடத்திலேயே இறந்தார். மேலும் 4 பெண்கள் மற்றும் டிரைவர் உட்பட 6 பேர் படு காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்த நாட்டறம் பள்ளி தாசில்தார் குமார் மற் றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத் துக்கு விரைந்து வந்து படுகா யம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாணி யம்பாடி அரசு மருத்துவம னைக்கு அனுப்பிவைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக பார்வதி மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரை கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, பலி யான கீர்த்தனா உடலை பிரேத பரிசோதனைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத் தனர்.
இந்த விபத்து குறித்து நாட் டறம்பள்ளி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவினாசி:
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 30). கோவையில் உள்ள பிரபல கிரைண்டர் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார்.
இவருடன் அவரது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுஹில், சேலத்தை சேர்ந்த ஜெய்சூர்யா (18), கோவையை சேர்ந்த மிதுன் (16) ஆகியோரும் மாலை அணிந்து விரதம் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற அய்யப்ப பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன்ராஜ் உள்பட 4பேரும் பவானிக்கு சென்றனர். அங்கு பஜனையை முடித்து விட்டு இன்று அதிகாலை கோவைக்கு காரில் புறப்பட்டனர். காரை சுஹில் ஓட்டினார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை பகுதியில் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன்பக்க இருக்கையில் அமர்ந்திருந்த மோகன்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 3பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 3பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரை ஓட்டிய சுஹில் தூக்க கலக்கத்தில் இருந்ததன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் கோவை தொழிலதிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (75).
இன்று காலையில் ஆரணி விழுப்புரம் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது வேலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் முனியம்மாள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து காரை காரை ஓட்டி வந்த வேலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பரை விசாரணை செய்து வருகின்றனர்.
- அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்தபோது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கோவை:
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் மருதாசலம்.
இவர் திருப்பூர் மாவட்டம் குண்டடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மகன் கார்த்திக் ஸ்ரீபதி(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர் ஹரி(18). இவர் பெங்களூரில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது விடுமுறைக்கு கோவைக்கு வந்துள்ளார்.
நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாடுவதற்காக கார்த்திக் ஸ்ரீபதி தனது நண்பர் ஹரியுடன் காரில் செங்கம்பள்ளிக்கு சென்றார். அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி முடித்து விட்டு, இன்று அதிகாலையில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை ஹரி ஓட்டினார். கார்த்திக் ஸ்ரீபதி அருகில் அமர்ந்து இருந்தார்.
அதிகாலை 4.30 மணிக்கு கார் சூலூர் பகுதியில் வந்த போது ஹரியின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த கார்த்திக் ஸ்ரீபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஹரி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயத்துடன் இருந்த ஹரியை மீட்டு சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இறந்த கார்த்திக் ஸ்ரீபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒரே பகுதியை சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் குழு சபரிமலைக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்ததும் ஒரு காரில் ஊர்திரும்பி கொண்டிருந்தனர். இதில் சிறுவன் உள்பட 11 பேர் இருந்தனர். காரை பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(40) என்பவர் ஓட்டினார். நேற்று நள்ளிரவு சமயம் சுமார் 11.30 மணியளவில் குமுளிலோயர்கேம்ப் மலைப்பாதையில் மாதா கோவில் அருகே வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் தாறுமாறாக ஓடியது.
நிலைதடுமாறிய கார் 100 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து பெரியாறு அணையிலிருந்து லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையம் செல்லக்கூடிய ராட்சத குழாய்மீது விழுந்து நொறுங்கியது. இதனால் காரில் இருந்த ஐயப்ப பக்தர்கள் அபயகுரல் எழுப்பினர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடினர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தேனி மற்றும் இடுக்கி மாவட்ட போலீசார் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் துரிதமாக நடந்தது. சம்பவ இடத்திற்கு உடனே சென்ற தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. மேலும் 3 பேர் தொடர்ந்து சிகிசசை பெற்று வருகின்றனர்.
இதில் ஆண்டிபட்டியை சேர்ந்த ஓட்டல் கடை உரிமையாளர் ராஜா(40) என்பவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த விபத்தில் கார் டிரைவராக பிச்சம்பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்(42), சக்கம்பட்டியை சேர்ந்த முனியாண்டி(33), பத்திரஆபீஸ்ரோடு பகுதியை சேர்ந்த தேவதாஸ்(35), சாவடிதெருவை சேர்ந்த கன்னிச்சாமி(55), மயானதெருவை சேர்ந்த நாகராஜ்(46), எஸ்.எஸ்.புரத்தை சேர்ந்த வினோத்குமார்(47), சிவக்குமார்(43), கலைச்செல்வன்(45), ஆகிய 8 பேர் உயிரிழந்தனர்.
மலைப்பாதையில் நள்ளிரவு சமயத்தில் வந்தபோது நிலைதடுமாறி வேன் கவிழ்ந்ததா அல்லது டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதா என்று கூடலூர் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலியான 8 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர். ஒரே பகுதியை சேர்ந்த 8 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் வலியுறுத்தினார்.
- உசிலம்பட்டி அருகே இன்று நடந்த கார் மோதி மூதாட்டி-பசு மாடு பலியாயினர்.
- இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றபோது இந்த விபத்து நடந்தது.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் (வயது65). இவர் இன்று பிற்பகல் 12 மணியளவில் பசு மாட்டை மேச்சலுக்கு அழைத்து சென்றார்.
நக்கலப்பட்டி பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது மதுரையில் இருந்து தேனி நோக்கி வேமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ரஞ்சிதம், பசுமாட்டின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரஞ்சிதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த பசுமாடு சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தது.
விபத்து தொடர்பாக தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி அருகே முஹமதியர்பேட்டை பல்பல்தக்கா பகுதியை சேர்ந்தவர் ஹாசீம் (வயது 75). இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேப்பூர் அருகிலுள்ள பூலாம்பாடி கிராமத்திலுள்ள தனது உறவினரை பார்க்க சென்றார்.அங்கிருந்து ஊர் திரும்பிய ஹாசீம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, ஒட்டன்சத்திரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற காரின் முன் பகுதி டயர் வெடித்து, ஹாசீம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஹாசீம் பலத்த காயமடைந்தார். காரின் முன்பகுதி சேதமடைந்தது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மகேந்திரனின் மனைவி ரேவதி (30), என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது.
- மூதாட்டி சம்பவ இடத்தில் பலியானார்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மனைவி பொன்னம்மாள் (வயது70). இவர் இன்று காலை உறவினர் வீட்டிற்கு செல்ல மேல்மருவத்தூரில் இருந்து அச்சரப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற கார் மூதாட்டி பொன்னம்மாள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார்.
இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்